திங்கள், 12 செப்டம்பர், 2016

செப்.13---இந்த நாள்..?

செப்-13.இஸ்லாமிய மக்களின்...பக்கிரீத் பண்டிகை..மலையாள மக்களின் ஓணம் பண்டிகை.. இனிய உற்சாகத்துடன்  விழாக்காணும் மக்களை கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்...

பக்கிரீத் பண்டிகையால் ஆடு வளர்க்கும் விவசாயப்பெருமக்களான நாம் வருவாய் பெறும் நாளாகும்..

ஓணம் பண்டிகையால் பூ மற்றும் காய் உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களான நாம் பெரிதும்
பயன்பெறும் நாளாகும்..

இவ்விழாவில் புதுத்துணிகளை மக்கள் அணிவதன் மூலம் ..நமது நெசவாளிகளின் வருவாய் பெறுகும் நேரம்...

அதனால் மீண்டும் ஒருமுறை விழாக்காணும் மக்களை வாழ்த்துவோம்..

இவன்:-
டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை..
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

நம்மை ஆளும் நவக்கிரகங்களை மாற்ற முடியுமா ...?

நமது முன்னோர்களின் மரபணுக்கள்..நவக்கிரகங்களின்
கட்டமைப்பாக..நமது எண்ணங்கள் என்ற விதியை
விதிக்கிறது.அந்த விதி நமது வாழ்வின் இன்பமாமவும்
துன்பமாகவும் செயல்படுகிறது.

இது இயற்கையின் ஒழுங்குமுறை சட்டமாகும்...நம்மை நாடும்
கெட்ட விதிகளை மாற்ற முடியுமா..?

முடியும்..நிச்சயமாக மாற்ற முடியும்...எப்படி?
நமது எண்ணங்களை மாற்றினால்..அதாவது                                                                                            நாளும்..பொழுதும்..வினாடியும் நல்ல எண்ணங்களை உள் வாங்கினால் நல்ல (விதி) செயல்கள் விளைந்து...வாழ்வில் இன்பம்  மலரும்...

இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசியஅமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை.
best links in tamil
More than a Blog Aggregator

மாவீரன்.மகாகவி நினைவு தினம்....

செப்.11 இன்று
உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டு கழிப்போரை நிந்தனை செய்வோம்...என்று முழங்கிய
மாவீரன்.மகாகவி.பாரதியாரின் நினைவு தினம்...
மகாகவிக்கு நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும்
தமிழர் தனிப்படையின் சார்பில் வீரவணக்கத்தை சமர்பிப்போம்...
இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
செயல் உறுப்பினர, தமிழர் தனிப்படை.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

செப்டம்பர்-5-இந்த நாளின் சிறப்பு.....

5-9-16,இன்று விநாயகர் சதுர்த்தி,இந்தியாவின் முதல் ஜனாதிபதிடாக்டர்.இராதகிருஷ்ணன்.பிறந்தநாள்,
சுதந்திரப்போராட்ட மாவீரன்,கப்பலோட்டிய தமிழன் வ.வூ.சி பிந்தநாள்,புனிதர் அன்னைதெரசா நினைவுநாள்....என்று இந்த நாள் இந்த வருடத்தின் மிகச்சிறந்த நாளாகும்....

இவன்:-டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி மற்றும்
செயல் உறுப்பினர் தமிழர் தனிப்படை (வெளிமாநிலவாழ் தமிழர்களின் பாதுகாப்புகளம்)
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 3 செப்டம்பர், 2016

தேசிய நீர்வழிச்சாலை..

[9/4, 8:39 AM] T.K.Theeransamy.K.T.K: அதிகமாக பகிரவும் பிரண்ட்ஸ்...இந்தமாதிரி விசயங்களில் நமக்கு ஒற்றுமை இல்லாதுதான், அரசின் மெத்தனத்திற்க்கு காரணம்..!! ஏதாவது ஒரு பட்டனை தட்டிவிடுங்க...உலகம் முழுவதும் செல்லட்டும். என்பெயரில் பகிர மனம் இல்லையென்றால் Copy-Paste செய்து உங்கள் பக்கத்தில் பகிருங்கள்.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு நவீன நீர்வழிச் சாலை திட்டம்தான் நிரந்தர தீர்வு: முதல்வருக்கு பொறியாளர் ஏ.சி.காமராஜ் கடிதம்..!!!

தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் வரைபடம். (உள்படம்) ஏ.சி.காமராஜ்.
நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தினால் யாரிடமும் தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டாம். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு இது தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று நவீன நீர்வழிச்சாலை பேரியக்கத்தின் தலைவர் பொறி யாளார் ஏ.சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

நதிகளை இணைக்கும் விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லை. ஆனால், பொறியாளர் ஏ.சி.காம ராஜ் தலைமையிலான வல்லுநர் குழு உருவாக்கி இருக்கும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தைத் தென் மாநிலங்கள் வரவேற்றுள்ளன. நதிகள் இணைப்பு என்பது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு நீரை அனுப்பலாம்; திரும்பப் பெறமுடியாது. ஆனால், நவீன நீர்வழிச் சாலை திட்டத்தில், தேவைப்படும்போது நீரை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக் கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஏ.சி.காமராஜ் கூறியதாவது:

நவீன நீர்வழிச் சாலை திட்டம் என்பது ‘பவர் கிரிட்’ போன்றது. தேவையில்லாதபோது நீரைத் தந்துவிட்டு, தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். இதனால் யாருடைய பங்கீட்டு உரிமையும் பறிபோகாது. மாறாக, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வளம் கொழிக்க வைக்க லாம். மற்ற மாநிலங்கள் எத்தனை அணைகள் கட்டினாலும் அதைப் பற்றி கவலைப்படவும் வேண்டாம்.

கோதாவரியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குப் போகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரம் டிஎம்சி வீணானதாக ஆந்திர மாநில தலைமைப் பொறியாளர் என்னிடம் கூறினார். கர்நாடகாவிடம் வெறும் 419 டிஎம்சி தண்ணீருக்கு நாம் முட்டி மோதுகிறோம். ஆனால், அவர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரை கடலில் விடுகிறார்கள்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த போராட வேண்டி இருக்கிறது. ஆனால், கேரளத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2.400 டிஎம்சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.

இந்த மூன்று மாநிலங்களும் தெலங்கானாவும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்து வது குறித்து எங்களோடு ஆர்வத் துடன் பேசிவருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்ற மாநிலங்கள் ஒத்துவராமல் போனாலும் தனது மாநிலத்துக் குள்ளேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தயாராக இருக் கிறார். தமிழக முதல்வர் ஜெய லலிதா, 2011 தேர்தல் வாக்குறுதி யிலேயே இத்திட்டத்தைச் சேர்த்திருந்தார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து பல இடங்களில் பேசினார். ஆனாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தரப்பில் இன்னமும் ஏனோ சுணக்கம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால், மாநில அரசு ரூ.500 கோடி செலவழித்தால் போதும். மீதமுள்ள தொகையை மத்திய அரசும் தனியார் நிறுவனங் களும் செலவழிக்க தயாராக இருக்கின்றன. இத்திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் நீர்வளம் செழிப்ப தோடு நீர்வழிப் போக்குவரத்து, நீர் மின்சாரம் உள்ளிட்ட வேறு பல வழிகளிலும் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

எனவே, இனியும் காலம் தாழ்த் தாமல் இத்திட்டத்தை செயல்படுத் தும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண் டும் என முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். எதிர்காலத் தில் தமிழகத்தின் தண்ணீர் பிரச் சினைகளுக்கு இத்திட்டம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்றார்.

குள.சண்முகசுந்தரம்

Shared by http://m.tamil.thehindu.com/tamilnadu/
[9/4, 8:39 AM] T.K.Theeransamy.K.T.K: திரு.காமராஜ்,அய்யா அவர்களை வைத்து எமது கொங்கு தமிழர் கட்சி சார்பில் முன்பு இரண்டு கூட்டங்களை நடத்தினோம்....நதிநீர் இணைப்பின்
முக்கியத்துவம் ...அய்யா அவர்களின் அறிவுசார் திட்டங்கள் அற்புதமானவை...

அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக முதல்வர் அம்மா அவர்களை எமது கொங்கு தமிழர்
கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கை
வைக்க உள்ளோம்...

மேலும்..கடந்த மாதம் ஆந்திரா முதல்வர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களை நாங்கள் நேரில் சந்தித்தபோது...அய்யா..காமராஜ்
அவர்களின் திட்டங்களை நதிநீர் திட்டங்களை
செயல்பாட்டுக்கு கொண்டுவர உறுதியுடன்
இருப்பதாக தெரிவித்தார்..

மேலும்...ஜீ.வி.இதழில் பணியாற்றி தற்போது
தமிழ் இந்து நாளிதழில் எழுத்தப்பணிகளை
தொடரும் திரு.குள.சண்முகசுந்தரம் போன்ற
துடிப்பான நண்பரகள் இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த களத்தில் தொடர்ந்து
பணியாற்ற வேண்டும்..

இவன்:-டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி மற்றும்
செயல் உறுப்பினர் தமிழர் தனிப்படை (வெளிமாநிலவாழ் தமிழர்களின் பாதுகாப்புகளம்)
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

எண்ணங்கள்_2

எண்ணங்களை நாம் எண்ணியவுடன்...அதன் இலக்கை
தாக்கும்..வல்லமையுடையது...

இலக்கை தாக்கிய எண்ணங்கள்...திருப்பி எய்த இடத்தையே
தாக்கும் வல்லமையுடையது...

நல்ல எண்ணங்களை எய்தால்..நல்ல  இலக்கையே
நாம் திரும்பப் பெறமுடியும்...

பிறரை அழிக்கும் எண்ணங்களை எய்தால்...
நம்மை அழிக்கும் எண்ணங்களை நாம் திரும்பப் பெறமுடியம்...
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 1 செப்டம்பர், 2016

எண்ணங்கள்

நமது எண்ணங்கள்..என்னும் சிற்பி
நமது வாழ்க்கை என்னும் சிலையை செதுக்குகிறது.

நமது வாழ்வின் எல்லா நிலைகளும்..நமது எண்ணங்களின்
நிகழ்வாக நிற்கிறது...

அது..இன்பமாக..துன்பமாக..எதுவானலும்
நாம் முன்பு எண்ணிய..எண்ணங்களே..காரணமாகும்
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 7 மே, 2015

+2-தேர்வு முடிவு கொங்கு தமிழகம் முதல் மூன்று இடங்கள்

  +2-தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.அதில் திருப்பூர் பவித்ரா,கோவை மாணவி நிவேதா 1192 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

விக்னேஸ்வரன்,பிரவீன்,சரண்ராம்,வித்யாவர்சினி,ஆகிய நால்வரும் 1190 -மதிப்பெண்கள் பெற்று 2-.இடத்தையும்,பாரதி என்ற மாணவி-1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடதையும் வென்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களையும் கொங்கு தமிழகத்தின் சிங்கங்கள் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியையும்,மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 22 ஏப்ரல், 2015

ஏப்ரல்-22 உலக புவிதினம்..

சாயநீர் ஓடும் நொய்யல் நதி

ஏப்ரல்-22 உலக புவிதினம்.புவியை பாதுகாப்பது!.
புவியை பாதுகாப்பதுன? நம்ம ஏன் புவியை பாதுகாப்ப வச்சுக்கனும்?.                                                                                                                                                

அரசாங்கம் எதுக்கு இருக்கு? எம்.எல்.ஏக்கள்,பஞ்சாயத்துக்கள்,அமைச்சர்கள்,அதிகார மையங்கள்னு-நம்மோட வரிப்பணத்தில் 99-விழுக்காடு சம்பளமா வாங்கிக்கிறாங்கா!
ஊழலா..லஞ்சமா..மீதியை கொள்ளையடிக்கிறாங்கா! அவங்க புவியை பாதுகாக்கட்டுமே! அவங்களுக்கு என்ன வேலை?

உங்க ஆதங்கம்..கோபம் எனக்கு புரியுது...ஆனா..பாருங்க புவின்னு சொன்ன..

நம்ம சித்தர்கள் கணக்கில மண்(உடல்),நீர்(இரத்தம்),நெறுப்பு(உடல் வெப்பம்),காற்று(ஆக்சிசன்),ஆகாயம்(உயிர்) என்று ஐந்து பொருள்கள்,பஞ்ச பூதங்கள்,பொளதீக பிரிவுகள்னு சொல்லாறங்கா..

இப்ப இந்த ஐந்து பிரிவுகளின் சேர்க்கை தான் நம்ம உயிருள்ள உடலா இருக்கு..அப்போ..இவைகளை மாசுபடுத்தாம..முடிந்த அளவு ஒவ்வொரு தனிமனிதனும் அக்கரை எடுத்துக்கிட்ட..புவியை சுத்தமா வச்சுக்க முடியும்...மேலும் மரக்கன்றுகள் நிறைய நடனும்..இன்றைய புவிதினத்தில் இதை உறுதிமொழியா ஏற்றுக்கொள்வோம்... 

கீழே பாருங்கா தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி.(ஏப்ரல்-22)

காகிதங்கள்,காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால் அவை பூமியைவிட்டு நீங்க 1-முதல் 2-மாதங்கள் ஆகும்.
தெர்மாகூல் கப்புகளை போட்டால் 50- ஆண்டுகள்..பிளாஸ்டிக் கேன்கள் 80-முதல் 200 ஆண்டுகள்,பிளாஸ்டிக் பைகள் 50-முதல் 1000 ஆண்டுகள்..,
பாட்டில்களுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகள்,..ஆகும்.

இதில் பிளாஸ்டிக் பொருள்கள் அணுகுண்டைவிட அபாயகரமானவை...

கீழே உள்ள புகைப்படம்-மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம்நாடு,மேலப்பாளையம் கிராமத்தில் பாய்ந்து ஓடும் இயற்கையின் அருற்கொடையான பாசன வாய்க்கால்.....

best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.


ஏப்ரல்-17 மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா,கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் மாவீரன் பிறந்த காங்கேயம் நாடு மேலப்பாளையத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.தேசிய இளையோர் பிரிவு செயலாளர் டி.எஸ்.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

மேலும் இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஆர்.தங்கவேல்,மாநில
கைத்தறிப்பிரிவு செயலாளர் கே.எஸ்.செல்வராஜ்,செயற்குழு உறுப்பினர் பி.மோகன்,குண்டடம் ஒன்றிய அமைப்பாளர் பி.ராமசாமி,தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் பொன்னுச்சாமி,கரூர் மாவட்ட அமைப்பாளர் சி.சண்முகம்உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மேலப்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
— with தெ.கு.தீரன்சாமி தேசிய அமைப்பாளர் கொங்குதமிழர்கட்சி.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 6 ஏப்ரல், 2015

மோடியின் இலங்கைப்பயணம் சீனாவை சீண்டிப்பார்க்குமா?

modi-maithee

இதயச்சந்திரன்:-

திரு.மோடி,ஒரு மிகச் சிறிய நாட்டின் பக்கத்திலுள்ள அணுஆயுத வல்லரசு இந்தியாவின் பிரதமர் அவர். ஆசியாவில் சீனாவை அடக்க அமெரிக்க யானைப்பாகன் பயன்படுத்தப்போகும் அங்குசம்.


இவ்வாறாக இலங்கை அரசியலில் இருந்து இந்திய தேசத்தை வர்ணிக்கலாம்.

மறுபுறம் பார்த்தால் மகிந்த ஆட்சி உருவாகுவதற்கு உதவிய நாடு. அமெரிக்காவையும், சீனாவையும் ஓரங்கட்ட சீபாஒப்பந்தத்தை நிறைவேற்றிடத் துடித்து தோல்வியுற்ற நாடு என்றும் கூறலாம்.


80 ஆரம்பத்தில் உருவான அமெரிக்க- இந்திய பனிப்போர், 87 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக புதிய வடிவம் அடைந்தது. இன்றும் அந்த ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால் கொழும்புத் துறைமுகத்தில் ஒரே மாதத்தில், இரு தடவைகள் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்ததால், ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.

2009 இற்குப்பின்னர், இந்தியாவின் அமெரிக்காவுடனான பனிப்போர் சீனாவுடன் தாவி, இப்போது துறைமுகநகர திட்டம் கிடப்பில் போடும் அளவிற்கு முறுகல் நிலையை எட்டியுள்ளது.

அதேவேளை ஆசியப்பிராந்திய புதிய சமநிலை உருவாக்கத்தில் வியட்நாமிற்கு அடுத்ததாக இலங்கையில்தான் அமெரிக்க-இந்திய தந்திரோபாயக்கூட்டு, இயங்குநிலையை வந்தடைதுள்ளதாகக் கணிப்பிடலாம்.

இந்த வருடத்திற்கான சீனாவின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி 6.5% ஆகக்குறையுமென மதிப்பிட்டாலும், ஆசியாவில் அதன் மேலாதிக்க விரிவாக்கத்தை இந்தியா பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இதனடிப்படையிலேயே அமெரிக்காவுடன் ஒரு தற்காலிக தந்திரோபாயக் கூட்டு ஒன்றினுள் தன்னை பிணைத்துக்கொள்ள இந்தியா முன்னிற்பதைக் காணலாம்

ஆழமாக நோக்கினால்  அமெரிக்க சார்பு அணிகளின் பலவீனத்தையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறது என்பதை அவதானிக்கலாம்.

அதாவது அரச வட்டி வீதத்தை 1.75 ஆகக் கீழிறக்கிய தென்கொரியாவின் பொருண்மியப் பலவீனமும், இக்கட்டான காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய தாங்குதிறன் (stress test ) ஐரோப்பிய வங்கிகளுக்கு இல்லை என்கிற மதிப்பீடுகளும், திறைசேரி திவாலாகிப்போன கிரேக்கத்தின் கையறுநிலையும், இலங்கையின் புதிய ஆட்சிக்கு கடன் கொடுக்க மறுத்த அனைத்துலக நாணய நிதியமானது (IMF) பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் உக்ரேய்ன் இற்கு ஓடோடிச்சென்று 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வரும் காரணங்களையும் இந்திய புரிந்து கொள்கிறது.

அமெரிக்காவின்பங்குச் சந்தை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐரோப்பாவின் பொருளாதாரம் அதன் மத்திய வங்கியிடம் (ECB)கையேந்திக் கொண்டிருக்கிறது

கார்பொரேட் முதலீட்டாளர்கள் ஆசியாவை நோக்கி நகர்கின்றார்கள். சீனாவின் வளர்ச்சி வீதம் குறைவடைவதனால், அவர்கள் முதலீட்டிற்கான வேறு சாதகமான நாடுகளைத் தேடுகின்றார்கள். அதுமட்டுமல்லாது அமெரிக்க- சீன அதிபர்களின் விஜயமானது இந்தியாவை நோக்கி இக் கார்பொரெட்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

ஆக மொத்தம் ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியாவிற்கே இது  சாதகமாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

அதேவேளை சீனாவின் முத்துமாலை சுற்றிவளைப்பினை உடைத்தெறிய வேண்டுமாயின், யாரோடு கூட்டுச் சேர்ந்தாவது, தன்னைப்பொருண்மிய ரீதியாகவும், படைத்துறைரீதியாகவும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற முடிவிற்கு டெல்லியின் தென் வளாகம் வந்திருப்பது போல் தெரிகிறது

இதில் விசித்திரமான நகர்வுகளும் நடைபெறுகின்றன. அதாவது அமெரிக்க- இந்திய இராஜதந்திர நெருக்கத்தால் சீனாவின் முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்கிறது.

தற்போதுள்ள 400 மில்லியன் சீன முதலீட்டினை, 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் பல உடன்பாடுகளில் மோடியும் ம் க்ஷி ஜின்பிங்கும் கடந்த வருடம் கைச்சாத்திட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் பராக் ஒபாமாவின் அண்மைய விஜயம் 4 பில்லியன் முதலீட்டைக்கூடக் கொண்டுவரவில்லை

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவோடு ஒரு இணக்கப்பாடு தனக்கு இருப்பதுபோல் மைத்திர்-இரணில் ஆட்சி அதிகாரத்திற்கு காட்டிக்கொள்ள இந்தியா முனைகிறது.

ஆட்சி மாற்றமானது  நாடாளுமன்றத்  தேர்தலோடு முற்றுப்பெறும் வரை, இதே போக்கில் இந்தியா தனது காய்களை நகர்த்துமென எதிர்பார்க்கலாம்

.நா.அறிக்கை தொடக்கம், முன்னைய ஆட்சியாளர்களால் களவாடப்பட்டதாகச் சொல்லப்படும் பணத்தினை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரும் விவகாரம்வரை, இந்தியாவின் அனுசரணையை அரசும் எதிர்பார்க்கும், இந்தியாவும் அதற்காகப் பாடுபடுவது போல் காட்டிக்கொள்ளும்.

நாட்டின் வருமானத்தைப் பொறுத்தமட்டில், கையும் கணக்கும் சரியாக இருப்பதால் மேலதிக கடன் வழங்கத் தேவையில்லைஎன்று கிறிஸ்டின் லகாட்டின் ( இவர்தான் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளர் என்று நம்பப்படுகிறது) அனைத்துலக நாணய நிதியம் இலங்கையைக் கைவிட்ட விவகாரமும் இந்தியாவிற்கே சாதகமாக அமையப்போகிறது

அதாவது உறுதியான ஆட்சி ஏற்படும்வரை, வாக்குறுதிகளை வழங்கும் வைபவங்களே நிகழும். பிரித்தானியப்பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை மைத்திரிபால சிறிசேன சந்தித்தாலும் இதுதான் நடக்கும்

இந்த வகையான இடைக்கால நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் போது, ‘குறைநிரப்பும்பங்கினை இந்தியா மனமுவந்து ஏற்கும் நிலை தோன்றுமென்பதே நிஜமானது.

இந்த விஜயத்தின் போது ஏற்கனவேயுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் (FTA ) ஆழ- அகலங்கள் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் இந்தியாவிற்குச் சார்பான வர்த்தக உபரி ( Trade Surplus) அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் வெகுவாக அதிகரிக்கும்

இந்த அச்சத்தினை வெளிப்படுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் பட்டாலி சம்பிக்க ரணவக்க, இலங்கையின் பொருளாதாரமானது முற்றுமுழுதாக இந்தியாவின் பிடிக்குள் அகப்படுவது ஆபத்தானது  என்கிறார். அதாவது இதனை இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ‘கடனை ஓரிடத்தில் இருந்து மட்டும் வாங்காமல், எல்லா வல்லரசுகளிடமிருந்தும் பகிர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள்என்பது போலிருக்கிறது சம்பிக்கவின் அறிவுரை

அதாவது மகிந்தர் விட்ட தவறை நீங்களும் விடாதீர்கள்என்று சொல்ல வருகிறாரா? இல்லையேல் இந்தியா குறித்தான மகாவம்ச மயக்கத்திலிருந்து பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இருப்பினும் சிங்களத்தின் இராஜதந்திர மைய ஓட்டத்திலிருந்து முரண்படாமல் அவர் பேசுகிறார் என்பதுதான் உண்மை வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘அமைச்சர்என்கிற வகையில் இவரையும் சந்திப்பாரென எதிர்பார்க்கலாம்.

இவரின் வருகையை இரண்டு தரப்பினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மறுதரப்பு மைத்திரி- மகிந்த   கட்சி ( கள்).

கூட்டமைப்பைப் பொறுத்தவரை, 13 வது திருத்தச் சட்டத்தில் எஞ்சியுள்ளவற்றை வடமாகாண சபையில் பிரயோகிப்பதற்கு, புதிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அத்தோடு வடமாகாணசபையிலுள்ள அமைச்சுக்கள் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கும், நீண்ட கால வேலைத்திட்டங்களுக்கும் இந்தியாவின் நேரடி உதவி கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் விடுப்பார்கள். ஆனால் சம்பூரில் கடற்படை பிடித்து வைத்திருக்கும் மக்களின் நிலங்கள் குறித்து எவர் பேசுவார் என்று தெரியாது

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத்தெரிகிறது. நோர்வே தூதுவர் மற்றும்  அமெரிக்க இராஜதந்திரிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களிடம் கேட்ட இன அழிப்பு தீர்மானம் ஏன்?’ என்ற கேள்வியை, இந்தியப்பிரதமரும் கேட்பார் என எதிர்பார்க்கலாம்

மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் பெரும் இராஜதந்திர நெருக்கடியை இத்தீர்மானம் கொடுத்திருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் இவர்கள் விடுபடவில்லை. வடக்கிற்கு செல்லும் இராஜதந்திரிகள் யாவரும் தமது உரையாடல்களில் இக்கேள்வியையும் இணைப்பார்கள்.

அடுத்ததாக, கொழும்பு அதிகார மையத்தைப் பொறுத்தமட்டில், மைத்திரி தரப்பினரே மோடியோடு நெருக்கத்தை ஏற்படுத்த முனைவார்கள் என்று கூறலாம். வரலாற்று ரீதியான அரசியல் உறவும் அதற்கு ஒரு காரணம். .தே.கட்சியானது மேற்குலகிற்குச் சார்பானது என்கிற இந்தியாவின்  இறுகிப்போன நிலைப்பாடும்‘, இக்கூற்றிக்கு வலுவூட்டும்.

சீனாவை நோக்கிய முனைவாக்கம் தடுக்கப்பட வேண்டும்என்பதோடு, மேற்குலக ஆதிக்கத்தை அனுமதிக்கும் தரப்பு அதிகார மையத்தில் வந்துவிடக்கூடாது என்பதிலும் இந்திய வெளியுறவு கொள்கைப் பிரிவு கவனம் செலுத்த முற்படும் ஆகவே மைத்திரியோடு மகிந்தாவையும், நரேந்திர மோடி அவர்கள் சந்திக்கும் வகையில் இந்தியத் தரப்பு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்

பூகோள எதிர்கால அரசியலையும், இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலையும் இணைத்துப் பார்க்கும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரியின் தலைமையிலான, ஆனால் மகிந்த அணியின் ஆதரவு பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதை ஒரு தரப்புவிரும்பும்.

அச் சக்தி எதுவென்பதை தேர்தலின் போதும், அது முடிந்த பின்னரும் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

ஆட்சிமாற்றத்தின் திசையை, தமக்குச் சார்பாக திருப்ப வருகிறாரா மோடி என்கிற பேச்சும் காதில் விழுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி:- தமிழ் தேசிய சிந்தனைப்பள்ளி என்ற வலைதளத்திலிருந்து காப்பி செய்யப்பட்டது.  www.eelamnews.com கட்டுரையாளர் நண்பர்.இதயச்சந்திரன் அவர்களால் பதிவிடப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 2 ஏப்ரல், 2015

எச்சரிக்கை,சீனிச்சர்கரை-சுலோ பாய்சன்...

எச்சரிக்கை !!!
  தயவு செய்து இந்தச் சீனிச்சக்கரை விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உன்னாதீர்கள். மன்னிக்கவும்! யாரும் உன்னவேண்டாம் மன்னிக்கவும் .நாய்க்குக் கூட குடுக்கவேண்டாம். sugar disease is a slow poison இதுதான்.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்துத் தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்தச் சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. 

பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1-.கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.This is true so Can we avoid

டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. இந்த சர்க்கரையில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது. கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம். பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!நண்பர்களே (முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள

பனை கருப்பட்டி,பனை கல்கண்டு,நாட்டுச்சர்கரை, கலப்படம் அற்றதாக பார்த்து வாங்கவும்.மேலும்,கலப்படம் இல்லாத இயற்கை உணவு என்ற பெயரில் மக்களை ஏமாற்ற ஒரு கும்பல் கிளம்பியுள்ளது..எச்சரிக்கை
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 1 ஏப்ரல், 2015

லிங்கமாக சமாதியான சட்டிச்சித்தர்

சித்தர் என்போர் சித்தில் வல்லவர் என்பது பொதுக் கருத்து. அவர் நீர்மேலும் நெருப்பிலும் நடந்திடுவர். இரும்பைப் பொன்னாக்குவர். ஒரு நேரத்தே பலவிடங்களில் தோன்றிக் காட்சி அளிப்பர். காடு மேடு மலையென அலைந்து உழலுவர் எனச் சொல்லி மாளாது இவர் திறம்.
இவர்கள் கந்தல் ஆடை உடுத்தியும், ஆடை துறந்தும் திரிவதால் மக்கள் சித்தர்களின் பெருமைகளை உணர்ந்தறியாமல் அவர்களை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதே பெரு நிகழ்வு. காலச் செலவில் மக்களுக்கு சித்தர்களின் பெருமைகள் விளங்கலாயிற்று. இவர்கள் கடுமையான தவங்களை இயற்றித்தான் சித்தர் நிலைக்கு தம்மை உயர்த்திக் கொண்டுள்ளனர் என்ற உண்மை தெரியவந்துற்றது. சித்தர்கள் புறத் தோற்றத்தில் மிக எளியராகக் காணப்படினும் உள்ளகத்தே மதிப்பறியாத ஒன்பான்மணிகளை (நவரத்தினம்) கொண்டிருந்தனர். அந்த மணிகளை உலகோர் உணரும் பொருட்டு செயலாற்றி வந்துள்ளனர்.
இறைவனின் முழுநிறைவான திருவருள் கிட்டப் பெற்றவர்களே சித்தர் என்று ஆகிட முடியும். இந்தப் புது நாகரிகக் காலத்திலும் இறைப் பேரருளால் சித்தர்கள் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சென்னை நடுவண் சிறை அமைந்த புழல் பகுதியின் காவாங்கரையில் சட்டி சித்தர் எனப்பட்ட மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் தோன்றி பல இறும்பூதுகளை (miracles) நிகழ்த்தியுள்ளார். 

சித்தரின் வருகை
மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் தவம் புரிந்த சட்டி சித்தர் இறுதியாக கடலில் மிதந்தபடி திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கயதை பொது மக்கள் பார்த்துள்ளனர்.  இவர் பிறப்பிடம் யாது? பெற்றோர் யாவர்? என்பன அறியக் கிடைக்கவில்லை. முதன்முதலாக திருவொற்றியூர் வந்து சேர்ந்த இவர் ஆடையின்றி அம்மணராக சென்னை நகர் முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து விட்டு புழலில் உள்ள காவாங்கரைக்கு வந்தார். அங்கு இவரது கோலம் கண்ட ஒரு அம்மையார் இவரது இடுப்பைச் சுற்றி ஆடை கட்டினார். அது முதல் சித்தர் அங்கேயே தங்கலுற்றார்.
சித்தருக்கு சடைகட்டி மயிர்க் கற்றையாக இருந்ததால் அவ் அம்மையார் ஒரு அன்பரை அமர்த்தி மொட்டை அடிக்க ஏற்பாடு செய்தார். நீள் சடையும் அழுக்கும் கோர்த்திருந்த அவரது நிலையையும் கண்ட அந்த அன்பர் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு மொட்டை அடிக்கத் தொடங்கினார். அதுபோது மிக உயர்ந்த நறுமண வீச்சு அங்கே எழுந்தது. அந்நறுமணம் எங்கிருந்து வருகின்றது என்று நின்றிருந்தோர் திகைப்புற்று நோக்க அது சித்தரின் தலையிலிருந்து தான் வீசுகின்றது என்பதை இறுதியாக அறிந்தனர். அப்போது தான் அவர் மாபெரும் தவப்பெரியார் (மகான்) என்பதை அங்கிருந்தோர் அறிந்து கொண்டார்கள். அது முதல் சித்தர் அவ்விடத்தில் இருந்து கொண்டே பல இறும்பூதுகளை நிகழ்த்தி வந்தார். ஆடை அணிவித்த அம்மையார் வீட்டில் அவர் தங்கி இருந்த போது முன்கூட்டியே அன்பர்களது வருகையை அறிந்து கொள்வார். தன்னை நாடி வரும் அன்பர்கள் தமது குறைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நீங்கியதன் காரணமாக அன்பர்கள் அவரது தீவர பக்தர்கள் ஆயினர். 
சட்டி சித்தர் என்ற பெயர்க் காரணம் 
சித்தர் கன்னிமார் எழுவரை (சப்த மாதர்) தாயாக வரித்து அன்னபூரணியை ஏற்றிப் புகழ்ந்து அட்சய பாத்திரம் ஒன்றை வேண்டிப் பெற்றார். அந்த சட்டியில் இருந்து வேண்டிய அளவு உணவுப் பொருள்கள் குறைவில்லாது வந்து கொண்டே இருந்தன. அதனால் அன்பர்களுக்கு வயிறார உணவிடும் வழக்கத்தை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக சட்டி சித்தர் என்ற பெயர் இவருக்கு உண்டாயிற்று.
ஒரு சமயம் வயலில் வேலை பார்த்து விட்டு களைப்புற்றிருந்த குடியானவர்களை உணவு உண்ண அழைத்தார். அவரது சட்டியில் சிறிதளவே உணவு இருந்தது. அதைக் கண்ணுற்ற அக் குடியானவர்கள் ''இந்த சிறு கவள உணவை எப்படி எங்கள் எல்லோருக்கும் பரிமாறுவீர்'' என்றனர். சித்தர் அனைவரையும் வரிசையாக அமரச் சொல்லி முதல் ஒருமுறை சோறு பரிமாறினார். சட்டியிலோ சோறு அள்ள அள்ளப் பெருகியது. அடுத்து இரண்டாவது முறையும் அந்த உழவர்களுக்கு வயிறாரச் சோறு பரிமாறினார். இந்த விந்தை கண்டு உழவர்கள் வியப்புற்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர்.
சித்தர் தாம் வைத்திருந்த சட்டியிலிருந்து அன்பர்களுக்கு சோறு பரிமாறி வந்ததைக் கண்டு மகிழ்வுற்ற அம்மையாரின் கணவர் இராகவன், "சட்டிச் சோறு கண்ணா" என்று அன்புடன் அழைத்தார். அதுவே கண்ணப்ப சுவாமி என்று வழங்க காரணமாகியது. 
சித்தரின் பரிவு
சித்தர்கள் பேசும்போது  ஏதடா ... எங்கேயடா.. என்று ஒருமையில் பேசுவர். உரிமை கலந்த பாச உணர்வு கொண்ட பேச்சாக அவை இருக்கும். அதே போல் சட்டி சித்தரும் மற்றவர்களிடம் பேசும்போது நைனா .. என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். அறியாமல் செய்யும் பிழைகளை அருள் உள்ளத்தோடு அவர் களைய முற்பட்டார். பொற்கொல்லர் ஒருவர் கொலுசு செய்து தருவதாகக் கூறி ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் வாங்கிய பணத்தைச் செலவு செய்துவிட்டார். எனவே அவரிடம் பொன் வாங்கப் பணம் இல்லை. கொலுசு செய்யச் சொன்னவர் கேட்டபோது நாளை கொலுசு தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். சொன்னபடி நாளை கொலுசு தராவிட்டால் மானம் போய்விடும் என்று வேதனையுற்ற பொற்கொல்லர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக நஞ்சை வாங்கி வைத்திருந்த போது கடைசியாகச் சித்தரைப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. சித்தரைப் பார்க்க வந்த பொற்கொல்லரை அமர வைத்து மூன்று கூழாங்கற்களை எடுத்து பக்கத்தே வைத்தார். அவை பொன்னாக மாறின. அவற்றை கொல்லரிடம் கொடுத்து போய்யா ..  பொழச்சுக்க .. என்று சொல்லி அனுப்பினார்.
சித்தரின் இறும்பூதுகள்
ஒரு போது பிராமணர் ஒருவர் சித்தரைக் காண்பதற்காக வந்தார். உணவு வேளையில் வழக்கம் போல் அன்பர்களை உட்கார வைத்து உணவு பரிமாறினார். அந்நாட் பொழுதில் எல்லோருக்கும் மீன் குழம்பு பரிமாறப்பட்டது. இதனால் பிராமணர் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு சித்தர் கவலைப் படவேண்டாம், "நீ, எதை நினைக்கிறாயோ அது வரும் என்று கூறி பிராமணரை அமர வைத்தார். பிராமணர் எனக்கு கத்தரிக்காய் குழம்பு போதும் என்றார். மீன் குழம்பு கரண்டியை எடுத்து  இலையில் ஊற்றிய போது அது கத்தரிக்காய் குழம்பாக ஊற்றியது. இது கண்டோர் வியப்புற்றனர்.  
ஒரு சமயம் அன்பர்கள் ஆண்டார் குப்பம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் போது சித்தரையும் வருமாறு அழைத்தனர். நீங்கள் முன்னே போங்கள் நான் பின்னே வருகின்றேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அங்கே முருகப் பெருமானுக்கு திருமுழுக்காட்டு நடத்தப்பட்ட போது சித்தருக்கே திருமுழுக்காட்டு  நடப்பது போல் அவர்கள் காட்சி கண்டனர்.  அவரையே தம் நினைவில் கொண்டுள்ளதால் தமக்கு ஏற்படும் மனப்பிறழ்ச்சியே (பிரமை) இது என்று அவர்கள் நினைத்தனர். ஊர் திரும்பிய அவர்கள் நீங்கள் ஏன் வரவில்லை என அவரை வினாவினர். என் மேல் பால் ஊற்றினார்கள் அதை நீங்களும் பார்த்தீர்கள் ஆனால் நான் வரவில்லை என்று சொல்கிறீர்களே என்று கேட்டார். இவ்வகையில் பல தலங்களுக்கு செல்வதை அவர் வழமையாகக் கொண்டிருந்தார்.  
திருப்பதிக்குப் போகப் போவதாக அவர் சொல்வார். அப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் அவர் திருப்பதியில் இருந்ததைப் பலர் பார்த்துள்ளனர். திருப்பதியில் பேசிய பேச்சுகளைக் கூட அவர் நினைவுபடுத்துவார். நோய்களை அகற்ற பச்சிலை மூலிகைகளைத் தருவதும் அவரது பணியாக இருந்தது.
சோறு கேட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சித்தர் செல்வது வழக்கம். ஒருபோது அவ்வாறு சோறு கேட்டு ஒரு வீட்டின் முன் நின்றார். அவ்வீட்டார் வறுமையில் தத்தளித்ததால் அவருக்கு சோறு போட முடியவில்லை. அதை அறிந்த அவர் உரூபாய் கட்டு ஒன்றை அங்கு போட்டு விட்டுச் சென்றார். 
பகைவர்களை அடியவராக்கிய நிகழ்வு
சித்தரின் கொள்கைகளுக்கு மாறுபட்ட சிலர் அவருக்கு துன்பங்களையும் தொல்லைகளையும் ஏற்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் மீது சித்தர் சிறிதளவேனும் சினந்ததில்லை. ஒரு நிலையில் அவர்கள் சித்தரை கொலை செய்துவிடுவது என்று தீர்மானங் கொண்டதை அறிந்த சித்தர் மண்சட்டியை கையில் ஏந்திக் கொண்டு தன்னந்தனியராக காட்டின் ஊடே நடந்து சொல்லலானார். கொலை நோக்கர் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அப்போது விந்தையிலும் விந்தை ஒன்று நிகழ்ந்தது. சித்தர் தம் தலை சட்டியிலும், பிற உறுப்புகள் எட்டுத் திசையிலும் சிதறி இருக்குமாறு வைத்துவிட்டார். கொல்வதற்குப் பின் தொடர்ந்தோர் நமக்கும் முன்னமேயே நமது நண்பர்கள் வேலையைச் செவ்வையாக முடித்துவிட்டார்கள் என்று மகிழ்ந்தபடித் திரும்பினர். அவர்கள் திகைப்புறமாறு சித்தர் சட்டியை ஏந்தியபடி அவர் எதிரே வந்தார். இதனால் அவர்கள் அஞ்சி நடுக்குற்றனர். இந்த நிகழ்வை இவர்கள் தம் நண்பர்களிடம் தெரிவித்த போது தாமும் அவரைப் அவ்வண்ணம் பார்த்த்தாகச் சொல்லினர். அதே நேரம் வியாசர்பாடி, செங்குன்றம், மூலக்கடை, அயனாவரம், பொன்னேரி, எண்ணூர், மீஞ்சூர், மாதவரம், மணலி ஆகிய இடங்களிலும் சித்தரைக் கண்டதாகக் கூறினார்கள். அவரது வல்லமையையும் பெருமையையும் உணர்ந்து கொண்ட கொலை முயற்சியாளர்கள் நாளாவட்டத்தில் அவரின் அடியவராகிப் போயினர். சித்தரின் நவகண்ட யோக நிலையை பல்வேறு சமயங்களில் கண்டாரும் உண்டு.
சட்டி சித்தர் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி
1961 பிலவ ஆண்டு புரட்டாசித் திங்கள் மகாளய அமாவாசை அன்று அஸ்த நட்சத்திம் கூடிய திங்கட் கிழமை நன்னாளில் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று எண்ணம் மேற்கொண்டவராக அடியவர்களிடம் அந்த நாளின் போது வந்து சேருமாறு பணித்தார். நீ மண்வெட்டி கொண்டு வா, நீ கூடை எடுத்து வா, திருமணத்திற்கு போக வேண்டும் பெரிய மாலை கொண்டு வா என்று சொன்னார்.
நான் சமாதி ஆகிவிட்டால் உடனே புதைத்து விடக் கூடாது. குழியிலேயே 41 நாள்கள் வைத்திருத்துவிட்டு 41 ஆம் நாள் நான் லிங்கமாக  மாறிய பிறகு செய்ய வேண்டியவற்றைச் செய்யலாம் என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று எவருக்கும் அப்போது விளங்கவில்லை.
குறிப்பிட்ட அந்நாளில் எல்லோரும் வந்தாகிவிட்டது. அவர்களை கவனித்த கண்ணப்ப சுவாமிகளாகிய சட்டி சித்தர் ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள் என்றதும் பாட்டு பாடச் சொல்கிறார் என நினைத்த அன்பர்கள் பாடினார்கள். சித்தர் சின்முத்திரையுடன் அமைதி ஆனார். அப்போது தான் அடியவர்களுக்கு உண்மை விளங்கிற்று. உடனே கண்ணப்ப சுவாமிகள் இருக்கும் இடத்தில் குழி தோண்டி அவரை ஆகம முறைப்படி அமர வைத்தார்கள். 41 நாள்கள் குழியை மூடாமல் பலகை கொண்டு மூடி அதன் மேல் விளக்கை ஏற்றினார்கள். 41 ஆம் நாள் பலகையை எடுத்துப் பார்த்த போது சித்தர் லிங்க வடிவாய் ஆகி இருப்பதைக் கண்டனர். சுற்றிலும் மேடை அமைத்து முடித்தனர். அதன் மேல் பின்னாளில் கண்ணப்ப சுவாமிகளின் திருவுருவச் சிலை கிழக்கு நோக்கி பதிக்கப்பட்டது.
இவரது சமாதி கோவிலில் அமாவாசை பௌர்ணமி நாள்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. கோவில் நாள்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி  அளவும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறக்கப்படுகின்றது. இன்றும் மக்கள் தம் வேண்டுதல்கள் நிறைவேறவும் குறைகள் தீரவும் சட்டி சித்தர் எனும் கண்ணப் சுவாமிகளை வேண்டிக் கொண்டு அவரது சமாதியில் ஊதுவத்தி ஏற்றுகின்றனர்..

மேற்சொன்ன செய்திகள் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் சமாதி ஆசிரம சங்கத்தாரால் 2011 இல் வெளியிடப்பட்ட 50 ஆம் ஆண்டு குரு பூசை மலரில் இடம் பிடித்துள்ளன
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 11 பிப்ரவரி, 2015

மக்கள் முதல்வர் அம்மா அவர்கள்- கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு. தீரன்சாமிக்கு கடிதம்- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஆதரவுக்கு நன்றி ---

மக்கள் முதல்வர் அம்மா  அவர்கள்- கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு. தீரன்சாமிக்கு கடிதம்- ஸ்ரீரங்கம்  இடைத்தேர்தல் ஆதரவுக்கு நன்றி ---


best links in tamil
More than a Blog Aggregator

பவானி கூடுதுறை சன்கேமேஸ்வரர்,திருக்கோவில் ,சேலம் ,1008 லிங்கம்,திருச்சங்கோடு அர்த்தநாரிஸ்வரர் திருக்கோவில்,உள்ளிட்ட திருக்கோவில்களில் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ,மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்தப்படத்தின்- நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கைச் செய்தி


best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 26 ஜனவரி, 2015

எதிர் வரும் ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத் தேர்தல் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி!!

எதிர் வரும் ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத் தேர்தல் 
அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி!! 
 எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி!

 உலக தமிழர்களின் உன்னதத்  தலைவி டாக்டர். புரட்சித்  தலைவி அம்மா அவர்களின் ஸ்ரீ ரங்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.வளர்மதி அவர்கள்  இரட்டை இலை சின்னத்தில் அமோக வெற்றி பெறுவது உறுதி - எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி! இதுவும் உறுதி 

 எனவே மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  வேட்பாளருக்கு எதிராக எதிர்கட்சிகள்  களம் காண்பது கேளிக்கூத்து! 
 
வருகின்ற 02.02.2015 அன்று முதல் ஸ்ரீ ரங்கம் சட்டப் பேரவை தேர்தலில் அம்மா அவர்களின் அ.இ.அ.தி.மு.க.வேட்பாளருக்கு - இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க  அணிவகுக்க உள்ளோம்.

திருப்பூர்,கரூர்,கோவை ,ஈரோடு,சேலம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் 02.02.2015 அன்று வைரமடையில் அணி திரண்டு,ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட கொங்கு தமிழர் கட்சியின் சார்ப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

எதிர் வரும் ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத்  தேர்தலில்  நமது கட்சியினர் அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச்சேகரித்து  - அம்மாவின் இரட்டை இலை சின்னம் அமோக வெற்றி பெறவும் - எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலியாகவும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



best links in tamil
More than a Blog Aggregator

தொட்டியபட்டி அரசு பள்ளியில் டி.கே.தீரன்சாமி கொடியேற்றி - சிறப்புரை



டி.எஸ்.சண்முகம்,டி.கே.தீரன்சாமி ,தலைமைஆசிரியர்
இனிய குடியரசு தின விழா - 2015







ஜனவரி 2015 -26

    இன்று காலை 9 மணிக்கு காங்கயம் நகராட்சி தொட்டியபட்டி அரசு பள்ளியில் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய தலைவர் அமைப்பாளரும் - தொட்டியபட்டி அரசு பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினருமான டி.கே.தீரன் சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து - பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி - குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

  
அரசு பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றார்கள் இப்பள்ளியின் PTA தலைவரும் - கல்விக்குழு உறுப்பினருமான டி.கே.சண்முகம் நன்றி கூறினார்.

 இப்பள்ளிக் குழந்தைகள் நலன் காத்திட பள்ளி வேலை நேரமான காலை 9 மணிக்கும் மாலை 4 மணிக்கும் அரசு டவுன் பஸ் வசதியை அரசிடம் வேண்டுவது எனவும் இந்த பஸ் வசதி அனைத்து மக்களுக்கும் பயன் தரும் வண்ணம் பஸ் வழி தடம் போக்குவரத்து பனி மனை , ஐயாசாமி நகர் காலனி , போக்குவரத்து நகர் , ராஜீவ் நகர் , தொட்டியபட்டி செம்மடை , வரதப்பம்பாளையம் , நெய்க்காரன் பாளையம் வழித்தடமாக அமைய வேண்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது. நன்றி.



 தகவல் PTA தலைவர் டி.எஸ்.சண்முகம் 

best links in tamil
More than a Blog Aggregator

புதன், 21 ஜனவரி, 2015


ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல்

 

நமது கொங்கு தமிழர் கட்சி, பிப்ரவரி 13,2014 அன்று நடைபெறவிருக்கும்
ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில், காவேரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு,
நெய்வேலி நிலக்கரி பங்கு பிரச்சினை, தமிழக மீனவர் நலன்,

இலங்கைத் தமிழர் நலன், கட்சத் தீவில் தமிழ்நாட்டின் உரிமையை

நிலைநாட்டுதல், மீத்தேன் வாயு மற்றும் கெயில் குழாய் பதிப்பு

போன்றவற்றில் தமிழக மக்களின் நலனுக்காக என்றென்றும் உழைக்கின்ற

பேரியக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்

வெற்றி வேட்பாளர் வளர்மதி


அவர்களுக்கு நல்லாதரவைத் தந்து, அதிமுக நிறுவனர்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களின் நல்லாசியோடு மக்கள் நலம் பெற உழைத்து வரும்,
அதிமுக பொதுச்செயலாளர் அம்மா
அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
நன்றியுடன்,
டி.கே.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர் 
கொங்கு தமிழர் கட்சி.
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 27 டிசம்பர், 2014

அன்புள்ள KB sir..!

அன்புள்ள KB sir..!
உடலுக்கு எப்போதுமே
அழிவு உண்டு
ஆனால் உயிருக்கு இல்லை.
பாலச்சந்தரின் உயிர்
அவரது படைப்புகள் மட்டுமே...
கலைஞனின் உயிர்
அவனது கலை மட்டுமே...
படைப்புகள் மூலம்
சமூகத் தடைகளை உடைத்த
பாரதியின் பாதசாரி...!
உண்மையில் இவர் ஒரு ஆலமரம்
இவரது கிளைகள்,
கனிகள் உண்டு வாழ்ந்த கலைஞர்கள்
கண் முன் காணும் திரை நட்சத்திரங்கள்...!
தன் காலம் உள்ளவரை
வாழ்ந்துவிட்டு போகவில்லை
வரலாற்றை தந்துவிட்டு உறங்கியிருக்கிறார்...!
 

best links in tamil
More than a Blog Aggregator

முழுக்கொள்ளளவில் முல்லை பெரியாறு....!


முல்லைப்  பெரியாறு அணையைப் பொறுத்தவரையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று மூவர் பாதுகாப்புக்குழுவின் தலைவர் நாதன் தெரிவித்துள்ளார்.   தற்போது 142 அடியாக இருக்கும் அளவிலும்அணை சிறப்பாகவே உள்ளது   என்றும்முல்லைப் பெரியாறைச் சார்ந்த பேபி அணையும் எந்த நீர்க்   கசிவும் இல்லாத பலமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா அரசு பாதுகாப்புக்  குறித்து அச்சப்படுவது தேவையற்றது மற்றும் அது போன்றசம்பவங்களுக்கு வாய்ப்புகள் குறைவு என்பதே உண்மை.    கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்மட்டத்தை 136 அடி என்று   பராமரித்ததால் நீர்பிடிப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகள்அதிகமானதும்தற்போது நீர்மட்டம் அதிகரிக்கும் போது அவைகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்கிற நிலையில் கேரளா இதை எதிர்த்தும் வருவது குறிப்பிடத்தக்கதுமேலும்  அந்த அணை சார்ந்த பகுதிகளுக்கு இன்றளவும் தமிழக அரசு    குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் கேரள அரசுக்கு செலுத்துகிறது  என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் நடத்திய பாரட்டு  விழாவில்அவர்குறிப்பிட்ட "  நீர்மட்டத்தை 152 அடி உயர்த்திக் காட்டுவோம்என்றது கேரள அரசுக்கோ,கேரள மாநில மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதையும் கேரளா புரிந்து கொள்ளவேண்டும்ஆக்கிரமிப்புகள்  குறித்து கேரள அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விவசாயத்தை காப்பற்றுவது என்பது விவசாயிகள் மட்டும் போராடுவது  அல்லதுஅவர்களுக்கான பிரச்சினைகள் மட்டுமல்லஒவ்வொரு   வேளையும் உணவைக்கொள்ளக்கூடிய அனைவரின் கடமைகேரளா அரசுமுல்லைப் பெரியாறு விவகாரத்தில்தமிழக அரசுக்கும்,விவசாய   பெருங்குடி மக்களுக்கும் ஆதரவைத் தர வேண்டும்கேரள  சகோதரர்களின் பாதுகாப்பில் தமிழக அரசும்மக்களும் முக்கியத்துவம்  அளிக்கிறோம்என்பதே உண்மை.
 நன்றி,-
சௌந்தரராஜன்.க, செய்தித் தொடர்பாளர்
best links in tamil
More than a Blog Aggregator