வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சீனா தயாரிப்புகளை புறக்கணிப்போம்! ஈழத்தமிழர்களை மீட்போம் கொங்குதமிழர்கட்சி வேண்டுகோள்இலங்கையில் நிலவும் எதார்த்தங்களை உணராமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்.உண்மையிலேயே இலங்கைத் தமிழர்மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதிக்கு வந்துமீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்.என்று கடந்த இரு தினங்களுக்குமுன் இலங்கை அதிபர் மகிந்தாவின் சகோதரரும்,அந்நாட்டின் பாதுகாப்புச்செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே தமிழக முதல்வர் அவர்களை விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் கடந்த ஜீன் மாதம் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் பிறகு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரிகிளிண்டன் தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.அச்சந்திப்பின்போது முதல்வர் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி ஹிலாரியிடம் கவலை தெரிவித்துள்ளார்.

பிறகு அமெரிக்காவின் வெளிவிவாகாரத்துறையும்,இந்தியா வெளியுறவு துறையும் போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்,ஈழத்தமிழர்களின் புனரமைப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வற்புறுத்தியது.

பிறகு ஹெட்லைன் டுடே,பிரிட்டனின் சேனல் 4,போன்ற ஊடங்கள் ஈழத்தில் நடைபெற்ற ராஜபக்சே சகோதரர்களின் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இலங்கையில் ஊடகவியலார்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா,
சபையின் விசராணக்குழு பல முறை இலங்கை செல்ல முயன்றும் மகிந்தா அரசால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் பத்துக்கும் மேற்பட்ட அமரிக்காவின் உலவு விமானங்கள் இலங்கையின் வான் பரப்பில் பறந்து சென்றது.

இது போன்ற சர்வதேச தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசாங்கம் தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை எனக் காட்டிக்கொள்ளவும்,கோத்தயா மற்றும் பசில் ராஜபக்சே சகோதரர்களிடையே பிரதமர் பதவிக்கான அதிகாரப்போட்டியில் கோத்தபயா தன் மீது அதிபர் மகிந்தா மற்றும் அரசு கூட்டமைப்பின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.

இந்திய தேசியத்தின் இறையாண்மை என்பது மாநில முதல்வர்களை உள்ளடக்கியே உள்ளது.மைய அரசு தான் மட்டும் என்ன நினைத்தாலும் அதைச்செய்து விட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.தமிழக அரசு மற்றவர்களீன் தயவில் சிறுபான்மை அரசாக செயல்படவில்லை.மாறாக சட்டமன்றத்தில் மிகப்பெறுபான்மையுள்ள மக்கள் அரசாங்காமாக திகழ்ந்து வருகிறது.

இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை இலங்கை- சீனாவின் பக்கம் நெருங்கி  விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.அதனால் ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு தொடர்ந்துஉதவி வருகிறது..இருப்பினும் இலங்கையும் சீனாவும் மிக நெருக்கத்தில் பிணைந்துள்ளது.கடந்த காலங்களில் ஆறு பில்லியன் அமரிக்கா டாலர்களை இலங்கையின் புனரமைப்புக்கு சீனா கொடுத்துள்ளது.ஏராளமான நவீன ஆயுதங்களை மகிந்தா அரசுக்கு சீனா வழங்கியுள்ளது.

தற்போது எழுந்துள்ள சர்வதேச நெறுக்கடிகளுக்கு பயந்து மகிந்தா ராஜபக்சே சீனாவின் உதவியை நாடிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே மைய அரசு இனியும் யோசிக்காமல் சர்வதேச ஆதரவைத்திரட்டி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி முழ்வேலியில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களை மீட்டு அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை அமைத்துத் தரவேண்டும்

மகிந்தாவின் இலங்கை அரசுக்கு சீனா தொடர்ந்து உதவி வருகிறது. சீனாவின் தாயாரிப்புகளை விற்பனை செய்யும் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக இந்திய உள்ளது.சீனாவின் தயாரிப்புகளை வாங்க நாம் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் ஈழத்தமிழர்களின் ரத்தத்தை குடிக்க உதவுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.காந்தியக் கோட்பாட்டின் வழியில் சீனாவின் அந்நியப்பொருள்களை ஒவ்வொரு தமிழனும் விற்கவோ வாங்கவோ கூடாது என முடிவு எடுப்போம்.
                                           
                                           இவன் 
டி.கே.தீரன்சாமி
மாநில அமைப்பாளர்
கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

ஜெயலலிதா முழக்கம் ஈழத்தில் நிரந்தர தீர்வு காணும் வரை தமிழகம் ஓயாது

 தமிழக சட்டசபையில் கடந்த ஜீன் மாதம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானத்தை தமிழக மக்களும்,ஈழத்தமிழ் ஆதரவாளர்களும்,தமிழ் ஊடகங்களும்,புலம் பெயர் தமிழர்களும் வரவேற்றனர்.

 அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை அமரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேரில் சந்தித்து பேசினார்.அப்பொழுதும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஹிலாரியிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.

அமரிக்கா வெளியுறவுத்துறையும்,இந்திய வெளியுறவுத்துறையும் இலங்கைஅரசை போர்குற்றவிசாரணைகள் நடத்த வேண்டுமென வற்புறுத்தியது.இந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்ட அமரிக்காவின் உளவு விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பறந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே கடந்த இருதினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் தமிழக முதல்வர் அம்மா அவர்களையும் விமர்சித்து இருந்தார்.இதற்கு நமது கொங்குதமிழர்கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழக சட்டமன்றப்பேரவையில் இந்தியகுடியரசுகட்சி,தே.மு.தி.க,கம்யூனிஸ்ட் கட்சிகள் கோத்தபயாவின் விமர்சனம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர்..

இத்தீர்மானத்தின் மீது உரையாற்றிய தமிழமுதல்வர்,
 இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி இருக்கவேண்டும்.இத்தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தால் கோத்தபயா விமர்சித்து இருக்க மாட்டார்.தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்ற கோத்தபயாவின் கருத்து கச்சதீவு ஒப்பந்தத்திற்கு எதிரானது.கோத்தபயாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டசபை தீர்மானம் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தமிழகம் ஒயாது என தமிழக முதல்வர் சட்டசபையில்முழங்கினார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த கோத்தபயாவுக்கு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 10 ஆகஸ்ட், 2011

முதல்வருக்கு பிரித்தானிய தமிழர்பேரவை பாராட்டு!


தமிழக முதல்வர் அம்மா அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எமது கொங்குதமிழர் பேரவையின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு ஈரோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இலங்கையில் தனி ஈழம் அமைத்தே தீருவேன் என்று முழங்கினார்.அதுபோல நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவைப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.அதைச்செயல் படுத்தும் வகையில் கடந்த தினத்தில் தமிழ்நாடுசட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மாணம் ஒன்றை நிறைவேற்றி உள்ளார். இத்தீர்மாணத்தை  பிரித்தானிய தமிழர் பேரவை பாராட்டி உள்ளது.
பிரித்தானியதமிழர்பேரவையின் பாராட்டுக்கடிதம்:-
சிறீலங்கா அரசாங்கத்தை போர்க்குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த அரசாக பிரகடனம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும், சிறீலங்கா அரசாங்கம் மீது பொருண்மியத் தடை ஏற்படுத்தி அடிபணிய வைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து, ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.
ஈழத் தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று சம உரிமையுடன் வாழ வழிசெய்ய செய்ய வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்றும் தங்களின் தீர்மானத்தில் கூறியுள்ளதையும் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஆறரைக்கோடி தமிழ்நாட்டு உறவுகளின் தீர்மானமாக நாம் இதனைப் பார்க்கின்றோம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும் தாங்கள் வெளியிட்ட கருத்துக்கள் எமக்கு நம்பிக்கையூட்டுவதாக இருப்பதாக, கடந்த எமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தோம்.
தற்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானமானது, அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்கு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
ஈழத்தில் பல்லாயிரக் கணக்கில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளது, மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன, ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்களை தங்களின் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. இவை அனைத்தும் தமிழின அழிப்பின் கட்டங்கள் என்பதால், இன அழிப்பு இடம்பெறுகின்றது என்பதை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
தங்களது அதிகார எல்லைக்கு உட்பட்டு இந்திய அரசை வலியுறுத்துவேன் எனக் கூறியதுபோன்று, தாங்கள் மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகளுக்கு உலகத் தமிழர்கள் நிச்சயம் துணை நிற்பர் என நம்புகின்றோம்.
அத்துடன், தங்களின் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்து, ஈழத்தமிழ் மக்களின் மீது தமது அன்பையும், கரிசனையையும்  மீண்டும் வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் நாம் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அகில இந்திய மட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னகர்த்தி, அநீதி இழைக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்க தாங்கள் துணை நிற்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
பேச்சுடன் நின்று விடாத தங்களின் செயல்வீரத்திற்கு எமது மனம் நிறைந்த நன்றியையும், பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை
best links in tamil
More than a Blog Aggregator

பிரிட்டனில் சிங்கள மருத்துவர் கர்ப்பிணிப் பெண்களிடம் பாலியல் விளையாட்டு!


மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களிடம் பாலியல்
தொந்தரவு செய்ததாக இலங்கையைச் சார்ந்த சிங்கள மருத்துவர் ஒருவர் மீது பிரிட்டனில் செக்ஸ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தன்னிடம் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்கள் இருவரை பாலியல்
தொந்தரவு செய்ததுமட்டும் அல்லாமல்,பெண்மருத்துவரின் மார்பில் முத்தமிட முயன்றதாகவும் இம்மருத்துவர் மீது பிரிட்டனின்
பொதுமருத்துவ கவுன்சிலில்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டின் டெய்லிமெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவர் 1994 ஆம் ஆண்டு இலங்கையில் மருத்துவராக பதிவு
பெற்றுள்ளார். கர்ப்பிணிப்பெண்களிடம் சோதனைகளை மேற்கொள்வதற்கு
முன் "இது உன் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்" என மயக்க வார்த்தைகளை கூறியதாக பொது மருத்துவச் கவுன்சிலில் விசாரணைக் குழு முன்னிலையில புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த சோதனைக்குமுன் நோயாளிகளின் கீழ் ஆடைகளை அகற்ற வேண்டும்.இத்தகைய செயல் அப்பெண் மிக ஆபத்திற்குள்ளானதாகவும் சங்கடமாகவும்உணர்ந்ததாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.

மற்றொரு பெண், நீத் அன்ட் போர்ட் டால்பாட் மருத்துவமணைக்கு கடந்த
வருடம் பிப்ரவரி மாதம் தான் ஸ்கேன் பரிசோதனைக்குச் சென்றபோது,
மேற்படி மருத்துவர் அப்பெண்ணின் பிருஷ்டத்தை அமுக்கி,திருகியதாக
அப்பெண்ணின் வழக்கறிஞர் கூறினார்.

அதேவேளை கடந்த வருடம் ஜூலை மாதம் மேற்படி சிங்கள மருத்துவர்
தன்னை கட்டிப்பிடித்து மார்பில் முத்தமிடமுயன்றதாகபெண் மருத்துவர்
ஒருவர்புகார்அளித்துள்ளார்.

சாதீகள்,இனங்கள,மதங்கள்,மொழிகள்,நிறங்கள்,நாடுகள்,கலாச்சாரங்கள்
வித்தியாசப்படலாம்.ஆனால்பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை மட்டும் எந்த வித்தியாசம் இல்லாமல் ஒன்றாகவே உள்ளது.


நன்றி-செய்தி மூலம்:மனிதன் செய்திகள்,டெய்லிமெயில்

best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

முதல்வரை இழிவுபடுத்திய கோத்தாபயவுக்கு நெடுமாறன் கண்டனம்!


 தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கைஅதிபர் ராஜபக்சேவின் சாகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்சே தெரிவித்த கருத்துக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆணவத்துடன் தமிழக முதல்வரை விமர்சித்து இருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடும் சவாலாகவே உள்ளது.எது எப்படி இருப்பினும் இலங்கை -சீனாவுடன் மிக நெருக்கத்தில் உள்ளது.அதன் காரணமாக இந்திய வெளியுறவுத்துறை இலங்கையிடம் மன்றாடி வருகிறது.கோத்தபய ராஜபக்சே சகோதரர்கள் அடங்காமல் ஆணவத்துடன் நடந்துகொள்ள இதுவே காரணமாகும்.

இது குறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

இலங்கைத் தலைவரை யுத்த குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும்! இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்தி அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சேவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

தமிழக முதல்வரை மட்டுமல்ல. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தமிழக சட்டமன்றத்தையும் அவர் இழிவுபடுத்தியுள்ளார். இத் துணிவு அவருக்கு வந்ததற்கு இந்திய அரசே முழுமையான காரணமாகும். 

மாநில முதல்வர்கள் இல்லையென்றால் இந்தியா இல்லை. தமிழக முதல்வரை அவமதிக்கும் போக்கினை அண்டை நாட்டின் அதிகாரி ஒருவர் மேற்கொள்வதை அனுமதிப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை அவமதிப்பதாகும். தமிழக முதல்வரையும் சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தாபய ராஜபக்ஷ்வின் செயலைக் கண்டிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

யாழிலில் உதயன் ஊடகவியலார் மீது தாக்குதல்!சிங்கள வெறியாட்டம்

 கடந்த 29-07-2011 ஈழப்பத்திரிக்கையாளர்களின் வரலாற்றில் மற்றும் ஒரு கொடிய தினமாக அமைந்தது.ஆம்! தமிழ் ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஈழத்தமிழ் இதழியல்களின் பங்கு மகத்தானது.அந்த வகையில் யாழ்பாணம் உதயம் நாளிதழுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.தொடர்ச்சியாக ஈழ விடுதலை பற்றியும்,சிங்கள இனவெறி அரசின் காட்டுமிரான்டித்தனங்களையும் விடாமல் எழுதி வந்தது.


 கடந்த 2006-ல் உதயன் பத்திரிக்கையின் விற்பனை பிரிவு மேலாளர் தேவசகாயத்தையும்,அலுவலக ஊழியர் ரஞ்சித்குமாரையும் ஆயிதம் தாங்கிய சிங்கள கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது.


 இந்த நிலையில் தற்பொழுது யாழ்பாணத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும்,தமிழ்தேசத்தின் துரோகி டக்ல்ஸ் தேவனந்தாவின் ஈ.பி.டி.பி உடன் கூட்டணி கண்டு ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவின் அரசுகூட்டமைப்புக்கும் போட்டி நிலவியது.ஊடகங்கள் அரசு கூட்டமைப்புக்கு எதிராக செய்தி வெளியிடுவது முற்றிலும் ஒடுக்கப்பட்டது.


 இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்பாணமாவட்ட எம்.பி சரவணபவன் தான் உதயன் நாழிதளின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.எப்படி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைப் பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க-கங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் படுதோழ்வி அடையச்செய்தர்கள்.அதைப்போல யாழ்ப்பாண உள்ளாட்சி தேர்தலில் 20 சபைகளில்-17 சபைகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது.ஆளும் கூட்டமைப்பு படுதோழ்வி அடைந்தது.


 அரசு கூட்டமைப்புக்கு எதிராக உதயன் நாளிதழும்,அதன் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதனும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தனர்.அரசு கூட்டமைப்பின் தோழ்விக்கு உதயன் நாளிதழ் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.இதற்க்கு பழிவாங்கும் விதமாக உதயன் ஆசிரியர் குகநாதனை கடந்த 29-ம் தேதி கொலை வெறிகும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ளது.தலையில் பலத்த அடிபட்ட குகநாதன் உயிருக்கு போராடிய நிலையில் யாழ்பாணம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 இத்தகைய கொடுஞ்செயல் ஈழத்தமிழ் பத்திரிக்கையாளர்களின் உயிருக்கும்,உடைமைக்கும் எத்தகைய பாதுகாப்பும் இல்லை என்பதையே உணத்துகிறது.இவர்களுக்கே இந்தநிலைமை எனில் அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலை என்ன?


உதயன் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு


இந்த நிலையில் ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் உதயன் நாளிதழ் நிர்வாகத்தின்மீது குற்றம் சுமத்தியுள்ளது.தமிழ்தேசியப்போராளி தமிழ் ஈழவிடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் மரணம் அடைந்த அதே தினத்தில் உதயன் நாளிதழின் 25-வது வெள்ளிவிழா நடத்தப்பட்டது.


 இதில் யாழ்மாவட்ட சிங்கள ராணுவத்தளபதி ஹத்துரசிங்க,அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உயிரிழந்த ஊடகத்துறையினர்களுக்கு சுடர் ஏற்றி வைத்தும்,மூத்த பதிரிக்கையாளர்களை கவுரவித்தாரகள்.


 இத்தகைய செயல் புலம்பெயர் தமிழ் ஊடவியலார்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உதயன் நிர்வாகத்தின் மீது குற்றசாட்டுகளும் அதன் தொடர்சியாக கருத்து மோதல்களும் எழுந்துள்ளன.


 ஆனால் தமிழகமக்கள்,புலம்பெயர் தமிழ் ஊடகவியலார்கள்,மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தனிஈழ தாகம் அணையாத நெருப்பாக கணன்று கொண்டு இருக்கிறது.ஈழத்தமிழ் பிரதிநிகள்,ஈழத்தமிழ் ஊடகவியலார்கள் மத்தியில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

.எது எப்படி இருப்பினும்தமிழர்களின் தாகம் தனி ஈழம் அது நிச்சயம் அமைந்தே தீரும். 


best links in tamil
More than a Blog Aggregator