வெள்ளி, 2 செப்டம்பர், 2011

கல்லூரிப்பருவம்-கண்மூடிய பாலுணர்ச்சி!

கொங்குதமிழகத்தின் மிகப்பெரிய பொறியியல் கல்லூரி ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம்.இதைக்கேட்டதும் எமக்கும்,எம்மோடு கேட்டவர்களுக்கும் மிகப்பெரிய காமெடிகாட்சியை பார்த்தது போன்று விழுந்து,விழுந்து சிரித்தோம்.ஆனால் ஒரு புறம் அந்தக் காட்சி எமது மனதை பிசைந்தது.சிறுகதையை போன்று இருந்தாலும்..சிந்திக்க வேண்டிய செய்தி...

சம்பவத்திற்கு வருவோம்....எமது நெருங்கிய உறவுக்கார மாணவன் அந்த பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வருகிறான்.அவன் கடந்த வாரம்-கல்லூரியில் சேர்ந்த முதல் வார விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான்.அப்பொழுது அந்த மாணவனிடம் நானும்,அவனது குடும்பத்தினர்களும் கல்லூரியைப் பற்றியும்,அவனுடன் கல்வி பயிலும் சக மணவர்கள் பற்றியும் பேசிகொண்டிருந்தோம்.அப்பொழுது அவன் கூறிய சம்பவத்தை இங்கே தருகிறேன்.

அவனது விடுதி அறையில் அந்த மாணவனோடு சேர்ந்து மூன்று பேர் இருக்கிறார்கள்.அதில் ஒரு மாணவன் கொஞ்சம் கலராக, அழகாக இருப்பானாம்.அந்த மாணவனின் அலைபேசிக்கு தொடர்ந்து இரு தினங்களாக ஒரே எண்ணிலிருந்து இடைவிடாமல் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.அதுவும் அந்த அலைபேசி எண் மற்றும் அதை அனுப்பும் நபர் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு யாரென்றே தெரியாது.

ஐ.லவ் யூ..ஐ.லவ்.யூ...இதுதான் எஸ்.எம்.எஸ் வரிகள்.இந்த எஸ்.எம்.எஸ் வரத்தொடங்கிய இரண்டு தினங்களிலேயே அந்த மாணவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.ஆனால் அவன் இது பற்றி சக மாணவர்கள் யாரிடமும் கூறவில்லை.

அன்று மாலை கல்லூரி முடிந்து விடுதி அறைக்கு திரும்பியதும் மீண்டும் எஸ்.எம்.எஸ் படலம்...அதிர்ச்சி அடைந்த அவன் எதிர் முனைக்கு அதாவது எஸ்.எம்.எஸ் அனுப்பிய எண்ணில் தொடர்பு கொண்டு "நீங்கள் யார்? எதற்காக எனக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளான்.

அதற்கு எதிர் முனையில் வந்த பதில் "நான் சி எஸ் டிபார்ட்மெண்டில் பஸ்ட் இயர் படிக்கிறேன்..எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம்..பேசத்தெரியாது...நான்..
ஓப்பன் டைப்...எதா இருந்தாலும்..ஓப்பனா சொல்லிருவேன்...உன்னை நான் இரண்டு நாள பார்த்திட்டிருக்கேன்...ஐ.லவ்.யூ..உன்னை நான் லவ் பண்றேன்..சின்சியரா லவ் பண்றேன்"...இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவன் பேசிக்கொண்டிருந்த அலை பேசியை தூக்கி எறிந்து விடுகிறான்.

இதைப்பார்த்த எமது உறவுக்கார மாணவன் மற்றும் உடன் இருந்த மற்றொரு மாணவனும் தூக்கி எறியப்பட்ட அலைபேசியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து.."என்னடா நடந்தது..ஏன்டா போனை தூக்கி எரிஞ்சே"..என்று கேட்டுள்ளார்கள்.

 ஆனால் அந்த மாணவன் தனது அலைபேசியிலிருந்து தனது அம்மாவை தொடர்பு கொண்டு "அம்மா என்னை ஒரு பொண்ணு லவ் பண்றேன் சொல்லுதம்மா...நான் என்ன பண்ணட்டும்மா..என்று அப்பாவியாக கேட்டுள்ளான்.அதிர்ச்சியடைந்த அவர்கள் "சாமி அதெல்லாம் நமக்கு வேண்டான்டா...அதுகிட்ட கூப்பிட்டு வேண்டாம்னு..சொல்லிர்ர சாமி..வம்பு..தும்புக்கெல்லாம் போய்ராதட சாமி..பத்திரம பார்த்து படிச்சு நல்ல பேர் எடடா சாமி"என்று அறிவுருத்தியுள்ளார்கள்.

அதன் பிறகு தனது அறைத் தோழர்களிடம் நடந்ததை கூறியுள்ளான்.
நண்பர்களும் அவன் அம்மா கூறியதை ஆமோதித்து... ஐ.லவ்.யூ மாணவியை தொடர்பு கொள்ளச் செய்து..தமக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்து அந்த உறவுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளான்.

இது ஒரு புறம் காமெடியாக இருந்தாலும்..மறுபுறம் நம்முடைய இளம் நாயகர்களின் திரைப்படங்கள் சின்ன சிறார்கள் மனதில் எந்த அளவுக்கு மோசமான ஆலகால விசத்தை தூவி..கல்வி கற்க வேண்டிய வயதில் காதல் டூயட் எனும் புதை குழியில் தள்ளப்பட்டுள்ளதை என்னும்பொழுது வேதனை தான் மிஞ்சுகிறது. .

இது போன்ற சம்பவங்கள் நாளை நமது குடும்பத்திற்கும் வரலாம்.தமிழில் ஆபாச பதிவுகளை வெளியிடும் நண்பர்களே! எழுத்தாளர்களே! நாயகர்களே!இயக்குனர்களே! தயவுசெய்து உங்களை சுய ஆய்வுவிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.சிறுவர்களையும்,மாணவர்களையும், இளைஞர்களையும் உமது வியாபாரத்திற்காக! தயவுசெய்து சீரழிக்காதீர்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

2 கருத்துகள்:

காந்தி பனங்கூர் சொன்னது…

//இது போன்ற சம்பவங்கள் நாளை நமது குடும்பத்திற்கும் வரலாம்.தமிழில் ஆபாச பதிவுகளை வெளியிடும் நண்பர்களே! எழுத்தாளர்களே! நாயகர்களே!இயக்குனர்களே! தயவுசெய்து உங்களை சுய ஆய்வுவிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.சிறுவர்களையும்,மாணவர்களையும், இளைஞர்களையும் உமது வியாபாரத்திற்காக! தயவுசெய்து சீரழிக்காதீர்கள்.//

ஆமாம், இன்றைய தலைமுறையினர் சினிமாவை பார்த்து நல்லவற்றை தெரிந்துக்கொள்வதை விட கெட்ட விசயங்கள தான் எளிதாக மனதில் பதிந்து விடுகின்றன. இவற்றை ஒழிக்க மேற்கூறியவர்கள் தான் மனசு வைக்கனும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

இப்போது கைபேசியிலேயே வருகிறது.
குறுஞ்செய்தியாகவும். அழைப்பாகவும்.
இதை யார் அனுமதிக்கிறார்கள் என்றே புரியவில்லை. இம்மாதிரி அழைப்புகளில் கவரப்பட்டு பண, நேர, மற்றும் மனநல விரயங்கள் நேர்ந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி விடுதலை கிடைக்கும்.?