சனி, 17 டிசம்பர், 2016

கருப்பப்பணம்..தமிழகம் முதலிடம்..தினமலர் செய்தி..?

கருப்புபணம் பதுக்கலில் தமிழகம் முதலிடம்
இது முழுக்க,முழுக்க அரசியல்ரீதியாக
நடத்தப்பட்ட பழிவாங்கள் நடவடிக்கை..என்றுதான் நாம் பார்க்கவேண்டும்.!

ஏன்னா..? இந்தியாவில் கருப்புப்பணம் அதிகம்
வைத்துள்ளவர்கள் மேதகு பிரதமர் மோதியின்
குஜராத்திகளும், பி.ஜே.பி தொடர்ந்து ஆளும்
மாநிலமாக இருக்கும் மார்வாடிகளிடம்தான் கருப்பு பணம் அதிகம் உள்ளது.

ஏனெனில்..? இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யும் பொருள்களை வாங்குவதும், விற்பதும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.வரத்தகச்சந்தையில் இவர்களின் ஆதிக்கமே இந்திய முழுவதும் உள்ளது. இதை யாராவது மறுக்கமுடியுமா..? உதாரணத்துக்கு கோவையில் உள்ள குஜராத்தி, மார்வாடிகளின் வியாபார யுக்தி, வருமானவரித்துறையினரை ஏமாற்றுவது..போன்ற தந்திரங்களை நம்மவர்கள் இவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டார்கள்..நம்மிடமே இவ்வளவு கருப்புப்பணம் என்றால்..? நம்முடைய குருநாதர்களான அவர்களிடம் எத்தனை இலட்சம் கோடிகள் இருக்கும்..?

இந்த நிலையில் கருப்புப்பணம் பதுக்கலில் தமிழகம் முதலிடம் என்று சொல்வது ஏமாந்தவன் தலையில் ஏறி மிதிப்பது அல்லது வடக்கே வீரத்தை காட்ட இயாலாதபோது..தெற்கே காட்டுவோம்.. என்ற போக்காவே நாம் எடுத்துக்கொள்ளமுடியும்.
இது போன்ற செய்திகளை ஓங்கிப்பிடிக்கும் ஊடகங்களின் போக்கு நம்மை கொச்சைப்படுத்துவதாக பார்க்க முடிகிறது..?

இதைத்தான் நாம் அரசியல் ஆதாய நடவடிக்கை என்று சொல்கிறோம். அப்படி இல்லை எனில்..?  வடக்கே தங்கள் வீரத்தை
காட்டினால் நாங்கள் உங்களுக்கு தலை வணங்குகிறோம்..இதுதான் பொது வழி..! .இதுதான் பிடல் காஸ்ட்ரோ வழி..!
best links in tamil
More than a Blog Aggregator