புதன், 26 ஜனவரி, 2011

விஜயின்-காவலன் சந்தித்த சோதனைகள்

  கமலின் மன்மதன் அம்பு வெளியான நேரத்தில்-இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் வெளியிடப்பட இருந்துதது.கடந்த காலங்களில் விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தது.அடுத்த படத்தை சூப்பர்கிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற நிலைமை விஜய்க்கு ஏற்பட்டது.

 பிரண்ட்ஸ் படத்தை சூப்பர்கிட் படமாக கொடுத்தவர் இயக்குனர் சித்திக்.விஜய்-சித்திக் கூட்டணி மலையாலத்தில் வசூல் மழை பொழிந்த படத்தின் ரீமேக் கதையை கையில் எடுத்தது.காவலன் என்ற பெயரில் காமெடிக் கலக்களுடன் விஜய்க்கு தேவையான மசாலாவை கலந்து காவலன் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது.

 சத்தியராஜ்யை வைத்து தொடர்ந்து படம் எடுத்து கையைச்சுட்டுக்கொண்ட சக்திசிதம்பரத்தின் அலுவலகமும்-காவலன் திரைப்படத்தின் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் காவலன் திரைப்படத் தயாரிப்பாளர் ரோமேஸ்க்கும் சக்திசிதம்பரத்திற்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது.

 அதன் விளைவு காவலன் திரைப்பட வெளியீட்டு உரிமையை 42 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார் சக்திசிதம்பரம். இந்தபடம் வெளியானால் தனது கடன் பிரச்சனைகள் தீரும் என முடிவு செய்து தனது தகுதிக்கு மேல் கடன் பெறுகிறார்.

 கடந்த மாதமே வெளியிட தேதியும் குறிக்கப்பட்டது.சக்திசிதம்பரத்திற்கு முன்பே காவலன் படத்தை வாங்க கையில் பணத்துடன் நிறைய சம்பவான்கள் காத்திருந்தனர்.விஜயின் முந்தைய படங்கள் சறுக்கியதின் காரணமாக 40 கோடிக்கும் குறைவாக பேரம் பேசினார்கள்.ஆனால் சக்திசிதம்பரத்தின் விலை 42 கோடி ரூபாய்.

 மற்றவர்களைவிட கூடுதலாக விலை பேசியதன் காரணமாக சக்திசிதம்பரத்தின் கைக்கு வெளியீட்டு உரிமை சென்றது.ஆனால் விஜய் தரப்பு சொல்லும் காரணம் சிதம்பரத்தை நிதிநெறுக்கடியில் இருந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என அவருக்கு வெளியீட்டு உரிமை தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.காவலனின் முதல் பிரச்சனை சக்திசிதம்பரம்.

 இந்த நேரத்தில் எந்திரன் படம் 40 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.சில இடங்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டு காவலன் படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் வேகம் காட்டினார்கள்.

 இதே நேரத்தில்உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு படம் வெளியானது.தொடர்ந்து காவலனும் வெளியாக இருந்தது.காவலன் வெளியானல் மன்மதன் அம்பு சொம்பு ஆகிவிடும்-மேலும் தங்களின் சொல்பேச்சு கேட்காத விஜய்க்கு தகுந்த பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தனர் கலைஞர் குடும்பத்தின் திரை உலக வாரிசுகள்.

 அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.திரையரங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவுகள் பறந்தன.திரையரங்குகள் கிடைக்காத நிலையில் காவலன் வெளியீடு தைப் பொங்களுக்குத் தள்ளிப்போனது.

 விநியோகஸ்தர்களிடமும்,மீட்டர் வட்டி கும்பலிடமும் பணம் வாங்கிய சக்திசிதம்பரத்திற்கு நெறுக்கடிகள் முற்றியது.பணம் கொடுத்த சிலர் சிதம்பரத்தை வளைத்துத் தாக்கவும் செய்தார்கள்.சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.                
   
 காவலன்தைப்பொங்களுக்குஅவதரிப்பான்எனக்காத்திருந்தரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்,திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.அந்த நேரத்தில் கலைஞரின் இளைஞன்,மாறனின் ஆடுகளம் வெளியானது.

 கார்த்தியின் சிறுத்தையும்,விஜயின் காவலனும் கலைஞரின் குடும்பப்படங்களை அப்பர் பிளாப் செய்து விடும் என கலைஞரிடமே சொல்லப்பட்டது.அப்புறம் என்ன கடுமையான அஸ்திரங்கள் காவலன் மீது வீசப்பட்டது.

 சிறுத்தையின் தயாரிப்பாளர் ஞானவேல்ராசன் படத்தின் வெளியீட்டு உரிமையை தன் சொந்தப்பொறுப்பில் வைத்துக்கொண்டார்.அதனால் முன் கூட்டியே திரையரங்குகளை பதிவு செய்து கொண்டார்.

  இருப்பினும் நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவுக்கு சிறுத்தை படம் வெளியானால் அவமானம் என்று கூறி நடிகர் கார்த்தியின் வீட்டு முன்பு நாடார் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதன் பின்னனியில் இளைமை படத்தின் தயாரிப்பாளர் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.அதையும் மீறி சிறுத்தை படம் பொங்களில் சீறியது.

 ஆனால் சக்திசிதம்பரத்தின் பொருளாதார நெருக்கடி விஜயின் எதிர் முகாமில் இருந்தவர்களுக்கு சாதமாக அமைந்தது.தங்கள் அரசியல் பின் புலத்தை சரியாகப் பயன்படுத்தி காவலனுக்குத் தாங்க முடியாத சோதனைகளை ஏற்படுத்தினார்கள்.
 இது போன்ற சோதனைகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க பொதுச்செயலாளரை சந்தித்து காவலன் வெளியீட்டுக்கு ஆதரவு பெற்றார்.

 இறுதியில் இளையதளபதியும்,அவரது தந்தையும் இணைந்து அதிரடியாக களம் இறங்கி நீதிக்கு தண்டனை கொடுத்தவர்களைத் தண்டித்து,சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிருபித்து,பல கோடி ரூபாய்களை இழந்து காவலன் படத்தை பிரசவித்தார்கள்.

 காவலன் காற்று வாங்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! விளம்பரம் எதுவும் இல்லாமல் காவலன் இளைய தளபதியை காப்பாற்றியது. 



        பார்த்துவிட்டு கருத்தைக் கொஞ்சம் பதிவு செய்யுங்கள்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக-     டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

"முந்த்ரா"இந்தியாவை உலுக்கிய முதல்ஊழல்!

  உலக அரங்கில் ஊழலின் தேசமாக நிமிர்ந்து நிற்கும் சுதந்திர இந்தியாவின் 62வது குடியரசு தின நிகழ்சிகள் நாடுமுழுவதும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.1958"முந்த்ரா"உழல்.நமதுதேசத்தின்பிரதமர்நேருஜிஅவர்களையும்,தேசியத்தையும்உலுக்கியமிகப்பெரியஊழல்.


 இன்று கொடிகட்டிப் பறக்கும் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலுக்கு அச்சாரம் இட்ட "முந்த்ரா"ஊழலின் கதநாயகன்அப்போதைய மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரும்,பிரதமர் நேருஜி,கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தை சார்ந்தவருமான டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியார்.
 
 கரிதாஸ் முந்த்ரா சாதாராண மனிதராக தமது வாழ்வை தொடங்கியவர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஊழலின் தொடக்க ஆட்டக்காரர்.அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக சிக்சர்,பவுன்ட்ரிகளை அடித்தவர்.

 இந்திய ஆயிள் காப்பீட்டுக் கழகம்(எல்.ஐ.சி) முந்த்ராவுக்கு சொந்தமான 6 நிருவனங்களில் 1.24 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லாமல் நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியாரின் நெறுக்குதல் காரணமாக முந்த்ராவின் கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்.ஐ.சிக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.
 அன்றைய காலத்தில் இந்த இழப்பின் மதிப்பு 50 கோடி ரூபாய்.உழல் செய்தவர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்,நேருஜீயின் நெருங்கிய நண்பர்.ஆனால் கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், நேர்மையின் வடிவமான பிரதமர் நேருஜீ அவர்கள் ஊழலை விசாரிக்க உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை நிறுவினார்.
 ஒருநபர் கமிசன் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்தது. முந்த்ராவுக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.எல்.ஐ.சியின் இழப்பை விசாரிக்க முந்த்ராவை தோண்டிய போது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பங்கு மார்கெட்டில் முந்த்ரா புகுந்து விளையாடிய கதையும் வெளிச்சத்துக்கு வந்தது.
 பிரிட்டிஸ்-இந்தியா நிருவனத்தின் பங்குகளை 12 ரூபாய்க்கு வாங்கி முந்த்ராவே 14 ரூபாய்க்கு ஏற்றி விற்பனை செய்வது.இப்படிச் செய்வதன் மூலம் பங்கின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மக்களை ஏமாற்றுவது.

 சாதராண முந்த்ராவிற்கு நிதி எங்கிருந்து வந்தது.தனது சட்டைப்பையில் நிதியமைச்சர் டி.டி.கே அப்புறம் என்ன? தேசிய வங்கிகளின் தாராளமயம்.முந்த்ராவுக்கு வங்கிகள் முதலீடு செய்கின்றன.

 இதன் தொடர்சியாக பங்குச்சந்தை பெறும் சரிவை சந்திக்கிறது.தனது ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தானே அச்சடித்த பொய்யான பத்திரங்களை வெளியிடுகிறார்.ரிசர்வ் வங்கியின் அதிகாரி இராமன் முந்த்ராவின் அதிரடி ஆட்டத்தை ரிசர்வ் வங்கித் தலைமையின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறார்.
 முந்த்ராவின் ஊழல் கோப்பு நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியின் பார்வைக்கு வருகிறது."இதை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை இது தேவயற்றது"எனக் குறிப்பெழுதி திருப்பி அனுப்பினார்.நடவடிக்கை எடுக்க வேண்டிய டி.டி.கே இந்தியாவின் மிகப்பெரிய முதல் ஊழலுக்கு துணை போனார்.


  இதன் விளைவு ஆண்டிமுத்துராசாவை கதநாயகனாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்களாக ஊழலின் விருச்சம் விரிந்துள்ளது.

 இதை விட பெரிய ஊழல்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.யார் காண்டது?யாருக்கு ஊழலைப் பற்றிய கவலை?தேர்தல் வருகிறதா?குவாட்டரும்,பிரியாணியும் கிடைகிறதா?ஓட்டுக்கு ஐநூறும்,ஆயிரமும் பாக்கெட்டுக்கு வருகிறதா? கவலை ஓய்ந்தது!
1947-ல் வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்!
இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமை!
தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க "ஊழல் ஒழிப்பு முன்னனி" 
என்ற மக்கள் கட்டமைப்புத்தேவை!

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக- டி.கே.தீரன்சாமி.   
பதிவைப்பார்த்தவர்கள்கருத்துரைகளைபதியவும் 

best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 24 ஜனவரி, 2011

கடத்தப்பட்ட காமராசர்-காப்பாற்றினார் முத்துராமலிங்கத்தேவர்!

  பாரததேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராளிகளை ஒடுக்குவதிலும்,காங்கிரஸ் கட்சியினரை அழிப்பதிலும் வெள்ளையர்களுக்கு கொஞ்சமும் சலைக்காமல் நீதிக்கட்சியினர் வெகுவேகத்துடன் செயல் பட்டனர்.
 காங்கிரஸ்சில் பார்ப்பாணியர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது.அதனால் பிராமணர்கள் அல்லாத கட்சி ஒன்று தேவை என்ற அடிப்படையில் உருவானதுதான்நீதிக்கட்சி.
 மிட்டா,மிராசுகளும்,பாளையக்காரர்களும்,ஜமீன்தாரிகளும்,நிறைந்த கட்சியாக உருவெடுத்தது.வெள்ளைஅரசாங்கத்தை ஆதரித்து செயல்பட்டு வந்தது.அடியாட்களைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டங்களில் கலகம் உருவாக்குவது.விடுதலை வீரர்களை தாக்குவது,போராளிகளை கடத்துவது,காட்டிகொடுப்பது என வீர,தீர செயல்களில் முழுவீச்சில் செயல்பட்டு வந்தனர்.அதற்கு வெகுமதியாக வெள்ளை அரசாங்கத்திடம் இருந்து பட்டங்களும்,பதவிகளும்,அதிகாரமும் தாரளாமாக கிடைத்தது.

 அப்படிப்பட்ட வீரத்தின் விளை நிலமான நீதிக்கட்சியின் கும்பல் ஒன்று கர்மவீரர் காமராசரை கடத்திச் சென்று விருதுநகரின் ஒதுக்குப் புறத்தில் இருந்த பழைய வீடு ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர்.விருதுநகரில் அன்றைய தினம் மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.
 தேவர் பெருமகனார் வந்து சேர்ந்தார்.அவர் மேடை ஏறுவதற்கு முன்பாக-காமராசரை காணவில்லை மர்மமாக உள்ளது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது.நுண்ணறிவு கொண்ட தேவர் பெருமகனார் கணப் பொழுதில் இது நீதிக்கட்சியின் வீரச்செயல் என்பதை உணர்ந்து கொண்டு மேடை ஏறினார்.
 பொதுக் கூட்டத் திடலில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்தனர்.தேவர் பெருமகனாரின் எழுச்சி உரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.ஒலிப்பெறுக்கியை கையில் பிடித்த தேவர்பெருமனார் "நான் இப்போது என் உரையை ஆரம்பிக்க போகிறேன்! நான் என் பேச்சை முடித்துவிட்டு கீழே இறங்கும் போது! என் எதிரில் காமராசர் நிற்க வேண்டும்! யார் அவரை அடைத்து வைத்திருக்கிறார்களோ! அவர்கள் காமராசரை இங்கே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்! நான் பேசி முடித்துவிட்டு இறங்கும் போது காமராசர் இங்கே இல்லா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல"! என சிங்கமாக சீறினார்.

 அதைத் தொடர்ந்து அரசியல் சூழல்பற்றி பேசி முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே வந்தார் அவர் எதிரே கர்மவீரர் காமராசர்.நீதிக்கட்சியால் கடத்தப்பட்ட காமராசரை காப்பாற்றினார் முத்துராமலிங்கத்தேவர்.

 தேவர் பெருமகனாரின் அதிரடிமுழக்கத்தில் நிலை குலைந்து போன நீதிக்கட்சியினர் காமராசரை விடுதலை செய்தனர்.உண்மையின் உரைவிடமான தேவரின் செயல்பாடுகள் இன்றும் போற்றுதலுக்குறியது.அப்படிப்பட்ட தேவர் பெருமகனார் அவர்களை குறுகிய சாதி வட்டத்தில் அடைப்பதை கைவிட வேண்டும்.
                         தங்கள் மேலான கருத்துக்களை பதியவும்.
தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி..கே.தீரன்சாமி   
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

யூசுப்பதான் புலிப்பாய்ச்சல் -படுதோல்வியிலிருந்து மீட்பு

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 5-வது இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ்சில் வென்ற இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.மேகம் மூட்டமாக காணப்பட்டதால் மழை குறுக்கிடும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம்.


 ஸ்மித்-அம்லா இணை ஆட்டத்தை தொடக்கியது.இந்த ஜோடி பந்துகளுக்கு இணையாக ரன்களை குவிக்கத் தொடங்கியது.இடையில் மழை குறுக்கிட்டது.இதன் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 46-ஓவர்களாக குறைக்கப்பட்டது.


 மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் யுவராஜ் சிங்கின் சுழலில் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவின் 2 மட்டையாளர்கள் ஆட்டம் இழந்தனர்.ஆனால் அம்லாவின் அதிரடியை இந்தியப் பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.ஒரு கட்டத்தில் அம்லாவுடன் இணைந்த வார்னும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார்.


 முடிவில்தென்னாப்பிரிக்கா அணி 9-விக்கெட்களை இழந்து 250- ரன்களை குவித்தது.அம்லா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 116 ரன்களையும்,வார்ன் 53 ரன்களையும் குவித்தனர்.இந்தியப் பந்து வீச்சில் ஜாகிர்கான்-2,முனாப்படேல்-3,யுவராஜ்-2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


  மழை குறுக்கிட்டதன் காரணமாக டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 46 ஓவரில் 268-ரன் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.முன்னனி தொடக்க மட்டையாளர்களான சச்சின்,சேவாக்,கம்பீர்,இல்லாத நிலையில்-பர்திவ் படேல்,ரோகித் சர்மா இணை ஆட்டத்தை தொடக்கியது.ஆனால் இந்திய வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.


 ஒரு கட்டத்தில் 45-க்கு3-,74-க்கு6,-119-க்கு8 என்ற பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.அணியை மீட்டெடுக்கும் பணி யூசுப்பதானின் தலையில் விழுந்தது.யூசுப் களம் இறங்கியது முதலே புலிப் பாய்ச்சல் காட்டத் தொடங்கினார்.மட்டையை எட்டுத் திசைகளிலும் சுழற்றினார்.சிக்சர்களும்,பவுன்ட்ரிகளும் பறக்கத் தொடங்கின.தென்னாப்பிரிக்காவின் ராக்கெட் ஸ்டையினின் பந்துகளை துவசம் செய்தார்.47-பந்துகளில் தனது அரைச் சதத்தை பூர்த்தி செய்தார்.


 யூசுப் மேலும் வேகத்தை கூட்டத் தொடங்கினார்.துரதிருஸ்டவசமாக அணியின் வெற்றிக் கோட்டை தொடும் நேரத்தில் யூசுப் ஆட்டம் இழந்தார்.8 சிக்சர்,8 பவுன்ட்ரிகளுடன் 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார்.இந்தியத் தரப்பில் பர்திவ் படேல் 34 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார்.தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் மோர்கில் 4,ஸ்டையின் 2 விகெட்டுகளை கைப்பற்றினார்கள்.


 இறுதியில் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.5-போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்னாப்பிரிக்கா3-க்கு 2- என்ற அடிப்படையில் கைப்பற்றியது.



தீரன்சின்னமலை- சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 22 ஜனவரி, 2011

சாதிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம், கூட்டணியில் சிக்கல், பின்னடைவில் தி.மு.க-புலனாய்வு


 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறுகிய தூரத்தில் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேரம் குதிரை வேகத்தில் பாய்ந்து வருகிறது.


 சிறிய கட்சிகளைக் கூட அதிலும் வட்டார அளவில் செயல்படும் மக்கள் மன்றங்கள்,சங்கங்கள்,சாதீ அமைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து கவனத்துடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தே.மு.தி.கவின் இராசதந்திரியும், தேர்தல் எக்ஸ்பர்ட்டான பண்ருட்டி இராமச்சந்திரன் கூறியிருப்பது அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.அதற்குக் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோழ்வியைத் தழுவியவர்களின் பட்டியலை ஆய்ந்தால் 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தவர்களின் கதையை காண முடியும்.

 அந்த அடிப்படையில் பார்த்தால் தென் மாவட்டங்களில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 2000க்கும் கூடுதலான வாக்குகளை பெற்றுத் தரமுடியும்.சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி,டாக்டர்.சேதுராமனின் மூவேந்தர் முன்னனிக் கழகம்,கிருஸ்ணசாமியின் புதிய தமிழகம்,நாடார் சங்கம்,ஜான் பாண்டியன்,பசுபதி பாண்டியன்,டாக்டர்.தேவநாதனின் யாதவர் பேரவை போன்ற அமைப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 கொங்கு சீமையில் பெஸ்ட்.இராமசாமி தலைமையிலான கொ.மு.க,தீரன் தலைமையிலான கொங்கு தமிழர் பேரவை,தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை,தலித் அமைப்புகளான ஆதித்தமிழர் அமைப்புகள்,அர்ஜீன் சம்பதின் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் தேர்தல் ஆதிக்கம் செலுத்துகின்றன.

 வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் கட்சி,சுப.இளவரசனின் தமிழர் நீதிக் கட்சி,சி.இராமமூர்த்தியின் வன்னியர் கூட்டமைப்பு,போன்ற அமைப்புகள் முன்னிலை பெறுகிறது.சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி,இந்து முன்னனி,குளத்தூர் மணியின் தலைமையிலான பெரியார் தி.க,பா.ஜ.க கட்சியினர்கள் தமிழகம்முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

 மேலும் சிவகாமி ஐ.ஏ.எஸ்சின் சமத்துவ மக்கள் படை,ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம்,மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி,முஸ்லீம் முன்னேற்றக் கழகம்,கிறித்துவ அமைப்புகள்,தேவாங்க செட்டியார் பேரவை,பரவலாக செயல்படும் தொழிலாளர் சங்கங்கள்,மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவை 2011 சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

 தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ்,தே.மு.தி.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணிகளை அமைத்துக் கொண்டாலும் சாதீக் கட்சிகளையும்,வட்டாரக் கட்சிகளையும் அரவணைத்து செல்லவேண்டும்.அப்போது தான் ஆட்சி என்பது சாத்தியம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 அம்மா அவர்களின் அரசியல் கூடாரத்தில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருவதாக செய்திகள் வருகின்றன.தி.மு.க குடும்பத்தில் 2ஜி அலைக்கற்றை,குடும்ப மோதல்களின் காரணமாக கூட்டணி தொடர்பான செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தி.மு.க.தொண்டர்கள் மத்தியில் வருத்தம் நிலவுகிறது. 


தீரன்சின்னமலை-அரசியல்,சமூக,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 20 ஜனவரி, 2011

நடிகர் கார்த்தி-அ.தி.மு.க விற்கு ஆதரவு-அம்மாவுடன் சந்திப்பு..

   இளையதளபதி விஜய்,பில்லா அஜித்,புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வரிசையில் அம்மாஅவர்களுக்கு நடிகர்களின் ஆதரவு பட்டியலில் நடிகர் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.


  2005க்கும் முந்திய காலகட்டங்களில் நடிகர் கார்த்திக் தமிழ் திரையுலகில் ரஜினி,கமலுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்.கார்த்திக்கின் அப்பா நடிகர் முத்துராமன் ஒழுக்கமும்,நேர்மையும் பொருந்தியவர்.முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை பெற்றிருந்தவர்.நடிகர் முத்துராமனின் மகன் என்ற முறையில் கார்த்திக்கின் செல்வாக்கும் சமுதாய மக்களிடையே உச்சத்தில் இருந்தது.


  தென் மாவட்டங்களில் இவரது ரசிகர் மன்றங்களின் சார்பில் குறிப்பாக முக்குலத்தோர் ரசிகர்களின் முயற்சியால்"சரணாலயம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சரணாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென் மாவட்டத்தில் பலஇடங்களில் நடை பெற்றது.அந்த விழாவில் கலந்து கொள்ள கார்த்திக் வரும் பொழுதும், மேடையில் ஏறும் ஒவ்வொரு முறையும்! கட்டுக்குள் அடங்காத முக்குலத்து இளைஞர்களின் கூட்டம் கார்த்திக்கை காண திரண்டு வருவதும்,மேடையில் ஏறி கார்த்திக்கை தொட்டுப்பார்க்க முயற்சிப்பதும்,மேடை சரிவதும் கூட்டம் பாதியில் நிறுத்தப் படுவதும்,பத்திரிக்கைகளில் முதல் பக்கச் செய்தியாக வருவதும் வாடிக்கை.   


  இதன் எதிரொலியாகஅரசியல் கட்சிகளின் பார்வை நடிகர் கார்திக்கின்மீது திரும்பியது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது பார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைமை நடிகர் கார்த்திக்கை அழைத்து-பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக அறிவித்தது.இதன் பின்னனியில் 1970க்கும் முன் தேவர் சமுதாய மக்களிடையே செல்வாக்குப் பெற்று அன்றைய கால கட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே பெற்று தென்னகத்தின் அசைக்க முடியாத சிங்கமாக,முக்குலத்தோர் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளம் வந்தவர் பசும்பொன் முத்து இராமாலிங்கத் தேவர்.அப்படிப்பட்ட தேவருக்கு இணையாக பார்க்கப்பட்டவர் கார்த்திக்.


 அந்த நேரத்தில் அ.தி.மு.க தலைமையின் கடைக்கண் பார்வை நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வாடு பிளாக் கட்சியின் பக்கம் திரும்பியது.அ.தி.மு.க கூட்டணியில் கார்த்திக் தலைமையிலான கட்சிக்கு 9 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.அதிருஸ்டத்தின் கடாச்சம் அவரை நெருங்கும் போது!"அம்மா என்னை சந்திக்க வில்லை எனில்!அப்பாவை சந்திப்பேன்"என முழங்கினார்.  


  ஆனால்,நடிகர் முத்துராமனிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கார்த்திக்.மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர்.ஒழுக்கமற்ற செயல்களின் காரணமாக திரையுலகில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கை நழுவச் செய்தவர். அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்.மா.நடராசன் போன்றவர்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக 2006 சட்டமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த அரிதினும்,அரிய வாய்ப்பை இழந்தார்.


  தி.மு.காவின் அப்போதைய செல்லப் பிள்ளையிடம் கணிசமான தொகை ஒன்றை பெற்றுக்கொண்டு அ.திமு.க வின் வாக்குகளை பிரிக்கும் வகையில் தனித்துப் போட்டியிட்டார்.தேவர் சமூகத்தின் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த கார்த்திக்கின் கட்சி 2006 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிக்கு 2000-க்கும் குறைவான வாக்குகளை பெற்று காமெடிக் கட்சியாக உருவெடுத்தது.ஆனாலும்,10க்கும் மேற்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருந்தார்! என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும்.


  இப்படிப்பட்ட கார்த்திக்கின் செயல்பாடுகளை கண்டு அதிருப்தி அடைந்த பார்வாடு பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைமை கார்த்திக்கின் தலைவர் பதவியை பறித்தது.அதன் பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.


  2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்!அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதாக முடிவு செய்த கார்த்திக் சிறிதும் காலம் தாழ்த்தாமல் நேற்று போயஸ் கார்டனில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அம்மாவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். 
  
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 19 ஜனவரி, 2011

உடுமலையில் ராசபக்சேவின் காலண்டர் வினியோகம்-தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை,அமாரவதி நகரில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானபள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.பள்ளி நிர்வாகத்தின் சார்பில்-அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஈழத்தமிழர்களின் இரத்தத்தை குடித்த காட்டேரி,கொடியவன் ராசபக்சேவின் படம் பதித்த காலண்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

  இந்த கொடிய செய்தி தமிழர் அமைப்புகளிடையே காட்டுத்தீயாக பரவியது.அதன் தொடர்சியாக இராணுவப் பள்ளியின் முன்பு தமிழர் அமைப்புகளான பெரியார் தி க,நாம் தமிழர் கட்சி,பா.மா.க,ம.தி.மு.க,கொங்கு தமிழர் பேரவை,விடுதலை சிறுத்தைகள்,ஆதித்தமிழர் பேரவை,உள்ளிட்ட 12 அமைப்புகளை சார்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  "ராசபக்சே உலக அரங்கில் போர்க்குற்றவாழியாக அறிவிக்கபட்டுள்ள கொடியவன்.அப்படிப்பட்ட குற்றவாழியின் படம் பொறித்த காலண்டரை இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விநியோகித்துள்ளது. கடும் கண்டனத்திற்கு உரியது".

  மேலும்- "அந்த காலண்டர்களை திரும்பப் பெறவேண்டும்.இல்லை எனில் தமிழகம் முழுவது தமிழர் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்".என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் அமைப்புகள் அரசை எச்சரித்தன.பின்பு ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


தீரன்சின்னமலை-
சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 17 ஜனவரி, 2011

கிரிக்கெட்-15 வீரர்களின் இறுதி பட்டியல் அறிவிப்பு!

  2011-10வதுஉலகக்கோப்பை போட்டியில் விளையாடு இந்திய வீரர்களின் இருதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.வீரர்களின் பட்டியல் விவரம்.

  மகேந்திரசிங்டோனி(அணித்தலைவர்)கவுதம்கம்பீர்'(து.தலைவர்),சச்சின்டெண்டுல்கர்,யுவராஜ்சிங்,சுரேஸ்ரைனா,வீராக்கோக்கிலி,யூசுப்பதான்,ஜாகிர்கான்,பிரவிண்குமார்,ஆசீஸ் நெக்ரே,முனாப்படேல்,ஹர்பசன்சிங்,அஸ்வின்,பியூஸ்சாவ்ல.

 உலகக்கோப்பை அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகம்.எதிர் அணியின் மட்டையாளர்களை திகிலடையச் செய்யும் வேகப்பந்துவீச்சாளர்ஸ்ரீசாந்த்,அதிரடிமட்டையாளர் ரோகித்சர்மா ஏனோ
தேர்வு செய்யப்படவில்லை.

  ஆசீஸ்நெக்ரே,முனாப்படேலின் வேகம் உலகக்கோப்பையை வெல்லும் இந்தியா அணியின் கனவுக்குத் தடையாக இருக்கலாம்.

 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வு குழுவினர்-கிருஸ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் கூடி பதினைந்து வீரர்களின் இறுதிப்பட்டியலை அறிவித்துள்ளனர். 2011-10வது உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா-இலங்கை-வங்கதேசம் இணைந்து நடத்துகின்றன.

  இதன் முதல் போட்டி பிப்பரவரி19-ம்தேதி டாக்காவில் இந்தியா-வங்கதேச அணிகளின் மோதலோடு தொடங்குகிறது.மொத்தம் 49 போட்டிகள் நடைபெற உள்ளது.கால அளவு 43 நாட்கள்.இறுதிப்போட்டி ஏப்ரல் 3ம் தேதி மும்பை வான்கடேமைதானத்தில்நடைபெறஉள்ளது.இந்தியாவில்29போட்டிகள் நடைபெற உள்ளது.

   ஈழத்தமிழர்களின் ஈரல் குலையை அறுத்து மனித ரத்தம் குடிக்கும் காட்டேரி-கொடியவன் ராசபக்சேவின் கூட்டணியில் உலகக்கோப்பைப் போட்டி நடைபெறுவது உலகத்தமிழர்களுக்கு எதிரான இன்னுமோர் அநீதி.

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ஏ.ஆர்.ரகுமான் கோல்டன் குலோப் விருதை இழந்தார்..

  உலகத்திரைப்பட விருதுகளில் ஆஸ்கார் விருதுக்கு இணையாக கோல்டன் குலோப் விருது பேசப்படுகிறது.அன்று ஸ்லம் டோக் இயக்கிய மில்லியனர் படத்திற்கு திரை இசை மற்றும் பாடல் இசைப்பிரிவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார்.

 ஆஸ்கார் விருதைப் பெற்றுக் கொண்டு ஆங்கிலேயர்கள் குழுமியிருந்த மேடையில் தன்னடக்கத்துடன்" நான் ஒரு சில வரிகளைதமிழில்பேசுகிறேன்எனக்கூறிவிட்டு!எல்லாப்புகழும்இறைவனுக்கே என தமிழில் முழங்கினார் ஏ.எஸ்.திலீப்குமார் எனும் ஏ.ஆர்.ரகுமான்.

 மேலும் அதே மேடையில் பேசிய ரகுமான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவகாக"ஆஸ்கார் விருது வழங்கும் விழாவோ!அல்லது இந்த மேடையோ!அரசியல் விசயங்களுக்கான இடமல்ல!இருந்த போதும்,எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது!என்றே நான் விரும்புவது உண்டு!இருப்பினும் இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப் படவேண்டும்!என விரும்புகிறேன்"என்று ஈழத்தின் கண்ணீரை விசனத்துடன் ஆஸ்கார் மேடையில் பதிவு செய்தார்.

  இந்த ஆண்டுக்கான கோல்டன் குலோப் விருது பட்டியலில் டேவிட் பாயல் இயக்கிய"127 ஹவர்ஸ்"படத்திற்கு இசைஅமைத்த ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரகுமானின்பெயர் பரிந்துறை செய்யப்பட்டது.ஆனால் கடைசிக் கட்டத்தில் கோல்டன் குலோப் விருது இசைத்தமிழனிடம் இருந்து கை நழுவிப்போனது.தமிழை ஆஸ்காரின் உச்சிக்கு எடுத்துச் சென்ற நம் ரகுமானுக்கு இன்னும் ஏராளமான விருதுகள் காத்திருக்கின்றன.

தீரன்சின்னமலை-அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு செய்தி ஊடகத்திற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 14 ஜனவரி, 2011

100க்கும் மேல் சடலங்கள் மீட்பு.தேனீ மாவட்ட Ph.Nos..சபரிமலைசம்பவம் தேசிய பேரிடராக மத்தியஅரசு அறிவிப்பு.

   சபரிமலையில் நேற்று இரவு 10மணிக்கு மகர ஜோதியை தரிசித்துவிட்டு-தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்-சபரிமலைக்கு அருகே உள்ள புல்லுமேட்டில் -ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று பக்தர்களின் கூட்டத்தின் மேல் புகுந்து 400அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

   இதனால் பக்தர்கள் சிதறி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில்100க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன்.இவர்களில் பெரும்பாலனோர்தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.விபத்தில் சிக்கியவர்கள் வண்டிப்பெரியார்,தேனீமாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளாதாக செய்திகள் வருகின்றன.மத்தியஅரசு இந்த சம்பவத்தை உடனடியாக தேசியப்பேரிடராக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்பு கொண்டு உதவி பெறுவதற்க்கு தேனீமாவட்டத்தின் முக்கிய தொலைபேசி எண்களை கீழே தருகிறோம்.

குமுளி காவல் நிலைய எண்:04269-222049


தேனீ மாவட்ட எண்கள்:S.T.D.CODU:04546


ஆட்சித்தலைவர்:                 OF: 253767,RI:251466


டி.ஆர்.ஒ:                                  OF:.254946,RI;254976


தாசில்தார்:                              OF:.255133,RI:255033


பி.டி.ஒ:                                      OF: 252430


வனத்துறை டி.எப்.ஓ:          OF:252552,RI:253140


ஜே.டி.மெடிக்கல்:                        234967


டி.டி.ஹெல்த்:                               261403


ஜி.ஹச். தேனீ:                               252260


மாவட்ட எஸ்.பி:                   OF:251410,RI:253999


ஏ.டி.எஸ்.பி:                                   253632


டி.எஸ்.பி.தேனீ:                           252873



best links in tamil
More than a Blog Aggregator

விமர்சனம்-சீறும்"சிறுத்தை"ராக்கெட்ராசாவிற்க்கு கிடைத்த அங்கீகாரம்-"கார்த்தியின் அட்டகாசம்.

   "சிறுத்தை"திரைப்படம் வெளியாகும் முன்பே! நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவின் பெயரைத் தவறாகப் படத்தில் கொச்சை படுத்தியுள்ளாதாக கூறி அக்கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடிகர்"கார்த்தியின்" வீட்டு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  படத்தின் தயாரிப்பாளார் ஞானவேல்ராசன் சிறுத்தை படத்தில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.படம் வெளியாகும் போது உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்வார்கள் என்று கூறியிருந்தார்.நான் கடந்த பதிவில் "சிறுத்தைக்கு எதிர்ப்பு" என்ற தலைப்பில் நாடார் கட்சியினரின் ஆர்ப்பாட்ட செய்தியினை பதிவு செய்திருந்தேன்.

  இனிநான் பார்த்த சிறுத்தைப் படத்தை அலசுவோம்.கார்த்தி முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ராக்கெட் ராசா என்ற பெயரில் பிக்பாக்கெட் திருடனாக கார்த்திக்கும்.காட்டுப்பூச்சியாக சந்தானமும் இணைந்து படத்தின் இடைவேளை வரை முழுநீல கலக்கல் காமெடியாக ரசிகர்களை வ்யிறு குழுங்க சிரிக்க வைக்கிறார்கள்.சந்தானத்தின் காமெடி கலக்கல் வடிவேலுவின் இடத்தை பங்கு போடுவதாக உள்ளது.

  முதல் பகுதியில் நாடர் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவின் பெயருக்கு கலங்கம் என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என நாம் யோசிக்கும் வினாடியில்-ராக்கெட் வேகத்தில் பாய்ந்து செல்லும் திரைக்கதை- நாடர் தலைவரின் நன்மதிப்பை எவரெஸ்ட் உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது.திரைக்கதை,வசனம் எழுதி படத்தை இயக்கிய சிவாவிற்கு சபாஸ்.சிறுத்தைக்கு எதிராக சீறியவர்கள் காயம் பட்டதுதான் மிச்சம்.

  படத்தின் விறு,விறு இரண்டாவது வேடம் ரத்தினவேல் பாண்டியன் ஐ.பி.எஸ்.ஆந்திர மாநிலம் அடர்ந்த காட்டு பகுதியின் அசைக்க முடியாத தாத பாபுஜீ- அவரது தம்பியுடன் இணைந்து கஞ்சா பயிரிட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.அந்த பகுதி முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுகிறார்கள்.மக்களும்,வியாபாரிகளும் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

   கிராமத்தில் இருக்கும் பெண்களை குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியை அவர் முன்பே பாலியல் வன்கொடுமை செய்வது அக்கிரமத்தின் உச்சம். ரசிகர்களின் மனதில் சீக்கிரம் வாய்யா!ரத்தின்வேல் பாண்டியன்! வில்லன்களின் கொட்டத்தை அடக்கு! என்று பல்ஸ் எகிறுகிறது.

  சுறு,சுறு ரத்தினவேல்பாண்டியன் ஐ.பி.எஸ் வருகிறார்.சிறுத்தையாக சீறுகிறார்.மொத்த படத்திலும் அரைமணி நேரம் அசத்துகிறார் ஐ.பி.எஸ்.

 வடசென்னையின் தாதக்களையும்,ரவுடிகளையும் கட்டுக்குள் கொண்டுவந்து பல என்கவுன்டர்களை நடத்தி தற்போது சென்னை மாநகர போக்குவரத்து ஆணையராக இருக்கும் ஐ.ஜி.ரவி.ஐ.பி.எஸின் அதே முகம்,அதே மீசை,அதே பார்வை அசத்துகிறார் கார்த்தி.

 வில்லன் கூட்டணியின் கைப்பாவையாக அமைச்சர் சந்தான பாரதி,மனோபாலா காமெடியில் கலக்கி எடுக்கிறார்கள்.ஆந்திரத்துப் பெண்ணாக வரும் தமனா பிக்பாக்கெட்காரன் என்று தெரியாமல் ராக்கெட்ராசாவை காதலிக்கிறார்.ஒட்டியாக சிறுத்த,வெளிர்நிற இடையை சிறுத்தைக்கும்,ரசிகர்களுக்கும் காட்டி இளவட்டங்களின் விசிலுக்கு இறையாகிறார்.

  ஒரு சமயம் தங்கப்பெட்டி ஒன்றை திருடிவரும் கார்த்தி-சந்தானம் கூட்டணி-பெட்டியில் தங்கத்திற்கு பதிலாக குழந்தை இருப்பதும்-அது கார்த்தியை அப்பா என்று அழைப்பதும்-குழந்தையிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பதும் காமெடி+சென்டிமென்ட்.

 ராஜீவனின் கலை அபாரம்.ராஜா,ராஜா,ராக்கெட்ராஜா என்ற பாடலும்,அதற்கு கார்த்தியின் நடனமும்-வித்தியாசாகரின் பின்னனி இசை மிரட்டலும் படத்தின் பலம்.சண்டைக்காட்சிகளும்,ஒலிப்பதிவும் சிறுத்தையின் கூடுதல்பலம்.

 ரத்தினவேல்பாண்டியன் ஐ.பி.எஸ் வில்லன்களை ஒடுக்கும் போராட்டத்தின் இருதியில் அடிபட்டதும்,பிக்பாக்கெட் ராக்கெட்ராசா போலீஸ் அதிகாரியாக மாறுவதும் படத்தின் உச்சகட்ட சுவராஜ்ஜியம்.ஒரு கட்டத்தில் திருடன் என்று தமனா,கார்த்தியை விட்டு விலகுவதும்,குழந்தை- திருடனை அப்பா என்று அழைப்பதும் படத்தின் சஸ்பென்ஸ்.

 இது விக்ரமாடு என்ற தெலுங்கு படத்தின் தழுவல். படத்திற்கு பாடல் கை கொடுக்க வில்லை.மொத்தத்தில் கார்த்தியின் சிறுத்தை பொங்களுக்கு பாய்ந்த ராக்கெட்.வசூலில் பெரிய டார்கெட்.

 தீரன்சின்னமலை-(சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு)-செய்தி ஊடகப் பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

சபரி மலையில் விபத்து. 90க்கும் மேல் உயிரிழப்பு,100 மேற்பட்டோர் காயம்.

   சபரிமலையில் நேற்று லட்சக்கணக்காண பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் முடித்து விட்டு இரவு 10-மணிக்கு உப்புத்துறை மற்றும் புல்லுமேடு பகுதிகளில் இருந்து தமிழகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
  அப்போது சபரிமலையிலிருந்து வந்துகொண்டிருந்த ஜீப் புல்லுமேட்டின் அருகே வந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்களை அடித்துக்கொண்டு 400அடி பெரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தை பார்த்துப் பயந்து சிதறி ஒடிய பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 90க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதில் 50க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளாதாக குமுளி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

   கேரளா காவல்துறையுடன்,தீயணைப்புப்துறையும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கடும் பனிப்பொழிவு இருப்பதாலும்,விபத்து நடந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது.

 பாதிக்கப்பட்டவர்களில் அதிகஅளவிலான பக்தர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.காயம் அடைந்தவர்கள் வண்டிபெரியாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.விபத்து கடுமையானதாவே தெரிகிறது.தமிழக அரசு உடனடியாக கேரளா அரசுடன் இணைந்து மைய அரசின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் இன்னும் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியும்.

 வலைதளப்பதிவின் நண்பர்களே,வாசகர்களே நம்மால் முடிந்த மட்டும் விழிப்புணர்வையும்,இறைவனிடம் வேண்டுதல்களையும் செய்வோமாக!

 விபத்து சம்பந்தப்பட்ட தகவல் மற்றும் உதவிக்கு-குமுளி காவல்   நிலையம்.தொலைபேசி எண்= 04869-222049
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 12 ஜனவரி, 2011

"சிறுத்தை"படத்திற்கு எதிர்ப்பு-நாடார் கட்சியினர் நடிகர் கார்த்திக் -வீட்டு முன்பு ஆர்பாட்டம்.பதிவு-1

பதிவு-1 

     டிகர் கார்த்திக் முதன் முறையாக இரைட்டை வேடங்களில் நடித்து தைப்பொங்களுக்குவெளிவரும்படம் "சிறுத்தை".இப்படத்தில் காவல் துறை அதிகாரியாகவும்-பிக்பாக்கெட்ரவுடியாகவும் இரண்டு வேடங்களில் கார்த்திக் நடித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
 
 இதில் பிக்பாக்கெட் ரவுடியின் பெயர் ராக்கெட்ராசா என்று கடந்த தினங்களில் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக இன்று காலை பத்து மணிக்கு"ராக்கெட்ராசாவை" தலைவராகக் கொண்டு செயல்படும்" நாடார் மக்கள் சக்தி" கட்சியியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்-தி.நகரில் உள்ள நடிகர் கார்த்திக்கின் வீட்டு முன்பு திரண்டு சிறுத்தை படத்திற்கும்,நடிகர் கார்த்திக்கும் எதிராக கடுமையான கோசங்களைஎழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.


 ஆர்பாட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் "நடிகர் கார்த்திக்"
வீட்டைச் சுற்றிலும்காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு கோசமிட்டவர்கள் கூறிய செய்தி-"சமுதாய மோதலுக்கு சிறுத்தை திரைப்படம்
வழி வகுத்து விடக்கூடாது"இந்த திகிலூட்டும் எச்சரிகையின் பின்னனி என்ன?


  நடிகர் கார்த்திக் கொங்கு சமூகத்தை சார்ந்தவர்.அவரது தந்தை நடிகர் சிவகுமார்-பெஸ்ட் இராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்றக்கழகம்,உ.தனியரசுவின் தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை,டி.கே.தீரன் தலைமையிலான கொங்கு தமிழர் பேரவை போன்ற இயக்கங்களுடன் நல்லுறவு கொண்டவர்.மேலும் கொங்கு சமூகத்தில் நடிகர் சிவகுமாரின் குடும்பத்திற்கு நல்ல செல்வாக்கும்,மரியாதையும் 
உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 இப்பிரச்சனை தொடர்பாக சிறுத்தை படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராசன் 
கூறியது."சிறுத்தை படத்தில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை"மேலும் "ராக்கெட்ராசாவின் பாத்திரத்தன்மை புரியாமல் நாடார் கட்சியினர் பெரிது படுத்துகிறார்கள்.படம் வெளியானால் உண்மைத்தன்மை புரியும்"என்று சொல்கிறார்.


  "சிறுத்தை"படத்தின் சர்ச்சையால் கொங்கு-நாடார் சமூகத்தின் ஊடாக சாதீயா மோதலுக்கு அச்சாரம் அமைக்காமல் இருந்தால் சரி.
  
சரி!யார் இந்த "ராக்கெட்ராசா"?-இந்த நிழல் தாதாவின் கதையை-பதிவு-2ல் தொடர்கிறேன். 
 தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு 
செய்தி பதிவிற்காக- டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இராசாவே மகாஇராசாவே ஊழலின்மன்னனே தலித்துகளின் கண்ணணே-நீ கொள்ளைகொண்டது எவ்வளவு.

   புத்தாண்டும்-பொங்களும் மத்தாப்பாய் பொங்கி வழியுது!
ஆனால் என்தேசமே அய்யோகோ!அய்யோகோ!!
என்று அல்லல்படுகிறது.


  ராசாவே!மகாராசாவே!ஊழலின் மன்னனே!தலித்களின் கண்ணனே!
நீதான் கொள்ளை கொண்டது எவ்வளவு?
 உன்னாலே தமிழினமே தலை கவிழ்ந்தது!தன்மானம் தரை தட்டியது!


  திருக்குவலை தாத்தாவிற்கு நீதான் தந்தது எவ்வளவு?
தமிழ்சங்கத்தின் கண்ணகிக்கு நீ காவல் கொண்டது எவ்வளவு?
உலகமே சிரிக்கிறது!


  காராசாவே!நாற்பதுகோடி மக்கள் நாதியற்ற வீதியிலே!
அவர்களுக்கு ஒருவேலை உணவுக்கே பஞ்சம்!
ஆனால் நீயோ!உலக சுந்தரியோடு மஞ்சத்திலே தஞ்சம்!
பொருக்குமோ!அய்யோகோ!பூமித்தாய்க்கு பொருக்குமோ!


  உலகத்தமிழனின் உறவுப்பாலமே!நீதான் கனியோடு-
கைகோர்த்து கலந்தது எப்படி?களவுமொழியில் இளவு கண்டது எப்படி?
செப்படி ஞானத்தங்கமே?செப்படி!இந்த செப்படி வித்தையெல்லாம்
நீ கற்றது எப்படி?செப்படி!தங்கமே செப்படி?


  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்!குற்றமென குமுறியவனின்
கொற்றம் சரிந்தது எப்படி?செப்படி!தங்கமே செப்படி?


  ராட்டனித்தில் சுற்றும் ராடியாவே!எத்தனைபேர் தொட்டார்கள்-
 உன்னை!உனக்கு எங்கிருந்து வந்தது பண்ணை?
நீராவே!உன்னை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்!உன் தோட்டத்தில் மரம் நட்டவர்கள் எல்லாம் சிபிஐயிடம் சிறை பட்டார்கள்!


  அம்மாவை அகமகிழ்ந்து போற்றி!சும்மாவே திண்ணையை தேய்த்து
சுகம்கண்ட சுபவீரனே!அலைக்கற்றையில் ஆரியனுக்கும்-திராவிடனுக்கும்
என்னடா!மோதால்?எங்கிருந்து கண்டாய் அதை!
களவானி பயலை கைது செய்தால்- தமிழன் குடிமூழ்கிவிடுமா?


  ழலுக்கு உறவுசொல்லி!ஒப்பாறியிட்ட சில தமிழ் உறவே!
உன் கூப்பாட்டுக்கு நீ பெற்ற கூலி எவ்வளவு?


  ஈரம் இல்லாதா மணியே!இரைட்டைக்குழல் துப்பாக்கியே!
சோரம்போன ஓநாய்க்கு ஓலமிட உனக்கு கிடைத்த துண்டு எவ்வளவு?


  ளபதியே!தளபதியே!மை வைத்து மயக்கும் களவானி கூட்டத்துக்கு
கை கொடுக்காதே!கை கொடுக்காதே!


  லஞ்சம்-ஊழல் எனும் கொடிய அரக்கர்களிடம் இருந்து
தேசத்தையும்-தேசியத்தையும் மீட்டெடுக்க!
"ஊழல் ஒழிப்பு முன்னனி" என்ற மக்கள் கட்டமைப்பு தேவை. best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 27 டிசம்பர், 2010

ஊழல் விடுதலை முன்னனி-ஊழல் கொள்ளையர்களிடம் இருந்து நாட்டைகாக்க!

வரலாற்றுப்புலனாய்வு-சரித்திரப்பதிவுக​ளை சமகால நிகழ்வுடன் ஆய்வு​செய்யும் முயற்சி
   நமது பாரத​தேசத்தின் விடுத​​லை ​வேள்வியில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும்,பல ஆயிரக்கணக்கான ​தொண்டர்களும் களப்பழியானர்கள்.அதில் 5000க்கும் ​மேற்பட்ட இ​ளைஞர்கள் இந்த மண்ணில் வி​தைக்கப்பட்டார்கள் என ஒரு பட்டியல் கூறுகிறது.அவர்களில் 15வயது முதல் 26வயது வ​​ரை ள்ள துள்ளிதிரியும் இளம் பருவத்தினர்கள்.
                                                                                                                                                                                                                                        .அவர்களில் எமக்கு கி​டைத்த ஒரு சிலரின் பட்டியல் இ​தோ!


   அலகாபாத்தில் ஆல்பிரட் பூங்காவில் காவல்                   து​றையுடன் ஏற்பட்ட ​கைகலப்பில்-காவலர்களிடம் சிக்கி ​கைதாவ​தைவிட உயி​ரை விடுவ​தே ​மேல் என தன்​னைத்தா​னே தனது ​கைதூப்பாக்கியால் சுட்டுக்​கொண்டு இறந்து ​போன சந்திர​சேகர் ஆசாத்தின் வயது 25. பகத்சிங் தூக்கு​மே​டை ஏறிய ​​போது வயது 24.             கக்​கோரி பு​கைவண்டிக் ​கொள்​ளையில் பங்கு ​கொண்டு தூக்கு​மே​டையில் உயிர் துறந்த மன்மத் நாத்குப்தாவின் வயது 25.  
                                                      
   பி​ளேக் கமிசனர் சார்லஸ் ராண்​டையும்,பூனா மாவட்ட நீதிபதி அயி​ரெஸ்ட்-​டையும் சுட்டுக் ​கொன்ற சா​பேக்கர் ச​கோதரர்களில் மூத்தவர் தா​​மோதர் கரி   சா​​பேக்கர் 28வது வயதிலும்,இராண்டாது ச​கோதரர் பாலகிருட்டிண சா​பேக்கர்                                 
26வது வயதிலும், தூக்கிலிடப்பட்டனர்.             
  
   சா​பேக்கர் ச​கோதரர்க​ளை ​வெள்​ளையர்களிடம் காட்டி ​கொடுத்த து​ரோகி​யை        ​கொன்று விட்டு-தானும் தூக்கு​மே​டை ஏறிய மூன்றாவது ச​கோதரர் வாச​தேவ   சா​பேக்கரின் வயது 20.ஒ​ரே குடும்பத்​தை சார்ந்த மூவரும் ஏரவாடா மத்திய         சி​றையில் தூக்கிலிடப்பட்டனர்.     
  
   ​கொரில்லா மாவட்ட ஆட்சியரும்,நீதிபதியுமான ஸ்டீவன்ஸ் என்பவ​ரை                                    எட்டாம் வகுப்பு மாணவிகளான சாந்தி ​கோஷ்,சுநீதி ​கோஷ் ஆகிய இரண்டு         இளம் சிறுமிகளும் சுட்டுக் ​கொன்ற ​செய்தி நம் ​நெஞ்​​சை ​நெகிழச் ​செய்கிறது.     ​மேலும் ராணி,கிடா​லோ,பினாதாஸ்,பிரீதி லதா ​போன்ற இளம் ​பெண் ​போராளிகளும் விடுத​​லை ​போராட்டத்தில் தங்க​​ளை அர்பணித்து​கொண்டார்கள்.                                                                                                                                                            


  முதல்சுதந்திர ​போ​ரை ​தென்னிந்தியாவில் ​தொடங்கிய காலத்தில் தூக்கிலிடப்பட்ட ​கொங்கு ப​டையின் மாவீரன் இரத்தினம் தீரன்சின்னம​லை         தூக்கிலிடபட்ட ​போது அவரின் வயது 32. மணியாச்சி சந்திப்பில் க​லெக்டர் ஆஸ் து​​ரை​யைச் சுட்டுக் ​கொன்று விட்டு தானும் தற்​கொ​லை ​செய்து ​கொண்ட  வாஞ்சிநாதனுக்கு வயது 25.                                                                                                                          ​
  மேலும் தமிழகத்தில் கட்டப்​பொம்மன்,மருது ச​கோதரர்கள்,புலித்​தேவர்,​வேலுநாச்சியார்,கன்​னடத்துப் புலி திப்பு சுல்தான் போன்றவர்கள் எல்லாம் நாட்டின் விடுத​லைக்காக இள​மைக்காலத்தில் தங்க​ளை அழித்து​கொண்டவர்கள்.
  
   இன்றைய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இணையான அன்றைய ஐ.சி.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே 5வது இடத்தில் தேர்வு பெற்று- அரசின் உச்ச அதிகாரம் 
படைத்த உயர் பதவியை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தன்னை அர்பணித்து கொண்டவர் நேதாசீ சுபாஸ் சந்திர போஸ்.மகாத்மா கந்தியடிகளைப்பற்றி சொல்லத்தேவை இல்லை.
  
   செல்வம் கரைபுரண்டோடும் சீமான்களான வீரசாவர்க்கர்,ராம் மனோகர் லோகியா,வ.வே.சு.ஐயர்,ஆச்சாரியா கிருபாலனி,அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் தங்களின் வளமான எதிர்காலத்தை வெறுத்து ஒதுக்கி மண்ணின் மானம் காக்க தாய் நாட்டின் விடுதலை ஒன்றே தீர்வு என முடிவு செய்து போராடினார்கள்.
  
   வெள்ளித்தட்டில் உணவு உண்டு ,தங்கக்கட்டிலில் துயில் கொண்டு, வித,விதமான காரில் பவனி கண்டு- வாழும் வசதிகள் இருந்தும் அவற்றை எல்லாம் புறம் தள்ளி விட்டு தாயக விடுதலையில் தன்னை  கரைத்துக்கொண்டவர் ஜவர்கலால் நேரு.

   ஆனால் இன்று நேரு சீயின் கொல்லுப்பேரன் ராகுல்காந்தி தேசியக்கூட்டணி அரசின் அதிகாரப் பின்னனியில் கோலோச்சுகிரார்.இளைவரின் தலைமையிலான இந்திய தேசத்தில் இராண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் (2ஜி)ஒரு லட்சத்து எழுபத்திஆராயிரம்கோடிஊழல். 


   காமன்வெல்த் போட்டி நடத்தியதில் 6000ம் கோடிக்கும் மேல் ஊழல்.கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் ஊழல்.                            


  அன்று விடுதலைப் போராட்டத்தில் இளைவர்கள் மண்ணில் விதைக்கப்பட்டார்கள்.ஆனால் இன்று துரதிருஸ்ட வசமாக ஊழலின் கோர விருச்சமாக வளர்ந்து மண்ணையும்,மக்களையும் மிரட்டி வருகிறது.2ஜி ஒதுக்கீட்டு ஊழலின் கதாபாத்திரங்கள் அனைவரும் இளை தலைமுறை சார்ந்தவர்கள்தாம்.முன்னால் தகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சரும்,தலித் விவசாயிகளின் விளை நிலங்ககளை அடி மாட்டு விலைக்கு அபகரித்து- கோடிகணக்கில் கொள்ளை லாபம் கண்ட சர்வ தேச ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆண்டிமுத்து இராசா. 
   
    தமிழினத் தலைவன் பெற்றெடுத்து,
தமிழ்சங்கமத்தில்கரைந்து,செம்மொழியில் நனைந்த மு.க.கனிமொழி.           உலகத்தமிழர்களின் உறவுப்பாலமாக தன்னை அடையாளப்படுத்தி-ஊழலுக்கு உணர்வுப் பாலமாக திசை மாறிய கார்பரெட் சாமியார்,கிறித்துவ போலி பாதிரியார்ஜெகத்கஸ்பர்.                                                                                            

  சர்வதேச ஹவாலா தீவிரவாதி,கார்பரெட் விபச்சாரி நீராராடியா.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்-குற்றமே என குமுறிய பத்திரிக்கையாளர் காமராஜ்.ஆண்டிமுத்து இராசாவின் மனசாட்சி மன்னிக்கவும் பொய்சாட்சி சாதிக்பாட்சா...இப்படி கொள்ளையர்களின் பட்டியல் நீள்கிறது.                         

  உலக அரங்கில் ஊழலின் ஊற்றுக் கண்ணாக உயர்ந்திருக்கும் இந்திய தேசம் 1947 ல் வெள்ளையர்களிடம் விடுதலை பெற்றது.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல்எனும்அரக்கனிடம்அடிமைப்பட்டுள்ளது. 


                                     இதிலிருந்துதேசியத்தையும்,தேசத்தையும்மீட்டெடுக்க  ஊழல் விடுதலை முன்னனி எனும் ஒரு மக்கள் கட்டமைப்பு தேவை.                 .தீரன்சின்னமலை சமூக,அரசியல், புலானாய்வு செய்தி ஊடகத்திற்காக-டி.கே.தீரன்சாமி.                                                                                                                              
     
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 22 டிசம்பர், 2010

2;ஜி ஆ.இராசா குடும்பத்தில்கடைக்குட்டி-ஊழலுக்குமுதல்குட்டி

     2;ஜி- அலைக்கற்றை ஊழல் ஒருலச்சத்துஎழுபத்திஆறாயிரம் கோடி.நமது தேசத்தின் ஆண்டு பட்செட்டில் பத்தில் ஒரு பாகம்.ஊழலின் கதாநாயகன் ஆண்டிமுத்துஇராசா.
                                                                                                                                                                 சுமார் 60வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பிய எஸ்.கே.ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளையின் குடும்பம்-நான்குபெண்கள்,நான்கு ஆண்கள் என எட்டு குழந்தைகளை கொண்ட மிகப்பெரிய குடும்பம்.எட்டாவதாக பிறந்த கடைக்குட்டி ஆ.இராசா ஊழல் வரலாற்றில் முதல் குட்டியாக வளம் வருகிறார்
 .                                                                                                                                                   ஆ.இராசா முசிறி அரசினர் கலைக்கல்லூரியில் இளம்நிலை பட்டமும்,திருச்சிமற்றும் மதுரையில் சட்டக்கல்வியும் பயின்றவர்.1980 காலகட்டங்களில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டார்.                                                                                                                               இராசா அப்போது போக்குவரத்துக்காக பழைய லாம்பெரட்டா ஸ்கூட்டர் ஒன்றை பயன்படுத்தி வந்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

   1990களில் தீவிர அரசியலில் கவனம் செலுத்தினார்.அதற்கு முன்பே ஒரு சில தலித் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.                                    தனது தாய்மாமன் மகள் எம்.ஏ.பரமேஸ்வரியை வழ்க்கை துணையாக கரம்பிடிதார்.

  1996ல் மக்களவை உறுப்பினாராக தேர்வு செய்யப்பட்டார்.அப்போது இணைஅமைச்சர் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.மீண்டும் 2004ல் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானர்.கலைஞரின் மகள் கனிமொழியின் நெறுக்கம் இராசாவிற்கு அதிஸ்டமாக அமைந்தது.2007ல் மாறன் சகோதரர்களுக்கும், தி.மு.க தலைமைக்கும் மோதல் முற்றியபோது மீண்டும் இராசாவின் காட்டில் பதவி மழை பொழிந்தது.தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானர்.                                        .                                                                                                                    
  இராசாவின் சகோதரர் அண்ணாபல்கழைக்கழகத்தின் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த துறையின் தலைவராக உள்ளார்.அடுத்த சகோதரர் ஆ.சிவசண்முகம் நெய்வேலி நிலக்கரியில் பணிபுரிந்து வருகிறார்.இன்னொறு சகோதரர் ஆ.கலியபெருமால் கங்கிரஸ் கட்சியின் மாவட்ட து.செயலாளராக உள்ளார்.மேலும் பனிமலர் உயர்நிலைப்பள்ளியின் தாளாள்ராகவும்,சிவகாமம் மோட்டார்ஸ்,சிவகாமம் டிரேடிங்ஸ் என பல தொழில்கள் செய்து வருகிறார்.         ஆ.இராசாவின் ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளையின் சொத்துக்களையும்( சுமார் 200-கோடி) தொழில்களையும் கலியபெருமால் நிர்வகித்து வருகிறார்.                                                                                                                  

 சாதிக்பாட்சா...கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சியை பிறப்பிடமாக கொண்டவர்.இராசாவின் மனசாட்சி.சுமார் 2000ஆயிரம் கோடி ரூபாய் புரலும் கிரீன்வேஸ் புரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருபவர்.இந்நிறுவனத்தில் இராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த  மாதம் வரை இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்தார்.தற்போது இராசாவின் சகோதரி மகன் பரமேஸ்குமார் நிர்வகித்து வருகிறார்.
  
    சி.பி.ஐ யின் பிடியில் இராசாவின் நெருங்கிய வட்டாரங்கள் சிக்கியுள்ளன.2ஜி இராசா குடும்பத்தில் கடைக்குட்டியாக இருந்தாலும் ஊழலுக்கு முதல் குட்டியா? என்பதை உலகம் தெரிந்து கொள்ளும் தூரம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது,,,,                                                                                                                                                                                                                                                                                                                                           
best links in tamil
More than a Blog Aggregator