சனி, 27 செப்டம்பர், 2014

திட்டமிட்ட சதியும், நீதிமன்றத் தீர்ப்பும்....திட்டமிட்ட சதியும், நீதிமன்றத் தீர்ப்பும் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி கண்டனம்.1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66.64 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாண்புமிகு தமிழக முதல்வர் மீதான பொய் வழக்கில், பலதரப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு பிறகு முதல்வருக்கு எதிரான ஒரு தீர்ப்பை கர்நாடக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு நீதிக்கு சாதகமானதாக வழங்கப்பட்டதா..?இல்லை, அநீதிக்கு ஆதரவாக அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. முதல்வரின் வளர்ச்சி, தமிழகத்தின் உரிமைகளுக்கு போராடுவதை தன் கடமையாக கொண்ட அவரை இனியும் விடுவது தமிழகத்தில் தன்னலம் கொண்டவர்களுக்கும், அவரின் போராட்ட குணத்திலே  பெற்ற நியாயத்தால் தொலைந்து போன தேச துரோகிகளின் அனைத்து திட்டங்களுக்கும் தோல்வியைத் தந்ததால் பொது எதிரியாக முதல்வரை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

நீதியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவரும், சத்திய வழியில் அதிமுகவை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழித் தோன்றல் தான் நமது இதய தெய்வம் புரட்சித்தலைவி அவர்கள். அரசியல் வாழ்வில் இவர் சந்த்தித்த இன்னல்கள் ஒன்று இரண்டல்ல. புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை முடக்க நினைத்தவர்களை தனது திறமையினாலும், மக்களின் அன்பு மற்றும் ஆதரவினாலும் தகர்த்தெறிந்தவர் புரட்சித்தலைவி.

மக்கள் பணிக்காகவே தன்னை அரசியலில் தியாகம் செய்த புரட்சித்தலைவி அவர்களுக்கு நேற்றைய தீர்ப்பின் மூலமாக ஒரு தடையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். 
சில மாதங்களுக்கு முன்பாக கருத்து கூறிய முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, "தன்னுடைய பதவிக் காலத்தில் பல நீதிமன்ற நியமனங்களுக்கு சில அரசியல் கட்சிகளால், குறிப்பாக தமிழகத்தில் கடந்த காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த  கட்சியின் தலையீடு இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்." இதிலிருந்தே எதிர்க்கட்சியான திமுகவின்  நீதித்துறை தலையீடுகள் புரிகிறது.

அவரது  அரசியல் பயணத்திலிருந்தே அவர் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் தன்னை குற்றமற்றவர் என்று  நிரூபித்தவர் புரட்சித்தலைவி.
நீதித்துறையின் செயல்பாடுகளுக்கும் முழுஒத்துழைப்பை நல்கியே அவர் வென்றிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு, முல்லை பெரியாறு, இலங்கைத்தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கெயில் எரிவாயு குழாய் திட்டம், மீத்தேன் வாயுத் திட்டம் போன்ற வாழ்வாதர பிரச்சினைகளில் கடந்த மற்றும் தற்போதைய மத்திய அரசுகளுக்கு எந்த பாரபட்சமும் பாராமல்  நீதிக்கு போராடி நெருக்கடியைத் தந்த, தரப்போகும் தலைவர் இவர் மட்டும் தான்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்தவரையில், கேரளாவில் அரசியல் ஆதாயம் இல்லை என்பதால் மத்தியில் ஆளும் கட்சி முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது. ஆனால், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசியல் ஆதாயத்தை அடையவும், தமிழகத்தில் காலூன்றவும் ஒரே தடையாக இருக்கும் சக்தியான புரட்சித்தலைவியை பழிக்கு ஆளாக்கியுள்ளனர்.

கட்ச்த்தீவு பிரச்சினையை மறைக்க, தமிழகத்தில் இனி அரசியல் செய்ய புரட்சித்தலைவி தான் அவர்களுக்கெல்லாம் பொது எதிரி. மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் அவருக்கு தேர்தல் மூலமாக வெற்றியை மட்டுமே வழங்கியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குன் சக்தியான புரட்சித்தலைவிக்கு அரசியலில் நிரந்தர ஓய்வு கிடைத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அனைவருக்கும் நினைவில் நிற்க வேண்டியது, இது போன்ற பல சதிகளில் இருந்து நெருப்பாற்றில் நீந்தியவர் புரட்சித்தலைவி.

செய்தியாளர்கள் பேட்டியில் சுப்ரமணிய சுவாமி, தமிழகத்தில் அதிமுக இயக்கத்தின் மூலமாக நக்சலைட்டுகள்,ஐ.எஸ்.ஐ இயக்கம், விடுதலைப்புலிகள் உள்ளிட்டவற்றை இணைத்தும் ஒரு சர்ச்சையை பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.

மீண்டும் வருவார் தங்கத்தாரகை...தமிழகத்தின் நிகரில்லா தலைவி புரட்சித்தலைவி....!

க.சௌந்தரராஜன்.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: