சனி, 14 செப்டம்பர், 2019

மருத்துவரை கொல்வது போன்றவற்றால் நம் நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போகும்.

ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யும் நிபுணர்களுக்கான MCh cardiothoracic surgery படிப்பும்

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரத்யேகமாக படிக்கும் MCh paediatric surgery படிப்பும்

இதய நோய்க்கான பட்ட மேற்படிப்பான DM cardiology

ப்ளாஸ்டிக் சர்ஜரி படிப்புக்கான சீட்களும்

அவசர சிகிச்சைக்கு படிக்கும் மேற்படிப்பு சீட்களும்

எடுத்துப்படிக்க ஆளில்லாமல் இருக்கும் நிலை வந்திருக்கிறது .

எங்கு 120 கோடி பேர் வாழும் இந்தியாவில்.

இந்த படிப்புகளை படிக்கும் அளவு மருத்துவர்களுக்கு திறமை இல்லையா?
வசதி இல்லையா ?

இவை அனைத்தும் இருக்கிறது ஆனால் ஏன் இந்த படிப்புகள் காலியாக இருக்கின்றன ?

மேற்சொன்ன படிப்புகளை படித்து விட்டு அவசர சிகிச்சை பிரிவு
ஆபரேசன் தியேட்டர் போன்றவற்றில் கஷ்டப்பட்டு அறுவை சிகிச்சை செய்தாலும் விதி வசத்தால் மரணமடையும் நோயாளியின்  உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.

கஷ்டப்பட்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் அவை பிழைக்காத போது அறுவை சிகிச்சை நிபுணர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

கடந்த சில வருடங்களாக மகப்பேறு மருத்துவத்துக்கான இடங்கள் சில சுற்று கவுன்சிலிங் முடியும் வரை கூட காலியாக இருந்தன.

காரணம் தாய் சேய் இறப்பு நேர்ந்தால் மருத்துவர் அடித்து கொல்லப்படும் நிலை இருக்கிறது.
சில வருடங்கள் முன்பு கூட தூத்துக்குடியில் ஒரு மருத்துவர் தலை துண்டமாக வெட்டி கொல்லப்பட்டார்.

இப்படி மடமை காரணமாக மருத்துவர்களை அறிவில்லாத மக்கள் அடிப்பதும் கொல்வதும் என்று இருப்பதால் இது போன்ற படிப்புகளை படிக்க ஆளில்லாமல் போகும் நிலை வந்திருக்கிறது.

இன்னும் பல சிறு மருத்துவமனைகளில் ஆபரேசன் தியேட்டர்கள் மூடப்படுகின்றன

ஐ.சியூ செட்அப்கள் மூடப்படுகின்றன

வெறும் புறநோயாளிகள் பிரிவு மட்டும் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு பல திறமை வாய்ந்த மருத்துவர்கள் வந்து விட்டனர்.

யாரும் ரிஸ்க் எடுக்க அஞ்சுகின்றனர்.

இத்தனை ரிஸ்க் எடுப்பதற்கு ஏற்ற ஊதியமும் இல்லை. இதுவே உண்மை நிலை.

இதனால் அவசர சிகிச்சைக்கு பெரிய மருத்துவமனைகளை நாட வேண்டி வரும்.
இதனால் பொருளாதாரம் அதிகம் செலவாகும்.

நம் ஊரிலேயே நல்ல மருத்துவமனைகள் உருவாகாமல் போகும்.

மருத்துவர்கள் நமது சமூகத்தில் இருந்து தான் வருகிறார்கள்.
அவர்களை சமூகம் ஆதரிக்க வேண்டும்.
மருத்துவர்கள் கடவுள்கள் கிடையாது
பிறப்பு இறப்பு இரண்டும் பொதுவானாது.
எந்த மருத்துவனும் வேண்டுமென்றே தவறிழைப்பதில்லை.
அப்படி தவறிழைப்பதாக தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே உகந்தது.

வீணாக மருத்துவமனைகளை உடைப்பது.
மருத்துவரை கொல்வது போன்றவற்றால்
நம் நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போகும்.

இதை சமூகம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 11 செப்டம்பர், 2019

ரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது பொன்மாணிக்கவேல் குழு Sep 12, 2019

ரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது பொன்மாணிக்கவேல் குழுSep 12, 2019
best links in tamil
More than a Blog Aggregator