வெள்ளி, 24 அக்டோபர், 2014

விஜயின் கத்தி..விவசாயிகளின் உரிமைக்குரல்

விஜயின் கத்தி திரைப்படத்துக்கு,கொங்கு தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தது ஏன்,,? என்று என்னிடம் பலர் கேள்வி எழுப்பினார்கள் அதற்கான பதில்...கீழே...

விவசாயின் உரிமைக்குரலாக,உழவர்சங்களின் கோரிக்கையாக,கொங்கு தமிழகத்தின் எழுச்சிமிக்க,உணர்ச்சிக்குரலாய்.....அழிந்துவரும் வேளாண் இனத்தின் இடி முழக்கமாய்...கத்தி திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய உணர்ச்சிமிக்க வசனங்கள்...கீழே கொடுத்துள்ளேன்...படியுங்கள்...எமது ஆதரவு நிலைப்பாடு சரியானது என்று ஆதரிப்பீர்கள்

 ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாயக் கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம் “தன்னூத்து”. அதுக்காக அவங்க குடுத்த வெல 9 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல. 

3 வேல பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணறவங்களோட ஞாபக என்னைய்காவுது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடப்பட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்ருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு. 

தாமரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுந்தா. 

20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாலத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரைய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருவுக்கு வருது. இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது. 

அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002-லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க. 

இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் ரெண்டு ஃடிஸ்டிக்லையும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போஎல்லா பசில சாகப்போது. 

5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒரு விவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா. 

இதயெல்லா கவனிக்க சிட்டில இருக்க உங்களுக்கு நேர இல்ல, இத சொல்ல தா டீ.வி சேனல்ட கேட்டோ, ஆனா டீ.வில லேகியோவிக்கவும், சமையல் செய்யவும், டான்ஸ்க்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு, ஒரு கிராமோ அழிய போறத சொல்ல ரெண்டு நிமிஷ இல்ல. 

இந்தியாவுக்கு ஃபேக்ட்ரியே வேணாம்ணு நாங்க சொல்ல வரல, குடிக்குற பால்லயிருந்து தயார் பண்ற சோப்பு வேணா. முட்ட, மீனு, கேரட்லயிருந்து எடுக்குற பேர்னஸ் கீரீம் வேணா. தக்காளி, ஆரஞ்சு, பாதாம்ல தயாரிக்குற அழகு சாதண பேக்ட்ரி வேணா. இந்தியால விட்டமீண் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து போறங்கய்யா. பணக்காரே யூஸ் பண்ற ஒரு காண்டம்ல ஃஸ்டாபேரி ஃபேலேவர் வேணும்னா, ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைய்ல ஃஸ்டாபேரிய நெனச்சு பாக்க முடியுமா...
 
(சாதாரண தண்ணி, அதுல என்ன அவ்லோ பணமா கிடைக்கும்)
யோவ்.... சாதாரண தண்ணியா...
 
2ஜினா என்னய்யா..
அலைக்கட்றை.. காத்து..
வெறும் காத்தமட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊர்யா இது, செல்போன் ஆடம்பரம்...... தண்ணி அத்யாவட்சியம்... 

கத்தி திரைப்படத்தை எமது கொங்கு தமிழர் கட்சி தொடர்ந்து ஆதரிக்கும்.....

இவன்:-தெ.கு.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 22 அக்டோபர், 2014

விஜயின் கத்தி படத்துக்கு கொங்கு தமிழர் கட்சி ஆதரவு...?

நடிகர் விஜயின் கத்தி திரைப்படம்-ஈழத்தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ராஜபக்சேவுடன் தொடர்புடையது என்று சில தமிழ அமைப்புகள் கத்தி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன்.இதனால் கத்தி படம் பல சிக்கல்களை தாண்டி சில தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று லைக்கா என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் எடுக்கப்பட்டு நேற்று உலகம் முழுவது திரையிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள சத்தியம் மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகளில் கத்தி படம் வெளியிடப்பட்டது.அப்பொழுது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு திரையரங்கின் முன்பகுதி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது போன்ற வன்முறைச்சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குறியது.

மேலும் எமது கொங்கு தமிழகத்தை சார்ந்த திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் நடிகர் விஜய் எனபதை எமது கொங்கு தமிழர் கட்சி கவனத்தில் கொள்கிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சி-விவசாயத்தை அழித்து, மண்ணையும், மண்ணின் மைந்தர்களையும் காவு வாங்கும் பகாசூர பகல் கொள்ளயர்களான, தண்ணீர் வியாபாரிகளைப்பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்தான் கத்தி.

இந்தப்படத்துக்கு தமிழ் உணர்வு என்ற போர்வையில் தரப்படும் நெருக்கடிகள்,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தண்ணீர் கொள்ளையர்களின் பின்புலம் உள்ளதோ என்ற அச்சம் எங்களுக்கு எழுந்துள்ளது.ஏனெனில் இயற்கையின் பொக்கிசமான நீர் ஆதாரத்தை சுரண்டி நடைபெறும் தண்ணீர் வர்த்தகத்தில் பல ஆயிரம் கோடிரூபாயிகள் இலாபமாக ஈட்டப்படுகிறது.

விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள், நீர்வள ஆதாரத்தை சுரண்டுகிறது. இதற்கு தடையாக இருப்பவர்களை வெளிச்சம் போட்டு,விழிப்புணர்வை ஏற்படுத்தும்   படம் கத்தி.இப்படத்தை வேளாண் பெருமககள் நிறைந்த கொங்கு தமிழகம் வரவேற்கிறது.

எனவே,எமது கொங்கு தமிழர் கட்சி கத்தி படம் வெற்றிபெற அனைத்து உதவிகளையும் வழங்கும்.

மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக காவல்துறை கத்தி திரைப்படத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வன்முறையாளர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து தேசத்தின் நீர் ஆதாரத்தை காக்கும் உணர்வுகளை பேணவேண்டும்.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி

டி.எஸ்.சண்முகம்,
தேசிய இளையோர் பிரிவு செயலாளர்
கொங்கு தமிழர் கட்சி 07373108091, 09444829941

best links in tamil
More than a Blog Aggregator

விஜயின் கத்தி-தமிழ்த்திரையின் உச்சம்

கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம் 


டத்தின் கதையாக..............

விவசாய நிலங்களை அபகரிக்க நினைக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய  அமைதியான சமுக ஆர்வலர் ஜீவானந்தன் (விஜய்) சுடப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில்...........

சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு சிறைக்கு போய் தப்பி வரும்  துடிப்பான வலிமையான இளைஞன் கதிரேசன் (இன்னொரு விஜய்) சந்திக்க......

ஒரே உருவத்தில் இருக்கும் திருடன் கதிரேசன் சமுக ஆர்வலர் ஜீவானந்தமாக மாறி கிராமத்து விவசாய மக்களுக்காக அவ்வப்போது தன் காதலி (சமந்தா)வுடன்  கொஞ்சிக்  குலாவினாலும் பன்னாட்டு நிறுவன முதலாளியை (நீல் நிதின் முகேஷ்)  எதிர்த்து போராடுகிறார்  

திருடன்  கதிரேசன் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா...? சமுக ஆர்வலர் ஜீவானந்தம் என்ன ஆனார்....? என்பதை திரையில் தெரிந்துகொள்ளுங்கள் 

இயக்குனர் முருகதாஸ்.......அதிகமான .வணிக சினிமா சமாச்சாரங்களை கொஞ்சம் சமுக சிந்தனையுடன் படைத்துள்ள கத்தி படத்தின் திரைக்கதை நிறைய லாஜிக் ஓட்டைகளால்  தள்ளாடுகிறது    இந்தப் படத்துக்கு ஏன் கத்தி என்ற பெயர்...? அவருக்கே வெளிச்சம் 

நடிகர் விஜய்.....இருவேடங்களில் இரு வேறுபட்ட நடிப்பை காட்டுகிறார் அவரது அதீத ரசிகர்களுக்காக............கதிரேசனாக கலக்குகிறார்  
பொதுவான ரசிகர்களுக்காக......அமைதியான ஜீவானந்தனாக வருகிறார் 

சமந்தா........தனது அழகான கவர்ச்சிப் புன்னைகையால் படம்பார்ப்பவர்களின் இதயங்களை புரட்டி புரட்டி போட்டு தாக்குகிறார் முத்தான மூன்று பாடல்களில் அழகு ஓவியமாக தோன்றுகிறார் 

மற்றபடி சதீஷ் பேசும் ஒன்லைன் காமெடி வசனங்கள் பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை MNC கம்பெனி தலைவராக வரும் நீல் நிதின் முகேஷ் வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் கவர்கிறார் 

அனிருத் இசையில் பாடல்கள் அருமை...பின்னணி இசையில் அரங்கம் அதிர்கிறது The Sword of Destiny’..இசைக்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தில் தியேட்டருக்குள் தீபாவளிச் சரவெடி........செல்பி புள்ள....பாடல் கொளுத்தி போட்ட மத்தாப்பு

ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு கதிரேசன்-ஜீவானந்தம் இருவர் மனநிலைக்கு ஏற்ப இரு மாறுபட்ட வண்ணத்தை திரையில் படம் காட்டுகிறது ஜெயில் உடைபடும் காட்சி,360டிகிரியில் காட்டப்படும் சுரங்கப்பாதை காட்சி.......பிரமிக்க வைக்கிறது 

ஆக மொத்தத்தில்.................நீர்வள ஆதரத்தை பறித்து விவசாயத்தை அழிக்கும் தண்ணீர் கொள்ளையர்களை காவு வாங்கும் திரைப்படம்
கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம்..
நன்றி:-  PARITHI 16 மணி முன்பு (http://parithimuthurasan.blogspot.in)
என்ற வலைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது..நன்றி..

இவன்:-தெ.கு.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 20 அக்டோபர், 2014

அம்மா வருக!..அம்மா வருக!..இதயதெய்வம் அம்மா வருக!.வாழ்த்துப்பா..

அம்மா வருக!..அம்மா வருக!..இதயதெய்வம் அம்மா வருக!..
அம்மா வருக!..அம்மா வருக!..மனிததெய்வம் அம்மா வருக!..

சின்னம்மா வருக!..சின்னம்மா வருக!..சிங்கம்போல வருக!..
எங்கள் முதல்வர் அம்மா!..வருக!..மக்கள் முதல்வர் அம்மா வருக!...
 

புரட்சித்தலைவி அம்மா வருக!..பொங்கும் கடலாய் அம்மா..வருக!..
சுழலும் புயலாய் அம்மா வருக!..பாயும்புலியாய் அம்மா வருக!..


அனலும் நெறுப்பாய் அம்மா வருக!..ஆதவன் ஒளியாய் அம்மா வருக!..
அரியணையேர அம்மா வருக!..ஆட்சிசெலுத்த அம்மா வருக!..
வாழும் தெய்வம் அம்மா வருக!..

இவன்:-டி.கே.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மராட்டிய மண்ணில் வீறுகொண்டு எழுந்த-வீரத் தமிழன் கேப்டன்.ஆர்.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ

Tamil Selvan
கேப்டன்.ரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ
மராட்டிய கவர்னரால்.வீரத்தமிழன் என்ற விருதுபெற்று-மும்பை தமிழர்களால் கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும்-கேப்டன் ரா,தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம்,கரம்பக்குடி தாலுகா,பிலவிடுதி கிராமத்தில் ராமையா ,தங்கம் தம்பதிகளுக்கு 1958-ம் ஆண்டு மகனாகப்பிறந்தார்.

கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பை சென்று கூலித்தொழிலாளியாக தன்னுடைய வாழ்வைத்தொடங்கி-ஏஜன்சி ஆரம்பிது கடின உழைப்பால் உயர்ந்தவர்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் மும்பைத்தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.இதன் காரணமாக மும்பைத்தமிழர்கள் இவரை கேப்டன் என அன்புடன் அழைக்கத் தொடங்கினார்கள்.

சாயன்கோலிவாடா தொகுதியின் சட்டமன்றத்தொகுதி தலைவராகவும்-168-வது வார்டு கவுன்சிலராகவும்,மும்பை மாநகராட்சி பணிக்குழு தலைவராகவும், ப.ஜ.க மும்பை பிரதேச செயலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சாயன் கோலிவாடா சட்டமன்றத்தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.தன்னை பின்தொடர்ந்த சிவசேன வேட்பாளரைவிட 3,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும் இந்தத்தொகுதியில் 66 ஆயிரம் மாராட்டிய இன வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நிய தேசத்தில் அதுவும் சிவசேனா ஆதிக்கம் கொண்ட மராட்டிய மண்ணில் அதன் வேட்பாளரை தோற்கடித்து வீறுகொண்டு எழுந்த கேப்டன்.ரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ அவர்களின் பணி சிறக்க எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்-டி.கே.தீரன்சாமி மும்பை.எம்.எல்.ஏ.கேப்டன்,ரா.தமிழ்ச்செல்வன் அவர்களை அலைபேசியில் தொடர்பு வாழ்த்து தெரிவித்தார்.
best links in tamil
More than a Blog Aggregator