ஆனால் என்தேசமே அய்யோகோ!அய்யோகோ!!
என்று அல்லல்படுகிறது.
ராசாவே!மகாராசாவே!ஊழலின் மன்னனே!தலித்களின் கண்ணனே!
நீதான் கொள்ளை கொண்டது எவ்வளவு?

திருக்குவலை தாத்தாவிற்கு நீதான் தந்தது எவ்வளவு?
தமிழ்சங்கத்தின் கண்ணகிக்கு நீ காவல் கொண்டது எவ்வளவு?
உலகமே சிரிக்கிறது!
மகாராசாவே!நாற்பதுகோடி மக்கள் நாதியற்ற வீதியிலே!
அவர்களுக்கு ஒருவேலை உணவுக்கே பஞ்சம்!
ஆனால் நீயோ!உலக சுந்தரியோடு மஞ்சத்திலே தஞ்சம்!
பொருக்குமோ!அய்யோகோ!பூமித்தாய்க்கு பொருக்குமோ!
உலகத்தமிழனின் உறவுப்பாலமே!நீதான் கனியோடு-
கைகோர்த்து கலந்தது எப்படி?களவுமொழியில் இளவு கண்டது எப்படி?
செப்படி ஞானத்தங்கமே?செப்படி!இந்த செப்படி வித்தையெல்லாம்
நீ கற்றது எப்படி?செப்படி!தங்கமே செப்படி?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்!குற்றமென குமுறியவனின்
கொற்றம் சரிந்தது எப்படி?செப்படி!தங்கமே செப்படி?
ராட்டனித்தில் சுற்றும் ராடியாவே!எத்தனைபேர் தொட்டார்கள்-
உன்னை!உனக்கு எங்கிருந்து வந்தது பண்ணை?
நீராவே!உன்னை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்!உன் தோட்டத்தில் மரம் நட்டவர்கள் எல்லாம் சிபிஐயிடம் சிறை பட்டார்கள்!
அம்மாவை அகமகிழ்ந்து போற்றி!சும்மாவே திண்ணையை தேய்த்து
சுகம்கண்ட சுபவீரனே!அலைக்கற்றையில் ஆரியனுக்கும்-திராவிடனுக்கும்
என்னடா!மோதால்?எங்கிருந்து கண்டாய் அதை!
களவானி பயலை கைது செய்தால்- தமிழன் குடிமூழ்கிவிடுமா?
ஊழலுக்கு உறவுசொல்லி!ஒப்பாறியிட்ட சில தமிழ் உறவே!
உன் கூப்பாட்டுக்கு நீ பெற்ற கூலி எவ்வளவு?
ஈரம் இல்லாதா மணியே!இரைட்டைக்குழல் துப்பாக்கியே!
சோரம்போன ஓநாய்க்கு ஓலமிட உனக்கு கிடைத்த துண்டு எவ்வளவு?
தளபதியே!தளபதியே!மை வைத்து மயக்கும் களவானி கூட்டத்துக்கு
கை கொடுக்காதே!கை கொடுக்காதே!
லஞ்சம்-ஊழல் எனும் கொடிய அரக்கர்களிடம் இருந்து
தேசத்தையும்-தேசியத்தையும் மீட்டெடுக்க!
"ஊழல் ஒழிப்பு முன்னனி" என்ற மக்கள் கட்டமைப்பு தேவை.