முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று மூவர் பாதுகாப்புக்குழுவின் தலைவர் நாதன் தெரிவித்துள்ளார். தற்போது 142 அடியாக இருக்கும் அளவிலும்அணை சிறப்பாகவே உள்ளது என்றும், முல்லைப் பெரியாறைச் சார்ந்த பேபி அணையும் எந்த நீர்க் கசிவும் இல்லாத பலமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா அரசு பாதுகாப்புக் குறித்து அச்சப்படுவது தேவையற்றது மற்றும் அது போன்றசம்பவங்களுக்கு வாய்ப்புகள் குறைவு என்பதே உண்மை. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்மட்டத்தை 136 அடி என்று பராமரித்ததால் நீர்பிடிப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகள்அதிகமானதும், தற்போது நீர்மட்டம் அதிகரிக்கும் போது அவைகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்கிற நிலையில் கேரளா இதை எதிர்த்தும் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அணை சார்ந்த பகுதிகளுக்கு இன்றளவும் தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் கேரள அரசுக்கு செலுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் நடத்திய பாரட்டு விழாவில், அவர்குறிப்பிட்ட " நீர்மட்டத்தை 152 அடி உயர்த்திக் காட்டுவோம்" என்றது கேரள அரசுக்கோ,கேரள மாநில மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதையும் கேரளா புரிந்து கொள்ளவேண்டும். ஆக்கிரமிப்புகள் குறித்து கேரள அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விவசாயத்தை காப்பற்றுவது என்பது விவசாயிகள் மட்டும் போராடுவது அல்லதுஅவர்களுக்கான பிரச்சினைகள் மட்டுமல்ல. ஒவ்வொரு வேளையும் உணவைக்கொள்ளக்கூடிய அனைவரின் கடமை. கேரளா அரசு, முல்லைப் பெரியாறு விவகாரத்தில்தமிழக அரசுக்கும்,விவசாய பெருங்குடி மக்களுக்கும் ஆதரவைத் தர வேண்டும். கேரள சகோதரர்களின் பாதுகாப்பில் தமிழக அரசும், மக்களும் முக்கியத்துவம் அளிக்கிறோம்என்பதே உண்மை.
நன்றி,-
சௌந்தரராஜன்.க, செய்தித் தொடர்பாளர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக