வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கொங்கு தமிழர் கட்சி ஏன்?எதற்காக?



           மாநில கொங்கு தமிழர் பேரவை
        பழையகோட்டை பாதை,அய்யாசாமிநகர்,காங்கயம்,திருப்பூர். 638701
                            பேச:-98651-26679,8825264949
டி.கே.தீரன்சாமி(மாநிலஅமைப்பாளர்)
  9-2-2011 ஜீ.வி பத்திரிக்கையில் அம்மாவுக்காக புதியகொங்குகட்சி என்ற தலைப்பில் எமது கொங்குதமிழர்கட்சி உதயமாகும் செய்தி 2பக்கத்தில் என்னுடைய பேட்டி மற்றும் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது. ஜீ.வி.வெளியான நாள் முதல் எனக்கு ஆலோசனைகளும், பாராட்டுகளும் வந்தது.ஆனால் மறுபுறம் அலைபேசியில் முகமும்,முகவரியும் தெரியாத நபர்களிடம் இருந்து ஏராளமான மிரட்டல்கள்,பதிவு செய்ய முடியாத ஆபாச வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன.


 காங்கயம் மண்ணில் பிறந்து வெள்ளையர்களுக்கு எதிராக வீரமுழக்கம் இட்ட இந்திய விடுதலைப்புலி மாவீரன் இரத்தினம் தீரன்சின்னமலையின் ஆசிபெற்ற கொங்கு நாட்டுப் போராளி,சமுதாயத்தின் விடிவெள்ளி கோவைசெழியனாரின் 11ஆம் ஆண்டு நினைவுதினம்-மற்றும் வீரவணக்கம் நிகழ்ச்சியில் எமது மாநில கொங்கு தமிழர் பேரவையின் 9ஆம் ஆண்டு நிறைவு மற்றும் கொங்கு தமிழர் கட்சியின் கொள்கை வெளியீட்டு விளக்கக் கடிதம். 


 எமது பேரவை கடந்த 9ஆண்டுகளில் பல்வேரு சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்துச்செல்கிறது.சமுதாயக் கட்டமைப்பைத் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமைக்காக போராடி சமுக விரோதிகளின் பிடியிலிருந்து மீட்டுள்ளோம்.எமதுமீட்பு யுத்தத்தின் நிகழ்வுகளை வரும் காலங்களில் தொடர்ந்து எழுதஉள்ளேன்.

 நமதுதேசம் பல ஆயிரக்கணகான உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் என்ற பெயரில் மீட்கப்பட்டது.ஆனால் இன்று லஞ்சம்,ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளது.நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி எனும் அரசியல் கட்டமைப்பு ஒன்று தேவை.வீரியத்துடன் செயல்படும் சமுதய,சாதீய அமைப்புகள் இது போன்ற அரசியல் கட்டமைப்புகளில் தங்களை உடனடியாக இணைத்துக்கொண்டு வரும் சட்டமன்றத்தேர்தலில் உழல்-ரவுடியிசத்திற்கு எதிராக பொங்கி எழவேண்டும்.

 கொங்குதமிழர்பேரவையின்-அரசியல் பயன்பாட்டிற்காகவும்,கொங்கு கவுண்டர் மற்றும் தமிழகம் முழுவதும் பரவியுள்ள வேளாளர் சமூக மக்கள் இடையே பகுதிவாரியாக செயல்படும் அனைத்து வேளாளர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து கொங்கு,கவுண்டர்,வேளாளர் சமுதாயத்தின் அரசியல் முகவரியாக கொங்கு தமிழர் கட்சியின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

 டி.கே.தீரன்சாமியாகிய எம்மை மாநில அமைப்பாளராகக் கொண்டு மாநில   கொங்கு தமிழர் பேரவை 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.எமது பேரவையின் செயல்பாடுகள் தொடர்ந்து தொய்வுஇல்லாமல் எம்மால் முடிந்த மட்டும் செய்து வருகிறோம்.பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக இதுவரை தளராமல் வீரியத்துடன் போராடி வருகிறோம். கோவைசெழியனாரின் மரணத்துக்கு பிறகு கொங்கு இயக்கம் தொய்வு நிலையில் தேய்ந்து கொண்டிருந்தது.நம் மக்களின் பாதுகாப்புக்கு நமக்கு என ஒரு வலிமையான கட்டமைப்பு தேவை என்ற சூழலில் உருவானதுதான் கொங்கு தமிழர் பேரவை.மேலும் எமது பேரவையின் 10 ஆண்டுகால செயல்பாடுகள் முழுவதையும் எமது வலைதளமான http://kongutami`lar.blogspot.com காணவும்.

  2008-ல் நடைபெற்ற கருமத்தம்பட்டி மாநாட்டில் கொ.மு.க உதயமானது.அந்த மாநாட்டில் கட்சி பாகுபாடு இல்லாமல் சுமார் 5 லட்சம் மக்கள் ஒன்று திரண்டனர்.இந்த மாநாடு வெற்றிபெற கொங்குசமூகத்தைச் சார்ந்த அனைத்து அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஒத்துழைப்புக் கொடுத்தனர்.மாநாடு பிரமாண்டமாக நடந்து வெற்றிபெற்றது.

 உடனடியாக அனைத்து அரசியல்கட்சியின் தலைவர்களை குறிப்பாக ப.ஜ.கவின் அத்வானி,காங்கிரஸ்சின் குலாம்நபிஆசாத்,அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் அம்மா,தி.மு.கவின் தளபதி ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கொ.மு.கவின் தலைவர் பெஸ்ட் ராமசாமி,பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு கிடைத்தது.ஆனால் அத்தகைய சூழ்நிலையில் அரசியல் நெளிவு,சுளிவுகள் தெரியாத இருவரும் தான்த்தோன்றித்தனமாக அந்த நேரத்தில் கிடைத்த அரிதினும் அரிய வாய்ப்பை கை நழுவவிட்டனர்.

 கருமத்தம்பட்டி மாநாட்டுக்காக 15 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வசூலிக்கப்பட்டு உள்ளது.அதன் பிறகு 2009 மக்களவை தேர்தல் நிதி,ஜவுளிப்பாதுகாப்பு,மாணவர்அணி,விவசாயிகள் வாழ்வுரிமை என்ற பெயரில் தொடர்ந்து மாநாடுகள் நடத்தப்பட்டன.அந்த மாநாடுகளுக்கு கோடிக்கணக்கில் நிதி வசூலிக்கபட்டு உள்ளன.அந்த நிதி ஆதாரங்கள் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை.

 2009 மக்களவைத் தேர்தலில் கொ.மு.க தனித்துப் போட்டியிட்டது.அப்போது சென்னையில் எம்மிடம் பேசிய பல அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உங்கள் சாதிக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிபெற்று விடும் என்று கூறினார்கள்.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக கொ.மு.க பார்க்கப்பட்டது.

 அன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழர்களின் மீதும் குறிப்பாக விடுதலப்புலிகளின் ராணுவத்தை அழித்து ஒழிக்கும் வகையில் கடுமையான தாக்குதல்களை இலங்கை அரசு இந்தியாவின் முழு ஒத்துழைப்புடன் நடத்தி வந்தது.உலகம் தோன்றிய நாள் முதல் உயிரினங்கள்-குறிப்பாக மனிதகுலத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் வன்கொடுமைகளின் உச்சம் ஈழத்தில் நடைபெற்று வந்தது.அதைத்தடுக்க வேண்டிய தி.மு.க அரசு மொளனியாக நடித்தது.மத்தியில் தி.மு.கவின் தயவில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ராஜபக்சேவின் வன்கொடுமைகளுக்கு துணை போனது. தமிழக வாக்காளர்களின் மனநிலை தி.மு.க கூட்டணிக்கு எதிராக திரும்பியது.

 கொங்கு சமூகம் எப்பொழும் கலப்பு இல்லாத தமிழ் வெறியர்கள்.ஈழத்தின்மீதும் விடுதலைப்புலிகளின் மீதும் கருணை கொண்டவர்கள்.ஈழப்பிரச்சனையில் கொங்கு தமிழர்கள் மனம் புழுங்கி-எரிமலையாக கொதித்தார்கள்.இதன் விளைவு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு வங்கியான கொங்கு சமுகத்தின் ஒருபகுதியினர் இந்த முறை நமது சாதிக்கு வாக்களிப்போம் என தி.மு.க கூட்டணிக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.பெரும்பாலான கொங்கு மக்களுக்கு கொ.மு.க என்ற கட்சியின் பெயர் தெரியாது,தலைவர்,நிர்வாகிகள் யார் என்று தெரியாது.ஆனாலும் எமது வோட்டு எங்கள் சாதிக்கு என்ற கோசத்துடன் வாக்குச் சாவடியை நோக்கிச் சென்றனர்.இதனால்தான் கொ.மு.க கடந்த மக்களவைத் தேர்தலில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறமுடிந்தது.

 கொங்கு மண்டலத்தில் 12 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.இதில் நீலகிரி தனித்தொகுதியாகும்.11 தொகுதிகளில் மட்டுமே கொங்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கவேண்டும்.ஆனால் தலித் வேட்பாளர் பவித்திரன் கொ.மு.கவின் சார்பில் நீலகிரி தனித் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.இதுவரை கொ.மு.கவின் பின்பு திரண்ட மக்கள் கூட்டம்,கொட்டிக் கொடுக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாய்கள் எதற்காக? 

 கொங்கு மண்டலம் முழுவதும் பல்வேறு தலித் கட்சியின் அராஜகங்கள்,வன்கொடுமை தடுப்புச்சட்டம் என்ற பெயரில் கொங்கு மக்களுக்கு எதிரான பொய் வழக்குகள்,வடக்குப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அட்டூழியங்கள்,சேலம் வீரபாண்டியார்,கரூர் கே.சி.பி,கோவை அதிரடி ஆனந்தன்,ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற ஆளும்கட்சியினர் கொங்கு மக்களை,தொழிலதிபர்களை ஒழிக்கவேண்டும்,அடிமைகளாக்கப் படவேண்டும் என்று முழுவீச்சில் செயல்பட்டு வந்தனர்.

 கொங்கு சமூகத்தை அச்ச நிலையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு நமக்கு என ஒரு சாதிகட்சி தேவை. இத்தகைய மனவோட்டத்தில் பிறந்ததுதான் கொ.மு.க.நீலகிரி தொகுதியில் தலித் வேட்பாளரை அறிவித்ததும்,பிரச்சாரத்தின் போது அவருக்கு கவுண்டர் பெண்களைக் கொண்டு ஆராத்தி எடுக்க வைத்து நாளிதழ்களில் ஆராத்தி படத்தை செய்தியாக வெளியிட்டதும் கொ.மு.கவின் முதல்சறுக்கல்.கோவை தொகுதியின் வேட்பாளர் ஈஸ்வரன் தனது கொள்கையால் கவரப்பட்டு 20 இஸ்லாமிய இளைஞர்கள் கொ.மு.கவில் இணைந்தனர்.இது சாதி,மதங்களை கடந்த கொங்கு நாட்டுக்கான அரசியல் கட்சி என்று கூறி கொங்கு மக்களுக்கான சமுதாயக்கட்சியை தடம் மாற்றினார்.

 கொங்கு சமூகத்தின் அரசியல் தளமான கொ.மு.கவை திசைமாற்றி இழுத்துச் செல்லும் ஈஸ்வரனின் தவறான போக்கை உணர்ந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த கொ.மு.க ஆதரவாளர்கள் அது முதல் தங்களது ஒத்துழைப்பை நிறுத்திக் கொண்டனர்.மேலும் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற விசைத்தறியாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்தில் அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்தது,கள் இறக்கும் போராட்டம் வாபஸ் பெற்றது போன்ற மக்கள் பிரச்சனைகளை முன் எடுத்துச்செல்லாமல் விலகி ஒடியதன் காரணமாக ஈஸ்வரன்,பெஸ்ட்டின் சமூதாய மதிப்பு சரியத்தொடங்கியது.

 அதன் விளைவு கொ.மு.கவின் தூண்களாக இருந்த பொருளாளர் ஆடிட்டர்,குமார.ரவிக்குமார்,முன்னால் காவல்துறை கண்காணிப்பாளரும்,கொ.மு.கவின் மாநில விவசாயப்பிரிவு செயலாளருமான பொள்ளாட்சிசுப்பிரமணி,தொண்டாமுத்தூர்இலட்சுமண கவுண்டர்,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோவை வழக்கறிஞர் ராஜேந்திரன்,கொங்கு கூட்டமைப்பின் நிருவனர் அதன் பொதுச்செயலாளர் மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் துணைத் தலைவரும் கொ.மு.க உருவாகக் காரணமாக இருந்தவருமான அரங்க.துரைராஜ் தேர்வேந்தன்,  என வரிசையாக வெளியேறத் தொடங்கினார்கள்.

 இதற்கு எல்லாம் ஒருபடி மேலாக கொ.மு.கவின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இஸ்லாமிய சமுகத்தைச் சார்ந்தவர் என்ற குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் வார இதழின் பேட்டி ஒன்றில் முன் வைத்தார் அக்கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் தேவராசன்.இந்தச்செய்தி வெளியான போது கொங்கு மக்கள் மத்தியில் சல சலப்பு ஏற்பட்டது.கொ.மு.கவின் பொதுச்செயலாளருக்கு அது பெறும் பின்னடைவு.கோவை மாவட்ட தலைவரை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார்கள்.ஈஸ்வரன் இஸ்லாமியர் என்ற தேவராசனின் குற்றச்சாட்டுக்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.அத்தகைய குற்றமும்,தேவராசன் காட்டிய ஆதாரங்களும் பொய்யானது என்று இதுவரை நிருபிக்கவும் இல்லை.

 அண்மையில் ஈஸ்வரன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலியுடன் சேர்ந்து ஈழத்தமிழர்களின் குருதியில் குளித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் ராசபக்சேவை சந்தித்து அங்கு தொழில் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டாதாக இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

 அடுத்து கள் இறக்க அனுமதி வேண்டி பல இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.அப்போராட்டத்தில் ஈடுபட்ட கொ.மு.க தலைவர்களையும்,தொண்டர்களையும் காவல்துறை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.இத்தகைய கைதுகள் காலையில் நடைபெற்று மாலையில் விடுதலை செய்வது வழக்கம்.இதுகூட அறியாத பெஸ்ட்,ஈஸ்வரன் கோஸ்டியின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தாங்கள் 15 நாள் சிறையில் அடைபடப் போகிறோம் என்ற அச்சத்தில் கொ.மு.கவை சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தின் சுவர்களை தாண்டிக்குதித்து தப்பி ஒடிய சம்பவங்களும்,அதன் தொடர்ச்சியாக பெஸ்ட்,ஈஸ்வரன் ஆளும் கட்சியினரிடம் சிபாரிசுக்கு சென்ற கதையும் நாடறிந்த உண்மை.இது தீரன்சின்னமலை தோன்றிய வீரத்தின் விளை நிலமான வேளாளர் இனத்துக்கு கிடைத்த அவமானப் பரிசு.

 பெஸ்ட்,ஈஸ்வரன் கூட்டணியின் குழப்பங்கள்,உள்ளடி வேலைகள்,சுயநலம்,தெளிவு இன்மை,பயம் போன்ற பிற்போக்குத்தனமான செயல்களின் காரணமக கொ.மு.கவின் அரசியல் சாம்ராஜ்யம் பாதாளச் சாக்கடையை நோக்கி சரிந்து விட்டது.

 தற்போதைய சூழலில் சமுதாயத் தேடலுக்கான அரசியல் தளம் ஒன்று தேவை.அதுதான் கொங்கு தமிழர் கட்சியாக உருவெடுக்கிறது.கொ.மு.கவில் இருந்து விலகி பலரும் இதில் இணையப் போகிறார்கள்.கொ.மு.க உருவாகத் துணை நின்ற சமுதாயப் பெரியோர்கள் பலரும் எங்களை முழுமையாக ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

 கொங்கு தமிழர் கட்சி அனைத்து சாதி மக்களுக்குமான அரசியல் கட்சி என்று பொய்சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை.ஏனெனில் வன்னியர்களுக்கு ராமதாஸ்,தலித்களுக்கு திருமாவளவன்,  பசுபதிபாண்டியன்,கிருஸ்னசாமி,நாடார்களுக்கு கரிக்கோல்ராஜ்,தேவர்மக்களுக்கு சேதுராமன்,இஸ்லாமியர்களுக்கு மு.மு.க,யாதவர்களுக்கு தேவநாதன் என்று அனைத்து சாதி,மதங்களுக்கும் தனித்,தனியே கட்சிகள் உள்ளன.அது போல அனைத்து சாதி,சமுதாயங்கள் அடங்கிய அ.தி.மு.க, காங்கிரஸ், தி.மு.க, ப.ஜ.க, தே.மு.தி.க, ம.தி.மு.க,
கம்யுனிஸட்கள்,என டசன் கணக்கில் சமத்துவ கட்சிகள் உள்ளன.

 அதனால் கொங்கு,கவுண்டர்,வேளாளர் சமூகத்தின் அரசியல் முகவரியாக வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு தமிழர் கட்சி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

எமது கட்சியின் முக்கியக் கொள்கைகள்:- 

 அனைத்து அரசியல் கட்சிகளின் மாநில,மாவட்ட,ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்தேர்தல்களின் போதும் வேட்பாளர்கள் நிலையில் எமது சமுதாயத்துக்கு பெருபான்மையான இடங்கள் ஒதுக்கித்தர வேண்டும்.மத்திய,மாநில அரசுகளின் அமைச்சர்கள்,உயரதிகாரிகள்,நீதிபதிகள்,வாரியம் மற்றும் தேர்வாணைக் குழுக்களின் தலைவர்,உறுப்பினர்கள் போன்ற அனைத்திலும் எமது சமூகத்துக்கு முன்னுரிமை அளிக்கப் படவேண்டும்.

 இத்தகைய கோரிக்கைகளை அ.இ.அ.தி.மு.க தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்றைய அம்மா காலம் வரை அந்தநிலை தொடர்கிறது.அதற்கு உதாரணம் 1991ல் .அ.திமு.க.ஆட்சியில் கே.ஏ.செங்கோட்டையன்,முத்துச்சாமி,துரை.ராமசாமி,சின்னச்சாமி போன்ற நால்வர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

 2001 ல் அம்மா அவர்கள் ஆட்சிப் பொருப்பேற்ற போதுசின்னச்சாமி,பி.சி.ராமசாமி,பொன்னையன்,செ.ம.வேலுச்சாமி ஆகிய நால்வருக்கும் அமைச்சர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்பொழுதும் அ.தி.மு.க தலைமையின் அருகில் கே.ஏ.செங்கோட்டையன்,பொன்னையன்,தம்பித்துரை ஆகியோர் செல்வாக்குடன் உள்ளனர்.

 ஆனால் தி.மு.கவின் நிலமை தலைகீழாக உள்ளது.அக்கட்சியின் வழக்கப்படி மாவட்ட செயலாளருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது வழக்கம்.தர்மபுரி மாவட்ட செயலாளாரும்,சட்டமன்ற உறுப்பினருமான எமது சமுகத்தைச் சார்ந்த முல்லைவேந்தன் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டு முன்னால் அமைச்சராகவே தொடர்கிறார்.2006ல் திருச்சங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காந்திச்செல்வன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.அவரது தோல்விக்கு குழி தோண்டியவர் தி.மு.க சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம்.அதே முறையில் கரூர் தொகுதியின் வாசுகிமுருகேஸ் உட்கட்சி எதிரியும்,மைனாரிட்டி சமுகத்தைச் சார்ந்த கே.சி.பியால் தோற்கடிக்கப்பட்டார்.

 2009ல் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகிமுருகேஸ் விபத்தில் மரணம் அடைந்தார்.தி.மு.கவின் வழக்கப்படி வரிசுகளுக்கு(மகன்,மகள்,மனைவி,கணவர்,சகோதரர்) பதவி என்ற அடிப்படையில் அப்போது கட்சிப் பணியில் இருந்த வாசுகியின் கணவர் முருகேஸ்,சகோதரர் ரவிக்குமார்ஆகிய இருவரில் ஒருவருக்கு மாவட்டச்செயலாளர் பதவி கொடுத்திருக்கவேண்டும்.ஆனால் மைனாரிட்டி சமூகத்தை சார்ந்த கே.சி.பி யின் ஆதரவினால் மற்ரொரு மைனாரிட்டியான நன்னியூர்.ராஜேந்திரனுக்கு அந்த வாய்ப்பு தாரை வார்க்கப்பட்டது.

 குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி.ராஜாவின் மாவட்டச் செயலாளர்,அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டது.அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட பின்பும் இதுவரை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.அதே நேரத்தில் சேலத்தில் குடிசைகள் பிரித்த வழக்கில் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு ஆளான வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது கட்சித்தலைமை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.லஞ்ச வழக்கில் தனது அதிகாரத்தை மிகையாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பூங்கோதை ஆலடி அருணாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.ஆனால் கனிமொழியின் நாடார் சமூதாய பாசத்தின் காரணமாக குறுகிய காலத்தில் அருணாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. 

 சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.புலனாய்வில் குற்றம் சாட்டப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது கட்சி தலைமை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவருடைய ஒன்றியச்செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவிகளில் பாதுகாப்புடன் தொடர்கிறார். 

 இந்தியாவை ஏன் உலகத்தை உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் கதாநாயகன் ஆண்டிமுத்துராசாவின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் பதவி எந்த ஆபத்தும் இல்லாமல் தொடர்கிறது.கோவை மாவட்டத்தை பொருத்தவரை பொங்களூர் பழனிசாமிக்கு சாதாரண இலாக்கா அடங்கிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.கட்சியில் வீரபாண்டியாருக்கும்,கே.சி.பிக்கும் உள்ள முக்கியத்துவத்தில் பாதிகூட பொங்களூரருக்கு இல்லை.எமது சமூதாயத்துக்கு தி.மு.க கட்சியிலும்,ஆட்சியிலும் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதுதான் எங்கள் கணக்கு.

 கூட்டணியில் சீட்டு வேண்டுமென பேரம் பேசுவதற்கு வசதியாக கொங்கு தமிழர் பேரவையை கட்சியாக மாற்றவில்லை.சமுதாய முக்கியத்துவம் என்பதுதான் எங்களின் ஒரே நிலைப்பாடு.வரும் காலங்களில் எமது சமுகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டு.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்து !இல்லை எனில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.உயர்நீதி மன்றத்தின் கிளை கோவையில் அமைக்கப் படவேண்டும்.கோவையை துணைத் தலைநகரமாக மாற்றவேண்டும்.மாசு படிந்த நீர் ஆற்றுப் படுகைகளில் கலப்பதை தடுக்கவேண்டும்.போன்ற கோரிக்கைகளை சட்டமன்றத் தேர்தலில் முன்வைக்கப் போகிறோம்.மார்ச் 13 கோவை செழியனாரின் 11 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் கொங்கு தமிழர் கட்சியின் அரசியல் முகவரி தொடங்கும்.          
best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

ஏன் இத்தனை குழப்பம்? ஒரே கட்சியாக, ஒரே முனைப்பாக இருந்தால் கட்சிக்கு ஆதரவு இருக்கும்.

பாருங்க, இந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டமும் இது வரை வரவில்லை. காரணம் கொள்கை என்று ஒன்றுமில்லை. வீணாகப் புலம்பி என்ன பிரயோஜனம்?