வியாழன், 20 அக்டோபர், 2011

"அண்ணாகசாரேவின் அரசியல் வியூகம் ஏற்கத்தக்கதா"?


விகடன் இணையதள விவாதக்களத்தில் "அண்ணாகசாரேவின் அரசியல் வியூகம் ஏற்கத்தக்கதா"? என்ற களத்தில் நான் பதிவு செய்த கருத்துரை!

அண்ணாகசாரே!அண்ணாகசாரே! ஏன்? எதற்காக? எப்படி? நாடு முழுவதும் விவாதப்பொருளானார்.ஒருநாள் இரவில் தன்னை உயர்த்தி கொண்டார?

தங்கள் கருத்தாளுமையை பதிவு செய்யும் முன்பு ஒரு வினாடி சிந்தியுங்கள்!அண்ணாகசாரேவிடம் ஏதோ ஆற்றல் இருக்கிறது.ஆளுமைத் திறன் இருக்கிறது.மக்களை ஈர்க்கும் சக்தியுள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நண்பர் குணா அவர்களே!லோக்பால் மசோதவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா சொல்கிறார்.நீங்கள் உடனடியாக நிறைவேற்றினால் அண்ணா பிரச்சாரம் செய்வார என்று கேட்கிறீகள்? 5 மாநில தேர்தல்களில் அண்ணா பிரச்சாரம் செய்தால் தவறு என்ன?

மக்கள் பிரச்சனைகளை நிறைவேற்ற ஒரு குழு போராடுகிறது.போராட்டக்குழுவின் கோரிக்கைகளை எந்த ஆளும் கட்சி நிறைவேற்றுகிறதோ..அந்தக்கட்சியை ஆதரிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!

நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவின் முதல் ஊழல் "முந்தரா" என்ற பெயரில் தொடங்கியது.இன்று அது 2ஜி வரை ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது.உழலுக்கு எதிராக இந்தியா முழுவதும் சிறு,சிறு குழுக்கள் போராடி வந்தன.அத்தகைய போராட்டத்தை நமது தேசம் முழுவதும் மகத்தான! மக்கள் சக்தி மிக்க புரட்சியாக கொண்டு சென்றவர் அண்ணாகசாரே என்று சொன்னால் அது மிகையாது.

நண்பர் ரகுபதி அவர்களே! தாங்கள் கூறியுள்ளது போல் பி.ஜெ.பியின் செயல்பாடுகள் காங்கிரஸை கட்டுப்படுத்த இயலவில்லை.அதற்கு அண்ணா வடிவத்தில் கடிவாளம் போடப்பட்டுள்ளது.

நண்பர் முகிலன்,சலீல் கூறியது போல் தமிழர்களை பொருத்தவரையும்!தமிழ்நாட்டில் இருந்தும் காங்கிரஸ் கட்சி தம்மை விலக்கிக் கொண்டது.அதுபோல் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக மக்கள் சக்திமிக்க ஒரு இயக்கம் தேவை!அது அண்ணா தலைமையில் உருவெடுத்தால் வரவேற்போம்.

நண்பர் அரிசங்கர் கூற்றுப்படி தற்பொழுது கசாரே எதிர்கட்சிகளுடன் கூட்டமைப்பை உருவாக்குவதே பாதுகாப்பானது.நண்பர் முகமது அவர்களே!மத்திய அரசு,காங்கிரஸ் இதில் எதை எதிர்த்தாலும் ஒன்றுதானே!வாக்குசீட்டு ஒன்றுதானே கட்சிகளை களை எடுக்க வேண்டிய ஆயுதம்.

நண்பர் மணிவண்ணன் அவர்களே!ஏதாவது ஒரு வடிவத்தில் ஊழலுக்கு எதிரான முகமை உருவெடுக்கட்டுமே!மோகனவேல் சொல்வதுபோல் சல்மான் குர்சீத் அரசியல் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறதோ!அதைவிட மேலான தகுதி கசாரேவுக்கு இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

நண்பர் கிதையத் ஏன் கசாரேவை இப்படி திட்டி தீர்கிறீர்கள்? ஏன் மதச் சாயம் பூசுகிறீர்கள்? புரியவில்லை!பாகிஸ்தான் உட்பட நமது தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த வெள்ளைத் தொப்பியை தயவுசெய்து கொச்சைப்படுத்தும் முயற்சியை கைவிடுங்கள்.கசாரேவை பார்த்து யாரும் சிரிப்பதாக தெரியவில்லையே!வீரசவார்கரின் வரலாற்றை படித்துவிட்டு எழுதுங்கள்.

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரைக்கும் தொடர்ந்து போராடினால் மட்டுமே அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முயல்வார்கள் என்பது நாடறிந்த உண்மை என்பதை திருச்சிகார நண்பரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

எனவே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோத கொண்டுவருவதற்கு அண்ணா குழுவின் அரசியல் வியூகம் ஏற்கத்தக்கதே என்று சொல்வதைவிட!தற்போதைய சூழலில் இதை தவிர வேறு வழி இல்லை!
இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 7 அக்டோபர், 2011

தீரன்சின்னமலை நினைவு "A"கிரேடு கபாடிப்போட்டி


 வீரத்தின் விளைநிலம்,மண்ணின் மாவீரன் தீரன்சின்னமலை நினைவுக் கோப்பைக்கான செவ்வானம் கபாடிக்குழுவினர் நடத்தும் அகிலம் போற்றும் அற்புதமான 37-ஆம் ஆண்டு அகில இந்திய "A"கிரேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடித்திருவிழா நடைபெற உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம், விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடிப்போட்டி நடைபெற உள்ளது

புரட்சிகர விடுதலை முன்னனி,இயற்கை வாழ்வுரிமை இயக்கம் போன்ற சமூக களங்களின் பாசறையாக திகழும் மே.கு.பொடாரன் தலைமை ஏற்று நடத்த உள்ளார்கள்.உள்ளூர் தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.ராமசாமி வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்கள்.

கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி,பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்திரன்,அ.இ.அ.தி.மு.க காங்கயம் நகரச்செயலாளர் ஏ.சி.சி.வெங்கு (எ)மணிமாறன்,தே.மு.தி.க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் என்.தினேஸ்குமார்,பா.ஜ.க மாவட்ட தலைவர் பாயிண்ட் மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முதல்பரிசு ரூபாய் 10010 மற்றும் கோப்பையினை முறையே சித்தம்பலம் என்.பார்த்தீபன் அவர்களும்,ஆனூர்வித்தியாலாய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினரும் வழங்குகின்றனர்.

இராண்டாம் பரிசு அ.இ.அ.தி.மு.க வினரும்,தீரன்சின்னமலை நினைவு கோப்பையினை கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி வழங்க உள்ளனர்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம்,ஊரகத்தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேல்,ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.(எ)என்.எஸ்.நடராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மேலும் வருமானவரித்துறை அதிகாரி (ITO),அகில இந்திய அமெச்சூர் கபாடிக் கழக இணைச்செயலாளர் என்.சுப்பிரமணியன்,தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் சோலை எம்.ராஜா,செயலாளர் எ.சபியுல்லா,பொருளாளர் என்.கே.கே.பி.சத்தியன்,திருப்பூர் மாவட்ட செயலாளர் பிராமிஸ்.பி.முத்துச்சாமி,துணைத்தலைவர் என்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

ஆண்கள பிரிவில் 60,பெண்கள் பிரிவில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.மேலப்பாளையம் கிராமத்தின் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட எழுச்சிமிக்க படை ஒன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.




best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

டக்லசை கைதுசெய்ய முடியாதா? முடியாது!

1986 நவம்பர் 1ம் தேதி சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை டக்லசு தேவனந்தா சுட்டுக்கொலை செய்தார்.இந்த சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்தார்.


அதன் பிறகு 1988 நவம்பரில் பத்து வயது சிறுவனை கடத்தி 7லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்.கீழ்பாக்கம் காவல்துறையினரால் சிறுவன் கடத்தல் வழக்கில் டக்லசு கைது செய்யப்பட்டார்.ஈழ விடுதலைப் போராளியாக தனது வாழ்வை தொடங்கிய டக்லசு தேவனந்தா தமிழகத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பணம் பறிக்கும் சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினார்.


பிறகு 1989ல் டக்லசு மீது தேசியப் பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது.பின்னர் பிணையில் வெளியே வந்து இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.அங்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவராக இருந்தார்.இலங்கையில் டக்லசை கைதுசெய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்றது.இந்த நேரத்தில் பாரதப்பிரதமர் ராசீவ்காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இதனால் டக்லசை கைது செய்யும் முயற்சி கைவிடப்பட்டது.


இந்த வழக்கு சென்னை 6வது செசன்சு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 1994ம் ஆண்டு மேற்படி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது..


Imageதற்பொழுது இலங்கையின் தமிழ் அரசியல் தலைவராக, ஆளும் கோத்தபயே கூட்டணியில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில்துறை அமைச்சராக உள்ளார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு சூன் மாதம் இலங்கை அதிபர் ராசபக்சே,டக்லஸ் தேவானந்தாவுடன் அரசு முறைப்பயணமாக தில்லி வந்தார்.அவருக்கு மத்திய அரசு சார்பில் ராசமரியாதை அளிக்கப்பட்டது.பாரதப்பிரதமர் மன்மோகன்சிங்,டக்லசை கை குலுக்கி மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்.இதைப்பார்த்த தமிழகம் அதிர்ந்து போனது.


அந்த நேரத்தில் தமிழக மக்கள் உரிமைக் கழத்தின் செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி டக்லசை கைது செய்ய வேண்டுமென கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் டக்லசு பத்திரமாக இலங்கை திரும்பினார்.புகழேந்தியின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளசு தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை? தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.


கடந்த மார்ச் மாதம் தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டியும்,தமக்கு முன் பிணை வழங்க வேண்டியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்லசு மனு தாக்கல் செய்தார்.இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்த உயர்நீதிமன்றம்,டக்லசு நேரில் ஆசராகி முன் பிணை பெறலாம்.அவரது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து அதுவரை நீக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது.


கடந்த மாதத்தில் நாகை மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்டனர்.இந்த தாக்குதலின் பின்னனியில் டாக்லசுவின் தூண்டுதல் இருப்பதாக நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டினார்.அத்தகைய தாக்குதலுக்கும் எமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என டக்லசு மறுப்பு தெரிவித்தார்.


வழக்கறிஞர் புகழேந்தியின் மனுவுக்கு இன்று (செப்-20) சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தியப் பேரரசின் சார்பில் இலங்கைக்கான வெளியுறவுத்துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளது:-


கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை.இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


டக்லசு தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார்.இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது.அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன்,நாகப்பன் ஆகியோர் விசாரணையை நான்கு வாரகாலத்துக்கு தள்ளி வைத்தனர்.


அதாவது திருநாவுக்கரசை கொலை செய்யத டக்லசு குற்றமற்றவரா? கொலை செய்தது சரியானது என்று மத்திய அரசு வாதிடுகிறதா? நமது தேசத்தில், நமது தமிழனை சுட்டுக்கொலை செய்துவிட்டு,தேடப்படும் குற்றவாளியாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒரு கொடும் கொலைக் குற்றவாளியை அண்டைநாட்டின் அமைச்சர் என்பதால் கைதுசெய்ய முடியாது என காரணம் கற்பிப்பது அபத்தமானது.

best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இந்தியப் பெருஞ்சுவர்

விகடன் இணையதள விவாதக் களத்தில் "இந்திய கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் ட்ராவிட்" என்ற தலைப்புக்கு- நான் பதிவு செய்த கருத்துரை

ராகுல்... வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணிக்காக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்!

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த மைதானத்தில்...மட்டையாளர்களின்
தலையை பதம் பார்க்க எழும்பி வரும் பவுன்சர்களை அநாயசமாக...பவுன்ட்ரி எல்லைக்கு விரட்டும் காட்சி அற்புதமானது.

முதன் முதலாக பவுன்சர் மூலம் ட்ராவிட்டை சீண்டி காயப்பட்டவர் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் ஆலன் டொனால்டு.

நான் அறிந்த அளவில் இது போன்ற அதிவேக பவுன்சர்களை கண்டு அஞ்சாமல் ஆக்ரோசத்துடன் துள்ளியமாக பந்தை கணித்து ஆடக்கூடியவர் கன்னடத்துப்புலி ராகுல் ட்ராவிட் என்று சொன்னால் அது மிகையாகாது.

மைதானத்தில் இந்திய அணிக்காக ரன் குவிக்கும் ரன் மெசினாகவும்,
இந்தியப் பெருஞ்சுவராகவும் வர்ணிக்கப்பட்டவர்.343 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10820 ரன்களை குவித்துள்ளார்.

16- 9 - 2011 அன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 69 ரன்களை குவித்தார்.தனது கடைசி ஆட்டத்தில் முழுத்திறமையுடன் விளையாடி-தன்னால் இன்னும் 5-ஆண்டுகளுக்கு கூட சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நிருபித்த பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.

20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து 5-நாள் ஆட்டத்தில் அவரது அழகான "கவர் ட்ரைவ்" ஆட்டத்தை காண முடியும் என்பது ஆறுதலான செய்தி.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

உள்ளாட்சியில் போட்டியிட என்ன தகுதி வேண்டும்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை தாண்டி,சிறிய கட்சிகள்,பொதுநல அமைப்புகள்,பகுதிவாரியான பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் போட்டியிட தயாராகி வருகின்றார்கள்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி மற்றும் கட்டுப்பாடுகள் சம்பந்தமான விதிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

1.போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும்.

2.21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்கவேண்டும்.அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊழியராக இருக்கக்கூடாது.

3.அரசு ஊழியராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் 5-ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

4.குற்றவாளி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டவர் 6-ஆண்டுகள் போட்டியிட முடியாது.

5.சிறை தண்டனை பெற்றவர்கள் விடுதலையான நாளில் இருந்து 6-ஆண்டுகள் போட்டியிட முடியாது.

6.ஆரோக்கிய குறைவான மனநிலை,காதுகேளாத,வாய்பேச முடியாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

7.திவாலானவராக அறிவிக்கப்பட்டவர் போட்டியிட முடியாது.

8.உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த வகையிலும் நிலுவைத் தொகை செலுத்தத் தவறி இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

9.ஊராட்சியின் சார்பில் சம்பளம் பெற்று பணியாற்றும் சட்ட ஆலோசகர்,உள்ளாட்சி எதிராக பணியாற்றும் சட்ட தொழிலாற்றுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

10.ஆரோக்கியம் குறைவான மனநிலை உள்ளவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் வாக்களிக்க இயலாது.

11.தேர்தல் குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவரும் வாக்களிக்க முடியாது.

என்ன? நம் தமிழ் இணையதளப்பதிவர்களே நீங்களும் போட்டியிடத்தயாரா?

படித்தவர்கள் ஒரு வரியிலாவது கருத்துரை போடுங்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 3 செப்டம்பர், 2011

ஜீ.வி- கசாரே எதிர்ப்பு-அருந்ததிராயின் பேட்டிக்கு கண்டனம்!


அண்ணா கசாரே போராட்டம்..ஒலிக்கும் அருந்ததிராயின் எதிர்ப்புக்குரல்-ஜீ,வி யில் வெளியான அருந்ததிராயின் பேட்டிக்கு..விகடன் இணையதளத்தின் விவாதக்களத்தில் நான் பதிவு செய்த கருத்துரை:-

அண்ணா கசாரே!கிரண்பேடி,பிரசாந்த் பூசன்,இவர்கள் மூவருமே மூன்று விதமான வேறுபட்ட துறைகளிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்தவர்கள்.

அருந்ததிராய் அவர்களை பொருத்தவரை சுற்றுச்சூழல் எதிர்ப்பு என்பதில் அக்கரை கொண்டவர்.அதில் தீவிரக் கவனம் செலுத்தி தொடர்ந்து போராடிவருபவர்.எம்மைப் போன்றவர்களுக்கு பத்திரிக்கை அளவில் தெரிந்து கொண்ட செய்தி இது!

2003 காலகட்டத்தில் கேரளா அரசு முக்காலியில் பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டி அந்தத் தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிருவனத்திற்கு விற்பனை செய்யும் முயற்ச்சியை எமது இயக்கம் உள்பட, விவசாய அமைப்புகள் தடுத்து நிறுத்தி தொடர்ந்து போராடி வந்தன.அப்பொழுது எமது இயக்கத்தின் சார்பில் அருந்ததிராய் அவர்களை அழைத்து முக்காலியில் அணைகட்டும் கேரளா அரசுக்கு எதிராக போராட முனைந்தோம்!

நான் அறிந்த வகையில் இந்திய அளவில் மக்கள் பிரச்சனைகளுக்காக பொதுநல நோக்கில் துணிவுடன் போராடக்கூடிய வீரப்பெண்மணி அருந்ததிராய் என்று சொன்னால் அது மிகையாகது.

அதுபோல அண்ணா காசாரே இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று விவேகானந்தர்,காந்திஜியின் கொள்கைகளால் கவரப்பட்டு திருமணம் செய்து கொள்ளாத பிரமச்சாரியாக,குடில் போன்ற வீட்டில் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்.

மழை வளம் இருந்தும் தமது சித்திக் கிராமம்- சரியான மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாமல்-தரிசு நிலமாக இருந்தது.அந்தப்பகுதியில் வசித்த மக்கள் வருமையின் பிடியில் சிக்குண்டு வாழ வழியின்றி நகரத்தை நோக்கி புலம் பெயர்ந்தனர்.இதைக்கண்ட கசாரே இதற்கு மாற்று வழியாக பத்துக்கும் மேற்பட்ட சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று-இன்று செழிப்புடன் பொன்விளையும் பூமியாக மாற்றிக்காட்டியவர்.கசாரேவின் சமூகப்போராட்டம் சித்திக் கிராமத்திலிருந்து  ஆரம்பித்தது.அன்று இந்தச்செய்தி யாருக்கும் தெரிந்திருக்கவில்லையே!எந்த மீடியாவும் அந்தபகுதியை தாண்டி பிரபலப்படுத்த வில்லையே!

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலுக்கு எதிராக முனைப்புக்காட்டி, போராடி பல்வேறு சூழல்களை தாண்டி ஆகஸ்ட் 16 போராட்டம் ஊழலலுக்கு எதிரான மக்கள் புரட்சியை தட்டி எழுப்பியது.

மேலும் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடியின் காவல்துறை அதிரடிகள்-திரைப்படமாகவே எடுக்கப்பட்டது நாடறிந்த உண்மை.உச்சநீதிமன்றத்தின் மூத்த சட்டப்போராளிகள் பூசன் சகோதரர்கள் சாதாரனமாணவர்கள் அல்ல!கசாரேவுடன் இவர்கள் இணைந்து போராடியது!மேலும் மக்கள் புரட்சியை தட்டி எழுப்பியது!

வெகுசன மக்கள் படை தான் சனநாயகமாக மிளிருகிறது.இதுதான் உண்மை!இதுதான் எதார்த்தம்!கசாரேவின் ஆகஸ்ட் 16 போராட்டத்தை வெகுசன ஊடகத்துறை புறந்தள்ளி இருந்தால்!மக்கள் அத்தகைய ஊடகத்துறையை கண்டுகொள்ள மாட்டார்கள்!ஊடகத்துறையினர் சாதாரணமாக யாருக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட மாட்டார்கள்.

நமது அண்ணா அவர்களின் திரவிட-தமிழ்நாடு போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் வெகுசன ஊடகத்துறை இருட்டடிப்பு செய்தன!பிறகு அவர் மக்கள் சக்திமிக்க தலைவராக வளரும் பொழுது அவரது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏற்கனவே கருத்துரையில் முன்னோடிகள் கூறியது போல் ஊழல் என்பது ஒரு பகுதி சார்ந்த பிரச்சனை அல்ல! ஒட்டுமொத்த இந்தியர்களின் அன்றாட வாழ்வில் நடைபெறும் மிகக்கொடிய சமூக அநீதி!ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதும்!அதற்கு கசாரேவின் போராட்ட வடிவம் சரியான தொடக்கம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்!

இந்த நேரத்தில் ஒரு பகுதி சார்ந்த போராட்ட களத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்க வில்லை!என்று குறை கூறும் அருந்ததிராயின் கருத்து ஏற்புடையது அல்ல!கண்டனத்திற்குரியதே!

நல்ல செய்தி ஒன்று மிளிரும்பொழுது அதற்கு மதம் சார்ந்தது என்று புலம்புவது அபத்தமானது.ஈழத்தில் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தார்களே நம் உடன் பிறப்புக்கள் அதற்கு ஏன் மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வில்லை? இந்தக் கேள்வி ஏன் அருந்ததிராயிடம் இருந்து வரவில்லை.அவர் முன்னெடுத்துச் சென்ற போராட்ட வடிவத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தான் அவரை ஆத்திரப்பட வைத்துள்ளது.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

கல்லூரிப்பருவம்-கண்மூடிய பாலுணர்ச்சி!

கொங்குதமிழகத்தின் மிகப்பெரிய பொறியியல் கல்லூரி ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம்.இதைக்கேட்டதும் எமக்கும்,எம்மோடு கேட்டவர்களுக்கும் மிகப்பெரிய காமெடிகாட்சியை பார்த்தது போன்று விழுந்து,விழுந்து சிரித்தோம்.ஆனால் ஒரு புறம் அந்தக் காட்சி எமது மனதை பிசைந்தது.சிறுகதையை போன்று இருந்தாலும்..சிந்திக்க வேண்டிய செய்தி...

சம்பவத்திற்கு வருவோம்....எமது நெருங்கிய உறவுக்கார மாணவன் அந்த பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வருகிறான்.அவன் கடந்த வாரம்-கல்லூரியில் சேர்ந்த முதல் வார விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான்.அப்பொழுது அந்த மாணவனிடம் நானும்,அவனது குடும்பத்தினர்களும் கல்லூரியைப் பற்றியும்,அவனுடன் கல்வி பயிலும் சக மணவர்கள் பற்றியும் பேசிகொண்டிருந்தோம்.அப்பொழுது அவன் கூறிய சம்பவத்தை இங்கே தருகிறேன்.

அவனது விடுதி அறையில் அந்த மாணவனோடு சேர்ந்து மூன்று பேர் இருக்கிறார்கள்.அதில் ஒரு மாணவன் கொஞ்சம் கலராக, அழகாக இருப்பானாம்.அந்த மாணவனின் அலைபேசிக்கு தொடர்ந்து இரு தினங்களாக ஒரே எண்ணிலிருந்து இடைவிடாமல் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.அதுவும் அந்த அலைபேசி எண் மற்றும் அதை அனுப்பும் நபர் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு யாரென்றே தெரியாது.

ஐ.லவ் யூ..ஐ.லவ்.யூ...இதுதான் எஸ்.எம்.எஸ் வரிகள்.இந்த எஸ்.எம்.எஸ் வரத்தொடங்கிய இரண்டு தினங்களிலேயே அந்த மாணவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.ஆனால் அவன் இது பற்றி சக மாணவர்கள் யாரிடமும் கூறவில்லை.

அன்று மாலை கல்லூரி முடிந்து விடுதி அறைக்கு திரும்பியதும் மீண்டும் எஸ்.எம்.எஸ் படலம்...அதிர்ச்சி அடைந்த அவன் எதிர் முனைக்கு அதாவது எஸ்.எம்.எஸ் அனுப்பிய எண்ணில் தொடர்பு கொண்டு "நீங்கள் யார்? எதற்காக எனக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளான்.

அதற்கு எதிர் முனையில் வந்த பதில் "நான் சி எஸ் டிபார்ட்மெண்டில் பஸ்ட் இயர் படிக்கிறேன்..எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம்..பேசத்தெரியாது...நான்..
ஓப்பன் டைப்...எதா இருந்தாலும்..ஓப்பனா சொல்லிருவேன்...உன்னை நான் இரண்டு நாள பார்த்திட்டிருக்கேன்...ஐ.லவ்.யூ..உன்னை நான் லவ் பண்றேன்..சின்சியரா லவ் பண்றேன்"...இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவன் பேசிக்கொண்டிருந்த அலை பேசியை தூக்கி எறிந்து விடுகிறான்.

இதைப்பார்த்த எமது உறவுக்கார மாணவன் மற்றும் உடன் இருந்த மற்றொரு மாணவனும் தூக்கி எறியப்பட்ட அலைபேசியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து.."என்னடா நடந்தது..ஏன்டா போனை தூக்கி எரிஞ்சே"..என்று கேட்டுள்ளார்கள்.

 ஆனால் அந்த மாணவன் தனது அலைபேசியிலிருந்து தனது அம்மாவை தொடர்பு கொண்டு "அம்மா என்னை ஒரு பொண்ணு லவ் பண்றேன் சொல்லுதம்மா...நான் என்ன பண்ணட்டும்மா..என்று அப்பாவியாக கேட்டுள்ளான்.அதிர்ச்சியடைந்த அவர்கள் "சாமி அதெல்லாம் நமக்கு வேண்டான்டா...அதுகிட்ட கூப்பிட்டு வேண்டாம்னு..சொல்லிர்ர சாமி..வம்பு..தும்புக்கெல்லாம் போய்ராதட சாமி..பத்திரம பார்த்து படிச்சு நல்ல பேர் எடடா சாமி"என்று அறிவுருத்தியுள்ளார்கள்.

அதன் பிறகு தனது அறைத் தோழர்களிடம் நடந்ததை கூறியுள்ளான்.
நண்பர்களும் அவன் அம்மா கூறியதை ஆமோதித்து... ஐ.லவ்.யூ மாணவியை தொடர்பு கொள்ளச் செய்து..தமக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்து அந்த உறவுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளான்.

இது ஒரு புறம் காமெடியாக இருந்தாலும்..மறுபுறம் நம்முடைய இளம் நாயகர்களின் திரைப்படங்கள் சின்ன சிறார்கள் மனதில் எந்த அளவுக்கு மோசமான ஆலகால விசத்தை தூவி..கல்வி கற்க வேண்டிய வயதில் காதல் டூயட் எனும் புதை குழியில் தள்ளப்பட்டுள்ளதை என்னும்பொழுது வேதனை தான் மிஞ்சுகிறது. .

இது போன்ற சம்பவங்கள் நாளை நமது குடும்பத்திற்கும் வரலாம்.தமிழில் ஆபாச பதிவுகளை வெளியிடும் நண்பர்களே! எழுத்தாளர்களே! நாயகர்களே!இயக்குனர்களே! தயவுசெய்து உங்களை சுய ஆய்வுவிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.சிறுவர்களையும்,மாணவர்களையும், இளைஞர்களையும் உமது வியாபாரத்திற்காக! தயவுசெய்து சீரழிக்காதீர்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 31 ஆகஸ்ட், 2011

தீரன்சின்னமலையின்-விநாயகர் சதுர்த்தி!

ஒரு சமயம் பார்வதிதேவியார் குளக்கரையில் குளிக்க செல்லும் பொழுது வெளியில் காவல் காக்க யாரும் இல்லை.அதனால் அங்கிருந்த சந்தனக் குழம்பை எடுத்து உருவம் ஒன்றை அமைத்து அதற்கு உயிர்கொடுத்து நான் குளித்துவிட்டு வரும் வரையில் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று பணித்து விட்டு குளிக்கச் செல்கிறார். பார்வதியால் உயிர் கொடுக்கப்பட்டதால் அது பிள்ளையாகி விட்டது.

அந்தச்சமயம் பார்த்து தமது மனைவியை பார்க்க வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்லக்கூடாது எனத் தடுக்கிறார்.இதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை கொய்துவிட்டு உள்ளே செல்கிறார்.
நீராடிவிட்டு வெளியில் வந்த பார்வதியார்,சிரச்சேதம் செய்யப்பட்ட பிள்ளையாரைக் கண்டு கோபம் கொள்கிறார்.தான் உருவாக்கிய பிள்ளயாரை சிவனே சிரச்சேதம் செய்ததை அறிந்து ஆத்திரம் கொண்ட பார்வதியார் காளியாக உருமாறி மூவுலகிலும் தமது கண்ணில் கண்டதை எல்லாம் அழித்து ஒழிக்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட தேவர் கூட்டம் சிவனை சந்தித்து முறையிடுகிறார்கள்.பார்வதியாரை சாந்தப்படுத்த வேண்டி தனது பரிவாரங்களை வடதிசையில் அனுப்பி முதலில் தென்படும் ஜீவராசியின் தலையை கொய்து வருமாறு உத்தரவு இடுகிறார்.வடதிசை நோக்கி சென்ற பரிவாரங்களின் பார்வையில் முதலில் தென்படும் யானையின் தலையை கொய்து வந்து சிவனிடம் தருகிறார்கள்.

அந்தத்தலையை பார்வதியால் உருவாக்கி, தன்னால் வெட்டுண்டு கிடக்கும் பிள்ளையின் முண்டத்தின் மீது பொருத்தி உயிர்கொடுக்கிறார் சிவபெருமான்.அந்தப்பிள்ளைக்கு கணேசன் என்று பெயர் சூட்டி தனது கணங்களுக்கு கணபதியாக நியமித்துக் கொள்கிறார்.இதனால் சாந்தம் அடைந்த பார்வதியார் கணபதியை அணைத்துக் கொண்டு மனம் குளிர்கிறார்.

இந்த நிகழ்வு ஆவணி சுக்கில பட்ச சதுர்த்தி அன்று நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன! விநாயகர் அவதரித்த இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1790 காலகட்டத்தில், கொங்குநாட்டில்! மைசூர் மன்னன் திப்புசுல்தானின் வரிவசூலை பறித்துக்கொண்டு "சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை எடுத்துக் கொண்டான் என உமது மன்னனிடம் போய்ச்சொல்' என்று முழங்கிய இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலையும்-கன்னடத்து போர்வாள் திப்புசுல்தானும் எதிரும்-புதிருமாக மோதிக்கொண்டு வீழ்வதைவிட-நமது தாய் திருநாட்டின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டி அடிக்க- இருவரும் இணைந்து போராட வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து-வெள்ளையர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார்கள்.

சின்னமலை தாம் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஒரு வீரவிநாயகர் சிலையை நிருவினார்.தீரன்சின்னமலையின் இந்த வெற்றிவிழா ஒவ்வொரு முறையும் ஒரு விநாயகர் சதுர்த்தியாகவே கொண்டாடப்பட்டது.மாவீரனால் நிருவப்பட்ட விநாயகர் சிலைகள் பலவும் துரோகிகளால் அழித்து ஒழிக்கப்பட்டது.

இருப்பினும் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி மேடையில் சுமார் 12 அடி உயரத்தில் வீரவிநாயகர் சிலை உள்ளது.

வீரவிநாயகர் சிலையை நிருவிய மாவீரன் தீரன்சின்னமலையின் பெயர் சொல்லும் படி இன்றும் வழிபடும் பக்தர்களுக்கு தம் திருவருளை வீர அருளாக தந்து கொண்டிருக்கிறார்.இப்பொழுதும் முதன் முதலாக இந்திருத்தளத்திற்கு
வருகை தரும் பக்தர்களுக்கு அவர்கள் மனதில் ஒரு எழுச்சியினையும்,
ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்தும் விதமாக வீரவிநாயகர் காட்சி தருகிறார்.

1893-ல் லோகமான்ய பாலகங்காதர திலகர் வெள்ளயர்களுக்கு எதிராக தேசியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்தெடுக்கும் பொருட்டு விநாயகர்சதுர்த்தி விழாவை வடமாநிலங்களில் பிரபலப்படுத்தினார் என்று இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

ஆனால் அதற்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொங்குநாட்டின் விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை வீரவிநாயகர் சிலை நிருவி வாழிபாடு நடத்தி விடுதலைப்போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீரன்சின்னமலை-திப்புசுல்தான் இருவரின் விடுதலைப்போராட்ட வரலாறு! இந்து-இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் சரித்திரச்சான்றுகளாக இருந்து வருகிறது என்பதை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

இந்தியப்பேரரசே! உயிர்காக்க வழிவிடுங்கள்!

  தமிழ் இணைய தளப்பதிவர்களே!சமூக அமைப்புகளே! நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் ஓரே அணியாக ஒன்று திரண்டு மூவரின் உயிர்காக்கும் போராட்டத்தை முன் எடுத்துச்சென்று முனைப்புடன் செயல்படுவோம்!

இந்தியப் பேரரசே! பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவரும்,அவர்கள் குடும்பத்தினர்களும் என்ன பாவம் செய்தார்கள்? இருபது ஆண்டுகளாக சிறைச்சாலை என்னும் புதைகுழியில் தள்ளி கொல்லாமல் கொடுமைப்படுத்தினீர்கள்.இருபது ஆண்டுகள் கடந்தும் இன்னும மனம் மாறவில்லை? கொலை வெறியின் தாகம் தீரவில்லை?

கொத்துக் கொத்தாக ஈழத்தமிழர்களை கொன்று குவித்தும் இன்னுமா உங்கள் கொடூரம் குறையவில்லை? நமது தேசத்தின் சனாதிபதி அவர்களே!  நிரபராதிகளை கொலை செய்ய வேண்டும் என்ற கொடுமை இன்னுமா தொடரவேண்டும்? எதற்காக இந்த கொலை வெறி?

1.75 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து இந்த நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்த கொடியவர்களை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தரப் பயப்படும் நீங்கள் ஏன் மூன்று தமிழர்களையும் விட்டு வைக்க மறுக்கிறீர்கள்?

அதிலும் பல தரத்தில் நடைபெற்ற புலனாய்வுகள் அனைத்தும் இவர்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லியும் கூட ஏன் இன்னும் விடுதலை செய்வதை விடுத்து தூக்கில் தொங்கவிடத் துடிக்கிறீர்கள்?

அய்யோ! அவர்களுக்கு எமது தாய் திருநாட்டில் கூட உயிர் பிச்சை ஏந்தவேண்டிய அவலத்திற்கு தள்ளி விட்டீர்களே! அவர்கள் அந்நியர்கள் அல்ல! கொள்ளையர்களும் அல்ல! கொலைகாரர்களும் அல்ல! விடுதலை செய்யுங்கள்! தயவுசெய்து காப்பாற்றுங்கள்..அத்தகைய விடுதலைக்கு உலகத் தமிழர்களிடம் என்ன கையூட்டு எதிர்பார்கிறீர்கள்? சொல்லுங்கள் இந்தியப் பேரரசே?

மீண்டும் சொல்கிறேன்!தமிழ் இணைய தளப்பதிவர்களே!சமூக அமைப்புகளே!நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் ஓரே அணியாக ஒன்று திரண்டு மூவரின் உயிர்காக்கும் போராட்டத்தை முன் எடுத்துச்சென்று முனைப்புடன் செயல்படுவோம்!
   
தேதி:29-8-11                                                             இவன்:-டி.கே.தீரன்சாமி
                                                                                         மாநில அமைப்பாளர்                                                                  
                                                                                         கொங்குதமிழர்கட்சி
                                                                        தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசாறை

best links in tamil
More than a Blog Aggregator

ஆசியாவின் TOP 50 பல்கலைக்கழகங்கள்!

 QS www.topuniversities.com என்ற இணையதளம் ஆசிய அளவிலான மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 50 இடத்தில்இந்தியாவின் 5 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளது.

அந்த ஐந்து நிறுவனங்களும் மத்திய அரசின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப ஐ.ஐ.டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் முதல் பத்து இடங்களில் நமது இந்திய நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பதை பார்க்கும் பொழுது நமக்கு வேதனைதான் மிஞ்சுகிறது.அதிலும் நமது ஐ.ஐ.டிகள் 36,37,38,43,48 என்று மிகவும் கீழ்நிலையில் பின்தங்கிஉள்ளது.

அடுத்து 50லிருந்து 100க்குள் மூன்று கல்வி நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது மேலும் இந்தப்பட்டியலில் விளம்பரங்களில் பெருமை பேசிக்கொள்ளும் தனியார் மற்றும் மருத்துவ விஞ்ஞான கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.ஆறுதலாக தமிழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னை (IITM) 43 வது இடத்தை பிடித்துள்ளது.ஆனால் அண்டை நாடுகளான சீனா,ஜப்பான்,கொரியாவின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

ரூ 65 கோடியில் முந்த்ரா ஊழலில் ஆரம்பித்து இன்று 1.75 இலட்சம் கோடியாக ஊழலின் கோரவிருட்சம் வளர்ந்துள்ளது.கோடி,கோடியாக கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் கல்வியின் தரத்தை உயர்த்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அண்ணா கசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.அதுபோல கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகள் கலையப்பட வேண்டும். அதற்கு நாடு தழுவிய அளவில் மாணவர்களின் புரட்சி வெடிக்கவேண்டும்.

பட்டியலில் இடம்பெற்ற முதல் பத்து பல்கலைக்கழகங்கள்:-

1 ஹாங்காங்க் அறிவியல்-தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஹாங்க் காங்க்
2 ஹாங்காங்க் பல்கலைக்கழகம்-ஹாங்கங்க்
3 சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகம்-சிங்கப்பூர்
4 டோக்கியோ பல்கலைக்கழகம்-டோக்கியோ
5 ஹாங்காங்க் சைனீஸ் பல்கலைக்கழகம்-ஹாங்காங்க்
6 சியோல் தேசியப்பல்கலைக்கழகம்-தென்கொரியா
7 கியோட்டோ பல்கலைக்கழகம்-ஜப்பான்
8 ஓசாக பல்கலைக்கழகம்-ஜப்பான்
9 டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஜப்பான்
9= டொகோகூ பல்கலைக்கழகம்-"ஜப்பான்
10 கொரியா தொழிநுட்பபல்கலைக்கழகம்-தென்கொரியா 
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

கல்விக்கடன்பெற லோன்மேலா நடத்த வேண்டும்!முதல்வருக்கு கோரிக்கை!

கல்விக் கடன்பெற கடும் நிபந்தனைகள்: வங்கிகளை அணுகுவதில் கடும் சிக்கல்! தினமலர் செய்திக்கு நான் எழுதிய கருத்துரை:

கோவை பிரபு,திருநெல்வேலி ராஜகோபால் கிருஸ்ணசாமி ஆகிய இருவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!

உங்களுக்கோ,உங்கள் குடும்பத்துக்கோ வங்கியில் கல்விக்கடன் தேவையில்லை எனில்!அமைதிகாக்கவும்!தினமலர் போன்ற செய்தி ஊடகங்கள் கல்விக்கடனுக்கு அலைய விடும் வங்கிகளைப் பற்றி விமர்சிக்கும் போதுதான்!வங்கி மேலாளர்கள் சிறிது அச்சப்பட்டு கல்விக்கடன் கொடுக்க முன் வருகிறார்கள்.

பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கடன் வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரியின் கதவுகள் திறந்துள்ளன.ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் கல்விக்கடன் விசயத்தில் சிறிது தாராளம் காட்டிய வங்கிகள் தற்பொழுது முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டது.

கல்விக்கடனை திருப்பிச் செலுத்துவதில்லை என்று சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்!அத்தகைய நபர்களுக்கு ஒரு சில வரிகள்!தனி ஒரு மனிதன் ஆண்டிமுத்துராஜ செய்த ஊழல்? சுரேஸ்கல்மாடி செய்திருப்பது? இன்னும் வெளிச்சத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் ஊழல் பணம் எவ்வளவு?

கடந்த தி.மு.க ஆட்சியில் கோலோட்சிய அமைச்சர்களின் மொத்த வருவாய் தலா ஆயிரம் கோடிகளை தொடும் என்று சொல்லப்படுகிறது.பி.ஜெ.பி-யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான சுஸ்மாசுவராஜின் போற்றுதலுக்குரிய சிஸ்யர்களான கருநாடகாவின் ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் எத்தனை இலட்சம் கோடி?

 இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் வராக்கடன் பலலட்சம் கோடி ரூபாய்கள்.இதில் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்படும் அபாயத்தில் உள்ளது.உதாரணத்திற்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அருபது இலட்சம் ரூபாய் மதிப்புடைய இடத்திற்கு அறுபது கோடிரூபாய் கடன் வழங்கிய வங்கி மேலாளரும்,கடன்பெற்றவரும் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்கள்.

வெளியில் தெரிந்தது ஒன்று தெரியாமல் இருப்பது ஒன்பது!எழுத்தால் பூஜ்ஜியம் இட்டால் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்கு நமது தேசத்தின் வருவாய்,தேசியத்தின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இவற்றை திரும்பப் பெற்று வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கினால் நமது தேசியத்தின் கண்மணிகளை உயர்கல்வி வரை இலவசமாக படிக்க வைக்க முடியும்.

எனவே இதுவரை கொடுத்துள்ள கல்விக்கடனும்,இனி மேல் கொடுப்பவைகளும் தள்ளுபடி செய்யத்தான் வேண்டும்.கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகளை வழிக்கு கொண்டு வர குடிமக்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம்,நீதிமன்றங்கள்,ரிசர்வ் வங்கி,சம்பந்தப்பட்ட வங்கியின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் பரிகாரம் தேடலாம்.

குறிப்பாக 2007-ல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உதயச்சந்திரன் கல்விக்கடன் லோன் மேலா என்ற பெயரில் மாவட்டத்தின் அனைத்து வங்கி மேலாளர்களையும் தமது ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து-மாணவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று அப்பொழுதே பரிசீலிக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நாமக்கல்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் கடந்த சில தினங்களில் கல்விக்கடன் லோன் மேலா நடைபெற்றது.மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதை பின்பற்ற வேண்டும்.

தினமலர் செய்தி ஊடகம் தமிழக முதல்வரின் பார்வைக்கு இது சம்பந்தமாக ஒரு தலைப்புச்செய்தி வைக்கவேண்டும்.வாசகர்களாகிய நாம் அனைவரும் முதல்வருக்கும்,மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கல்விக்கடனுக்கு லோன்மேலா வேண்டி மின்னஞ்சல் அனுப்பி வைப்போம்.

 இதனால் பயனடையும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் காலம்,அவமானம்,அலைகழிப்பு,மிச்சமாகும்.

இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை.
best links in tamil
More than a Blog Aggregator

ஆர்பரிக்கும் மக்கள்புரட்சி!ஆர்வத்துடன் நாமும் இணைவோம்!


 பல ரூபங்களில் கிளர்ந்தெழும் கசாரே போர்:எம்.பிக்கள்-அமைச்சர் வீடு முன்பு தர்ணா-

தினமலர் இணையதள செய்தி ஊடககத்தில் வெளியான பகுதிக்கு நான் எழுதிய கருத்துரை.

உலக அரங்கில் ஊழலின் தேசமாக நிமிர்ந்து நிற்கும் சுதந்திர இந்தியாவின் 65-வது சுதந்திர தின நிகழ்சிகள் நாடுமுழுவதும் விமர்சையாக நடைபெற்று முடிந்த ஆகஸ்ட் 15 -அன்று ஊழலலுக்கு எதிரான விடுதலைப்போராட்டம் தொடங்கி விட்டது. 1958-ல் "முந்த்ரா"நமது தேசத்தின் முதல் உழல்.நமது இந்தியப் பிரதமர் நேருஜிஅவர்களையும்,தேசியத்தையும் உலுக்கிய மிகப்பெரிய ஊழல்.

முந்த்ரா ஊழலை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பெரோஸ்காந்தி.இவர் நேருஜியின் மருமகன்,ரேப்ரேலி தொகுதியின் மக்களைவை உறுப்பினர்,ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இந்திரா அம்மையாரின் கணவர்,ராஜிவ் காந்தியின் தந்தை,சோனியாகாந்தியின் மாமனார்,ராகுல்ஜீயின் தாத்தா.

 இன்று கொடிகட்டிப் பறக்கும் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலுக்கு அச்சாரம் இட்ட "முந்த்ரா" ஊழலின் கதநாயகன்அப்போதைய மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரும்,பிரதமர் நேருஜி,கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தை சார்ந்தவருமான டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியார்.

 கரிதாஸ் முந்த்ரா சாதாராண மனிதராக தமது வாழ்வை தொடங்கியவர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஊழலின் தொடக்க ஆட்டக்காரர்.அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக சிக்சர்,பவுன்ட்ரிகளை அடித்தவர்.

 இந்திய ஆயிள் காப்பீட்டுக் கழகம்(எல்.ஐ.சி) முந்த்ராவுக்கு சொந்தமான 6 நிருவனங்களில் 1.24 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லாமல் நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியாரின் நெறுக்குதல் காரணமாக முந்த்ராவின் கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்.ஐ.சிக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.

அன்றைய காலத்தில் இந்த இழப்பின் மதிப்பு 50 கோடி ரூபாய்.உழல் செய்தவர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்,நேருஜீயின் நெருங்கிய நண்பர்.ஆனால் கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், நேர்மையின் வடிவமான பிரதமர் நேருஜீ அவர்கள் ஊழலை விசாரிக்க உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை நிறுவினார்.

ஒருநபர் கமிசன் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்தது. முந்த்ராவுக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.எல்.ஐ.சியின் இழப்பை விசாரிக்க முந்த்ராவை தோண்டிய போது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பங்கு மார்கெட்டில் முந்த்ரா புகுந்து விளையாடிய கதையும் வெளிச்சத்துக்கு வந்தது.

பிரிட்டிஸ்-இந்தியா நிருவனத்தின் பங்குகளை 12 ரூபாய்க்கு வாங்கி முந்த்ராவே 14 ரூபாய்க்கு ஏற்றி விற்பனை செய்வது.இப்படிச் செய்வதன் மூலம் பங்கின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மக்களை ஏமாற்றுவது.

 சாதராண முந்த்ராவிற்கு நிதி எங்கிருந்து வந்தது.தனது சட்டைப்பையில் நிதியமைச்சர் டி.டி.கே அப்புறம் என்ன? தேசிய வங்கிகளின் தாராளமயம்.முந்த்ராவுக்கு வங்கிகள் முதலீடு செய்கின்றன.

 இதன் தொடர்சியாக பங்குச்சந்தை பெறும் சரிவை சந்திக்கிறது.தனது ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தானே அச்சடித்த பொய்யான பத்திரங்களை வெளியிடுகிறார்.ரிசர்வ் வங்கியின் அதிகாரியான இராமன்- முந்த்ராவின் அதிரடி ஆட்டத்தை ரிசர்வ் வங்கித் தலைமையின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறார்.

முந்த்ராவின் ஊழல் கோப்பு நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியின் பார்வைக்கு வருகிறது."இதை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை இது தேவயற்றது"எனக் குறிப்பெழுதி திருப்பி அனுப்பினார்.நடவடிக்கை எடுக்க வேண்டிய டி.டி.கே இந்தியாவின் மிகப்பெரிய முதல் ஊழலுக்கு துணை போனார்.

  இதன் விளைவு தான் இன்று சுரேஸ்கல்மாடியின் தலைமையில் காமன்வெல்த் ஊழல்,தில்லியில் நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்,ஆண்டிமுத்துராசாவை கதநாயகனாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்களாக ஊழலின் விருச்சம் விரிந்துள்ளது.

 இதை விட பெரிய ஊழல்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.யார் காண்டது?யாருக்கு ஊழலைப் பற்றிய கவலை?தேர்தல் வருகிறதா?குவாட்டரும்,பிரியாணியும் கிடைகிறதா?ஓட்டுக்கு ஐநூறும்,ஆயிரமும் பாக்கெட்டுக்கு வருகிறதா? கவலை ஓய்ந்தது!

இப்படி முனை மழுங்கிப் மொளனம் சாதித்த மக்கள் கூட்டம் அண்ணா கசாரேவின் மந்திரப் புண்னகையில் கட்டுண்டு கொந்தளிக்கும் கடல் அலையாக,குமுரும் எரிமலயாக,சுழலும் சூறவழியாக,பாயும் புலியாக சீற்றமென பாயத்தொடங்கி விட்டது.

இந்தப் புலிப் பாயிச்சலை தொடர்ந்து வேகப்படுத்தி வரும் தினமலர் போன்ற செய்தி ஊடகங்களுக்கு நமது தேசத்தின் ஒட்டு மொத்த மக்களும் நன்றிக்குறியவர்களாக இருக்கவேண்டும்.

தமிழக மக்களாகிய நாம் மெகா ஊழலின் உச்சத்தை தொட்ட ஆண்டிமுத்துராஜ,கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களின் வீடுகளின் முன்பு ஆர்பாட்டம் நடத்தவேண்டும்.அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை மேலும் வேகப்படுத்துவோம்!

1947-ல் வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்!
இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமை!
தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க "ஊழல் ஒழிப்பு முன்னனி"
என்ற மக்கள் கட்டமைப்பு அண்ணா கசாரே தலைமையில் நாடு முழுவதும் அணி அணியாக ஆர்பரித்து வருகிறது.

நம்மை அடிமைகளாக வைத்து ஆட்டிப்படைத்த அரசியல் கூத்தாடிகள் இன்று கிலி பிடித்து அலறிவருகிறார்கள்!வாருங்கள் நாமும் ஆர்பரிப்போம்!ஊழலை ஒழிப்போம்!அண்ணாவின் கரத்தை வலுப்படுத்துவோம்!

இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி,தமிழநாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 20 ஆகஸ்ட், 2011

ஊழலுக்கு எதிரான புரட்சி தொடரட்டும்! தினமலரில் நான் எழுதிய கருத்துரை!

கசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் குவியும் இளைஞர்கள்
என்ற தலைப்பில் வெளியான தினமலர் இனணைதளத்தின் செய்திக்கு நான் எழுதிய கருத்துரை!

நம்மை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையடித்த வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.எதற்காக?

நம்முடைய அரசியல்வாதிகள் பல லட்சம் கோடியில் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துக்கொண்டு!உலக அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்து சுகபோக வாழ்க்கையில் திளைப்பதற்காகவா?

இவர்கள யார்? எங்கிருந்து வந்தார்கள்? வீதியில் பிச்சைக்காரர்களாக சுற்றிவந்த அயோக்கியர்கள்!கள்ளச்சாரய வியபாரிகள்!கழுத்தை அறுத்து செயின் திருடும் கும்பல்!அரிதாரம் பூசிய நடிகர்கள்,பிலேடு பக்கிரிகள்,திரவிடம்,தமிழன்,தமிழ்,ஈழத்தமிழன் என்று முழங்கி வயிரு வளர்க்கும் திருடர்கள்,வேலா வேலைக்கு சாராயத்தில் மிதக்கும் குடிமகன்கள்! மட்டை அடித்தேன் என்று சொல்லித்திரியும் கொலைகாரக்கூட்டம்!

இவர்கள்தான்! இத்தகைய மோசாடிப் பேர்வழிகள் தான்! நம்மை பெரும்பான்மையாக ஆண்டு வந்தவர்கள்! அதிகாரம் செலுத்தியவர்கள்! நினத்தாலே கசக்கிறது.நம்முடைய வாக்கு உரிமையை தேர்தல் நேரத்தில் பிச்சைக்காரர்களாக மாறி கையேந்திப் பெற்றுக்கொண்டவர்கள்!

ஆட்சிஅதிகாரம் என்ற பெயரில் நம்மை கொத்தடிமைகளாக்கி,
கொடுமைப்படுத்தி,கொள்ளையடித்த வந்தவர்கள்!இன்று அண்ணா காசாரேவின் மந்திரக்கோலைக் கண்டு,அவர் பின்பு நாடு முழுவதும் திரண்ட மக்கள் படையை பார்த்து நடு,நடுங்கிவருகிறது.

தேர்தல் திருடர்களின் பாதை! நாடாளும் மன்றம் ஒரு பன்றித்தொழுவம் என்று இளைஞர்களை மூலைச்சலவை செய்து நாட்டைத் திருதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அலையும் கொள்ளைக் கூட்டம் இன்று விழி பிதுங்கி உலருகிறது.

நாடு எக்கேடு கெட்டுப்போனால் நமக்கு என்ன? அரசியல் ஒரு சாக்கடை!அரசியலுக்கு போனால் வேலை கெட்டுவிடும்! என்று 2011, ஆகஸ்ட் 15 வரை ஒதுங்கி இருந்த நல்லவர்களும்,படித்தவர்களும் "இனிப்பொருப்பதற்கு ஒன்றும் இல்லை! பொங்கி எழு"என்ற கோசத்துடன்! எரிமலையாக கொந்தளித்தார்கள்.தேசம் முழுவதும் ஊழலுக்கு எதிரான மக்கள் படை தன்னெழுச்சியாக திரண்டு சனநாயகப்போருக்கு தயாராகி விட்டது.

தினமலர் போன்ற செய்தி ஊடகங்கள் கொழுந்து விட்டு எரிந்து வரும் ஊழலலுக்கு எதிரான தீயை அணைந்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஊழலை ஒழிப்பது மட்டும் நமது வேலை அல்ல! சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களின் பிதாமகன்களை முச்சந்தியில் நிறுத்த வேண்டும்.அவர்களுடைய சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும்!

நேற்றைக்கு தினமலர் செய்தி ஊடகத்தின் முதல் பக்கத்தில் கோவை கொடீசியா அரங்கத்தில் நடைபெறும் ஊழலலுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மானசீகமான அழைப்பு!

 கொங்குதமிழர்களை,கொங்குநாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களையும் தட்டி எழுப்பியது.லஞ்சம்-ஊழல் எனும் கொடிய அரக்கர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று அண்ணா கசாரே தலைமையில் தொடங்கி விட்டது.

வாருங்கள் நாமும் இணைந்து போராடுவோம்!உழல் பேய்களை ஓட,ஓட விரட்டுவோம்!சத்தியமாக ஊழலை ஒழிக்க முடியும்!


best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ஊழலுக்கு எதிரான மக்கள்படையை தட்டிஎழுப்பட்டும்!


விகடன் செய்திகள் இணையதளத்தில் அண்ணா கசாரே குழுவின் அணுகுமுறை சரியா? விவாதக்களத்தில் நான் பதிவுசெய்த கருத்துரை:-

அண்ணா கசாரே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.காந்தியவாதி,ஆன்மீகத்தில் விவேகானந்தரை மானசீகமாக் ஏற்றுக்கொண்ட்வர்,ஒரு சாதாரண குடில்போன்ற இல்லத்தில் வசித்து வருபவர்,திருமணம் ஆகாத பிரம்மச்சாரி,சமூகசேவகர்.தனக்கென சுயதேவை எதுவும் இல்லாதவர்.

தமது சித்திக் கிராமத்தில் மழை இருந்தும் விவசாயம் செய்ய நீர் இல்லாத அவலத்தைக்கண்டு அந்தமக்களின் மறுவாழ்வுக்கு தனது ஓய்வுக்காலத்தை அர்பணித்தவர் அண்ணா கசாரே.

சித்திக்கிராமத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான பூமிகளை பொன்விளையும் பசுமைச்சோலையாக மாற்றியவர்.லோக்பால் வரைவுக்குழுவில் சிவில்சமூகதிற்கு தலைமை ஏற்றவர்.

அண்ணாவின் சிவில்சமூக இயக்கத்தின்கீழ் துணை நிற்பவர்கள் ஒன்றும் சாதாராண ஆட்கள் அல்ல! என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஓய்வுபெற்ற காவல்துறை தலைவரும்,சமூக சேவகருமான கிரண்பேடி,உச்சநீதிமன்றத்தின் மூத்தசட்டப்போராளிகள் பூசன் சகோதரர்கள்,சமூகப்புரட்சியாளர் மேதாபட்கர் உள்ளிட்டவர்கள் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஹசாரேவுடன் இணைந்துள்ளாகள்.

இவர்களின் ஒத்துழைப்பு,வழிகாட்டுதல் அண்ணாவை சரியான வழியில் இட்டுச்செல்லும்.ஏனெனில் லட்சக்கணக்கில் உயிர்களை பழிகொடுத்து,
பல லட்சம் கோடிரூபாய் மதிப்பில் இயற்கை வளத்தை இழந்து,200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றோம்.

விடுதலைக்கு பிறகு ஊழலின் தொடக்க ஆட்டம் 65 கோடி ரூபாயில் ஆரம்பித்தது.அதன்பிறகு தொடர்ந்து 65 ஆண்டுகள் நமது அரசியல் மட்டையாளர்கள் அதிரடியாக விளையாடி தொடர் சிக்ஸர்களாக அடித்து இன்று 1.75 இலட்சம் கோடியாக குவித்து சர்வதேசத்தரத்தில் முதலிடத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

ஊழல் ஒழிப்பில் அண்ணாஹாசரே குழுவின் அணுகுமுறை சரியானதே!அவர் தலைமையிலான சிவில்சமூகம் தயாரித்த தன்லோக்பாலை மத்திய அரசு ஏற்கத்தான் வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது பிரதமருக்கும் சாதாரண குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே ஊழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.அதற்கு ஊழல் ஒழிப்பு முன்னனி என்ற மக்கள் கட்டமைப்பு தேவை.

அது அண்ணா ஹாசாரே தலைமையில் பிரசவிக்க தயாராகி வருகிறது.நாமும் அதை நல்ல படியாக வளர்த்தெடுக்க முயல்வோம்.அநீதிகளுக்கு எதிராக ஆர்பரிக்கும் விகடன் குழுமமும் ஊழலுக்கு எதிரான மக்கள் படையை தட்டி எழுப்பட்டும்!

நீங்களும் இங்கு கருத்துரை பதியவும்- விகடனில் பதிய www.vikatan.com
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 17 ஆகஸ்ட், 2011

ஆனந்தவிகடனின் கட்டுரைக்கு இலங்கையில் தடை! சிங்கள அரசின் தொடரும் ஊடகஒழிப்பு!

நமது விகடன் செய்திக்குழுமம் உலகத்தமிழ் மக்களின் நாடித்துடிப்பு!ஆனந்த விகடனின் வயது இரண்டு தலைமுறைகளை தொட்டு விட்டது.அனைத்துப் பாலினர்களையும் தன்னகத்தே வசியம் செய்து வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.விகடன் குழுமத்தின் இரண்டாவது வாரிசு ஜீனியர் விகடன் அரசியல் புலனாய்வுச்செய்திகளில் முந்திச்செல்கிறது.


விகடன் குழுமம் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலாக முழங்கி வருகிறது.அந்த வகையில்ஆனந்த விகடன் வார இதழில்  'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர்,  இந்திய பொதுவுடமைக் கட்சியின்  தமிழ் மாநில துணைச்செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது.


 சி.மகேந்திரன் என்றால் சிங்களப் பேரினவாதத்துக்கு கிலி பிடிக்கும்.தோழருடன்,ஆனந்தவிகடன் 
கைகோர்த்து உள்ளது.இதைக்கண்டு அச்சம் அடைந்த இலங்கை அரசு ஆனந்த விகடன் இதழின் "வீழ்வேனென நினைத்தாயோ" பகுதியின் 30லிருந்து 34 பக்கங்கள் உள்ளிட்ட 5 பக்கங்களை நீக்கி வெளியிட்டு உள்ளது.


இதன் முதல் பகுதி 12.08.2011- இதழில் வெளியாகியது. இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 


சிங்கள ஓநாய்களை குலைநடுங்கச்செய்யும்-தடைசெய்யப்பட்டபகுதி கீலே தரப்படுகின்றது.
உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?

இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.

மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!

இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும். முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர். பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.

புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது. இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது. நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள். கடல் உப்பு நீரிலும், காயல் நன்னீரிலும் வாழ்ந்து பழகிய நத்தைகள், அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வும் காணப்படுகின்றன. ஆற்று நீரால் கொண்டுவரப்பட்ட வண்டல் மண் படிவு களைச் சுமந்து நிற்பவை காயல்கள். மாங்குரோஸ் என்னும் அலையாத்திக் காடுகள் வளர்வதற்குக் காயல்கள்தான் அடிப்படை.

நந்திக் கடலை இயற்கை வரைந்துவைத்த ஓவியம் என்பார்கள் ஈழத்துக் கவிஞர்கள். வானத்து நீலமும் கடல் நீலமும் சங்கமித்துக்கொள்ளும் புள்ளியில், பூமித் தாய் வளர்த்துவைத்துள்ள அரிய தாவர இனங்கள், உலகின் அபூர்வங்களில் ஒன்று. 8 கிலோ மீட்டர் நீளம், சில இடங்களில் 1 கிலோ மீட்டர் அகலம்கொண்டது நந்திக் கடல். சிறு குழந்தை ஒன்று, பேரலையைத் தன் சிறு கையால் தொட்டுப் பார்க்க முயற்சிப் பதுபோல நந்திக் கடல், பெருங்கடலைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறது. இடையில் ஒரு நிலப் பகுதி இதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலப் பகுதியில்தான் முள்ளி வாய்க்கால் அமைந்து உள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் நந்திக் கடலுக்கும் இடைப்பட்ட பரப்பு, பனை மரக் கூட்டத்தால் பந்தல் போடப்பட்டது. இந்த நிலப் பரப்பு 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். பனை ஓலையால் வேயப்பட்ட சிறு குடில்களே இங்கு அதிகம். பனைத் தொழிலையும் மீன்பிடித் தொழிலையும் தவிர, வேறு எதையும் அறிந்திராத மக்கள் இவர்கள். அயலார் யாருமே எதற்காகவும், வந்து போகாத பூமி என்பது இதன் சிறப்பு. வலையர் மடம், கரையான் முள்ளி வாய்க் கால், வெள்ளை முள்ளி வாய்க்கால் ஆகிய கடற்கரைக் கிராமங்கள் முள்ளி வாய்க்காலை ஒட்டி அமைந்தவை.
ஈழ மண்ணில் வன்னி, முல்லைத் தீவுப் பிரதேசங்கள் தனித்துவம் மிக்கவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களைக்கொண்டு, இவை மக்களின் வாழ்க்கைக்கான முழுத் தன்னிறைவையும் வழங்கியவை. ஆதி காலம் தொட்டே அந்தக் கிராமங்கள் உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்தது இல்லை. பசியால் பிச்சை எடுப்பதைப் பார்ப்பதுகூட அங்கு அரிது. அந்த அளவுக்குப் பசி அறியாத மண் அது. இன்று எல்லாம் பழங்கதை. எதுவும் மிச்சம் இல்லை. அத்தனையும் அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம்.

போர் உச்சகட்டம் அடைந்தபோது, மக்கள் கிளிநொச்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் களைத்துப்போய், முள்ளி வாய்க்கால் வந்து விழுந்தார்கள். இடப் பெயர்வுக் காலங்களில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எல்லை உண்டா?

வீடுகள் முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கிக்கிடக்க, அவன் குடும்பமே பதுங்கிப் பதுங்கி ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி நின்றது.  அவன் வீட்டைச் சுற்றி தோட்டத்தில் பழுத்துக் கனிந்த, மா, பலா, கொய்யா, வாழை போன்றவற்றை, அணில் கூட்டமும் பறவைக் கூட்டமும் கொத்தியதில் சிந்தியவை சிதறிக்கிடக்க, அவன் வீட்டுப் பிள்ளைகள் தின்பதற்கு எதுவுமற்று ஏங்கிக்கிடந்தார்கள். கடந்த ஓர் ஆண்டில் அவர்கள் வாழ்ந்தது மனித வாழ்க்கை அல்ல.

பல மாதங்கள் பசியால் துடித்தவர்கள், கடைசியில் உயிரையும் துடிதுடித்து இழந்ததுதான் மிச்சம். எந்தக் கறையும் படியாத முள்ளி வாய்க்கால் மண்ணில், மானுடத்தின் ரத்தக் கறை படிந்துவிட்டது. அன்னை மடியில் சுமக்கவைத்தே, அவள் பெற்ற பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இன வெறி அரசு, குண்டுகள் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்று முடித்தது. இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா செய்ததும் பெரும் குற்றம். 'முள்ளி வாய்க்கால் வந்து சேருங்கள், அனைவரையும் காப்பாற்றுகிறோம்’ என்று வாக்குறுதி தந்தன வல்லரசுகள். கடைசி நேரத்தில், பிறருக்குத் தெரியாமல் ஈரத் துணியைப் போட்டு, கழுத்தை அறுத்து முடித்துவிட்டது இலங்கை அரசு. அதற்கு திரை கட்டிப் பாதுகாப்பைத் தந்தவைதான் இந்த வல்லரசுகள். வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எந்தப் பாதகம்தான், அந்த மண்ணில் நடக்கவில்லை? இன்று எல்லாம் முடிந்த நிலை.

உலக வரலாற்றில் மானுடத்தின் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய நிலப் பகுதி கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதைப்போல உலகில் வேறு எங்கும் கொடுமைகள் நடந்து இருக்குமா? பூமி பிளந்து பூகம்பம் வராதா? கடல் கோபம்கொண்டு, இந்தக் கயவர்களுக்குத் தண்டனை தராதா என்ற அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.

வரலாற்றுக் காலம் தொட்டு நெஞ்சில் வளர்த்துவைத்திருந்த பகைத் தீயைப் பயன்படுத்தி, அனைத்தையும் எரித்து முடித்துவிட்டது இனப் பகை. எரித்து முடித்ததோடு எல்லாமும் முடிந்துவிட்டது என்று, முன்னரே கணக்கும் போட்டுவைத்து இருந்தனர்.

கொலை செய்து முடிப்பதற்குத் தேவையான எச்சரிக்கை வளையங்கள் முதலில் அமைக்கப்பட்டன. பின்னர், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்கள்கூட நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. செய்யும் கொடுமைகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையோடு சாட்சிகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கடல் அன்னையைவிட, பூமித் தாயைவிட சாட்சி வேறு உண்டா? யாருக்குமே தெரியாமல் நந்திக் கடல் கொந்தளித்து அலை எழுப்பியது. முள்ளி வாய்க்கால் மண்ணில் புதை குழிகள் அதிர்ந்து வெடித்தன.

ரத்தச் சிவப்பேறிய ஆயிரமாயிரம் கண்களுடன் உலகத்தை இன்று அண்ணாந்து பார்க்கிறது முள்ளி வாய்க்கால். அதன் கோபக் கனல் அகிலத்தையே திடுக்கிடவைத்துவிட்டது. மாபெரும் மரணத்துக்குப் பின் இது பெற்றெடுத்த ஜனனம், உண்மைகளாய் உயிர் பெற்று விண்ணில் எழுந்துவிட்டன. இருள் கவிந்த வான் பரப்பெங்கும் இந்த உண்மைகள், நட்சத்திரங்கள்போல சுடர்விட்டு நிற்கின்றன. வஞ்சிக்கப்பட்ட தனக்கான நீதியைக் கேட்க, சிறகுகளை விரித்துத் தேசங்கள் தோறும் பறந்து செல்கின்றன. இணையதளங்கள் அனைத்திலும் தலை காட்டி, நியாயம் கேட்டு நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நீதி பேசும் அனைவரும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதி இணையதளங்களில் மட்டுமே வசித்துவரும் காலம் இது. கணினிப் பெட்டிகளில் தலைகாட்டி நிற்கும் இந்த வஞ்சிக்கப்பட்ட மானுடம் எது என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் மக்கள் கூட்டம் திரண்டு, அங்கு நுழைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், அச்சு ஊடகங்கள் என்று எதையும் முள்ளி வாய்க்கால் மனிதர் கள் விட்டுவைக்கவில்லை. தன் வீடே தன் உலகம் என்று தனித் தனி அறைகளில் வாழும் நிம்மதி மனிதர்களால், இனிமேல் நிம்மதியோடு தூங்க முடியாது. எது வரை தெரியுமா? முள்ளி வாய்க்கால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை!

ஆனால், இலங்கையின் இன வெறி அரசு, ஒன்றுமே நடக்கவில்லை என்று மாய வேடம் அணிந்து நிற்கிறது.  அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம் என்று வசனம் வேறு பேசுகிறது.

எதை மறைப்பது?

யாரை மன்னிப்பது?

தோழர் சி.மகேந்திரன் எழுதிய கட்டுரை இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
நன்றி:மனிதன் செய்தி ஊடகம்,ஆனந்தவிகடன் இதழ்
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

முதல்பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது தலைநகரத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


நம் தேசத்தின் தலைநகரத்தில் 1975 நினைவூட்டுவதாக அறிவிக்கப்படாத எமர்சென்சி இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.

தில்லியின் பெரோஸ்ஸ கோட்லா மைதானம் அருகே உள்ள ஜெயப்பிரகாஸ் நாராயன் பூங்கா அமைந்துள்ள பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நமது தேசத்தின் 65-வது சுதந்திர தினம் முடிந்த தருவாய்யில் சனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப்போராட்டத்தை ஒடுக்கும் பிரிட்டிஸ் அரசின் அதே கொடுங்கோல் தன்மையுடன்,அதே காங்கிரஸ் அரசு சொந்த சிவில் சமூகத்தின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.

லோக்பால் மசோதாவில் பிரதமர்,நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்களை சேர்க்கவேண்டும்.இதுதான் ஹசாரே தலைமையிலான சிவில் சமூகத்தின் கோரிக்கை!இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்றும் அதற்கு ஆகஸ்ட்-16 தேதி வரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்தார் ஹசாரே!

கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை கையோடு இன்று காலை கிழக்கு தில்லியின் மயூர்விகார் பகுதியில் தனது வீட்டில் இருந்த அன்னாஹசாரே மற்றும் அர்விந்த்கெஸ்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனரும்,சமூக சேவகருமான கிரண்பேடியும் கைது செய்யப்பட்டார்.காந்திய வழியிலான உண்ணாவிரதத்தை ஒடுக்கும் காங்கிரஸின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.

புதுதில்லியில் ஹசாரேவின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.நாடு முழுவது ஊழலுக்கு எதிரான போர் உத்வேகத்துடன் சீற்றம் கொள்ள தயாராகி வருகிறதும்.ஐ.ஐ.டி மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவாக போராட தயராகி வருகின்றன.

இனியும் ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் மசோதாவை புறக்கணிக்கும் உழல் ஆட்சியாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.தில்லி காவல்துறையின் மிசா செயல்பாடுகள் இன்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.

வாருங்கள் நாமும் லஞ்சம்-ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஹசாரேவின் தலைமையிலான ஊழல் ஒழிப்பு முன்னனியில் பங்கேற்போம்.
best links in tamil
More than a Blog Aggregator

தடையை மீறி அன்னாஹசாரேவின் உண்ணாவிரதம்!இதுவரை நடந்ததுஎன்ன?

ஆகஸ்ட்டு 15 - இன்று 65 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து,பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்களை இழந்து , தொடர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி நமது தேசத்தை கொள்ளை அடித்த வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.
 ஹசாரே இந்தியராணுவத்தில்
இருந்தபோது எடுத்த படம்

ஆனால் இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைபட்டு உள்ளோம் . ஊழலுக்கு எதிராக இனி ஒரு சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. லஞ்சம் ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும் ,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற காந்தியவாதியும் சமூக சேவகருமான அன்னா ஹசாராவின் சிவில் சமூகம் லோக்பால் மசோதா கமிட்டியில் இடம் பெற்று இருந்தனர் .ஹசாரே குழுவினர் பிரதமர் , நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வழியுருத்தி வந்தார்கள் .

ஹசாரே குழுவின் இத்தகைய முக்கிய கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு கடந்த வாரத்தில் மத்திய அரசு நாடாளு மன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது .சிவில் சமூகத்தின் முக்கிய கோரிக்கைகளை மசோதாவில் சேர்க்கத் தவறினால் ஆகஸ்ட் 16 முதல் புதுதில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக ஏற்கனவே அன்னாஹசரே அறிவித்து இருந்தார்.

ஆனால் தில்லி காவல்துறை காந்திய வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் 22 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.முதலில் உண்ணாவிரதத்திற்கு இடம் தர மறுத்தது.ஹசாரே குழுவினர் எந்த இடமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்ன பிறகு பெரோஸ்கோ கோட்லா மைதானம் அருகில் உள்ள ஜெயப்பிரகாஸ் நாரயண் பூங்காவில் அனுமதி அளித்தனர்.

தற்பொழுது அனுமதித்துள்ள இடத்தை காவல்துறைதான் பரிந்துறைத்தது.அதற்க்கும் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி 18-ம் தேதி மாலை 5-மணிக்கெல்லாம் முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறது.ஹசாரேவின் சிவில்சமூகம் காலவரையற்ற போராட்டம் தேவை என்கிறது! காவல் துறை அதை கட்டுக்குள் கொண்டு வரமுயல்கிறது.

மேலும் உண்ணாவிரதத்தில் இருப்பவர்களை மருத்துவ குழு ஒன்று மூன்று வேலையும் பரிசோதித்து,தேவைப்பட்டால் மருத்துவமணைக்கு எடுத்துச்
சென்று ஊசிமூலம் உணவு செலுத்தப்படும்.போராட்டத்தில் 5,0000 தொண்டர்கள் மற்றும் 50 கார்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என காவல்துறை மிரட்டுகிறது.

கூடவே தொண்டர்கள் கத்தி,கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு
வரக்கூடாது என ஹசாரே குழுவின் காந்திய வழியிலான சத்தியாகிரகப்போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஆயுதங்கள் இருந்தால் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்களாம்.

ஹசாரேவின் சிவில்சமூகம் காவல்துறையின் இத்தகைய கட்டுப்பாடுகளை
ஏற்க மறுக்கிறது.இதனால் போரட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.தடையை மீறி போராட்டம் நடத்தவும்,சிறை நிரப்பவும் ஹசாரேவின் சிவில் சமூகம் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஒய்வுபெற்ற காவல்துறை இயக்குனருமான கிரண்பேடி,உச்சநீதிமன்ற மூத்தவழக்கறிஞர் பிரசாந்த்பூசன்,ஆர்.எஸ்.எஸ்,
கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஹசாரேவின் போராட்டத்தை ஆதரிக்கிறது.
Social activist Anna Hazare during his visit to Rajghat on Monday on the eve of his hunger strike for a stronger Lokpal Bill. Photo: Sushil Kumar Verma
காந்திசமாதிமுன்பு
ஹசாரே

இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று ஹசாரே தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சமாதி முன்பாக அமர்ந்து தியானம் செய்யத்தொடங்கி விட்டார்.இதைப்பார்த்த ஏராளமான பொது மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.

இவற்றை எல்லாம் தாண்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மணீஸ்திவாரி,கபில்சிபல் போன்றவர்கள் ஹசாரேவின் தலைமையில் செயல்படும் அறக்கட்டளை ஊழல்புரிந்துள்ளது.ஊழலுக்குஎதிராக போராடும் ஹசாரே ஊழல் பேர்வழி முதலில்அவரது தலைமையில் செயல்படும் அறக்கட்டளையின் முறைகேட்டுக்கு பதில் சொல்லட்டும்.சாவந்த் கமிசனின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கட்டும் என்கிற ரீதியில்ஊழல் எதிர்ப்பு போரட்டத்தை கொச்சைப்படுத்த முயல்வதை கண்கூடாக காணமுடிகிறது.

மோசடி செய்ததாக சாவந்த் கமிசன் ஹசாரேவின் மீது குற்றம் சாட்டினால் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? யார் தடுத்தது? மத்திய அரசுக்கு ஏன் இந்தக் குழப்பம்? காமன்வெல்த்,2ஜி என்று பலலட்சம் கோடிரூபாய்களை முறைகேடு செய்துள்ளார்கள்.எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்கள் காங்கிரஸ் தலைகள்.அதனால்தான் ஹசாரேவின் போராட்டத்தைக்கண்டு அச்சப்படுகிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பிரதமர்,சனாதிபதி உள்ளிட்டவர்களுக்கும், சாதாரண சிவில் குடிமக்களுக்கும் பொதுவானதுதானே?அப்படி இருக்கும் பொழுது ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் மட்டும் ஏன் இந்த விதி விலக்கு? இது சமூக ஆர்வாளர்களின் மில்லியன் டாலர் கேள்வி.யார் பதில் சொல்வது?

தற்போதைய சூழலில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில்அன்னாஹசரேவின் செயல்பாடுகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.எனவே எமது கொங்கு தமிழர் கட்சி ம்ற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு போராட்டத்தை உறுதியுடன் ஆதரிக்கும்.தமிழ் வலைதளப்பதிவர்கள் இத்தகைய ஊழல் ஒழிப்பு போரட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
                                             இவன்:டி.கே.தீரன்சாமி 
.நன்றி:புகைப்படம் திஹிந்த்,ஹசாரே வ.தளம்

best links in tamil
More than a Blog Aggregator

"வனயுத்தம்"படப்பிடிப்பு துவக்கம்!சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை திரைப்படமாகிறது!

                                        
ஒருவழியாக சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெள்ளித்திரையில்
படமாக்கும் வேலை தொடங்கிவிட்டது. காட்டையும் நாட்டையும் கலக்கி
வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச்
சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து
இயக்குகிறார் குப்பி புகழ் ஏ.எம்.ஆர்.ரமேஸ்.சந்தனக்காட்டின்கதையை
படமாக்கும் முயற்சியில பல இயக்குநர்கள்முனைப்புக்காட்டினார்கள்.
அதில் முந்திக்கொண்டவர் ஏ.எம்.ஆர்.ரமேஸ்.

ஏற்கனவே, மக்கள் தொலைக்காட்சியில் சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் கதை வெகு நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டு தொடராக ஒலிபரப்பப்பட்டது.இது மக்களிடம் வரவேற்ப்பை பெற்றது.இத்தொடரை கொளதமன் எழுதி இயகினார்.

பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா! வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உதவியுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.

இப்போது, ஏ.எம்.ஆர். ரமேஸ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.

படத்துக்கு "வன யுத்தம்" என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில்
நடிப்பவர் கிஷோர். சமீபத்தில் தனுசூ நடித்த பொல்லாதவன் உள்ளிட்ட ஏரளாமான படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் இரு மொழிப்படமாக தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி!

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும்,
எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள்.
கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில்
முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

வீரப்பனின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே படமாக்க உள்ளனர்.குளத்தூர்,மேட்டூர்,கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் படப்பிடிப்பு முழுவது நடத்தப்படுகிறது.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன்
வந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

66-வது சுதந்திர தினம்.
 லட்சக்கணகான உயிர்களை விலையாக கொடுத்து,200 ஆண்டுகளுக்கு மேலாக போராடி நம் நாட்டை கொள்ளை கொண்ட வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.ஆனால்,இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.

இத்தகைய புற்று நோயின்பிடியில் இருந்து நமது தேசத்தையும்,
தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை!வாருங்கள் காந்தியவாதி அன்னாஹசாரே தலைமையில் அணிதிரண்டு பார்ப்போம்.வாருங்கள் உழலுக்கு எதிரான சுதந்திரப்போரை தொடங்குவோம்.

தயவு செய்தி பதிவுகளை படித்து விட்டு ஒரு வரியிலாவது கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள்.

செய்தி மற்றும் புகைப்பட உதவி:மனிதன் ஊடகம் www.manithan.com
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சீனா தயாரிப்புகளை புறக்கணிப்போம்! ஈழத்தமிழர்களை மீட்போம் கொங்குதமிழர்கட்சி வேண்டுகோள்



இலங்கையில் நிலவும் எதார்த்தங்களை உணராமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்.உண்மையிலேயே இலங்கைத் தமிழர்மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதிக்கு வந்துமீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்.என்று கடந்த இரு தினங்களுக்குமுன் இலங்கை அதிபர் மகிந்தாவின் சகோதரரும்,அந்நாட்டின் பாதுகாப்புச்செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே தமிழக முதல்வர் அவர்களை விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் கடந்த ஜீன் மாதம் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் பிறகு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரிகிளிண்டன் தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.அச்சந்திப்பின்போது முதல்வர் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி ஹிலாரியிடம் கவலை தெரிவித்துள்ளார்.

பிறகு அமெரிக்காவின் வெளிவிவாகாரத்துறையும்,இந்தியா வெளியுறவு துறையும் போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்,ஈழத்தமிழர்களின் புனரமைப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வற்புறுத்தியது.

பிறகு ஹெட்லைன் டுடே,பிரிட்டனின் சேனல் 4,போன்ற ஊடங்கள் ஈழத்தில் நடைபெற்ற ராஜபக்சே சகோதரர்களின் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இலங்கையில் ஊடகவியலார்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா,
சபையின் விசராணக்குழு பல முறை இலங்கை செல்ல முயன்றும் மகிந்தா அரசால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் பத்துக்கும் மேற்பட்ட அமரிக்காவின் உலவு விமானங்கள் இலங்கையின் வான் பரப்பில் பறந்து சென்றது.

இது போன்ற சர்வதேச தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசாங்கம் தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை எனக் காட்டிக்கொள்ளவும்,கோத்தயா மற்றும் பசில் ராஜபக்சே சகோதரர்களிடையே பிரதமர் பதவிக்கான அதிகாரப்போட்டியில் கோத்தபயா தன் மீது அதிபர் மகிந்தா மற்றும் அரசு கூட்டமைப்பின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.

இந்திய தேசியத்தின் இறையாண்மை என்பது மாநில முதல்வர்களை உள்ளடக்கியே உள்ளது.மைய அரசு தான் மட்டும் என்ன நினைத்தாலும் அதைச்செய்து விட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.தமிழக அரசு மற்றவர்களீன் தயவில் சிறுபான்மை அரசாக செயல்படவில்லை.மாறாக சட்டமன்றத்தில் மிகப்பெறுபான்மையுள்ள மக்கள் அரசாங்காமாக திகழ்ந்து வருகிறது.

இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை இலங்கை- சீனாவின் பக்கம் நெருங்கி  விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.அதனால் ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு தொடர்ந்துஉதவி வருகிறது..இருப்பினும் இலங்கையும் சீனாவும் மிக நெருக்கத்தில் பிணைந்துள்ளது.கடந்த காலங்களில் ஆறு பில்லியன் அமரிக்கா டாலர்களை இலங்கையின் புனரமைப்புக்கு சீனா கொடுத்துள்ளது.ஏராளமான நவீன ஆயுதங்களை மகிந்தா அரசுக்கு சீனா வழங்கியுள்ளது.

தற்போது எழுந்துள்ள சர்வதேச நெறுக்கடிகளுக்கு பயந்து மகிந்தா ராஜபக்சே சீனாவின் உதவியை நாடிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே மைய அரசு இனியும் யோசிக்காமல் சர்வதேச ஆதரவைத்திரட்டி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி முழ்வேலியில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களை மீட்டு அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை அமைத்துத் தரவேண்டும்

மகிந்தாவின் இலங்கை அரசுக்கு சீனா தொடர்ந்து உதவி வருகிறது. சீனாவின் தாயாரிப்புகளை விற்பனை செய்யும் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக இந்திய உள்ளது.சீனாவின் தயாரிப்புகளை வாங்க நாம் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் ஈழத்தமிழர்களின் ரத்தத்தை குடிக்க உதவுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.காந்தியக் கோட்பாட்டின் வழியில் சீனாவின் அந்நியப்பொருள்களை ஒவ்வொரு தமிழனும் விற்கவோ வாங்கவோ கூடாது என முடிவு எடுப்போம்.
                                           
                                           இவன் 
டி.கே.தீரன்சாமி
மாநில அமைப்பாளர்
கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

ஜெயலலிதா முழக்கம் ஈழத்தில் நிரந்தர தீர்வு காணும் வரை தமிழகம் ஓயாது

 தமிழக சட்டசபையில் கடந்த ஜீன் மாதம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானத்தை தமிழக மக்களும்,ஈழத்தமிழ் ஆதரவாளர்களும்,தமிழ் ஊடகங்களும்,புலம் பெயர் தமிழர்களும் வரவேற்றனர்.

 அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை அமரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேரில் சந்தித்து பேசினார்.அப்பொழுதும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஹிலாரியிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.

அமரிக்கா வெளியுறவுத்துறையும்,இந்திய வெளியுறவுத்துறையும் இலங்கைஅரசை போர்குற்றவிசாரணைகள் நடத்த வேண்டுமென வற்புறுத்தியது.இந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்ட அமரிக்காவின் உளவு விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பறந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே கடந்த இருதினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் தமிழக முதல்வர் அம்மா அவர்களையும் விமர்சித்து இருந்தார்.இதற்கு நமது கொங்குதமிழர்கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழக சட்டமன்றப்பேரவையில் இந்தியகுடியரசுகட்சி,தே.மு.தி.க,கம்யூனிஸ்ட் கட்சிகள் கோத்தபயாவின் விமர்சனம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர்..

இத்தீர்மானத்தின் மீது உரையாற்றிய தமிழமுதல்வர்,
 இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி இருக்கவேண்டும்.இத்தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தால் கோத்தபயா விமர்சித்து இருக்க மாட்டார்.தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்ற கோத்தபயாவின் கருத்து கச்சதீவு ஒப்பந்தத்திற்கு எதிரானது.கோத்தபயாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டசபை தீர்மானம் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தமிழகம் ஒயாது என தமிழக முதல்வர் சட்டசபையில்முழங்கினார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த கோத்தபயாவுக்கு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator