திங்கள், 13 ஜனவரி, 2014

"வேளாண்" திருநாள்! தமிழர் சிறப்பு

பொங்கல் திருநாள் வாழ்வில் அதன் தொன்மையான சுவடுகளை கொண்ட ஒரு பண்டிகையாகும். உழவர்கள் தங்கள் அறுவடைகளை முடித்து அந்த போகம் சிறப்புற நிகழ்ந்ததற்கு சூரியனுக்கு பொங்கல் படைத்து கொண்டாடும் உழவர்களின் திருநாளே பொங்கல். 

சூரியனையும், நிலத்திற்கு வளப்பம் சேர்க்கும் வான்பொருட்கள் அனைத்திற்குமான படைப்பு வழிபாட்டு நாளாகவே பொங்கல் உழவர்களால் கொண்டாடப்படுகிறது. நிலம் என்பது, வேறு எந்த பண்பாட்டிலும் இல்லாத அளவிற்கு தமிழர் பண்பாட்டில் அதி முக்கியத்துவம் பெற்ற ஒன்று. பண்பாட்டையே 5 நிலப்பகுதிகள் கொண்ட திணை ஒழுக்கங்களாக வகுத்திருப்பது தமிழர் பண்பா‌ட்டில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமிய வாழ்வை அதன் அனைத்து பண்பாட்டுத் தன்மைகளோடும் சிறப்புறக் கொண்டாடும் இந்தப் பொங்கல் பண்டிகை நகரவாசிகளும் கொண்டாடி நமக்கெல்லாம் உணவு அளிக்கும் அந்த உழவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

தமிழ் பண்டைய நூல்களில், செய்தித் தாள்களிலும், பத்திரிக்கைகளிலும், பேச்சு வழக்கிலும் நின்று நிலைத்துப் போன "வேளாண்மை" என்ற சொல்லுக்கு இப்போது கொடுக்கும் பொருள் கொடுக்கப்படவில்லை.

webdunia photoWD
வேளாளர் பிரிவினர் பெரும்பாலும் உழவுத் தொழிலை கொண்டிருந்ததால் அது வேளாண்மை என்று வந்ததாக விளக்கம் கூறினாலும் இதற்கு தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் ஆதாரமில்லை.

தொல்காப்பியத்தில்தான் முதன் முதலில் "வேளாண்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியம் பொருளதிகாரம் என்ற தலைப்பின் கீழ் உள்ள களவியல் பிரிவில் 105ஆம் இலக்க சூத்திரத்தில் 'வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு உரையாசிரியர்கள் விளக்கம் அளித்திருப்பினும், பெரும்பாலும் இளம்பூரணர் உரையே பின்பற்றப்படுகிறது. இந்த சூத்திரத்திற்கு உரை எழுதிய இளம் பூரணர் 'தலைவி உபகாரம் எதிர்பட்ட விருப்பின் கண்ணும்' என்று விளக்கம் கூறியுள்ளார்.

நன்றி;-webdunia தமிழ்
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: