வியாழன், 3 நவம்பர், 2016

பிரதமருக்கு சிறுவனின் கடிதம்.?

டியர் மோடி, என்னுடைய கிரமத்திற்கு வாருங்கள், குழந்தைகள் எப்படி உயிரிழக்கின்றனர் என்பதை பாருங்கள்,’ சிறுவன் உருக்கமான கடிதம்

 நீங்கள் உலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள். எங்களுடைய கிராமத்திற்கு உங்களால் வரமுடியாதா

http://www.dailythanthi.com/News/India/2016/11/03163526/Dear-Modi-please-come-to-my-village-and-see-how-children.vpf

சிறுவனின் கடிதம் .நெஞ்சை உலுக்குகிறது.ஆப்பிரிக்கா நாடுகளின் நிலைமை நம் கண்முன் விரிகிறது.

உண்மை உலக அரங்கத்தை அதிரச்செய்கிறது...
இன்றைக்கு இந்தியக் கிராமங்களின் நிலைமை இதுதான்.

நம்முடைய கிராமங்கள் இன்றும்
சுகாதாரம்,சூழலியல் மாசுபாடுகள்
கல்விக்குறைபாடு உள்ளிட்ட
வளர்ச்சியின்மையை நோக்கியே
சென்று கொண்டிருக்கிறது.

அரசியல் பிழைப்புவாதிகளின் துணையோடு - இந்திய சுகாதாரத்துறை லஞ்சமும்,ஊழலும்
நிறைந்து நம்மை மெல்ல,மெல்ல
கொன்று கொண்டிருக்கிறது.

நமது கிராமத்திலிருந்து,நமது கிராம பஞ்சாயத்து அமைப்பகளுக்கு-நம்மால் நேரடியாக தேர்வு செய்யக்கூடிய நமது பக்கத்து வீட்டுகாரரரிலிருந்து
இந்த ஊழல் சீர்கேடு தொடங்குகிறது...

ஒரு ஐந்தாண்டுகாலம் உள்ளாட்சி
பிரதிநிதிகளாக இருந்தால்-பத்து இலட்த்திலிருந்து, நூறு கோடிவரை
சம்பாதிக்கிறார்கள்

உள்ளாட்சியைப் பொருத்தவரைஆளும்கட்சி,எதிர்கட்சி
என்ற பாகுபாடு கிடையாது. இவர்களில்
பெருபான்மையாக கூட்டுக்களவானிகளாக இணைந்தே செயல்படுகின்றனர்.

வாக்காளர்களாகிய நாமும்- நம்முடைய வேலைககாரர்களை(மக்கள் பிரதிநிதிகளை) எஜமானர்களாக்கி
நம்முடைய வாக்குகளை பதிவுசெய்ய
பணம்,குவாட்டர்,பிரியாணி என்று
அவர்களிடம் வரிசைகட்டி,கையேந்தி நிற்கிறோம்

மேலும், இது  போன்ற
படுபாதகங்களை மக்கள்முன் கொண்டுவர வேண்டிய ஓரு சில ஊடகங்கள் பணம்பறிக்கும் கூடாரங்களாக மாறிவிட்டது.

இதில் மோடியை குறைசொல்லி என்ன
பயன்.? நமது தேசம் இன்னொரு மிசாவை நோக்கி பயனிப்பதாகவே
நான் கருதுகிறேன்.

இவன்:-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி.
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
செயல் உறுப்பினர்,
தமிழர் தனிப்படை.
♦♦♦♦♦♦♦♦♦♦♦
http//www.theeranchinnamalai.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: