ஞாயிறு, 23 ஜனவரி, 2011

யூசுப்பதான் புலிப்பாய்ச்சல் -படுதோல்வியிலிருந்து மீட்பு

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 5-வது இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ்சில் வென்ற இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.மேகம் மூட்டமாக காணப்பட்டதால் மழை குறுக்கிடும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம்.


 ஸ்மித்-அம்லா இணை ஆட்டத்தை தொடக்கியது.இந்த ஜோடி பந்துகளுக்கு இணையாக ரன்களை குவிக்கத் தொடங்கியது.இடையில் மழை குறுக்கிட்டது.இதன் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 46-ஓவர்களாக குறைக்கப்பட்டது.


 மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் யுவராஜ் சிங்கின் சுழலில் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவின் 2 மட்டையாளர்கள் ஆட்டம் இழந்தனர்.ஆனால் அம்லாவின் அதிரடியை இந்தியப் பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.ஒரு கட்டத்தில் அம்லாவுடன் இணைந்த வார்னும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார்.


 முடிவில்தென்னாப்பிரிக்கா அணி 9-விக்கெட்களை இழந்து 250- ரன்களை குவித்தது.அம்லா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 116 ரன்களையும்,வார்ன் 53 ரன்களையும் குவித்தனர்.இந்தியப் பந்து வீச்சில் ஜாகிர்கான்-2,முனாப்படேல்-3,யுவராஜ்-2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


  மழை குறுக்கிட்டதன் காரணமாக டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 46 ஓவரில் 268-ரன் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.முன்னனி தொடக்க மட்டையாளர்களான சச்சின்,சேவாக்,கம்பீர்,இல்லாத நிலையில்-பர்திவ் படேல்,ரோகித் சர்மா இணை ஆட்டத்தை தொடக்கியது.ஆனால் இந்திய வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.


 ஒரு கட்டத்தில் 45-க்கு3-,74-க்கு6,-119-க்கு8 என்ற பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.அணியை மீட்டெடுக்கும் பணி யூசுப்பதானின் தலையில் விழுந்தது.யூசுப் களம் இறங்கியது முதலே புலிப் பாய்ச்சல் காட்டத் தொடங்கினார்.மட்டையை எட்டுத் திசைகளிலும் சுழற்றினார்.சிக்சர்களும்,பவுன்ட்ரிகளும் பறக்கத் தொடங்கின.தென்னாப்பிரிக்காவின் ராக்கெட் ஸ்டையினின் பந்துகளை துவசம் செய்தார்.47-பந்துகளில் தனது அரைச் சதத்தை பூர்த்தி செய்தார்.


 யூசுப் மேலும் வேகத்தை கூட்டத் தொடங்கினார்.துரதிருஸ்டவசமாக அணியின் வெற்றிக் கோட்டை தொடும் நேரத்தில் யூசுப் ஆட்டம் இழந்தார்.8 சிக்சர்,8 பவுன்ட்ரிகளுடன் 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார்.இந்தியத் தரப்பில் பர்திவ் படேல் 34 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார்.தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் மோர்கில் 4,ஸ்டையின் 2 விகெட்டுகளை கைப்பற்றினார்கள்.


 இறுதியில் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.5-போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்னாப்பிரிக்கா3-க்கு 2- என்ற அடிப்படையில் கைப்பற்றியது.தீரன்சின்னமலை- சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: