வெள்ளி, 28 ஜனவரி, 2011

சுஜிதாவின் கற்பு-சிங்களர்+தமிழர் சீரழிப்பு-ஈழத்துக்கண்ணீர்

 பலபதிவர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆலோசனையின்படி சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவு செய்கிறேன். திருத்தங்களை பச்சை எழுத்துக்களில் பதிவு செய்கிறேன்.
 1990-வது வருடம்.அப்போது எனக்கு வயது 16.சீ.றி.சபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தைச் சார்ந்த சிலர்- நான் படித்த பள்ளிக்கு வருகை தந்து இலங்கையில் நடைபெற்ற கொடிய சம்பவங்களை-வீடியோ பெட்டியில் படத்தொகுப்பாக போட்டுக் காட்டினார்கள் (அன்றைய காலத்தில் எங்கள் கிராமத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ஒன்று கூட இல்லை)


  என்னுடைய கிராமத்தில் எனக்குக் கிடைத்த குறுகிய செய்திகளின் வழியாக இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலைகள்,இளம் பெண்களிடம் வன் புணர்ச்சிகள்- என! என் போன்ற மாணவர்களின் மனதில் ஈழத்தின் சோகம் விடியாத இரவாக இருந்தது.டெலோவின் வருகையும்,அவர்கள் காட்டிய வீடியோ காட்சிகளின் விபரீதங்கள் என் நெஞ்சை விட்டு இன்னும் விலக வில்லை.

 அந்தக் காலகட்டத்தில் எனக்கு எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக நாடகங்களையும்,சிறுகதைகளையும் எனக்குத் தெரிந்த தமிழ் மொழியில் எழுதி வந்தேன்.இலங்கைத் தமிழர்களின் இன்னல்களும்,அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் நிலையும்-குறிப்பாக பெற்றோர்களை இழந்து தனி மரமாக வந்த இளம் பெண்களின் நிலையும் எண்ணி என் கண்கள் கண்ணீர் வடித்தது.அத்தகைய சூழ்நிலையில் "எரிமலைக்குள் ஒரு பனித் துளி" எனும் தலைப்பில் சிறு கதையின் வடிவத்தில் இலங்கை இனப் படுகொலைகளையும்,ஈழப் பெண்களின் அவலத்தையும் எழுதினேன்.

 அந்தச் சிறு கதையை ஆனந்த விகடன்,ராணி,தேவி போன்ற வாரப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்தச் சிறு கதையை யாரும் வெளியிட முன் வரவில்லை.ஆனால் ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து அவர்கள் முகவரி தாங்கிய கடிதம் ஒன்றும்,எனது சிறுகதையும் திரும்பி வந்தது.அந்தக் கடிதத்தில் "தங்கள் சிறு கதை எங்கள் ஆசிரியர் குழுவின் நெஞ்சத்தை பெரிதும் பாதித்தது.இருப்பினும் வெளியிட இயலாத நிலையில் உள்ளோம்"என்று இருந்தது.அந்தச் சிறுகதையை தேடிப் பிடித்து எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வெளியிடுகிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.தயவு செய்து கருத்துக்களை பதியவும்.

                        "எரிமலைக்குள் ஒரு பனித்துளி"


   "என் இனிய தமிழ் மக்களே!..இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் எனதருமை உடன்பிறப்புகளே!..நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!..தமிழன்!..தமிழன்!..தமிழனுக்கு எங்கு இடையூரு ஏற்பட்டாலும்!..தமிழ் இனத்தை அழிக்க யார் முனைந்தாலும்!..அவர்களை ஓட!..ஓட!..விரட்டுவோம்!..நாங்கள் பேசுவது மட்டுமல்ல!..செய்வதும் அப்படித்தான்!..நாங்கள் சொல்வதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்!..ஆளும் கட்சியாக இருந்தாலும்!..எதிர்கட்சியாக இருந்தாலும்!..தமிழ் மூச்சு!..தமிழ் பேச்சு!..இவைகள் தான் எங்கள் பணியின் உயிர் நாடிகள்"..

 நீளமான கர,கரவென அரசியல் பேச்சுக்கென பழக்கப்பட்ட குரல் ஒலிப்பெருக்கியில் கம்பீரமாக ஒலித்தது.பேச்சாளரின் உணர்ச்சி தூண்டுதல்களுக்கு ஏற்ப கூட்டத்தில் கரவொலி,கைதட்டல்கள் தொடர்ந்தன.

 திரண்டிருந்த கூட்டத்தின் கடைக்கோடியில் நின்றவாறு தமிழ் மூச்சாளரின் அரசியல் பேச்சை தன் காதுகளின் வழியே உள் வாங்கிய சுஜிதாவின் கண்களில் கண்ணீர் சொரிந்தது.தன் கண்களில் வழிந்த நீரை தனது கையால் துடைத்தவாறு மெல்ல கூட்டத்தை விட்டு நகர்ந்து நடக்கத் தொடங்கினாள் மேடைப் பேச்சாளரின் பொய்யான பேச்சைக் கேட்டு அவள் மனம் வெகுண்டது...

 மெல்ல அவளது எண்ண அலைகள் பின்னோக்கி சென்றது.இடம் -யாழ்ப்பாணம்,நள்ளிரவு-12 மணி,சுஜிதாவின் வீடு.டக்..டக்.டக் என கும்பலாக கேட்கும் பூட்ஸ் சத்தத்தை தொடர்ந்து "ரவுண்ட்ஸ் அப்"என்ற கர,கரப்பான ஆங்கில வார்தை.

 கண்ணையர்ந்து தூங்கிய சுஜிதாவின் தந்தை டக் என கண் விழித்து திரும்பியவர் மனதில்-பயம் அலை,அலையாக எழுந்தது.அரை நொடி யோசனையில் தடால் என எழுந்து குடும்பத்தினர் அனைவரையும் எழுப்பினார்.

 சுஜிதா "என்னப்பா"என்று கேட்கவும்!..வீட்டின் வெளியே கதவின் அருகில் "சூட்"என்ற குரல் ஒலிக்கவும்- வினாடியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கதவினை உடைத்துக் கொண்டு பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.சுஜிதாவின் குடும்பம் மொத்தமும் மொளனமாக அலறியது.

 துப்பாக்கியின் வெடி ஓசை ஓய்ந்த வினாடியில் கதவை த் தள்ளிக் கொண்டு வெறிநாய்கள் போல சிங்கள ராணுவச் சிப்பாய்கள் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள்.பதறி எழுந்த சுஜிதாவின் அம்மாவை சுட்டார்கள்.இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தாள்.

 மொளனமாக அலறிய குடும்பத்தினர்கள்!..பெறும் கதறலோடு கூவினார்கள்.பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து,பாலூட்டி வளர்த்த அன்னை கண் முன்னாலே துடி,துடித்து கீழே விழுவதைக் கண்ட சுஜிதாவின் அண்ணன் தன்அருகில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு  சிங்களச் சிப்பாய்களை நோக்கி புலியெனப் பாய்ந்தான்...

 மீண்டும் டக,டகவென துப்பாக்கிகளின் கணைப்பு.தோட்டாக்கள் அவன் நெஞ்சில் சர மாறியாகப் பாய்ந்தன! பாய்ந்தவன் பயனற்று தரையில் சாய்யும் வினாடி நேரத்தில் வேட்டை புலியாக உருமாறி இரண்டு சிங்கள வெறிநாய்களின் மார்பிலும்,வயிற்றிலும் கத்தியை வெறிகொண்ட மட்டும் சொருகிய நிலையில் தரையில் சரிந்தான்.

 வினாடி நேரத்தில் உயிர் கொடுத்த அன்னையும்,உடன் பிறந்த அண்ணனும் சரிந்து கிடப்பதைக் கண்டு! இனி நடக்கும் கொடுமைகளை காண முடியாது! என்ற நிலையில்..நேற்று மலர்ந்த புது ரோஜா,சுஜிதாவின் தங்கையும்,தந்தையும் மயக்கமுற்று தரையில் சரிந்தார்கள்.

 சுஜிதா "அப்பா" என்று அலறியவாறு அருகே நெருங்கிச் செல்லவும்! சிங்களச் சிப்பாய்கள் இனி வீழ்த்த யாரும் இல்லை என்று எண்ணி-துப்பாக்கிகளைத் தாழ்த்திக்கொண்டு!அடுத்த ஆட்டத்திற்கு தயார் ஆனார்கள்.மூன்று வெறி நாய்கள் சுஜிதாவை நெருங்கி வந்தார்கள்.


 ஒநாய்களின் அடுத்த இலக்கு தானும், தனது தங்கையும்! என்பதை உணர்ந்து கொண்ட சுஜிதா-தங்கள் உடலுடன் விளையாடத் துடிக்கும் கொடூரத்தை நினைத்து பெண் புலியாக சிலிர்த்து எழுந்தாள். கண நேரத்தில் தன் கண்களில் பட்ட அருவாமனையை கையில் எடுத்துக் கொண்டவள்- தன்னை நெருங்கிய அரக்கர்கள்-எதிர்பாரத நேரத்தில் மூன்று நாய்களை சர,சரவென குதறி எறிந்தாள்.


 ஆனால் சுஜிதாவின் பின்பக்கம் நின்ற சிங்களவனின் துப்பாக்கிக்கட்டை பெண்புலியின் பின்மண்டையில் "நங்"என்று இறங்கியது.சுஜிதா தலையில் வழிந்த குருதியை துடைத்தவாறு தரையில் விழுந்தாள்.

 மற்றவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பால்மனம் மாறாத குழந்தையைப் போன்று தரையில் மயங்கிக் கிடக்கும் சுஜிதாவின் தங்கையை வெறிகொண்ட மட்டும் மாறி,மாறி புரட்டி எடுத்தார்கள்.

 சுஜிதாவை நெருங்கியவர்கள் அவள் உடலோடு ஒட்டியிருந்த ஆடைகளை உறுவி எறிந்து..அவள் உயிரோடு ஒட்டியிருந்த கற்பை மாறி,மாறி சூரையாடினார்கள்.கொடியவர்களின் வெறித் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுஜிதாவும் மயக்கம் அடைந்தாள்.

 அவள் கண் விழித்த போது அனாதையாக தமிழ் அகதிகள் கப்பலில் இந்தியா வந்து கொண்டிருப்பதாக மற்றவர்களால் உணத்தப்பட்டாள்.சுஜிதாவின் ஈழத்து நினைவுகளை கலைக்கும் வகையில்-அவளது இடுப்பை முரட்டுக் கரம் ஒன்று இருகப் பற்றியது.

 திடுக்கிட்ட சுஜிதா தன் பழைய நினைவுகளிருந்து மீண்டாள்.தான் மெரினாக் கடற்கரையின்- அரசியல் கூட்டம் நடக்கும் மேடையை விட்டு வெகு தூரம் வந்திருப்பதை உணர்ந்தாள்.

 பின்புறம் "இலிப்பொலி"கேட்டது.திரும்பியவளின் பார்வையில்-குடி போதையில் இரண்டு ஆண்கள் இலித்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.அதில் ஒருவன் "வா குட்டி! ஏ! குட்டி தனிய தவிக்கிறே" என்றான்.

 சுஜிதாவிற்கு என்ன நடக்கிறது என்பதை உணரும் வினாடியில்- மற்றொருவன் சுஜிதாவை முரட்டுக்கரத்தால் இறுக அணைத்தான்!..சுஜிதாவிற்கு.. தலை சுற்றியது..மயங்கினாள்..மீண்டும் கண்விழித்த போது தன் தமிழ் வேந்தர்களால் தான் குதறப் பட்டுள்ளதை உணர்ந்தாள்..

 உணர்வற்ற சுஜிதா கடல் அம்மாவை நோக்கி நடந்தாள்.கற்பு இழந்த தமிழச்சியை காக்க! கடல் அலைகள் அணைத்துக் கொண்டன... சுஜிதாவை இனி யாரும் நெருங்க முடியாது.இயற்கை அன்னையின் தாலாட்டில் இனி 
நிரந்தரமாக தூங்கப் போகிறாள்...

தங்கள் மேலான கருத்துரைகளை பதியவும்


 தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பெயரில்லாதவரின் கேள்வி மிக நியாயமானது. இலங்கையில் தமிழ் பகுதிகளில் அதி உயர் அரசாங்க நிர்வாகப் பதவிகளில் தமிழ் பெண்மணிகள் இருக்கும் நிலையில் rap rap என்று சொல்வது எல்லோர் கவனத்தையும் கவருவதற்க்கு.இங்கு சொல்லபட்ட 1990-வது ஆண்டு முன் சீறிசபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர்களை புலிகள் கொன்றும் உயிருடன் எரித்தும் அழித்துவிட்டனர்.