ஓடாநிலையில் கொங்குதமிழர்கட்சியினர் |
காங்கயம் மேலப்பாலையத்தில் கொங்குதமிழர்கட்சியினர் |
படம்-1,3 மேலப்பாளையத்தில் மாவீரனால் நிருவப்பட்ட மிகப்பெரிய வீரவிநாயகர் சிலை, படம்-2 ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள சிலை |
ஓடாநிலை மணிமண்டபம் முன்பு வந்துசெல்லும் பொதுமக்கள் |
ஆடி-18 (03-08-2011) இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலை தூக்கிலிடப்பட்ட 206-வது நினைவுதினம் பல்வேரு இயக்கங்களின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவீரன் தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையில்
காலை 8-30 மணிக்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி,சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினாரகள்.அவர்களுடன் எமது கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மதியம் 12-மணிக்கு ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் எமது கொங்குதமிழர்கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.தீரன்சின்னமலை ஆடிப்பெறுக்கு விழா தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் 7-அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் நாம்தமிழர் கட்சியின் நிர்வாகிகள்,சி.கே.மணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியினர்,பாரதிய ஜனதா கட்சியினர்,காங்கிரஸ் கட்சியினர்,உ.தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர்,ஈஸ்வரன்,பெஸ்ட் தலைமையிலான கொ.மு.க,வழக்கறிஞர்-செ.நல்லுசாமி தலைமையிலான தமிழ்நாடு கள் இயக்கதினர் உள்ளிட்ட பல்வேரு கட்சியினரும், பொதுமக்களும் மாவீரனின் மணிமண்டபத்தில் வீரவணக்கம் செலுத்தினார்கள்.
பிற்பகல் 2-மணிக்கு எமது கட்சியின் சார்பில் மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம் காங்கயம் மேலப்பளைத்தில் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.மேலப்பாளையம் ஊர்பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கொங்குதமிழர்கட்சியின் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் சேலம் ஆர்.ராஜேந்திரன்,துணைத்தலைவர் முனைவர் மு.தம்பித்துரை,துணைச்செயலாளர் கே.பரமசிவம்,பொருளாளர் பி.ஜோதி,துணைப்பொருளாளர் எஸ்.கே.நந்தகுமார்,தலைமை நிலையச்செயலாளர் டி.எஸ்.சண்முகம், மாவட்ட அமைப்பாளர்கள் திருப்பூர் கே.எஸ்.திருநாவுகரசு,ஈரோடு எஸ்.அண்ணாதுரை,நாமக்கல் பி.ராஜ,சேலம் பி.பிங்கிள்,கரூர் சி.டி.மூர்த்தி,கோவை எஸ்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக