புதன், 22 அக்டோபர், 2014

விஜயின் கத்தி-தமிழ்த்திரையின் உச்சம்

கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம் 


டத்தின் கதையாக..............

விவசாய நிலங்களை அபகரிக்க நினைக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய  அமைதியான சமுக ஆர்வலர் ஜீவானந்தன் (விஜய்) சுடப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில்...........

சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு சிறைக்கு போய் தப்பி வரும்  துடிப்பான வலிமையான இளைஞன் கதிரேசன் (இன்னொரு விஜய்) சந்திக்க......

ஒரே உருவத்தில் இருக்கும் திருடன் கதிரேசன் சமுக ஆர்வலர் ஜீவானந்தமாக மாறி கிராமத்து விவசாய மக்களுக்காக அவ்வப்போது தன் காதலி (சமந்தா)வுடன்  கொஞ்சிக்  குலாவினாலும் பன்னாட்டு நிறுவன முதலாளியை (நீல் நிதின் முகேஷ்)  எதிர்த்து போராடுகிறார்  

திருடன்  கதிரேசன் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா...? சமுக ஆர்வலர் ஜீவானந்தம் என்ன ஆனார்....? என்பதை திரையில் தெரிந்துகொள்ளுங்கள் 

இயக்குனர் முருகதாஸ்.......அதிகமான .வணிக சினிமா சமாச்சாரங்களை கொஞ்சம் சமுக சிந்தனையுடன் படைத்துள்ள கத்தி படத்தின் திரைக்கதை நிறைய லாஜிக் ஓட்டைகளால்  தள்ளாடுகிறது    இந்தப் படத்துக்கு ஏன் கத்தி என்ற பெயர்...? அவருக்கே வெளிச்சம் 

நடிகர் விஜய்.....இருவேடங்களில் இரு வேறுபட்ட நடிப்பை காட்டுகிறார் அவரது அதீத ரசிகர்களுக்காக............கதிரேசனாக கலக்குகிறார்  
பொதுவான ரசிகர்களுக்காக......அமைதியான ஜீவானந்தனாக வருகிறார் 

சமந்தா........தனது அழகான கவர்ச்சிப் புன்னைகையால் படம்பார்ப்பவர்களின் இதயங்களை புரட்டி புரட்டி போட்டு தாக்குகிறார் முத்தான மூன்று பாடல்களில் அழகு ஓவியமாக தோன்றுகிறார் 

மற்றபடி சதீஷ் பேசும் ஒன்லைன் காமெடி வசனங்கள் பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை MNC கம்பெனி தலைவராக வரும் நீல் நிதின் முகேஷ் வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் கவர்கிறார் 

அனிருத் இசையில் பாடல்கள் அருமை...பின்னணி இசையில் அரங்கம் அதிர்கிறது The Sword of Destiny’..இசைக்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தில் தியேட்டருக்குள் தீபாவளிச் சரவெடி........செல்பி புள்ள....பாடல் கொளுத்தி போட்ட மத்தாப்பு

ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு கதிரேசன்-ஜீவானந்தம் இருவர் மனநிலைக்கு ஏற்ப இரு மாறுபட்ட வண்ணத்தை திரையில் படம் காட்டுகிறது ஜெயில் உடைபடும் காட்சி,360டிகிரியில் காட்டப்படும் சுரங்கப்பாதை காட்சி.......பிரமிக்க வைக்கிறது 

ஆக மொத்தத்தில்.................நீர்வள ஆதரத்தை பறித்து விவசாயத்தை அழிக்கும் தண்ணீர் கொள்ளையர்களை காவு வாங்கும் திரைப்படம்
கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம்..
நன்றி:-  PARITHI 16 மணி முன்பு (http://parithimuthurasan.blogspot.in)
என்ற வலைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது..நன்றி..

இவன்:-தெ.கு.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: