அண்ணா கசாரே போராட்டம்..ஒலிக்கும் அருந்ததிராயின் எதிர்ப்புக்குரல்-ஜீ,வி யில் வெளியான அருந்ததிராயின் பேட்டிக்கு..விகடன் இணையதளத்தின் விவாதக்களத்தில் நான் பதிவு செய்த கருத்துரை:-
அண்ணா கசாரே!கிரண்பேடி,பிரசாந்த் பூசன்,இவர்கள் மூவருமே மூன்று விதமான வேறுபட்ட துறைகளிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்தவர்கள்.
அருந்ததிராய் அவர்களை பொருத்தவரை சுற்றுச்சூழல் எதிர்ப்பு என்பதில் அக்கரை கொண்டவர்.அதில் தீவிரக் கவனம் செலுத்தி தொடர்ந்து போராடிவருபவர்.எம்மைப் போன்றவர்களுக்கு பத்திரிக்கை அளவில் தெரிந்து கொண்ட செய்தி இது!
2003 காலகட்டத்தில் கேரளா அரசு முக்காலியில் பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டி அந்தத் தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிருவனத்திற்கு விற்பனை செய்யும் முயற்ச்சியை எமது இயக்கம் உள்பட, விவசாய அமைப்புகள் தடுத்து நிறுத்தி தொடர்ந்து போராடி வந்தன.அப்பொழுது எமது இயக்கத்தின் சார்பில் அருந்ததிராய் அவர்களை அழைத்து முக்காலியில் அணைகட்டும் கேரளா அரசுக்கு எதிராக போராட முனைந்தோம்!
நான் அறிந்த வகையில் இந்திய அளவில் மக்கள் பிரச்சனைகளுக்காக பொதுநல நோக்கில் துணிவுடன் போராடக்கூடிய வீரப்பெண்மணி அருந்ததிராய் என்று சொன்னால் அது மிகையாகது.
அதுபோல அண்ணா காசாரே இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று விவேகானந்தர்,காந்திஜியின் கொள்கைகளால் கவரப்பட்டு திருமணம் செய்து கொள்ளாத பிரமச்சாரியாக,குடில் போன்ற வீட்டில் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்.
மழை வளம் இருந்தும் தமது சித்திக் கிராமம்- சரியான மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாமல்-தரிசு நிலமாக இருந்தது.அந்தப்பகுதியில் வசித்த மக்கள் வருமையின் பிடியில் சிக்குண்டு வாழ வழியின்றி நகரத்தை நோக்கி புலம் பெயர்ந்தனர்.இதைக்கண்ட கசாரே இதற்கு மாற்று வழியாக பத்துக்கும் மேற்பட்ட சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று-இன்று செழிப்புடன் பொன்விளையும் பூமியாக மாற்றிக்காட்டியவர்.கசாரேவின் சமூகப்போராட்டம் சித்திக் கிராமத்திலிருந்து ஆரம்பித்தது.அன்று இந்தச்செய்தி யாருக்கும் தெரிந்திருக்கவில்லையே!எந்த மீடியாவும் அந்தபகுதியை தாண்டி பிரபலப்படுத்த வில்லையே!
சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலுக்கு எதிராக முனைப்புக்காட்டி, போராடி பல்வேறு சூழல்களை தாண்டி ஆகஸ்ட் 16 போராட்டம் ஊழலலுக்கு எதிரான மக்கள் புரட்சியை தட்டி எழுப்பியது.
மேலும் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடியின் காவல்துறை அதிரடிகள்-திரைப்படமாகவே எடுக்கப்பட்டது நாடறிந்த உண்மை.உச்சநீதிமன்றத்தின் மூத்த சட்டப்போராளிகள் பூசன் சகோதரர்கள் சாதாரனமாணவர்கள் அல்ல!கசாரேவுடன் இவர்கள் இணைந்து போராடியது!மேலும் மக்கள் புரட்சியை தட்டி எழுப்பியது!
வெகுசன மக்கள் படை தான் சனநாயகமாக மிளிருகிறது.இதுதான் உண்மை!இதுதான் எதார்த்தம்!கசாரேவின் ஆகஸ்ட் 16 போராட்டத்தை வெகுசன ஊடகத்துறை புறந்தள்ளி இருந்தால்!மக்கள் அத்தகைய ஊடகத்துறையை கண்டுகொள்ள மாட்டார்கள்!ஊடகத்துறையினர் சாதாரணமாக யாருக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட மாட்டார்கள்.
நமது அண்ணா அவர்களின் திரவிட-தமிழ்நாடு போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் வெகுசன ஊடகத்துறை இருட்டடிப்பு செய்தன!பிறகு அவர் மக்கள் சக்திமிக்க தலைவராக வளரும் பொழுது அவரது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏற்கனவே கருத்துரையில் முன்னோடிகள் கூறியது போல் ஊழல் என்பது ஒரு பகுதி சார்ந்த பிரச்சனை அல்ல! ஒட்டுமொத்த இந்தியர்களின் அன்றாட வாழ்வில் நடைபெறும் மிகக்கொடிய சமூக அநீதி!ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதும்!அதற்கு கசாரேவின் போராட்ட வடிவம் சரியான தொடக்கம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்!
இந்த நேரத்தில் ஒரு பகுதி சார்ந்த போராட்ட களத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்க வில்லை!என்று குறை கூறும் அருந்ததிராயின் கருத்து ஏற்புடையது அல்ல!கண்டனத்திற்குரியதே!
நல்ல செய்தி ஒன்று மிளிரும்பொழுது அதற்கு மதம் சார்ந்தது என்று புலம்புவது அபத்தமானது.ஈழத்தில் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தார்களே நம் உடன் பிறப்புக்கள் அதற்கு ஏன் மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வில்லை? இந்தக் கேள்வி ஏன் அருந்ததிராயிடம் இருந்து வரவில்லை.அவர் முன்னெடுத்துச் சென்ற போராட்ட வடிவத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தான் அவரை ஆத்திரப்பட வைத்துள்ளது.
இவன்:-
டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக