வெள்ளி, 4 நவம்பர், 2016

எண்ணங்கள்-5

எண்ணங்கள்-5
♦♦♦♦♦♦♦♦

நமது மனமும்.மனதில் எழக்கூடிய
எண்ணங்களும் நமது வாழ்வின்
நிகழ்வுகளை தீர்மானிக்கின்றன.

இன்று நம் முன் விரிந்துள்ள எண்ணற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலதனம் எது? தனிமனித மனதில்
இடைவிடாது உருவேற்றிய மந்திரங்கள்தான் (எண்ணங்கள்தான்)

அறிவியலால் சாதிக்கமுடிந்ததை
மனதில் எழும் எண்ணங்களால்
சாதிக்க முடியுமா.? முடியும்.!

நல்ல எண்ணங்களை மனதில்
உருவேற்றுங்கள்..!வெற்றிகரமான
பலன்கள் உங்கள் முன்னே
விரிந்து நிற்கும்..! செய்து பாருங்கள்
வெற்றி நிச்சயம்..!

நல்ல எண்ணங்களை உள் வாங்குவோம்.!
நாளும் நலமுடன் நல வாழ்வு
வாழ்வோம்..!

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
(வெளிமாநில வாழ் தமிழர்களின்
பாதுகாப்புக்களம்)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 3 நவம்பர், 2016

பிரதமருக்கு சிறுவனின் கடிதம்.?

டியர் மோடி, என்னுடைய கிரமத்திற்கு வாருங்கள், குழந்தைகள் எப்படி உயிரிழக்கின்றனர் என்பதை பாருங்கள்,’ சிறுவன் உருக்கமான கடிதம்

 நீங்கள் உலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள். எங்களுடைய கிராமத்திற்கு உங்களால் வரமுடியாதா

http://www.dailythanthi.com/News/India/2016/11/03163526/Dear-Modi-please-come-to-my-village-and-see-how-children.vpf

சிறுவனின் கடிதம் .நெஞ்சை உலுக்குகிறது.ஆப்பிரிக்கா நாடுகளின் நிலைமை நம் கண்முன் விரிகிறது.

உண்மை உலக அரங்கத்தை அதிரச்செய்கிறது...
இன்றைக்கு இந்தியக் கிராமங்களின் நிலைமை இதுதான்.

நம்முடைய கிராமங்கள் இன்றும்
சுகாதாரம்,சூழலியல் மாசுபாடுகள்
கல்விக்குறைபாடு உள்ளிட்ட
வளர்ச்சியின்மையை நோக்கியே
சென்று கொண்டிருக்கிறது.

அரசியல் பிழைப்புவாதிகளின் துணையோடு - இந்திய சுகாதாரத்துறை லஞ்சமும்,ஊழலும்
நிறைந்து நம்மை மெல்ல,மெல்ல
கொன்று கொண்டிருக்கிறது.

நமது கிராமத்திலிருந்து,நமது கிராம பஞ்சாயத்து அமைப்பகளுக்கு-நம்மால் நேரடியாக தேர்வு செய்யக்கூடிய நமது பக்கத்து வீட்டுகாரரரிலிருந்து
இந்த ஊழல் சீர்கேடு தொடங்குகிறது...

ஒரு ஐந்தாண்டுகாலம் உள்ளாட்சி
பிரதிநிதிகளாக இருந்தால்-பத்து இலட்த்திலிருந்து, நூறு கோடிவரை
சம்பாதிக்கிறார்கள்

உள்ளாட்சியைப் பொருத்தவரைஆளும்கட்சி,எதிர்கட்சி
என்ற பாகுபாடு கிடையாது. இவர்களில்
பெருபான்மையாக கூட்டுக்களவானிகளாக இணைந்தே செயல்படுகின்றனர்.

வாக்காளர்களாகிய நாமும்- நம்முடைய வேலைககாரர்களை(மக்கள் பிரதிநிதிகளை) எஜமானர்களாக்கி
நம்முடைய வாக்குகளை பதிவுசெய்ய
பணம்,குவாட்டர்,பிரியாணி என்று
அவர்களிடம் வரிசைகட்டி,கையேந்தி நிற்கிறோம்

மேலும், இது  போன்ற
படுபாதகங்களை மக்கள்முன் கொண்டுவர வேண்டிய ஓரு சில ஊடகங்கள் பணம்பறிக்கும் கூடாரங்களாக மாறிவிட்டது.

இதில் மோடியை குறைசொல்லி என்ன
பயன்.? நமது தேசம் இன்னொரு மிசாவை நோக்கி பயனிப்பதாகவே
நான் கருதுகிறேன்.

இவன்:-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி.
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
செயல் உறுப்பினர்,
தமிழர் தனிப்படை.
♦♦♦♦♦♦♦♦♦♦♦
http//www.theeranchinnamalai.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

எண்ணங்கள்-4

பணத்தைப்பற்றி சிந்தித்தால்..!
பணம் கிடைக்கும்..!

வறுமையைப்பற்றி சிந்தித்தால்..!
வறுமை கிடைக்கும்..!

நல்லவர்களைப்பற்றி நினைத்தால்..!
நல்லவர்களின் நட்பு கிடைக்கும்..!

தீயவர்களைப்பற்றி நினைத்தால்..!
தீயவர்களின நட்பு கிடைக்கும்..!

மற்றானை கெடுக்க நினத்தால்..!
நமக்கு கெடுதல் வந்து சேரும்..!

நல்ல எண்ணங்களை உள் வாங்குவோம்.!
நாளும் நலமுடன் நல வாழ்வு
வாழ்வோம்..!

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
(வெளிமாநில வாழ் தமிழர்களின்
பாதுகாப்புக்களம்)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 31 அக்டோபர், 2016

Dhanush win kodi political vedi !

கொங்குநாடு! சாம்பல்மேடா!
என்ற பாதுகைகள் ஏந்தி
சூழலியல் கேடுகளுக்கு எதிரான
போராட்டக்களமாக....
கொங்குநாட்டின் பொள்ளாட்சியை
கதைக்களமாக கொண்டுஅரசியல்
கதகளி ஆடியிருக்கும ...
நடிகர் தனுசுவின்
"கொடி" திரைப்படம்பற்றி ஒருபார்வை.==

படத்தின் திரைக்கதை இயக்கனர்
துரை.செந்தில்குமார் நமது கொங்குதமிழன்.

பொள்ளாச்சியில் செயல்படும்
பாதரசத் தொழிற்சாலை கழிவுகள்
மண்னையும் மக்களையும் காவு
வாங்குகிறது,

நடிகர் விஜயின் தந்தையும், எதிர்கட்சித்தலைருமான எஸ்.ஏ.சி இதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை
தலைமைதாங்கிநடத்துகிறார்.

இந்தப்போராட்டத்தில் வாய்பேச
முடியாத கருணாஸ் தீக்குளித்து
இறந்துபோகிறார்.அவரது மகனான (கொடி) தனுஷ் அவரது அரசியல் ஆசைகளை நிறைவேற்ற...தனது தந்தையின் தலைவரான எஸ்.ஏ.சியை
தனது உயிருனும் மேலான தலைவராக
ஏற்றுக்கொண்டு...கட்சியின் இளைஞர்அணி அமைப்பாளராக உயரந்து...பொள்ளச்சி இடைத்தேர்தலில்
கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

ஆளும்கட்சியாக உள்ள எதிர் முகாமில்
அமைதிப்படை அம்மாவாசை ஸ்டைலில(தீப்பொறி ருத்ரா) திரிஷா
ஜெட்வேகத்தில் வளர்ந்து மாவட்டமாகி
இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.எனக்கு திரிஷாவின்
கதாபாத்திரம் நமது மாப்பிள்ளை செந்தில்பாலாஜியை ஞாபகப்படுத்துகிறது.

திரிஷா-தனுஷ் சிறுவயது முதலே காதலர்கள்.இடைத்தேர்தலில்
இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.

இதற்கு பிறகு  நடப்பு அரசியல் சூழ்ச்சிகளை மையமாக வைத்து
திரைக்கதை ஜெட்வேகத்தில் நகர்கிறது.
இரட்டையர்களில் இன்னொரு (அன்பு)
தனுஷ்... கோவை இந்துஷ்த்தான் கல்லூரி லெக்சராக,பயந்தாகொள்ளி மனோபாவம் கொண்ட கதாபாத்தித்தில்
நடித்துள்ளார்.இவரின் காதலியாக "ப்ரேமம்" புகழ் அனுபாமா முட்டைவியாபாரியாக நடித்துள்ளார்.

கதைகளம் முழுவதும் கொங்குநாட்டை
சுற்றியும். கதாபாத்திரங்கள்.வசனங்கள்
கொங்குசாயலுடனும் நகர்கிறது.

மொத்தத்தில் "கொடி" சூழலியல் கேடுகளையும்,அதற்கு தூணைபோகும்
அரசியல் பின்னனிகளையும்.சமகால
அரசியல் பித்தலாட்டங்களையும்
பச்சையாக விவரிக்கிறது.
best links in tamil
More than a Blog Aggregator

மாநிலம்? பிரிக்கப்பட்ட 60-ம் ஆண்டு!

1956-நவம்பர்-01 ம் தேதி மதராஸ் ஸ்டேட் (சென்னை ராஜதானி) என்ற தமிழ் மொழி பேசும் தனி மாநிலம் உறுவாக்கப்பட்டு 60-ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

ஆனால்,தமிழ்நாடு என்ற பெயர் அன்றைய முதல்வர் அறிஞர்.அண்ணாவால் அதிகாரபூர்வமாக மழங்கப்பட்ட தினம
1967-ஜீலை-18.

மொழிவாரி மாநிலங்கள் உருவானவிதம்
அதனால் விளைந்த நன்மைகள் குறித்து
இளம் தமிழ் எழுத்தாளர் திரு.பூங்கொண்றனனின் -பூ.கொ வலைபக்கத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டதை தயவு செய்து படியுங்கள்.

நன்றி;-பூ.கொ

ஜோசப் ஸ்வார்ட்ஸ்பர்க்கின் கட்டுரையின் சாராம்சம் இந்த அறிமுகத்தில் தரப்படுகிறது:
இந்தியாவில் மொழிவாரி மாநிலம் என்கிற கோரிக்கையின் முக்கியமான அச்சாரம் வங்கப்பிரிவினையின் பொழுது ஏற்பட்டது. பல்வேறு மொழி பேசுபவர்கள் ஒன்றாக வழங்கிவருவதால் அவற்றைப் பிரிக்கலாம் என அப்பொழுதைய உள்துறை செயலாளர் ஹெர்பர்ட் ரிஸ்லே தெரிவித்தார். அப்படிப் பிரிக்கப்பட்டது உண்மையில் மொழி வளர்ச்சியைக் குறைத்தது, மீண்டும் வங்கம் சேர்க்கப்பட்ட பொழுது பல்வேறு மொழி பேசுபவர்கள் நிறைந்திருந்த பீகார், ஒரிசா பகுதிகள் ஒரே மாகாணமாக ஆக்கப்பட்டன. எனினும், அசாம் தனியாகப் பிரிக்கப்பட்டு அங்குள்ள வங்காளிகள் மொழிச்சிறுபான்மையினராக விடப்பட்டார்கள். காங்கிரஸ் முதல் மொழிவாரி மாநிலமாகப் பீகாரை 1908-ல் மாற்றியது.

ஒன்பது வருடங்கள் கழித்துச் சிந்த், ஆந்திரா மொழிவாரி மாநிலங்களாகக் காங்கிரஸ் செயல்பாட்டில் மாறின. காங்கிரஸ் காந்தி களத்துக்கு வந்த இருபதுகளில் துவங்கி மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில், 36-ல் சிந்த், ஒரிசா ஆகிய தனி மொழிவாரியான மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிந்து மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டாலும் அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று தேசியவாதிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

மெட்ராஸ் மாகாணத்தில் விடுதலைக்கு முன்னர் மொழிச்சிறுபான்மையினர் முறையே 1.77 கோடி தெலுங்கர்கள், நாற்பது லட்சம் ஒரியா மொழி பேசுபவர்கள், 37 லட்சம் மலையாளிகள், 17 லட்சம் கன்னடர்கள் இருந்தார்கள். மராத்தி மொழி பேசாத குஜராத்திகள், சிந்திக்கள், கன்னடர்கள் முறையே 34, 31,26 லட்சங்களில் இருந்தார்கள். மத்திய மாகாணங்களில் ஐம்பத்தி நன்கு லட்சம் மராத்தியர்களும், பஞ்சாபில் அறுபத்தி ஐந்து லட்சம் லஹ்நடா மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். ஆந்திராவை தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று தெலுங்கு மொழி பேசுபவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும், (1.77 கோடி) அவர்கள் தனி மாநிலமாக ஆனாலும், 25 லட்சம் தெலுங்கர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் தொடர்வார்கள் என்பதால் அதனை எதிர்த்தார்கள். எனவே, இந்த வகையான பிரிவினையை ஆங்கிலேய அரசு செய்ய மறுத்தது.

விடுதலைக்கு முன்னர்வரை மொழிவாரி மாநிலங்கள் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ் மதரீதியாக நாடு துண்டாடப்பட்ட சூழலில் மொழிவாரியாக நாட்டைப் பிரிக்க யோசித்தது. அது நாட்டைப் பால்கன் பிரதேசங்கள் போலத் துண்டாடிவிடும் என்று அது பயந்தது, புதிய தேசத்தைக் கட்டமைப்பது, அகதிகளைக் குடியேற்றுவது, காஷ்மீர் சிக்கல், ஆங்கிலேயர் ஆளுகைக்குள் வராத 5௦௦க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகளை இணைப்பது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கல் ஆகியவற்றால் அதனைத் தள்ளிப்போட்டார்கள். விடுதலைக்குப் பிந்தைய வருடம் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை பற்றி ஆராய வேண்டிய குழு அது தேவையற்றது என்று அறிக்கை அளித்தது.

விடுதலைக்குப் பின்னர் மெட்ராஸ், பம்பாய், ஹைதராபாத் மாகாணங்களில் மொழிச் சிறுபான்மையினர் மொத்தமாக ஐம்பது சதவிகிதத்துக்கும் மேலே இருந்தார்கள். அடுத்துச் சென்னையில் அமர்ந்தபடி பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரா தனி மாநிலமாக வேண்டும் என்று போராட முதல் தனி மொழிவாரி மாநிலமாக அது உருவானது. 1955-ல் மொழிவாரி மாநிலங்களை இந்தியா முழுக்க அமைக்க அமைக்கப்பட்ட பாஸ்லி அலி தலைமையிலான குழுவின் முன்னர் 1,52,25௦ ஆவணங்கள் பல்வேறு தரப்புகளால் தரப்பட்டன. அவற்றில் இருந்து சலித்தெடுத்து மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அவை புவியியல் தொடர்ச்சி, பொருளாதாரச் சாத்தியம், சமூககலாசாரத் தனித்துவம், ஜாதி, பகுதி, வர்க்க கூட்டணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மொழிவாரி மாநிலங்களைப் பரிந்துரைத்தது.

ஆந்திராவோடு தெலங்கானா இணைக்கப்பட்டது, மைசூர் மாநிலத்தோடு ஹைதராபாத், பம்பாய், மெட்ராஸ் பகுதிகளின் கன்னட மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டன. பம்பாய் மாகாணம் ஹைதராபாத்தின் மராத்வாடா பகுதி, குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகள், மத்திய மாகாணத்தின் பீரார் ஆகியவற்றைச் சேர்த்து மராத்தி, குஜராத்தி இணைந்த இருமொழி மாநிலமாக ஆனது. பின்னர் மராத்திகள் பொங்கி எழுந்து தனி மாநிலமாக மாறினார்கள். மத்திய பாரத், விந்திய பிரதேசம், போபால் ஆகியவற்றை இணைத்து தனி இந்தி பெரும்பான்மை மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியது. மெட்ராஸ் மாகாணத்தின் மலபார் பகுதி திருவிதாங்கூர் பகுதியோடு இணைக்கப்பட்டுத் தனிக் கேரளா மாநிலமானது. PEPSU மாகாணத்தோடு பிரிவினைக்குப் பிந்தைய பஞ்சாப் சேர்க்கப்பட்டது.

வடகிழக்கில் பல்வேறு பழங்குடியின குழுக்கள் ஆயுதம் ஏந்தியது, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அருகில் அம்மாநிலங்களின் எல்லை இருந்தது, பன்முகக் கலாசாரம் ஆகியன மிகக்குறைந்த மக்கள்தொகை இருந்தும் தனித்தனி மாநிலங்களை உருவாக்க அனுமதித்தன. மகாராஷ்டிரா, குஜராத் பிளவுபட்ட சூழலில் பஞ்சாப் பகுதி சீக்கியர்கள் குருமுகி வரிவடிவத்தில் தங்களின் மொழியை எழுதி தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டினார்கள். மதரீதியாக இந்துக்களில் இருந்து தங்களைப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டது ஏற்கப்படாவிட்டலும் அதையே மொழிரீதியான கோரிக்கையாக மாற்றிய பொழுது பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல பிரதேசம் என்று மாநிலங்கள் சுருக்கியும், விரித்தும் மாற்றப்பட்டன. சண்டிகார் பஞ்சாப், ஹரியானாவுக்குப் பொதுவான தலைநகர் ஆனது.

அறுபத்தி ஒன்றில் மைதிலி, மகதி, போஜ்புரி மொழிகள் பேசுபவர்கள் தங்களை இந்தியில் இருந்து வேறுபட்டவர்களாகக் காட்டிக்கொண்ட சூழலில், அடுத்தக் கணக்கெடுப்பில் அவற்றை இந்தியோடு சேர்க்கும் பணி செவ்வனே மேற்கொள்ளப்பட்டது. மாநில மறுசீரமைப்புக்கான பாஸில் அலி குழு ஹிமாசல பிரதேசத்தைப் பஞ்சாபோடு இணைத்தால் அதிகத் தொழில் முனைவோர் மிக்கப் பஞ்சாப் அதனைச் சுரண்டும் என்று அதனைச் சேர்க்க வேண்டாம் என்று பரிந்துரைத்தார். தெலங்கானா, விதர்பா பகுதிகள் தனி மாநிலங்களாக ஆகவேண்டும் என்கிற அவரின் பரிந்துரை ஏற்கப்படாமல் போய் அவை இன்னமும் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளாக உள்ளதைக் காணலாம்.

கோலார் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்றாலும், அந்த மாவட்டம் வளர்ந்ததற்கும், அதற்கான மின்சாரம், பொருளாதார வளர்ச்சிக்கு மைசூர் மாநிலத்தைச் சார்ந்திருந்ததாலும் அதனோடு அது இணைக்கப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தான் வங்கத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட சூழலில் டார்ஜீலிங், கூச் பீஹார், ஜல்பாய்குரி பகுதிகள் மேற்கு வங்கத்தோடு துண்டிக்கப்பட்ட சூழலில், இவை இரண்டையும் இணைக்க இந்தி பெரும்பான்மை மிக்கப் பூர்ணியா மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு வங்கத்துக்குத் தரப்பட்டது.

பழங்குடியினரில் மொழி சார்ந்து மாநிலங்களைப் பிரிப்பது மிகவும் சிக்கலான ஒன்று என்கிற அளவுக்குப் பல்வேறு மொழி சிறுபான்மையினர் அவற்றில் வழங்கி வருகிறார்கள். லடாக் பகுதியை அதனைப் போலவே புத்த மதத்தினர் அதிகம் மிகுந்த ஹிமாசல பிரதேசத்தின் லாகுல், ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதிகளோடு இணைக்கலாம் என்கிறார் ஆசிரியர். கச்சார் எனும் வங்காளிகள் பெரும்பான்மையாகயுள்ள அசாம் மாவட்டத்தை, திரிபுராவுடன் இணைக்கலாம்.
இதன்மூலம் பத்து லட்சம் வங்காளிகள் பயத்தில் இருந்து அசாம் விடுபடும். நேபாளி மொழியைப் பெரும்பான்மையாகப் பேசும் டார்ஜீலிங் மாவட்டத்தை, சிக்கிம் உடன் இணைக்கலாம். கோவாவை கொங்கணி மொழியைப் பேசும் கர்நாடகாவின் துளு பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகளை இணைத்து விரிவாக்கலாம். ரஷீதின் கான் எனும் பேராசிரியர் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட உத்திர பிரதேசத்தை ஐம்பத்தி ஒன்பது சுயாட்சி மிக்கச் சமூக, கலாசாரப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

நன்றி;-பூ.கொ

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மாவீரைனை உறுவாக்கிய மகராசி .===!

நமது மாவீரனை உறுவாக்கிய
மகராசி,மிசாவால் இந்தியாவை
உலுக்கி எடுத்த இரும்பு ராணி,
பாகிஸ்தானை கதிகலங்கச்செய்த
பாயும்புலி,ஆயுதக்களமாக இருந்த
பொற்கோவிலை துவசம் செய்த
துர்க்காதேவி,முன்னால் பாரதப்பிரதமர்
அண்னை இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.

நமது வீரவணக்கத்தை நெஞ்சில்
ஏந்துவோம்....!

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator