சனி, 22 ஜனவரி, 2011

சாதிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம், கூட்டணியில் சிக்கல், பின்னடைவில் தி.மு.க-புலனாய்வு


 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறுகிய தூரத்தில் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேரம் குதிரை வேகத்தில் பாய்ந்து வருகிறது.


 சிறிய கட்சிகளைக் கூட அதிலும் வட்டார அளவில் செயல்படும் மக்கள் மன்றங்கள்,சங்கங்கள்,சாதீ அமைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து கவனத்துடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தே.மு.தி.கவின் இராசதந்திரியும், தேர்தல் எக்ஸ்பர்ட்டான பண்ருட்டி இராமச்சந்திரன் கூறியிருப்பது அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.அதற்குக் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோழ்வியைத் தழுவியவர்களின் பட்டியலை ஆய்ந்தால் 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தவர்களின் கதையை காண முடியும்.

 அந்த அடிப்படையில் பார்த்தால் தென் மாவட்டங்களில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 2000க்கும் கூடுதலான வாக்குகளை பெற்றுத் தரமுடியும்.சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி,டாக்டர்.சேதுராமனின் மூவேந்தர் முன்னனிக் கழகம்,கிருஸ்ணசாமியின் புதிய தமிழகம்,நாடார் சங்கம்,ஜான் பாண்டியன்,பசுபதி பாண்டியன்,டாக்டர்.தேவநாதனின் யாதவர் பேரவை போன்ற அமைப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 கொங்கு சீமையில் பெஸ்ட்.இராமசாமி தலைமையிலான கொ.மு.க,தீரன் தலைமையிலான கொங்கு தமிழர் பேரவை,தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை,தலித் அமைப்புகளான ஆதித்தமிழர் அமைப்புகள்,அர்ஜீன் சம்பதின் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் தேர்தல் ஆதிக்கம் செலுத்துகின்றன.

 வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் கட்சி,சுப.இளவரசனின் தமிழர் நீதிக் கட்சி,சி.இராமமூர்த்தியின் வன்னியர் கூட்டமைப்பு,போன்ற அமைப்புகள் முன்னிலை பெறுகிறது.சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி,இந்து முன்னனி,குளத்தூர் மணியின் தலைமையிலான பெரியார் தி.க,பா.ஜ.க கட்சியினர்கள் தமிழகம்முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

 மேலும் சிவகாமி ஐ.ஏ.எஸ்சின் சமத்துவ மக்கள் படை,ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம்,மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி,முஸ்லீம் முன்னேற்றக் கழகம்,கிறித்துவ அமைப்புகள்,தேவாங்க செட்டியார் பேரவை,பரவலாக செயல்படும் தொழிலாளர் சங்கங்கள்,மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவை 2011 சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

 தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ்,தே.மு.தி.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணிகளை அமைத்துக் கொண்டாலும் சாதீக் கட்சிகளையும்,வட்டாரக் கட்சிகளையும் அரவணைத்து செல்லவேண்டும்.அப்போது தான் ஆட்சி என்பது சாத்தியம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 அம்மா அவர்களின் அரசியல் கூடாரத்தில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருவதாக செய்திகள் வருகின்றன.தி.மு.க குடும்பத்தில் 2ஜி அலைக்கற்றை,குடும்ப மோதல்களின் காரணமாக கூட்டணி தொடர்பான செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தி.மு.க.தொண்டர்கள் மத்தியில் வருத்தம் நிலவுகிறது. 


தீரன்சின்னமலை-அரசியல்,சமூக,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 20 ஜனவரி, 2011

நடிகர் கார்த்தி-அ.தி.மு.க விற்கு ஆதரவு-அம்மாவுடன் சந்திப்பு..

   இளையதளபதி விஜய்,பில்லா அஜித்,புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வரிசையில் அம்மாஅவர்களுக்கு நடிகர்களின் ஆதரவு பட்டியலில் நடிகர் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.


  2005க்கும் முந்திய காலகட்டங்களில் நடிகர் கார்த்திக் தமிழ் திரையுலகில் ரஜினி,கமலுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்.கார்த்திக்கின் அப்பா நடிகர் முத்துராமன் ஒழுக்கமும்,நேர்மையும் பொருந்தியவர்.முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை பெற்றிருந்தவர்.நடிகர் முத்துராமனின் மகன் என்ற முறையில் கார்த்திக்கின் செல்வாக்கும் சமுதாய மக்களிடையே உச்சத்தில் இருந்தது.


  தென் மாவட்டங்களில் இவரது ரசிகர் மன்றங்களின் சார்பில் குறிப்பாக முக்குலத்தோர் ரசிகர்களின் முயற்சியால்"சரணாலயம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சரணாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென் மாவட்டத்தில் பலஇடங்களில் நடை பெற்றது.அந்த விழாவில் கலந்து கொள்ள கார்த்திக் வரும் பொழுதும், மேடையில் ஏறும் ஒவ்வொரு முறையும்! கட்டுக்குள் அடங்காத முக்குலத்து இளைஞர்களின் கூட்டம் கார்த்திக்கை காண திரண்டு வருவதும்,மேடையில் ஏறி கார்த்திக்கை தொட்டுப்பார்க்க முயற்சிப்பதும்,மேடை சரிவதும் கூட்டம் பாதியில் நிறுத்தப் படுவதும்,பத்திரிக்கைகளில் முதல் பக்கச் செய்தியாக வருவதும் வாடிக்கை.   


  இதன் எதிரொலியாகஅரசியல் கட்சிகளின் பார்வை நடிகர் கார்திக்கின்மீது திரும்பியது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது பார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைமை நடிகர் கார்த்திக்கை அழைத்து-பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக அறிவித்தது.இதன் பின்னனியில் 1970க்கும் முன் தேவர் சமுதாய மக்களிடையே செல்வாக்குப் பெற்று அன்றைய கால கட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே பெற்று தென்னகத்தின் அசைக்க முடியாத சிங்கமாக,முக்குலத்தோர் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளம் வந்தவர் பசும்பொன் முத்து இராமாலிங்கத் தேவர்.அப்படிப்பட்ட தேவருக்கு இணையாக பார்க்கப்பட்டவர் கார்த்திக்.


 அந்த நேரத்தில் அ.தி.மு.க தலைமையின் கடைக்கண் பார்வை நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வாடு பிளாக் கட்சியின் பக்கம் திரும்பியது.அ.தி.மு.க கூட்டணியில் கார்த்திக் தலைமையிலான கட்சிக்கு 9 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.அதிருஸ்டத்தின் கடாச்சம் அவரை நெருங்கும் போது!"அம்மா என்னை சந்திக்க வில்லை எனில்!அப்பாவை சந்திப்பேன்"என முழங்கினார்.  


  ஆனால்,நடிகர் முத்துராமனிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கார்த்திக்.மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர்.ஒழுக்கமற்ற செயல்களின் காரணமாக திரையுலகில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கை நழுவச் செய்தவர். அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்.மா.நடராசன் போன்றவர்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக 2006 சட்டமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த அரிதினும்,அரிய வாய்ப்பை இழந்தார்.


  தி.மு.காவின் அப்போதைய செல்லப் பிள்ளையிடம் கணிசமான தொகை ஒன்றை பெற்றுக்கொண்டு அ.திமு.க வின் வாக்குகளை பிரிக்கும் வகையில் தனித்துப் போட்டியிட்டார்.தேவர் சமூகத்தின் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த கார்த்திக்கின் கட்சி 2006 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிக்கு 2000-க்கும் குறைவான வாக்குகளை பெற்று காமெடிக் கட்சியாக உருவெடுத்தது.ஆனாலும்,10க்கும் மேற்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருந்தார்! என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும்.


  இப்படிப்பட்ட கார்த்திக்கின் செயல்பாடுகளை கண்டு அதிருப்தி அடைந்த பார்வாடு பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைமை கார்த்திக்கின் தலைவர் பதவியை பறித்தது.அதன் பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.


  2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்!அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதாக முடிவு செய்த கார்த்திக் சிறிதும் காலம் தாழ்த்தாமல் நேற்று போயஸ் கார்டனில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அம்மாவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். 
  
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 19 ஜனவரி, 2011

உடுமலையில் ராசபக்சேவின் காலண்டர் வினியோகம்-தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை,அமாரவதி நகரில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானபள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.பள்ளி நிர்வாகத்தின் சார்பில்-அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஈழத்தமிழர்களின் இரத்தத்தை குடித்த காட்டேரி,கொடியவன் ராசபக்சேவின் படம் பதித்த காலண்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

  இந்த கொடிய செய்தி தமிழர் அமைப்புகளிடையே காட்டுத்தீயாக பரவியது.அதன் தொடர்சியாக இராணுவப் பள்ளியின் முன்பு தமிழர் அமைப்புகளான பெரியார் தி க,நாம் தமிழர் கட்சி,பா.மா.க,ம.தி.மு.க,கொங்கு தமிழர் பேரவை,விடுதலை சிறுத்தைகள்,ஆதித்தமிழர் பேரவை,உள்ளிட்ட 12 அமைப்புகளை சார்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  "ராசபக்சே உலக அரங்கில் போர்க்குற்றவாழியாக அறிவிக்கபட்டுள்ள கொடியவன்.அப்படிப்பட்ட குற்றவாழியின் படம் பொறித்த காலண்டரை இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விநியோகித்துள்ளது. கடும் கண்டனத்திற்கு உரியது".

  மேலும்- "அந்த காலண்டர்களை திரும்பப் பெறவேண்டும்.இல்லை எனில் தமிழகம் முழுவது தமிழர் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்".என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் அமைப்புகள் அரசை எச்சரித்தன.பின்பு ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


தீரன்சின்னமலை-
சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 17 ஜனவரி, 2011

கிரிக்கெட்-15 வீரர்களின் இறுதி பட்டியல் அறிவிப்பு!

  2011-10வதுஉலகக்கோப்பை போட்டியில் விளையாடு இந்திய வீரர்களின் இருதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.வீரர்களின் பட்டியல் விவரம்.

  மகேந்திரசிங்டோனி(அணித்தலைவர்)கவுதம்கம்பீர்'(து.தலைவர்),சச்சின்டெண்டுல்கர்,யுவராஜ்சிங்,சுரேஸ்ரைனா,வீராக்கோக்கிலி,யூசுப்பதான்,ஜாகிர்கான்,பிரவிண்குமார்,ஆசீஸ் நெக்ரே,முனாப்படேல்,ஹர்பசன்சிங்,அஸ்வின்,பியூஸ்சாவ்ல.

 உலகக்கோப்பை அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகம்.எதிர் அணியின் மட்டையாளர்களை திகிலடையச் செய்யும் வேகப்பந்துவீச்சாளர்ஸ்ரீசாந்த்,அதிரடிமட்டையாளர் ரோகித்சர்மா ஏனோ
தேர்வு செய்யப்படவில்லை.

  ஆசீஸ்நெக்ரே,முனாப்படேலின் வேகம் உலகக்கோப்பையை வெல்லும் இந்தியா அணியின் கனவுக்குத் தடையாக இருக்கலாம்.

 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வு குழுவினர்-கிருஸ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் கூடி பதினைந்து வீரர்களின் இறுதிப்பட்டியலை அறிவித்துள்ளனர். 2011-10வது உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா-இலங்கை-வங்கதேசம் இணைந்து நடத்துகின்றன.

  இதன் முதல் போட்டி பிப்பரவரி19-ம்தேதி டாக்காவில் இந்தியா-வங்கதேச அணிகளின் மோதலோடு தொடங்குகிறது.மொத்தம் 49 போட்டிகள் நடைபெற உள்ளது.கால அளவு 43 நாட்கள்.இறுதிப்போட்டி ஏப்ரல் 3ம் தேதி மும்பை வான்கடேமைதானத்தில்நடைபெறஉள்ளது.இந்தியாவில்29போட்டிகள் நடைபெற உள்ளது.

   ஈழத்தமிழர்களின் ஈரல் குலையை அறுத்து மனித ரத்தம் குடிக்கும் காட்டேரி-கொடியவன் ராசபக்சேவின் கூட்டணியில் உலகக்கோப்பைப் போட்டி நடைபெறுவது உலகத்தமிழர்களுக்கு எதிரான இன்னுமோர் அநீதி.

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ஏ.ஆர்.ரகுமான் கோல்டன் குலோப் விருதை இழந்தார்..

  உலகத்திரைப்பட விருதுகளில் ஆஸ்கார் விருதுக்கு இணையாக கோல்டன் குலோப் விருது பேசப்படுகிறது.அன்று ஸ்லம் டோக் இயக்கிய மில்லியனர் படத்திற்கு திரை இசை மற்றும் பாடல் இசைப்பிரிவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார்.

 ஆஸ்கார் விருதைப் பெற்றுக் கொண்டு ஆங்கிலேயர்கள் குழுமியிருந்த மேடையில் தன்னடக்கத்துடன்" நான் ஒரு சில வரிகளைதமிழில்பேசுகிறேன்எனக்கூறிவிட்டு!எல்லாப்புகழும்இறைவனுக்கே என தமிழில் முழங்கினார் ஏ.எஸ்.திலீப்குமார் எனும் ஏ.ஆர்.ரகுமான்.

 மேலும் அதே மேடையில் பேசிய ரகுமான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவகாக"ஆஸ்கார் விருது வழங்கும் விழாவோ!அல்லது இந்த மேடையோ!அரசியல் விசயங்களுக்கான இடமல்ல!இருந்த போதும்,எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது!என்றே நான் விரும்புவது உண்டு!இருப்பினும் இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப் படவேண்டும்!என விரும்புகிறேன்"என்று ஈழத்தின் கண்ணீரை விசனத்துடன் ஆஸ்கார் மேடையில் பதிவு செய்தார்.

  இந்த ஆண்டுக்கான கோல்டன் குலோப் விருது பட்டியலில் டேவிட் பாயல் இயக்கிய"127 ஹவர்ஸ்"படத்திற்கு இசைஅமைத்த ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரகுமானின்பெயர் பரிந்துறை செய்யப்பட்டது.ஆனால் கடைசிக் கட்டத்தில் கோல்டன் குலோப் விருது இசைத்தமிழனிடம் இருந்து கை நழுவிப்போனது.தமிழை ஆஸ்காரின் உச்சிக்கு எடுத்துச் சென்ற நம் ரகுமானுக்கு இன்னும் ஏராளமான விருதுகள் காத்திருக்கின்றன.

தீரன்சின்னமலை-அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு செய்தி ஊடகத்திற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator