இலங்கை கடற்படையால் தமிழகமீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும்,வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக தமிழகக் கடற்பகுதிகளில் நடந்துவருகிறது.
இத்தகைய தாக்குதல்களை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும்,சமுதாய அமைப்புகளும் தொடர்ந்து போராடிவருகின்றன.இதை தடுக்க வேண்டிய மைய-மாநிலஅரசுகள் இலங்கையின் சீனா ஆளுமையைக்கண்டு அஞ்சிவருகின்றன.
மீனவர்களுக்கு எதிரான தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து நடிகர்விஜயின் மக்கள்இயக்கத்தின் சார்பில் நாகையில் கடந்த செவ்வாய்கிழமை (பிப்ரவரி-22) கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டடது.தொடர்ந்து விளம்பரங்களும் செய்யப்பட்டது.
அதன்படி கூட்டத்தில் கலந்துகொள்ள விஜய் நாகை வந்துசேர்ந்தார்.நாகைபகுதி முழுவதும் விஜய் ரசிகர்கர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.விஜய் மேடைக்கு செல்லமுடியாத அளவுக்கு இளைஞர் பட்டாளம் திரண்டது.
கூட்டத்தை ஒழுங்கு படுத்தவேண்டிய காவல்துறை கண்டும்காணமல் ஒதுங்கி நின்றது.ஒருகட்டத்தில் ரசிகர்களின்மீது காவல்துறை தடியடி நடத்தியது.இதுபோன்ற கூட்டங்களின் பாதுகாப்பு பணிகள் காவல்துறையால் திட்டமிடப்பட்டிருக்கவேண்டும்.
போதிய காவலர்களும் நிறுத்தப்படவில்லை.கடும் தள்ளு-முள்ளுக்கு இடையே மேடைஏறிய விஜய் கோபத்துடன் ரசிகர்களை பார்த்து ஒருசில வினாடிகள் கைஅசைத்துவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்கிச்செல்ல முயன்றார்.ஆனால் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி பத்து நிமிடங்கள் பேசவைத்தனர்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதிகரசிகர்களின் பட்டாளத்தை கொண்டவர் நடிகர்விஜய் என லயோலா கல்லூரியின் சர்வே தெரிவிக்கிறது.ஆளும் அரசின் மையங்கள் இதுபோன்ற மக்கள் சக்திமிக்க தலைவர்களை ஒடுக்க நினைப்பது கண்டனத்துக்குரியது.