திங்கள், 13 டிசம்பர், 2010

விஜய்க்கு தி.மு.கவின் நெறுக்கடி-பாசக்காரா அம்மாவின் ஆதரவு,கலைஞருக்கு புதிய சிக்கல்..

   நடிகர் விஜய்...தமிழ் சினிமா உலகின் தவிர்க்க முடியாத சக்தி.லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதிக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜய்.


 தொடர்ந்து  வெற்றிப்படங்களைத்தந்தவர்..                                                                                                                                                                                                                                   2007,2008ல் ஐ.பி.எல் நடத்திய 20/20 கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதராக இருந்தவர். 


   தயாரிப்பாளார்கள்,விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை.                    அவரது தந்தை சந்திரசேகர் ரசினிகாந்த்,விசயகாந்த் போன்ற சூப்பர் கிட் நடிகர்களுக்கு லிப்டாக இருந்தவர்.திரையுலகின் குறிப்பிட்ட சில இயக்குனர்களில் ஒருவர்.

  சங்கர்,பவித்திரன் போன்றவர்கள் இவரிடம் உதவியாளார்களாக இருந்தவர்கள்.விஜயின் தந்தை தி.மு.கவின் தீவிர விசுவாசி.                                                                                                


   தனது மகன் விஜய்யை திரையில் அறிமுகப்படுத்தியவர். விஜயின் முதல் படம் பற்றி விமர்சனம் எழுதியஒரு பத்திரிக்கை-விஜயின்முகத்தை தகரடப்பாவுடன் ஒப்பீடு செய்திருந்தது.அத்தகைய நேரத்தில் சோர்ந்து போகாத சந்திரசேகர் மகனின் வளர்ச்சிக்கு தளராமல் உழைத்தார்.


   ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர் குடும்ப-திரையுலக வாரிசுகளின் இடைவிடாத நெருக்கடியின் காரணமாகவும்,ஆளும் தி.மு.கவின் அச்சுறுத்தலினாலும் வெள்ளிவிழா நாயகனின் வெற்றி படங்கள் தொடர்தோல்வியின் விளிம்பிள் ஊசலாடியது.இளையதளபதி மனம் இடிந்து போனார்.


     இதன் காரணமாகவே கடந்த மக்களவை தேர்தல் நேரத்தில் ராகுல்காந்தியை சந்தித்தார்.தமிழக கங்கிரஸ்சின் கோக்ஷ்டிகானாவில் விஜயின் கச்சேரி காணாமல் போகும் என வேட்டைகாரனின் நெறுங்கிய வட்டாரங்கள் எச்சரித்தன.விழித்துக்கொண்ட சுரா தேசியக்கட்சிக்கு கும்பிடு போட்டார்.


   ஆனாலும் தமக்கு அரசியல் பாதுகாப்பு அவசியம் என்பதை குருவி உணர்ந்து இருந்தார்.இதன் எதிரொலியாக தனது ரசிகர் மன்றங்களை-மக்கள் மன்றமாக புனரமைத்தார். எது எப்படி இருப்பினும் காவல்காரனுக்கு தொந்தரவுகள் தொடர்ந்தன.


  3இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட்டார்.இப்படத்தின் இயக்குனர் சங்கரை கலைஞர் குடும்ப வாரிசு தொடர்பு கொண்டதின் காரணமாகவே விஜய் நீக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.பொருத்தது போதும்-பொங்கிஎழு என்ற ரீதியில் எஸ்.ஏ.எஸ் கடந்தவரத்தில் அனைத்துமாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அரசியல் ரீதியான கருத்துக்களை கவனத்துடன் கேட்டறிந்தார்.


  அ.தி.மு.க பொதுச்செயலாளர் அம்மா-இளையதளபதி சந்திப்பு என ஊடகங்களின் யூகம் நேற்று மாலை நான்கு மணிக்கு உருதியானது.       விஜயின் தந்தை சந்திரசேகர் நேற்று மாலை அம்மாவை சந்தித்தார்.அந்த சந்திப்பின்போது அம்மா அவர்கள் விஜயின் அரசியல் வரவை வறவேற்பதாகவும்,திரைத்துறை சம்பந்தமான அரசியல் அச்சுறுத்தல்களை கண்டு கவலைப்படவேண்டாம் எனவும்,எதிர்வரும் 17ம் தேதி வெளியாகும் காவலன் திரைப்படம் எந்த இடையூறும் இல்லாம்ல் முழு வெற்றிபெற தாமும்,தமது கட்சியும் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அம்மா அவர்கள் கூறியதாக எமக்கு நெறுங்கிய அ.தி.மு.க வட்டாரச்செய்திகள் கூறுகின்றன.


 எது,எப்படியோ விஜய் வடிவில் தி.மு.கவிற்கு புதிய நெறுக்கடி உருவெடுக்கிறது...
best links in tamil
More than a Blog Aggregator