வெள்ளி, 16 மே, 2014

37-தொகுதிகளில் வெற்றி தமிழக முதல்வருக்கு வாழ்த்து..


  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆழிப்பேரலையாக தனித்து தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். 40-மக்களவைத்தொகுதிகளிலும் தமது அரசு செய்த மூன்றாண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தும்,காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தமிழகத்துக்கும்,தமிழர்களுக்கும் இழைத்த துரோகத்தை பட்டியளிட்டு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகாலத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயனடையக்கூடிய வகையில் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றப்பட்டன.அதன் விளைவுதான் தற்பொழுது வாக்குகளாகமாறி-37-மக்களவைத் தொகுதிகள் என்ற பெரும் வெற்றிப்பரிசை தமிழக மக்கள் நம்முடைய முதல்வருக்கு அளித்துள்ளார்கள்.

அதேபோல கொங்கு தமிழகம் அ.இ.அ.தி.மு.கவின் இரும்புக்கோட்டை என்பதை இத்தேர்தல் முடிவுகள் மீண்டும் நிருபித்துள்ளன.

தமிழக முதல்வர் அம்மா என்ற பெரும் கடலில்,சிறு துளியாக அம்மா அவர்களின் வெற்றிக்கு-"நாற்பது தொகுதிகளிலும் வெற்றி நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" எனபக்தி முழக்கமிட்டு சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டோம்.

எங்களைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள்,அமைப்புகள் அம்மா அவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

மேலும் கூடுதலாக அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க 37-தொகுதிகள் வென்றதின் மூலம் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சக்தியாக உறுவெடுத்துள்ள அம்மா அவர்கள் எதிர்காலத்தில் பாரதப்பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.இத்தகைய வெற்றிக்கு வித்திட்ட நம்முடைய தமிழக மக்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,இந்தியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று பாரதப்பிரதமராக பதவியில் அமரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த நரேந்திரமோடிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator