திங்கள், 21 ஜனவரி, 2013

சட்டம் சோம்பலானது!அருண்செட்லி ஆய்வு வேடிக்கையானது!

   பாரதிய சனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,ராஜ்யசபை எதிர்கட்சித் தலைவரும்,மிகச்சிறந்த வழக்கறிஞருமான அருண்செட்லி அவர்கள் பெங்களூருவில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில்-                               "இந்தியாவின் சட்டமுறை சோம்பலானது,மாற்றப்பட வேண்டியது" என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அருண்செட்லியின் குற்றசாட்டு குறித்த செய்தி தினமலர் ஊடகத்தில் வெளியானது.அதற்கு நான் எழுதிய கருத்துரை.

சோம்பலான சட்டத்தை தட்டி எழுப்பி சுறு சுறுப்பு ஆக்க வேண்டிய பொருப்பில் உள்ளவர் அருண்செட்லி. இந்தியத்திருநாட்டின் ராஜ்யசபை எதிர்கட்சித்தலைவர் செய்யவேண்டியபணி அது. அவரே புழம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.

அவர் சட்டத்துறை அமைச்சராக இருந்த பொழுது!சட்டத்தை புணரமைக்கும் பணியை முயற்சித்திருக்கலாம்.அதைவிடுத்து நடை முறை சட்டத்தை குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.

தற்பொழுது உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் லஞ்சமும்,உழலும் பெறும் தடையாக இருக்கிறது.எத்தகைய சட்டங்களை திருத்தினாலும்,கடுமையாக்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவது அருண்செட்லியை போன்ற மக்கள் பிரதிநிதிகள்தானே!
 பி.ஜே.பி தலைமை ஊழலில் திலைக்கும்போது! இவர் மட்டும் கூட்டம்போட்டு ஆலோசனை பேசி என்ன உபயோகம் உள்ளது.

ஒன்று மட்டும் நிச்சயம் மக்களை முட்டாள்களாக நினைத்து பலலட்சம் கோடிகளை கொள்ளையடித்துவரும் கும்பலுக்கு எதிராக மக்கள் அறிவாளிகளாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மக்கள் மனதில் ஊழலுக்கு எதிரான நெருப்பு கணந்து கொண்டிருக்கிறது.அது எரிமலைப் பிழம்பாக வெடித்துச் சிதறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

அன்று ஏராளாமான உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றோம்.இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைகளாக உள்ளோம்.ஊழல் எதிர்ப்பு முன்னனி நாடு முழுவதும் பரவட்டும்.வீரத்தின் விளைநிலமான தினமலர் போன்ற தியாக ஊடகங்கள் வழிநடத்தட்டும்.அப்பொழுது இதே சட்டங்கள் சோம்பல் இல்லாமல் வீரத்துடன் செயல்படும் என்பது திண்ணம்.

மேலும் இந்தியாவின் சட்டமுறை சோம்பலானது அல்ல.அதை செயல்படுத்துபவர்கள்தான் சோம்பலானவர்கள்.அவர்களது வேகம் லஞ்சமும்-ஊழலிலும் பரபரக்கிறது.சட்டத்தை மாற்றுவதைவிட-சட்டம் செயல்படுவதற்கு தடையாக இருக்கும் கருங்கொல்லிகளை ஒழிப்பதுதான் சரியாக இருக்கும்.

இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator