திங்கள், 21 மார்ச், 2011

கொங்குதமிழர்கட்சி ஊழல் ஒழிப்பில் புதியகட்சி-புதிய தலைமுறைக்காண- புதிய முயற்சி


 காங்கேயம் மண்ணில் பிறந்து வெள்ளையர்களுக்கு எதிராக வீரமுழக்கம்இட்ட இந்தியவிடுதலைப்புலி மாவீரன் தீரன் சின்னமலையின் ஆசிபெற்ற கொங்குதமிழகத்தின் போராளி கோவைசெழியனாரின் 11ஆம் ஆண்டு நினைவு மற்றும் எமது மாநிலகொங்குதமிழர் பேரவையின் 10ஆம் ஆண்டு துவக்க தினம் மார்ச்14ல் சென்னையில் கொங்குதமிழர்கட்சி துவக்கப்பட்டு கொடிமற்றும்கொள்கைகள் வெளியீட்டு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரவையின் நிறுவனர் மற்றும் மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேலம் ஆர்.ராஜேந்திரன்,பொருளாளர் எஸ்.கே.நந்தகுமார் செயற்குழு உறுபினர் கே.ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் பேரவையின் மாநில-மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 கீழ்கண்ட தீர்மானங்கள் மற்றும் கொள்கைகள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன:-


# பேரவையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கட்சியின் மாநிலத்தலைவராகவும்,பேரவையின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சேலம் ஆர்.ராஜேந்திரன் கட்சியின் மாநிலப்பொதுச்செயலாளராகவும் நியமிப்பது.மேலும் பேரவையின் அனைத்து நிலைகளிலும் செயல்படும் பொருப்பாளர்கள் கட்சியிலும் அதே பொருப்பில் தொடர்வார்கள்.


#ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க இலங்கையில் தனி ஈழம் ஒன்று அமைக்க நமது மைய,மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.


#தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


#பூரண மது விலக்கு,இல்லை எனில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.


#சாயப்பட்டறை பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி மற்றும் பனியன் தொழிலைகாக்கவும்,விவசாய விலை நிலங்கள் மற்றும் குடிதண்ணீர் ஆதாரங்களை பேனவும் சாயக்கழிவுநீரினை கடலுக்கு எடுத்த்ச்செல்ல வேண்டும்.அல்லது முழுமையாக சுத்திகரிக்க வேண்டும்.


#55வயதுக்கு மேல்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


#விவசயா விளை பொருள்களின் உற்பத்தியை அதிகரித்து நுகர்வோரின் சுமையை குறைக்க விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.அதற்கு நீர் ஆதாரத்தை அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக கிணறு வெட்டி உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படவேண்டும்.


#நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.


#பெற்றோர்களின் அனுமதியில்லாமல் வாழ்க்கை என்பதே புரியாத நிலையில் நடைபெரும் இளம் பெண்களின் திருமணத்தை தடுக்கும் வகையில் பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக மாற்றி அமைக்க வேண்டும்.


#மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 2குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும்.

#சாலை விபத்துக்ககளை தடுக்க 8ம் வகுப்பு முதல் சாலை விதிகள் அடங்கிய செயல்முறை பாடத்திட்டத்தை கொண்டுவர வேண்டும்.


#1947ல் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.லஞ்சம்-ஊழல் எனும் அரக்கர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்கவேண்டும்.


உள்ளிட்ட தீர்மானங்களும்,கொள்கைகளும் வகுக்கப்பட்டன்.கூட்டம் முடிவில் சென்னை மாநகரஅமைப்பாளர் எஸ்.முரளி நன்றி கூறினார்.

best links in tamil
More than a Blog Aggregator