வெள்ளி, 14 ஜனவரி, 2011

100க்கும் மேல் சடலங்கள் மீட்பு.தேனீ மாவட்ட Ph.Nos..சபரிமலைசம்பவம் தேசிய பேரிடராக மத்தியஅரசு அறிவிப்பு.

   சபரிமலையில் நேற்று இரவு 10மணிக்கு மகர ஜோதியை தரிசித்துவிட்டு-தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்-சபரிமலைக்கு அருகே உள்ள புல்லுமேட்டில் -ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று பக்தர்களின் கூட்டத்தின் மேல் புகுந்து 400அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

   இதனால் பக்தர்கள் சிதறி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில்100க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன்.இவர்களில் பெரும்பாலனோர்தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.விபத்தில் சிக்கியவர்கள் வண்டிப்பெரியார்,தேனீமாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளாதாக செய்திகள் வருகின்றன.மத்தியஅரசு இந்த சம்பவத்தை உடனடியாக தேசியப்பேரிடராக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்பு கொண்டு உதவி பெறுவதற்க்கு தேனீமாவட்டத்தின் முக்கிய தொலைபேசி எண்களை கீழே தருகிறோம்.

குமுளி காவல் நிலைய எண்:04269-222049


தேனீ மாவட்ட எண்கள்:S.T.D.CODU:04546


ஆட்சித்தலைவர்:                 OF: 253767,RI:251466


டி.ஆர்.ஒ:                                  OF:.254946,RI;254976


தாசில்தார்:                              OF:.255133,RI:255033


பி.டி.ஒ:                                      OF: 252430


வனத்துறை டி.எப்.ஓ:          OF:252552,RI:253140


ஜே.டி.மெடிக்கல்:                        234967


டி.டி.ஹெல்த்:                               261403


ஜி.ஹச். தேனீ:                               252260


மாவட்ட எஸ்.பி:                   OF:251410,RI:253999


ஏ.டி.எஸ்.பி:                                   253632


டி.எஸ்.பி.தேனீ:                           252873



best links in tamil
More than a Blog Aggregator

விமர்சனம்-சீறும்"சிறுத்தை"ராக்கெட்ராசாவிற்க்கு கிடைத்த அங்கீகாரம்-"கார்த்தியின் அட்டகாசம்.

   "சிறுத்தை"திரைப்படம் வெளியாகும் முன்பே! நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவின் பெயரைத் தவறாகப் படத்தில் கொச்சை படுத்தியுள்ளாதாக கூறி அக்கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடிகர்"கார்த்தியின்" வீட்டு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  படத்தின் தயாரிப்பாளார் ஞானவேல்ராசன் சிறுத்தை படத்தில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.படம் வெளியாகும் போது உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்வார்கள் என்று கூறியிருந்தார்.நான் கடந்த பதிவில் "சிறுத்தைக்கு எதிர்ப்பு" என்ற தலைப்பில் நாடார் கட்சியினரின் ஆர்ப்பாட்ட செய்தியினை பதிவு செய்திருந்தேன்.

  இனிநான் பார்த்த சிறுத்தைப் படத்தை அலசுவோம்.கார்த்தி முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ராக்கெட் ராசா என்ற பெயரில் பிக்பாக்கெட் திருடனாக கார்த்திக்கும்.காட்டுப்பூச்சியாக சந்தானமும் இணைந்து படத்தின் இடைவேளை வரை முழுநீல கலக்கல் காமெடியாக ரசிகர்களை வ்யிறு குழுங்க சிரிக்க வைக்கிறார்கள்.சந்தானத்தின் காமெடி கலக்கல் வடிவேலுவின் இடத்தை பங்கு போடுவதாக உள்ளது.

  முதல் பகுதியில் நாடர் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவின் பெயருக்கு கலங்கம் என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என நாம் யோசிக்கும் வினாடியில்-ராக்கெட் வேகத்தில் பாய்ந்து செல்லும் திரைக்கதை- நாடர் தலைவரின் நன்மதிப்பை எவரெஸ்ட் உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது.திரைக்கதை,வசனம் எழுதி படத்தை இயக்கிய சிவாவிற்கு சபாஸ்.சிறுத்தைக்கு எதிராக சீறியவர்கள் காயம் பட்டதுதான் மிச்சம்.

  படத்தின் விறு,விறு இரண்டாவது வேடம் ரத்தினவேல் பாண்டியன் ஐ.பி.எஸ்.ஆந்திர மாநிலம் அடர்ந்த காட்டு பகுதியின் அசைக்க முடியாத தாத பாபுஜீ- அவரது தம்பியுடன் இணைந்து கஞ்சா பயிரிட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.அந்த பகுதி முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுகிறார்கள்.மக்களும்,வியாபாரிகளும் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

   கிராமத்தில் இருக்கும் பெண்களை குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியை அவர் முன்பே பாலியல் வன்கொடுமை செய்வது அக்கிரமத்தின் உச்சம். ரசிகர்களின் மனதில் சீக்கிரம் வாய்யா!ரத்தின்வேல் பாண்டியன்! வில்லன்களின் கொட்டத்தை அடக்கு! என்று பல்ஸ் எகிறுகிறது.

  சுறு,சுறு ரத்தினவேல்பாண்டியன் ஐ.பி.எஸ் வருகிறார்.சிறுத்தையாக சீறுகிறார்.மொத்த படத்திலும் அரைமணி நேரம் அசத்துகிறார் ஐ.பி.எஸ்.

 வடசென்னையின் தாதக்களையும்,ரவுடிகளையும் கட்டுக்குள் கொண்டுவந்து பல என்கவுன்டர்களை நடத்தி தற்போது சென்னை மாநகர போக்குவரத்து ஆணையராக இருக்கும் ஐ.ஜி.ரவி.ஐ.பி.எஸின் அதே முகம்,அதே மீசை,அதே பார்வை அசத்துகிறார் கார்த்தி.

 வில்லன் கூட்டணியின் கைப்பாவையாக அமைச்சர் சந்தான பாரதி,மனோபாலா காமெடியில் கலக்கி எடுக்கிறார்கள்.ஆந்திரத்துப் பெண்ணாக வரும் தமனா பிக்பாக்கெட்காரன் என்று தெரியாமல் ராக்கெட்ராசாவை காதலிக்கிறார்.ஒட்டியாக சிறுத்த,வெளிர்நிற இடையை சிறுத்தைக்கும்,ரசிகர்களுக்கும் காட்டி இளவட்டங்களின் விசிலுக்கு இறையாகிறார்.

  ஒரு சமயம் தங்கப்பெட்டி ஒன்றை திருடிவரும் கார்த்தி-சந்தானம் கூட்டணி-பெட்டியில் தங்கத்திற்கு பதிலாக குழந்தை இருப்பதும்-அது கார்த்தியை அப்பா என்று அழைப்பதும்-குழந்தையிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பதும் காமெடி+சென்டிமென்ட்.

 ராஜீவனின் கலை அபாரம்.ராஜா,ராஜா,ராக்கெட்ராஜா என்ற பாடலும்,அதற்கு கார்த்தியின் நடனமும்-வித்தியாசாகரின் பின்னனி இசை மிரட்டலும் படத்தின் பலம்.சண்டைக்காட்சிகளும்,ஒலிப்பதிவும் சிறுத்தையின் கூடுதல்பலம்.

 ரத்தினவேல்பாண்டியன் ஐ.பி.எஸ் வில்லன்களை ஒடுக்கும் போராட்டத்தின் இருதியில் அடிபட்டதும்,பிக்பாக்கெட் ராக்கெட்ராசா போலீஸ் அதிகாரியாக மாறுவதும் படத்தின் உச்சகட்ட சுவராஜ்ஜியம்.ஒரு கட்டத்தில் திருடன் என்று தமனா,கார்த்தியை விட்டு விலகுவதும்,குழந்தை- திருடனை அப்பா என்று அழைப்பதும் படத்தின் சஸ்பென்ஸ்.

 இது விக்ரமாடு என்ற தெலுங்கு படத்தின் தழுவல். படத்திற்கு பாடல் கை கொடுக்க வில்லை.மொத்தத்தில் கார்த்தியின் சிறுத்தை பொங்களுக்கு பாய்ந்த ராக்கெட்.வசூலில் பெரிய டார்கெட்.

 தீரன்சின்னமலை-(சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு)-செய்தி ஊடகப் பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

சபரி மலையில் விபத்து. 90க்கும் மேல் உயிரிழப்பு,100 மேற்பட்டோர் காயம்.

   சபரிமலையில் நேற்று லட்சக்கணக்காண பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் முடித்து விட்டு இரவு 10-மணிக்கு உப்புத்துறை மற்றும் புல்லுமேடு பகுதிகளில் இருந்து தமிழகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
  அப்போது சபரிமலையிலிருந்து வந்துகொண்டிருந்த ஜீப் புல்லுமேட்டின் அருகே வந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்களை அடித்துக்கொண்டு 400அடி பெரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தை பார்த்துப் பயந்து சிதறி ஒடிய பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 90க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதில் 50க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளாதாக குமுளி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

   கேரளா காவல்துறையுடன்,தீயணைப்புப்துறையும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கடும் பனிப்பொழிவு இருப்பதாலும்,விபத்து நடந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது.

 பாதிக்கப்பட்டவர்களில் அதிகஅளவிலான பக்தர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.காயம் அடைந்தவர்கள் வண்டிபெரியாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.விபத்து கடுமையானதாவே தெரிகிறது.தமிழக அரசு உடனடியாக கேரளா அரசுடன் இணைந்து மைய அரசின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் இன்னும் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியும்.

 வலைதளப்பதிவின் நண்பர்களே,வாசகர்களே நம்மால் முடிந்த மட்டும் விழிப்புணர்வையும்,இறைவனிடம் வேண்டுதல்களையும் செய்வோமாக!

 விபத்து சம்பந்தப்பட்ட தகவல் மற்றும் உதவிக்கு-குமுளி காவல்   நிலையம்.தொலைபேசி எண்= 04869-222049
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 12 ஜனவரி, 2011

"சிறுத்தை"படத்திற்கு எதிர்ப்பு-நாடார் கட்சியினர் நடிகர் கார்த்திக் -வீட்டு முன்பு ஆர்பாட்டம்.பதிவு-1

பதிவு-1 

     டிகர் கார்த்திக் முதன் முறையாக இரைட்டை வேடங்களில் நடித்து தைப்பொங்களுக்குவெளிவரும்படம் "சிறுத்தை".இப்படத்தில் காவல் துறை அதிகாரியாகவும்-பிக்பாக்கெட்ரவுடியாகவும் இரண்டு வேடங்களில் கார்த்திக் நடித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
 
 இதில் பிக்பாக்கெட் ரவுடியின் பெயர் ராக்கெட்ராசா என்று கடந்த தினங்களில் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக இன்று காலை பத்து மணிக்கு"ராக்கெட்ராசாவை" தலைவராகக் கொண்டு செயல்படும்" நாடார் மக்கள் சக்தி" கட்சியியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்-தி.நகரில் உள்ள நடிகர் கார்த்திக்கின் வீட்டு முன்பு திரண்டு சிறுத்தை படத்திற்கும்,நடிகர் கார்த்திக்கும் எதிராக கடுமையான கோசங்களைஎழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.


 ஆர்பாட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் "நடிகர் கார்த்திக்"
வீட்டைச் சுற்றிலும்காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு கோசமிட்டவர்கள் கூறிய செய்தி-"சமுதாய மோதலுக்கு சிறுத்தை திரைப்படம்
வழி வகுத்து விடக்கூடாது"இந்த திகிலூட்டும் எச்சரிகையின் பின்னனி என்ன?


  நடிகர் கார்த்திக் கொங்கு சமூகத்தை சார்ந்தவர்.அவரது தந்தை நடிகர் சிவகுமார்-பெஸ்ட் இராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்றக்கழகம்,உ.தனியரசுவின் தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை,டி.கே.தீரன் தலைமையிலான கொங்கு தமிழர் பேரவை போன்ற இயக்கங்களுடன் நல்லுறவு கொண்டவர்.மேலும் கொங்கு சமூகத்தில் நடிகர் சிவகுமாரின் குடும்பத்திற்கு நல்ல செல்வாக்கும்,மரியாதையும் 
உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 இப்பிரச்சனை தொடர்பாக சிறுத்தை படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராசன் 
கூறியது."சிறுத்தை படத்தில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை"மேலும் "ராக்கெட்ராசாவின் பாத்திரத்தன்மை புரியாமல் நாடார் கட்சியினர் பெரிது படுத்துகிறார்கள்.படம் வெளியானால் உண்மைத்தன்மை புரியும்"என்று சொல்கிறார்.


  "சிறுத்தை"படத்தின் சர்ச்சையால் கொங்கு-நாடார் சமூகத்தின் ஊடாக சாதீயா மோதலுக்கு அச்சாரம் அமைக்காமல் இருந்தால் சரி.
  
சரி!யார் இந்த "ராக்கெட்ராசா"?-இந்த நிழல் தாதாவின் கதையை-பதிவு-2ல் தொடர்கிறேன். 
 தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு 
செய்தி பதிவிற்காக- டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator