தமிழினத்தின் மாவீரனை பத்து மாதம் சுமந்து பக்குவமாய் பெற்றெடுத்து பாலூட்டி தாலாட்டி வளர்த்த அன்னையே!
அம்மா பார்வதித்தாயே!எங்கள் பராசக்தியே!பகவதித்தாயே!கண்ணகியே!
உன் கண் முன்னே ஈழத்தின் விடியலை காணமுடியவில்லையே!
கண் இருந்தும் உம்மை எங்களால் காக்க முடியவில்லையே!
உலக அரங்கில் ஊழலின் தேசமாக நாங்கள் உயர்ந்து நிற்கிறோமே அம்மா!பாசத்தின் பிடரியில் அடித்து மோசம் செய்து கொண்டிருக்கிறோமே அம்மா!
நமது துரோகிகளை அழிக்க!துர்க்கர்களை துவசம் செய்ய அறிவாயுதம் ஏந்தி நாங்கள் போராடத் தயராகிவிட்டோமே அம்மா!
தேர்தல் எனும் யுத்தகளத்தை நாங்கள் சந்திக்க தயராகிவிட்டோமே அம்மா!ஆசிர்வதிக்க வேண்டிய நீங்கள் ஆண்டாளாக அவதாரம் அடைந்துவிட்டீர்களே அம்மா! உம்மின் பாதம் தொட்டு வணங்குகிறோமே அம்மா!
தீரன்சின்னமலை-அரசியல்,சமூக,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக- டி.கே.தீரன்சாமி
1 கருத்துகள்:
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்...
கருத்துரையிடுக