காங்கயம்,சிவன்மலையில் உள்ள மாவீரனின் பட்டாலிப் போர்பாசறையில் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை போன்ற அமைப்புகளின் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் இந்திய விடுதலைப் போராட்ட மாவீரன்,கொங்குநாட்டுச் சிங்கம் இரத்தினம் தீரன்சின்னமலையின் 208-வது நினைவு தின வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,மேலப்பாளையத்திலும்-மாவீரன் தூக்கிலிடப்பட்ட சேலம் மாவட்டம்,சங்ககிரி துர்கத்திலும்,மாவீரன் கோட்டை,கொத்தளங்கள் அமைத்து வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்த ஈரோடு மாவட்டம்,அறச்சலூர்-ஓடாநிலையிலும்,ஆயிதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட திருப்பூர் மாவட்டம்,கங்கயம் வட்டம்,சிவன்மலை பட்டாலி போர்ப்பாசறை நுழைவு வாயில் -உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக மாவீரன் தீரன்சின்னமலைக்கு மாலை,மரியாதை,வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்சிக்கு நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமை தாங்கினார்.கொங்குதமிழர்கட்சியின் மாநிலப்பொதுச்செயளாலர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.இராசேந்திரன்,மாநில தலைமை நிலையச்செயளாலர் டி.எஸ்.சண்முகம்,துணைப்பொதுச்செயளாலர் பி.கே.பரமசிவம்.பொருளாளர்கள் பி.ஜோதி,பி.என்.பாலு,மாநில தலைமை நிலையச் செயளாலர் டி.எஸ்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.நந்தகுமார்,திருப்பூர்மாவட்ட அமைப்பாளர் ஆர்.சண்முகம்,கோவை மாவட்ட அமைப்பாளர் குறுக்கத்தி பாலசுப்பிரமணியம்,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் மாநிலபொதுச்செயளாலர் கே.எஸ்.செல்வராஜ்,மாநில துணைப்பொதுச்செயளாலர் தாராபுரம்,சிபி அரசி தங்கவேல்,அதன் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் கே.கே.திருநாவுக்கரசு,மாவட்ட செயளார் கே.எஸ்.கார்த்திக்,வெள்ளகோவில் ஒன்றிய அமைப்பாளர் சு.இரவி,பாரதீய ஜனதாக்கட்சியின் தாராபுரம் ஒன்றியப்பொருப்பாளர் ஜெ.குமாரவேல் மற்றும் பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக