ஞாயிறு, 3 ஜூலை, 2011

பிரியங்கா-நளினி சந்திப்பின்ரகசியம்.மனம் திறக்கிறார் முருகன்

 மேற்படி தலைப்பில் 7-7-2011 குமுதம்ரிப்போர்ட்டர் இதழில் வெளியான முருகனின் பேட்டி தமிழகத்தின் ஈழப்போராட்ட ஆதரவாளர்களின் போலியான முகமூடியைவெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. 

 ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர்களில் நளினி-முருகன் தம்பதியினர்.இதில் நளினி ஆயுள் தண்டணை கைது.முருகன் தூக்குத்தண்டனை கைதி.

 இந்தநிலையில் 19-3-2008 அன்று பிரியங்கா-தனது தந்தை ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகள்என்று சொல்லப்படுகிறவர்களில் ஒருவரான நளினியை சந்தித்தார்.அந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசினார்கள் என்பது இதுவரை இரகசியமாகவே உள்ள நிலையில்-நளினியின் கணவர் முருகன் குமுதம்ரிப்போர்டரில் மனம் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நளினி-பிரியங்கா சந்திப்பிற்குப் பிறகுதான் ஈழத்தில் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டது என்கிறார்களே? குமுதம் ரிப்போர்ட்டரின் கேள்விக்கு முருகன் அளித்துள்ள பதில்:-
 "இது ஒன்றும் எதோச்சையாகப் பேசப்படும் பேச்சுஅல்ல.தமிழர் நலனையும்,விடுதலையுணர்வையும் தமது பணம் மற்றும் பதவிபேராசைக்காக வியாபார முதலீடாக்கிய ஒருசிலரால் பேசப்படும் பேச்சு இது.அவர்களை அடையாளம் காணுவதற்கு முன் உண்மை நிலையை அனைவரும் உணரவேண்டும்.
 
ஈழத்தில் இருதியாக நடந்த சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கைகள் 2007-ம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.அந்த ஆண்டு இருதிக்குள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்குப்பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றிவிட்டது.19-3-2008-ம் தேதிக்கு முன்பாகவே மன்னார் மாவட்டம் முழுவதையும் பிடித்து முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியை நோக்கி சிங்கள ராணுவம் முன்னேற ஆரம்பித்துவிட்டது.2000-ம் ஆண்டிற்குப்பிறகு சிங்கள ராணுவத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.சிங்கள அரசு பலநாடுகளின் கூட்டுடன் ஆரம்பித்த அந்த நடவடிக்கையில் சீனா,பாகிஸ்தானின் பங்கு அதிகமாக இருக்கக்கூடாது என்றும்,இந்திய அரசினை ஓரம்கட்டி மற்ற நாடுகளுக்கு சிங்கள அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.

 இந்தியாவின் பிராந்திய நலனுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீனாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் ராணுவ,பொருளாதார ரீதியாக அதிகவசதிகளைக் கொடுத்து வந்தது.ராஜீவ்காந்தி கொலைவழக்கு உயிர்ப்புடன் இருக்கும்வரை இந்திய அரசு ஈழத்தமிழர் பக்கம் சாய வாய்ப்பில்லை என்ற கணக்கில் இலங்கை அரசு இந்தியாவை நாசூக்காகப் புறக்கணித்து வந்தது.

 உதவிகள் செய்தும் புறக்கணிக்கப்படுவதை பொறுக்க முடியாத இந்தியா,இலங்கை அரசை தனது கட்டுக்குள் கொண்டுவர தீர்மானம் செய்து நகர்த்திய ராஜதந்திர நகர்வுதான் நளினி-பிரியங்கா சந்திப்பு.'எமது நலனுக்கு எதிராக நீங்கள் போனால் உங்கள் எதிரிகளை(விடுதலைப்புலிகள்)ஆதரிக்க நாங்கள் தயங்க மாட்டோம்.அதற்கு ராஜீவ்காந்தி கொலைவழக்கு உயிர்ப்புடன் இருப்பதுகூட தடையாக இருக்காது.'என்ற ஒருசெய்தியை இந்திய அரசு ராஜபக்சேவுக்கு அனுப்பத் தீர்மானம் செய்தது.

 அதேநேரம் அதற்கான செயல் நிகழ்விற்கு வேறு காரணம் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்.எதிர்பார்த்ததுபோல் சிங்கள அரசு தம் வழிக்கு வந்துவிட்டால் அப்படிக் காரணம் கூறி பின் வாங்கிவிடக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.அதன்படியேதான் 19-3-2008-ம் ஆண்டு நளினியை பிரியங்கா வந்து சந்தித்தார்.

 அது செய்தியாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.'அவர்கள் சொல்லும் வரை வெளியில் சொல்லக்கூடாது'என அதிகாரி ஒருவர் நளினிக்கு திடமாக அறிவுறுத்தியிருந்தார்.அதனையும்மீறி என் விருப்பத்திற்கு மாறாக அச்சந்திப்பு திட்டமிட்டு அம்பலப்படுத்தப்பட்டது.அப்போதுதான் நம்புவர்கள்கூட நம்மை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள்.பலிகடாவாக்குகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

 நளினி-பிரியங்கா சந்திப்பு நடைபெற்ற பின் நளினி விரைவில் விடுதலையாவர் என்ற நம்பிக்கை எல்லார் தரப்பிலும் ஏற்பட்டுவிட்டது.ஆனால்,இந்த மூன்று வருட காலத்தில் அரசால் எமக்குப் பாதகமான அணுகுமுறைகள்தான் அநீதி என்று தெரிந்திருந்தும் ஏற்படுத்தப்பட்டன.ஓரளவு சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குக்கூட நான் மேற்சொன்னவை உண்மையென உணர்ந்து கொள்ளலாம்"

  ரிப்போர்ட்டரில் 8 கேள்விகளுக்கு முருகன் பதில் அளித்துள்ளார்.அதில் நாம் வெளியிட்ட ஒருபகுதி தமிழக அரசியல்வாதிகளின் போலியான போராட்ட முகமூடியை அம்பலப்படுத்துவதாக உள்ளது.ஏனைய பகுதிகளை காண 7-7-2011 குமுதம்ரிப்போர்ட்டரை படியுங்கள்.


நன்றி:-குமுதம்ரிப்போர்ட்டர்,கூகுள்
best links in tamil
More than a Blog Aggregator