2011-தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் சர்வதேச AtoZபுரோக்கர் நீராராடிய,
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் இந்தியாவின் புகழை உலக அரங்கில் தலைநிமிரச்செய்த முன்னால் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்துராசா,தமிழுக்கு சங்கமம் கண்ட செம்மொழி நாயகி ஆகிய சரித்திர புருசர்கள் இணைந்து புதிய அரசியல் வியூகம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளராக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிதாமகன் ஆண்டிமுத்து ராசாவின் மனைவி பரமேஸ்வரியை களம் இறக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவினாசி வட்டார கரை வேட்டிகள் மத்தியில் பர,பரப்பாக பேசப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் ஆண்டிமுத்து ராசாவை கட்சி நிகழ்ச்சிகளிலும்,தொகுதிப் பணிகளிலும் செயல்பட வேண்டாம் என கட்சித்தலைமை அறிவுருத்தி உள்ளது.இதனால் ஒரு வகையில் தான் முடக்கப்பட்டுள்ளதாவே ராசா புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் முன்னனித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாரிசுகளுக்கு தொகுதி ஒதுக்கித் தரும்படி கட்சித் தலைமையை நெருக்கி வருவதாக செய்திகள் கசிகின்றன.இது ஆண்டிமுத்துராசாவை மேலும் யோசிக்க வைத்தது.இந்தயோசனை சங்கம நாயகியுடன் பகிரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.ஏன் நீராராடியாவுடன் கூட கலந்து ஆலோசித்து இருக்கலாம்.
மேலும் நீலகிரி மக்களவைத் தொகுதி ரிசர்வு தொகுதியாகும்.இதன் தற்போதைய மக்களவை உறுப்பினர் ஆண்டிமுத்துராசா.இதில் உள்ளடங்கும் அவினாசி சட்டமன்றத் தொகுதி பெண்கள் ரிசர்வு தொகுதியாகும்.இந்த கூட்டல்,கழித்தல் சரியாக வருவதால் தொகுதியின் கரைவேட்டிகளும் ராசாவின் மனைவி பரமேஸ்வரியை வேட்பாளராக தலைமை அறிவிக்கும்-அப்போதுதான் தங்களுக்கு அளவற்ற லட்சுமி கடாச்சம் கிடைக்கும் என ஆவலுடன் காத்துள்ளனர்.
படித்துவிட்டு கருத்தை விட்டுச்செல்லவும்
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி