வியாழன், 26 செப்டம்பர், 2013

நமோவின் இளம்தாமரை-செயிக்குமா?


மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள்! தமிழகத்திற்கு வருகை தந்து இளம் தாமரை மகாநாட்டை தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்...

 முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.இந்தியா என்பது குஜராத் அல்ல! பெரும்பான்மை குஜராத்தி இன மக்களால் கட்டமைக்கப்பட்ட ஆசியத் துணைக்கண்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் குஜராத்.

சுமார் பத்துக்கு மேற்பட்ட மதங்களும்,500 க்கும் மேற்பட்ட சாதீகளும்,30க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும்
பலவகையான இனக்குழுக்களால்,பன்முகத்தன்மையால்
கட்டமைக்கப்பட்டதுதான் இந்தத் துணைக்கண்டம்.

உதாரணத்திற்கு தமிழகத்தின் கலாச்சாரம் வேறு,குஜராத்தின் கலாச்சாரம் வேறு,தமிழகத்தில் கூட கொங்கு நாட்டின் பண்பாடு வேறு,தென் தமிழகம்,வட தமிழகத்தின் பண்பாடுகள் ஒன்றுக்கு மற்றது மாறுபட்டதாக உள்ள்து.

பரந்து விரிந்த இந்தத் துணைகண்டத்திற்கு அகண்ட சிந்தனை கொண்ட ஒருவரால் மட்டுமே தலைமை மந்திரியாக பொருப்பு ஏற்று வழி நடத்த முடியும்.அத்தகைய தகுதி மோடிக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரியது.அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கே உள்ளது.

குஜராத்தின் வளர்ச்சி பற்றி இந்தியத் தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்மிகை மாநிலமாக சொல்லப்படும் அங்கு பல லட்சக்கணக்கான கிராமங்கள் மின் வசதி இல்லாமல் இருளில்
மூழ்கியுள்ளது.வேளாண்மை தன்னிறைவு பெற்றதாக சொல்லப்படும் அங்கு விவசாயிகளின் தற்கொலை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம்,பீகார்,திரிபுரா போன்ற மாநிலங்கள முன்னோக்கி செல்கின்றன.

தணிக்கைத்துறை கணக்கு இப்படி இருக்கும்பொழுது! மோடியின் 7000 க்கும் மேற்பட்ட சைபர் மீடியா வெப்சைட்கள் குஜராத்தைதூக்கிப்பிடிக்கின்றன.விளம்பரங்களையும்,ஆடம்பரங்களையும் முழுமையாக நம்பி களம் இறங்குவது ஆபத்தானது.

நிர்வாகத்திறமை,வளர்ச்சிப்பாதை என்று பார்த்தால் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமை மந்திரி பதவிக்கு தகுதியானவர் என்று சொன்னால் அது மிகையாகது.

நமது தேசத்தந்தை மகாத்மா எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர்.அந்த மகாஜீவன் அவதரித்த மண்ணின் மைந்தர் மோடி அவர்கள் அதற்கு மாறுபட்டவராக இருக்கக்கூடாது.

நமது தேசமும்,தேசீயமும்,இந்த மண்ணில் வாழும் மக்களும் லஞ்சம்,ஊழல் இல்லாத எளிமையான தலைமையை எதிர்நோக்கி காத்திருப்பதை தலைவர்கள் கவனத்தில் எடுத்துகொண்டு பூர்த்தி செய்தால் வாழ்த்துக்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: