ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

மாவீரன் தீரன்சின்னமலையின் 208வது வீர வணக்கம்

தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு,கொங்குதமிழர்கட்சி,
தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மாவீரன் பிறந்த காங்கயம் மேலப்பாளையத்தில் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.


காங்கயம்,சிவன்மலையில் உள்ள மாவீரனின் பட்டாலிப் போர்பாசறையில் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை  போன்ற அமைப்புகளின் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் இந்திய விடுதலைப் போராட்ட மாவீரன்,கொங்குநாட்டுச் சிங்கம் இரத்தினம் தீரன்சின்னமலையின் 208-வது நினைவு தின வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

முன்னதாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,மேலப்பாளையத்திலும்-மாவீரன் தூக்கிலிடப்பட்ட சேலம் மாவட்டம்,சங்ககிரி துர்கத்திலும்,மாவீரன் கோட்டை,கொத்தளங்கள் அமைத்து வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்த ஈரோடு மாவட்டம்,அறச்சலூர்-ஓடாநிலையிலும்,ஆயிதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட திருப்பூர் மாவட்டம்,கங்கயம் வட்டம்,சிவன்மலை பட்டாலி போர்ப்பாசறை நுழைவு வாயில் -உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக மாவீரன் தீரன்சின்னமலைக்கு மாலை,மரியாதை,வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்சிக்கு நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமை தாங்கினார்.கொங்குதமிழர்கட்சியின் மாநிலப்பொதுச்செயளாலர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.இராசேந்திரன்,மாநில தலைமை நிலையச்செயளாலர் டி.எஸ்.சண்முகம்,துணைப்பொதுச்செயளாலர் பி.கே.பரமசிவம்.பொருளாளர்கள் பி.ஜோதி,பி.என்.பாலு,மாநில தலைமை நிலையச் செயளாலர் டி.எஸ்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.நந்தகுமார்,திருப்பூர்மாவட்ட அமைப்பாளர் ஆர்.சண்முகம்,கோவை மாவட்ட அமைப்பாளர் குறுக்கத்தி பாலசுப்பிரமணியம்,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் மாநிலபொதுச்செயளாலர் கே.எஸ்.செல்வராஜ்,மாநில துணைப்பொதுச்செயளாலர் தாராபுரம்,சிபி அரசி தங்கவேல்,அதன் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் கே.கே.திருநாவுக்கரசு,மாவட்ட செயளார் கே.எஸ்.கார்த்திக்,வெள்ளகோவில் ஒன்றிய அமைப்பாளர் சு.இரவி,பாரதீய ஜனதாக்கட்சியின் தாராபுரம் ஒன்றியப்பொருப்பாளர் ஜெ.குமாரவேல் மற்றும் பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 8 ஜூலை, 2013

கொங்கு தமிழன் இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு!


 காலிங்கராயர்,தந்தைபெரியார்,மாவீரன் தீரன்சின்னமலை போன்ற வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த, கொங்கு தமிழகத்தின், ஈரோடு மாவட்டத்தில்,கொங்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். கொங்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். 40வது, தலைமை நீதிபதியாக, இவர் பதவியேற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 2014ம் ஆண்டு, ஏப்., 26ம் தேதி வரை, தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார். டில்லியில் நடந்த, ஜெசிகலால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.ரிலையன்ஸ் வழக்கில், "ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது' என, தீர்ப்பளித்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கு பிறகு தமிழர் : சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியில் படித்த, நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, 1951- 54ல் பதவி வகித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின், இரண்டாவது தலைமை நீதிபதியாக, பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

அரசு பள்ளியில் படித்து பெரும் சாதனை நீதிபதி சதாசிவத்தின் தாய் பெருமிதம்:

"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்,' என, அவரது தாய், நாச்சாயி அம்மாள் பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய முதன்மை நீதிபதியாக சதாசிவம் தேர்வு செய்யப்பட்டது குறித்து, அவரது தாய், நாச்சாயி அம்மாள் கூறியதாவது:என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தி கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று, பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என, நினைத்த எங்களுக்கு, அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, திருமணம் செய்து வைத்தோம். லீவு எடுக்காமல் பணியாற்றுவதால், என்னை பார்க்க மட்டும் சொந்த கிராமத்துக்கு வருவார். தற்போது சண்டிகரில் பணியாற்றுகிறார். 19ம் தேதி, பதவியேற்பு விழாவுக்கு, 17ம் தேதியே நாங்கள் கிளம்பி, குடும்பத்துடன் டில்லிக்கு செல்கிறோம். சுயமுயற்சியால், என் மகன் வெற்றி பெற்றார்.என் மகனை பள்ளியில் சேர்த்ததுடன், அவராகவே ஒவ்வொன்றாக தேர்வு செய்து படித்தார். என் மகன், இந்தியாவின் முதன்மை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டது, எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி:-கல்விச்சோலை
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 24 மார்ச், 2013

திருகோணமலையில் அழிக்கப்படும் தமிழர் கலாச்சாரம்

திருகோணமலை மாவட்டத்தின் முகம் மாறி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் தொடங்கிய போர், முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்ததும், தமிழர் அடையாளத்தை அழித்து வருகின்றது.

விடுதலைப்புலிகளின் இராணுவப் பலம் சிதைக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களின் கலாசாரமும் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போராட்டம் இலங்கை அரசினால் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் பௌத்த அடையாளங்கள் தமிழர் நிலங்களில் முளைக்கத் தொடங்கியுள்ளன.
 
ஈழ வரலாற்றில் திருகோணமலை மண்ணுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோணேசர் ஆலயம், கன்னியா வெந்நீர் ஊற்று, வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம், சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், கங்குவேலி அகத்திய தாபனம் என்பன தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அம்சங்கள். இந்தச் சான்றுகள் திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் வரலாற்றை புராண இதிகாச காலங்களுக்கு இட்டுச் செல்கின்றது.
 
இதன் மூலம் தமிழர்களுக்கும், திருகோணமலைக்கும் உள்ள சிறப்பு வெளிப்பட்டு நிற்கின்றது. நீண்ட வரலாற்றை உடைய தமிழர்களின் வாழ்வியலில் போர் முடிவடைந்ததன் பின்னரான கடந்த மூன்று வருடங்களில் வரலாற்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
சைவ மக்களின் புனித தலமான கோணேசர் ஆலயம் இன்று சுற்றுலாத்தலம் போன்று மாற்றம் அடைந்து வருகின்றது. ஆலயத்தின் சூழல் கூட இன்று மாற்றம் பெற்றுள்ளது. ஆலயத்தின் பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் குறிப்பிட்ட தூரத்துக்குத் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதனால் கோயில் சூழலின்  இயற்கை அழகில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோணேசர் ஆலயச் சூழலில் மான் கூட்டங்களும், குரங்குகளின் கூட்டமும் தனி அழகு. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் ஏற்பட்ட போரின்போது, இலங்கை இராணுவம், கோட்டையிலிருந்து சம்பூர் பிரதேசத்தின் மீது பல் குழல் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டதனால் பீரங்கித் சத்த அதிர்வு காரணமாக கோணேசர் ஆலய சூழலில் இருந்த பெருமளவு குரங்குகள் காட்டுப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன.
 
இப்போது கோணேசர் ஆலயச் சூழலில் குரங்குக் கூட்டங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இதே போன்று தான் கடைகளின் ஆதிக்கம் ஏற்பட்டதன் காரணமாக மான்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது குறைவாக இருப்பதனால், மான் கூட்டங்கள் ஆலய சூழலில் இருந்து இன்று வெளியேறி வருகின்றன. 
 
அவை திருகோணமலை நகரசபை வளாகத்துக்குள்ளும், கடற்கரைப் பகுதிகளிலும் நடமாடித் திரிகின்றன. இதனால் ஆலயச் சூழலின் இயற்கை அழகு மாற்றமடைந்து வருகின்றது. ஆலய சூழலில் மான்களின் எண்ணிக்கை கூட தற்போது குறைவாகவே காணப்படுகின்றது.
 
கோணேசர் ஆலயம், திருகோணமலை சைவ மக்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. உலகில் வாழும் இந்து மக்களின் அடையாளமாக இந்த ஆலயம் விளங்குகின்றது. எனவே ஆலய பரிபாலன சபையினர் மேற்குறிப்பிட்ட சில விடயங்களில் தமது கவனத்தை திருப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும். 
 
புண்ணிய தலமாக விளங்கும் இந்த ஆலயத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றி வருவதற்கு இடமளிக்கக் கூடாது. இந்த ஆலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அரசுடன் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
 
கன்னியா வெந்நீர் ஊற்று, கோணேசர் ஆலயத்துடன் தொடர்புபட்டது. கன்னியா நீரூற்றைப் பற்றிப் புராணங்கள் கூறும் வரலாற்றின் படி மகாவிஷ்ணு மூர்த்தியே  அவற்றை உற்பத்தியாக்கினார் எனக் கூறப்படுகிறது. 
 
கோண நாயகரிடம்தான் பெற்ற இலிங்கத்தைக் கையிலேந்திக் கொண்டு, இலங்கை மன்னன் இராவணன் செல்லும் போது விஷ்ணு மூர்த்தி ஓர் அந்தண வடிவம் தாங்கி தசக்கிரீவனைச் சந்தித்து அவன் தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார். 
 
இலங்கைக் காவலன் அதைக் கேட்டதும் துக்கத்தில் ஆழ்ந்தான். முனிவர் அவனைத் தேற்றிய பின்னர், தனயன் தாய்க்குச் செய்ய வேண்டிய கன்மாதிக் கிரியைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தினார். இந்தப் புண்ணிய தலத்தில் கன்மாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்ச வீட்டை அடைவது திண்ணம் என்று கூறினார். 
 
அந்த அந்தணரே அதைச் செய்து முடிக்க வேண்டுமென்று இராவணன் வேண்டிக் கொண்டதற்குச் சம்மதித்த அந்தணர் அவனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று அந்த இடத்தில் தமது கையிலிருந்த தண்டினால் ஏழு இடத்தில் ஊன்றினார்.
 
அந்தண வடிவங்கொண்ட மகாவிஷ்ணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுத் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. இறந்தவர்களுக்கு அந்த இடத்தில் அந்தியேட்டிக் கிரியைகள் செய்தால், அந்த ஆன்மாக்கள் முத்தியடையுமென நம்பப்படுகின்றது. 
 
இராவணன் தனது தாயாருக்குரிய கன்மாதிக் கிரியைகள் எல்லாவற்றையும் அங்கு முறைப்படி செய்தான் என வரலாறு கூறுகின்றது. தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. 
 
அத்துடன் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய சூழலில் கூட பாதுகாப்பு பிரிவினர் நிலை கொண்டுள்ளனர். இது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
 
குளக்கோட்ட மன்னனுடன் தொடர்புடைய சம்பூர் பிரதேசம், தமிழரின் கலை, கலாசார விடயத்தில் ஆணிவேராகவும் கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரின் பின்னர் அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் இன்று வரை  தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 
 
இதனால் தனித்துவமான பாரம்பரியமுடைய கிராமிய கலைகள் கூட அந்த மக்களிடம் இருந்து சிதைவடைந்து வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள காளி கோயில்களில் மிகவும் பழைமையான ஆலயமாக விளங்குவது சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயமாகும். 
 
இந்த ஆலயம் கூட வெளியாரால் போரின் போது உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. விலை மதிக்க முடியாத பல விக்கிரகங்கள் கூட எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
கடந்த வருடம் வைகாசி மாதத்தில் மட்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட கடற்படையினர் அனுமதி வழங்கி இருந்தனர். 
 
அதன் பின்னர் ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட  கடற்படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை. ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் சூழல் காணப்படுகின்றது.
 
இந்த நிலையில், உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழரின் வரலாற்றுப் பிரதேசமான சம்பூர் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலையில் தமிழரின் பண்டைய அடையாளங்களை பார்க்கும் போது, முத்தூர் என்பது இன்று மூதூர் என்று அழைக்கப்படும் திருகோணமலையிலுள்ள ஓர் இடமாகும். 
 
தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது. திருமங்கலாய் தொடங்கி முத்தூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது. 
 
இன்று கங்குவேலி என்று பெயர் குறுகிவிட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என முத்தூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது.
 
அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. 
 
ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும். 
 
தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோணமலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது. 
 
திருமங்கலாய்ச் சிவன்கோயில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது. 
 
தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. 

நன்றி:உதயன் ஊடகம்
 
 
 
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கையை இந்தியாவுடன் இணைக்கவேண்டும்!


ஈழப்பிரச்சனை... இனப்படுகொலை என்பதை விட….

அதற்கு காரணமான இரத்த வெறிபிடித்த ஓநாய் இராசாபக்சேவை சர்வதேச அரங்கில் நிறுத்தி அணு! அணுவாக சுட்டுக்கொள்ளவேண்டும்!

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி!அங்குள்ள சீனா நிலைகளை விரட்டி அடித்து விட்டு..இலங்கை பகுதிமுழுவதையும் நமது கட்டுக்குள் கொண்டு வந்து....சிங்களர்கள் வாழும் நிலப்பகுதி...தமிழர்கள்வாழும் நிலப்பகுதி என இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக அறிவிக்க வேண்டும்.

இல்லைஎனில் மாணமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஒட்டுமொத்த உலகத்தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு அகண்ட தமிழகம் அமைத்துக்கொள்வதைத்தவிர…தமிழர்களின் பாதுகாப்பிற்கு வேறு வழியே இல்லை……

இவன்-
-
தெ.கு.தீரன்சாமி,மாநிலதலைவர்,கொங்குதமிழர்கட்சி மற்றும்
தமிழநாடு தீரன்சின்னமலை பாசறை-
www.facebook/theeran.samy...
http://theeranchinnamalai.blogspot.com,
http://kongutamilar.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 21 ஜனவரி, 2013

சட்டம் சோம்பலானது!அருண்செட்லி ஆய்வு வேடிக்கையானது!





   பாரதிய சனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,ராஜ்யசபை எதிர்கட்சித் தலைவரும்,மிகச்சிறந்த வழக்கறிஞருமான அருண்செட்லி அவர்கள் பெங்களூருவில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில்-                               "இந்தியாவின் சட்டமுறை சோம்பலானது,மாற்றப்பட வேண்டியது" என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அருண்செட்லியின் குற்றசாட்டு குறித்த செய்தி தினமலர் ஊடகத்தில் வெளியானது.அதற்கு நான் எழுதிய கருத்துரை.

சோம்பலான சட்டத்தை தட்டி எழுப்பி சுறு சுறுப்பு ஆக்க வேண்டிய பொருப்பில் உள்ளவர் அருண்செட்லி. இந்தியத்திருநாட்டின் ராஜ்யசபை எதிர்கட்சித்தலைவர் செய்யவேண்டியபணி அது. அவரே புழம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.

அவர் சட்டத்துறை அமைச்சராக இருந்த பொழுது!சட்டத்தை புணரமைக்கும் பணியை முயற்சித்திருக்கலாம்.அதைவிடுத்து நடை முறை சட்டத்தை குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.

தற்பொழுது உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் லஞ்சமும்,உழலும் பெறும் தடையாக இருக்கிறது.எத்தகைய சட்டங்களை திருத்தினாலும்,கடுமையாக்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவது அருண்செட்லியை போன்ற மக்கள் பிரதிநிதிகள்தானே!
 பி.ஜே.பி தலைமை ஊழலில் திலைக்கும்போது! இவர் மட்டும் கூட்டம்போட்டு ஆலோசனை பேசி என்ன உபயோகம் உள்ளது.

ஒன்று மட்டும் நிச்சயம் மக்களை முட்டாள்களாக நினைத்து பலலட்சம் கோடிகளை கொள்ளையடித்துவரும் கும்பலுக்கு எதிராக மக்கள் அறிவாளிகளாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மக்கள் மனதில் ஊழலுக்கு எதிரான நெருப்பு கணந்து கொண்டிருக்கிறது.அது எரிமலைப் பிழம்பாக வெடித்துச் சிதறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

அன்று ஏராளாமான உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றோம்.இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைகளாக உள்ளோம்.ஊழல் எதிர்ப்பு முன்னனி நாடு முழுவதும் பரவட்டும்.வீரத்தின் விளைநிலமான தினமலர் போன்ற தியாக ஊடகங்கள் வழிநடத்தட்டும்.அப்பொழுது இதே சட்டங்கள் சோம்பல் இல்லாமல் வீரத்துடன் செயல்படும் என்பது திண்ணம்.

மேலும் இந்தியாவின் சட்டமுறை சோம்பலானது அல்ல.அதை செயல்படுத்துபவர்கள்தான் சோம்பலானவர்கள்.அவர்களது வேகம் லஞ்சமும்-ஊழலிலும் பரபரக்கிறது.சட்டத்தை மாற்றுவதைவிட-சட்டம் செயல்படுவதற்கு தடையாக இருக்கும் கருங்கொல்லிகளை ஒழிப்பதுதான் சரியாக இருக்கும்.

இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 8 அக்டோபர், 2012

கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள்


"தமிழ் கலைச் சொல்லாக்கத்தை வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடுத்த தலைமுறைகளுக்கு நேர்மையாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும்,'' என, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசினார்.

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது. விழாவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசியதாவது: காலையில் இருந்து மாலை வரை நாம் செய்யும் செயல்களைக் கூறும் போது, ஆங்கிலமும், தமிழும் கலந்து கூறுகிறோம். இப்படி பேசுவது படித்தவர்களாகிய நாம் தான். பாமர மக்கள் இப்படி பேசுவது கிடையாது. அதனால் தான் சொல் சிதைவு, மொழி சிதைவு ஏற்பட்டுவிட்டது. இதை மாற்றி அமைக்க இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பேருந்து நிலையம் என்றால் பலருக்குத் தெரிவதில்லை. தமிழகத்தில் இருக்கிறோமா என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழில் சொல் பஞ்சம் என்பதே இல்லை. ஆனால், பயன்படுத்துவதில்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என நினைப்பர் என்று கருதி ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால், முழுமையாக ஆங்கிலம், தமிழ் பேசுபவர்களை பார்த்ததில்லை.

ஆங்கில மோகம்: நாம் ஆங்கில மோகத்தில் விழுந்து விட்டோம். பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே நேரம், தமிழ் மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்; எழுத வேண்டும். தமிழகத்தில் கரன்ட் என்பது மின்சாரம் ஆவதற்கு, 24 ஆண்டுகள் ஆகியுள்ளது. ரோம் நகரத்தில் சர்ச்சிற்கு வருபவர்களுக்கு, காலணிகளைத் துடைப்பது ஒருவரின் வேலை. அவர் யாரிடமும் ஊதியம் வாங்குவதில்லை. ஆனால், லத்தின் மொழி பேசுபவர்களிடம் மட்டும் ஊதியம் வாங்குவார். இது, அவருக்கு உள்ள மொழிப் பற்றைக் காட்டுகிறது.

தமிழ் பெயர் தவிர்ப்பு: நல்ல தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வது கூட கிடையாது. காரணம், தயக்கம். உணவு விடுதிகளில் சோறு கேட்கும் போது, "ரைஸ்' கொடுங்கள் என்கிறோம். ஆங்கிலேயருக்கு சோறு, அரிசிக்கு "ரைஸ்' என்று ஒரே பெயர் தான். தமிழை நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, கலைச் சொல்லாக்கத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாகர்கோவிலில் "இருக்கின்றது' என்ற சொல், மதுரை வரும் போது "இருக்கு' என, மாறுகிறது. அது, விழுப்புரம் வரும்போது "கீது' என்று மாறுகிறது. அதே சென்னைக்கு வரும்போது "தோ' என்று ஒரு எழுத்தாக மாறுகிறது. இது ஆவணமாக மாறிவிடும். இந்த பதிவிற்கு நாம் காரணமாக மாறிவிடக்கூடாது என்பது இந்த கருத்தரங்கின் நோக்கம். கம்பர், இராமாயணத்தில் ராமன் என்று கூறமாட்டார்; இராமன் என்று தான் கூறுகிறார். லட்சுமணனை இலக்குமணன் என்று தான் கூறுகிறார்.

கொரியாவில் 450 சொல்: பாரதிக்கு தமிழ் மேல் உணர்வு இருந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ச் சங்கம் வேண்டும் என, கனவு கண்டார். தற்போது, மதுரையில் சங்கமும், தஞ்சையில் பல்கலைக் கழகமும் வந்துவிட்டது. இங்குள்ள மொழியை அங்கு கொண்டு சென்று ஆங்கிலத்தை பலப்படுத்திக் கொண்டனர். உலகில் உள்ள மொழிகளில், 20 சதவீதம் தமிழ் மொழி சொற்கள் உள்ளன. கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள் உள்ளன. "தேர் இஸ் சம்திங்' என்று சொன்னால், உடலில் உள்ள எட்டு கலோரிகள் போகின்றன. அதே வார்த்தை, "அங்கு ஏதே உள்ளது' என்று தமிழில் கூறினால், ஒன்றரை "கலோரி' மட்டுமே செலவாகிறது. எனவே, தமிழ் என்பது இதயத்தில் இருந்து வருகிறது.

பிரித்து பேச வேண்டும்: எனவே, படித்தவர்கள் மத்தியில் கலைச் சொல்லாக்கம் வளர வேண்டும் என்பதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இல்லாத தமிழ் வார்த்தையா? பேசும்போது, பிரித்துப் பேசுவதை பிரித்துப் பேச வேண்டும். சேர்த்துப் பேச வேண்டியதை சேர்த்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால் பொருள் மாறிவிடும். எனவே, அடுத்த தலைமுறையிடம் தமிழ் மொழியை முறையாக, சரியாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு சேகர் பேசினார்.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் குணசேகரன் பேசுகையில், "கலைச் சொல்லாக்கம் என்பது, மற்ற மொழிகளில் உள்ள சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டும் என்பது தான். தமிழில் இல்லாத சொற்களே இல்லை. எனவே, பிறமொழி சொற்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருத்தரங்கம் மூலம் சிறந்த கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்' என்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணை பேராசிரியர் செல்லகுமார் வரவேற்று பேசினார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜன் பிள்ளை துவக்கவுரை நிகழ்த்தினார். கருத்தரங்கம், மூன்று நாட்களுக்கு ஆறு அமர்வுகளாக நடத்தப்படுகிறது.

நன்றி:மேற்கண்ட செய்தி தினமலரில் வெளியாகி-தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வளைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.tiaskk.blogspot.com



best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

இலங்கை ஊடகத்தில் தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தும் கார்டூன்-கடும்கண்டனம்

   தமிழக முதல்வரையும் இந்தியப் பிரதமரையும் கற்பனைக்கெட்டாத படுகேவலமான ரசனையுடன் சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, இந்தியாவின் நட்புநாடான (!) இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நடத்தும், இலங்கை அரசுக்கு ஆதரவான லக்பிமா பத்திரிகை. வக்கிரமும்,கொச்சையும் நிறைந்த அந்த கார்டூனை நாம் வெளியிட முடியாத சூழ்நிலை என்றால் எந்தளவுக்கு கேவலமாக இருக்கிறது நீங்களே யோசியுங்கள்!

இதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களது கடுமையான கண்டனத்தை பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடனே அனுப்புக:

1. இந்திய வெளியுறவுத் துறை, புதுதில்லி மற்றும் இந்திய தூதரகம் கொழும்பு-மின்னஞ்சல் முகவரிகள்:


eam@mea.gov.in ,
adveam@mea.gov.in,
diream@mea.gov.in,
osdeam@mea.gov.in,
useamo@mea.gov.in

hc.colombo@mea.gov.in,
dhc.colombo@mea.gov.in,
minister.colombo@mea.gov.in,
pic.colombo@mea.gov.in,  
pol.colombo@mea.gov.in

2. இலங்கைத் தூதரகம், சென்னை-மின்னஞ்சல் முகவரி:

Sri Lanka Deputy High Commission in Chennai
sldehico@md3.vsnl.net.in 

3. லக்பிமா பத்திரிகை மற்றும் அதனை நடத்தும் சுமதி நிறுவனத்தினரின் மின்னஞ்சல் முகவரிகள்:


info@lakbima.lk,
samantha@sumathi.lk,
samadara@sumathi.lk,
cco@sumathi.lk,
chamind@isplanka.com,
asstdirectorhr@sumathi.lk,
maheshsgc@sumathi.lk,
info@sumathi.lk

4. பத்திரிகை தர்மம் குறித்த ஐ.நா. யுனெஸ்கோ பிரிவினரின் மின்னஞ்சல் முகவரிகள்:


v.jennings@unesco.org,
m.lourenco@unesco.org,
v.nadal@unesco.org,
g.berger@unesco.org,
s.coudray@unesco.org,
t.turtia@unesco.org

5. பத்திரிகை சுதந்திரம் குறித்த பன்னாட்டு பத்திரிகை அமைப்புகளின் மின்னஞ்சல் முகவரிகள்:


ifj@ifj.org,
beth.costa@ifj.org,

ifj@ifj-asia.org,
jacqui.park@ifj-asia.org,
katie.richmond@ifj-asia.org,
josh.bird@ifj-asia.org,

rsf@rsf.org,
asie@rsf.org

6. பத்திரிகை தர்மம் குறித்த பன்னாட்டு அமைப்புகளின் மின்னஞ்சல் முகவரிகள்:


iMediaEthics 
info@imediaethics.org,
editor@mediaethicsmagazine.com
The Center for International Media Ethics
info@cimethics.org
Center for Journalism Ethics
ethics@journalism.wisc.edu,
Society of Professional Journalists
jskeel@spj.org,
cdigangi@spj.org,


மேலே குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் உங்களது கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள். (அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் COPY/PASTE செய்து ஒன்றாக TO வில் வைத்து ஒரே மின்னஞ்சலாக ஓரிரு வினாடிகளில் எளிதாக அனுப்பிவிடலாம்)

மாதிரிக்கு ஒரு கடிதம்

கீழ்கண்ட கடிதத்தை பயன்படுத்துங்கள், அல்லது நீங்களே உங்களது கண்டனத்தை எழுதுங்கள்.


Dear Madam/Sir,

Sub: Sri Lankan Media carries vulgar, offensive sketch of TamilNadu Chief Minister & Prime Minister of India

I write to protest and condemn in the strongest terms the cartoon, by Hasantha Wijenayake, in the Sunday LAKBIMA News of 9 September 2012, Vol. 06, No.13, under the Politics Page. (Lakbima News is a weekly English newspaper in Sri Lanka. It is published on every Sunday, by Sumathi Newspapers (Pvt) Ltd)

The cartoon violates all ethical principles of journalism and media expression not only in Sri Lanka but globally. There is an accepted form of visual journalism in commenting on current social, economic, cultural and political issues within and between countries. In this cartoon, however, the newspaper has allowed for gross sexism and crudity to override any form of civility in journalistic communication.

I urge the Lakbima newspaper, especially its editor to apologize for the publication of this extreme and totally unacceptable cartoon which is derogatory to women and women politicians.

I urge you, in respect of media ethics and accountability, to act against this intolerable media behavior. 

Thank You,

Yours Sincerely,

Name:
Place:

இந்த கேலிச்சித்திரத்தை வரைந்த கார்டூனிஸ்ட் ஹசந்த விஜேநாயகவின் முகநூல் பக்கம்,இதிலும் கண்டனத்தை பதிவு செய்க:
இந்த கேலிச்சித்திரத்தைவெளியிட்ட லக்பிம பத்திரிகை முதலாளியும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலாவின் முகநூல் பக்கம், இதிலும் கண்டனத்தை பதிவு செய்க:
info@thilangasumathipala.lk
தமிழக முதல்வரை வெளிநாட்டு பத்திரிகை இழிவுபடுத்துவது, தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துவதாகும். எனவே, வெறும் கோபம் போதாது. அதனை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடனடியாக ஒரு கண்டனக் கடிதத்தை அனுப்புங்கள்.

மேற்படி செய்தியை வெளியிட்ட பசுமைபக்கங்கள் வளைதள ஆசிரியர் அருள் அவர்களுக்கு நன்றி http://arulgreen.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

பாலுமகேந்திராவின் சுயசரிதை


   flimmakkar, அய்யா பாலு மகேந்திரா அவர்கள் நம்முடைய blogspot சேவையில் இணைந்து தனது திரை மற்றும் இலக்கிய உலகத்தில் தான் கடந்து வந்த பாதையை சுயசரிதையாக எழுத உள்ளார்.அவருடைய வளைதளப் பயணத்தை வரவேற்று நான் அவருக்கு அனுப்பிய பின்னூட்டம் மற்றும் அவருடைய வளைதள முகவரியினை கீழே தருகிறேன்.இத்தகவலை யாம் அறியச்செய்த http://cybersimman.wordpress.com,சிம்மன் அவர்களுக்கு நன்றி.

மூத்தவர்-அய்யா பாலுமகேந்திரா அவர்களே!திரை உலகின் பிதாமகன்,பல அவதாரங்களை படைத்த பிரம்மா,பின்னோக்கி சென்ற தமிழ்சினிமாவை முன்னெடுத்துச் சென்றவர்,பிழைக்கத்தெரியாதவர்,லட்சங்களும்,கோடிகளும் புரளும் திரைப்படங்களை தனது லட்சியங்களுக்காக புறந்தள்ளியவர்...என்று உங்களைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் புகழ்ச்சியை விரும்பாத நீங்கள்! இன்று blogspot தளத்தில் இணைந்து எம்மைப்போன்ற சிறிய பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும் எழுத்து ஓவியம் படைத்து! தாங்கள் கடந்து வந்த பாதையை சுயசரிதையாக சமைக்க இருப்பது வரவேற்கத்தக்கது.

தங்களின் சுயசரிதை "வனவாசம்" என்ற பெயரில் அய்யா!கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய அவருடைய சுயசரிதைப் போன்று ஒழிவு மறைவற்றதாக அமையவேண்டும் என்பது எனது அவா!

கவியரசனாரின் வனவாசத்தில் அறிஞர் அண்ணா,கலைஞர் கருணநிதியின் அந்தரங்ககளை தோலுரித்து உண்மையை உலகறியச்செய்தார்.எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதை தன்னுடைய அந்தரங்கத்தை ஒழிவு,மறைவின்றி பதிவு செய்து,இளம் வயதினர்களுக்கு அறிவுறித்தியிருந்தார்.

அதுபோல உங்களுடைய பயணத்தை பதிவு செய்யும் சுயசரிதை வெளிப்படையாக அமையட்டும்.வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குகிறோம்!

அய்யா பாலு மகேந்திரா அவர்களின்
தள முகவரிhttp://filmmakerbalumahendra.blogspot.in/

இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநிலத் தலைவர் கொங்குதமிழர்கட்சி,தீரன்சின்னமலை
புலனாய்வு செய்தி ஊடகம்,http;//theeranchinnamalai.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 25 ஆகஸ்ட், 2012

Dr.சுப்பராயன்-பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிவைத்த-தமிழக முதல்அமைச்சர் பதவிக்குவந்த முதல்தமிழர்!

 

மாமேதை டாக்டர் சுப்பராயனின் வாழ்க்கை வரலாறுச் சுருக்கம்
    மாமேதை டாக்டர் சுப்பராயன் அவர்கள் தமிழுக்கும், குறிப்பாக  தமிழக மக்களுக்கும், பொதுவாக இந்திய மக்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்தவர். அதற்காக அயராது உழைத்தவர். 11.09.1889 ஆம் நாள்  கொங்குவேளாளக்கவுண்டர் இனத்தில்குமாரமங்கலம் ஜமீன்தார் மகனாகப் திருச்சங்ககோடு,புதுப்பாளையத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். குமாரமங்கலம் ஜமீனை கைப்பற்றவும்,அதன் சொத்துக்களை அடையவும் தமது உறவினர்கள் குழந்தை சுப்பராயனை கொலை செய்யப்படக்கூடும் என்று அவரது தாயார் பாப்பாயம்மாள் அஞ்சினார்.அதனால் வெள்ளையர்-தம் பாதுகாப்பில், (ஆனால் ஜமீன்பணத்தில்) அவரைப் படிக்க வைத்தனர்.சென்னை தேனாம்பேட்டை, எல்டம்ஸ் சாலையில் உள்ள "நியூவிங்டன் போர்டிங் பள்ளி" சுப்பராயனுக்கு ஆரம்பகல்வியை கற்றுக்கொடுத்த இடம்.வெள்ளையதிகாரிகள் மற்றும் ஜமீன் பிள்ளைகளுடன் சேர்ந்து துவக்கக் கல்வி பயின்றார். அப்பொழுது கிரிகெட்டில் இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும்,ஆல்ரவுண்டரகவும் சென்னை மாகாண அணியில் விளையாடினார்.புகழ்பெற்ற இந்து உயர் நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயின்றார். 1908 -ல் சென்னைமாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பும், லயோலாக் கல் லூரியில், M.A. பட்டத்துக்குச்  சமமானது எனக் கொள்ளப்படும் B.A.(Honours)  பட்டப்படிப்பும் படித்தார். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வகுப்பில் முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார். 

தனது கல்லூரித் தோழி ராதாபாய் என்ற மங்களூர் சரஸ்வத்பிராமணர்வகுப்பை சார்ந் மாற்று சாதிக்காரரை மணமுடித்தார். தன்சாதியைச் சேர்ந்த கொங்கனாபுரம் ஜமீன் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள,  தாய் வற்புறுத்தினார். மாற்றுச் சாதியில் கட்டினால், உயிர் விடுவேன் என்று மிரட்டிக்கூடப் பார்த்தார். அவரை மீறி, ராஜாஜி போன்றோர் சாட்சிக் கையெழுத் திட-பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.  கணவன் மனைவி இருவரும்  இங்கிலாந்து சென்று மேற்படிப்புப் படித்தனர்.லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருக்கும் வாதாம் கல்லூரியில் சுப்பராயனும்,சோமன் வில்லே பெண்கள் கல்லூரியில் இராதாபாய் கல்வி பயின்றனர்.தற்பொழுதும் இங்கிலாந்தில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் அணி சஸ்சக்ஸ்.இந்த மாநிலஅணிக்காக சுப்பராயன் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்படிப்பில் நேருவின் வகுப்புத் தோழர்! டாக்டர் அம்பேத்காரும் இவருமே சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பாரிஸ்டர்கள்!
    இவர் பாரிஸ்டர் படிப்புப் படித்த போது, நேரு இவரது வகுப்புத் தோழராக இருந்தார். இவரும் டாக்டர் அம்பேத்காரும் மட்டுமே சட்டமேற்படிப்பாக டாக்டர் பட்டப்படிப்பு படித்தனர். படிப்பு முடிந்த நிலையில், முதல் உலகப்போர் நடந்ததால், உடனே நாடு திரும்ப முடியாத நிலையில், அவர் அன்றைய பிரிட்டிஷ் பிரதமருக்கு அந்தரங்கச் செயலாளராக (Private Secretary) அரசுப்பணி செய்தார்! 

நாடு திரும்பி, காந்தியார் தலைமையில் சிலகாலம் காங்கிரஸ் பேரியக்கத்தில் பணியாற்றினார். ஆந்திரம் கேரளம் தமிழகம் மூன்று பகுதிகளும் இணைந்த ஒன்றிய சென்னை ராஜதானியில் இரட்டை ஆட்சி முறை இருதுந்தபோது-தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களில் முதல்முறையாக முதலமைச்சராக (பிரதம மந்திரி அல்லது First Minister)  4.12.1926 முதல் 27.10.1930 வரை பணி புரிந்தார். அவரது அமைச்சரவை சுயேச்சைகளின் அமைச்சரவை. அதற்கு முன்னிருந்த இரு முதலமைச்சர்களும் ஆந்திரர்களே! திருச்செங்கோடு தொகுதியிலேயே 6 முறை சுயேச்சையாகவும் காங்கிரஸ் வேட்பாளராகவும் நின்று தேர்தலில் வென்றவர் டாக்டர் சுப்பராயன் என்பதறிவீராக! மக்களிடம் அத்தனை செல்வாக்குப் பெற்றவர் அவர்! அவரது சொந்தப்பிள்ளை மோகன் குமாரமங்கலமும், கம்யூனிஸ்ட் கட்சியும் அவருக்கு எதிராக சேலம் பேபி என்பவரை நிறுத்தித்தான் அவரை சுதந்திர இந்தியாவில் தோற்கடித்தனர்!
     பிரிட்டிஷார் ஆண்டகாலத்தில், சென்னை ராஜதானியின் முதல் அமைச்சராக சுப்பராயன் இருந்த காலத்தில்--1. ஜஸ்டிஸ் கட்சி ஏற்கனவே போட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணையை விரிவுபடுத்தி, அற்பத் தொகையினரான பிராமணரே சகல மேல் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில்--தலித்துகளுக்கும்  இதர பிராமணரல்லாதவர் களுக்கும்-அரசு அலுவல்களில் பெரும் பங்கு கிடைக்கச் செய்தார்.
    2. இந்தியாவிலேயே முதன் முதலில் ஊழியர்களைத் தேர்வு செய்ய சர்வீஸ் கமிஷன் ஏற்படுத்தினார்.
    3. ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்திய இந்து அறநிலையச் சட்டத்தின் படி ஏற்படுத்திய அறநிலையத்துறைக்குழுவுக்கு ஒரு ஐயர் ஒரு ஐயங்கார் மட்டுமே நியமிக்கப்பட்டனர். சுப்பராயன் ஆட்சியில் வன்னியர் உள்ளிட்ட, இதர பின் தங்கியசாதிகள், தலித்துகள் அனைவரையும் அறநிலையத்துறை உயர் குழுவின் உறுப்பினராக நியமித்தார்; நிர்வாக அதிகாரிகளை நியமித்து, கோயில் பூசாரிகள்(குருக்கள்) பிடியில் இருந்து கோயில் சொத்துக்களைக் கணக்கெடுத்து,  பட்டியல் இட்டு கணக்கில் கொண்டவரச் செய்தார்; மேலும் கோயில் சொத்துத் திருடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    4. ஹரிஜனங்கள் கோவிலுக்குள் சென்று  சாமிகும்பிட முடியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த அக்கிரமத்துக்கு முடிவு கட்டி-  கோயில்  நுழைவுச் சட்டஞ் செய்தவர்.
    6. விடுதலைப்போரின்போது, பதவியைத் தூக்கி எறிந்து, வேலூர் சிறையில் அடைபட்டிருந்தார். அதே விடுதலைப்போர்க்ககாணத்துக்காக, அதே காலத்தில் மனைவி ராதாபாய் மகன் மோகன் குமரரமங்கலமும் சிறையில் கிடந்தனர்.
    7. குழந்தை முதல் ஆங்கிலேயர்களால் ஆங்கில வழிக்கல்வி தரப் பட்டிருந்தாலும், அவர் தாய் மொழி மேல் ஈடுபாடு கொண்டு தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் கற்ற  அறிஞராக  இருந்தார். வேலூர் சிறையில் ராஜாஜி போன்ற பல தமிழக, தென்னிந்திய, வட இந்தியத் தலைவர்களோடு சுப்பராயன் சிறை வாழ்ந்த காலத்தில், ராஜாஜி உள்ளிட்டோருக்குத் திருக்குறள் வகுப்பு நடத்தும் அளவுக்கு  தமிழில் அவருக்கு பற்றும் பாண்டித்துவமும் இருந்தன!
    8.  இரட்டை ஆட்சிக்காலத்திலும்  அதற்கு முன்பும் சென்னைப் பல்கலைக்கழகம் பார்ப்பனர் கையில் சிக்கி இருந்தது. தமிழுக்கு சரியான இடம் அளிக்கப்படவில்லை. இந்த வருத்தம் அவர் மனதில் இருந்தது. அந்த நேரத்தில் சிதம்பரதத்தில் இருந்த கல்லூரியையும் ரூபாய் 40 லட்சமும் அரசாங்கத்திடம் தர முன்வந்த போது, அதை வேண்டாம் என்றார். தமிழுக்கு உரிய இடந்தர வேண்டி, அண்ணாமலைச்செட்டியார் 40 லட்சம் ரூபாய் முதல் போட்டுத்  துவக்கவிருந்த பல்கலைக்கழகத்துக்கு அரசின் அனுமதி பெற்றுத் தந்ததோடு, மக்கள் வரிப்பணத்தில் இருந்து-27 லட்சம் ரூபாய் வழங்கினார். அது இன்று பெரிய அளவில் வளர்ந்து-பச்சியப்பன் கல்லூரிக்கு அடுத்தபடியாக தமிழ் உணர்வை வளர்த்தது. தமிழ் இசையையும் வளர்த்தது.
    9.  மைய தபால்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்திலும் மணியார்டர் படிவம் உள்ளிட்ட தபால் நிலையப் படிவங்கள் அனைத்தும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அச்சிடச் செய்தார்.
    10.  திருவள்ளுவர் மற்றும் பாரதியாருக்கும் மரியாதை செய்து அவர்கள் உருவம் பொறித்த தபால்தலைகளை வெளியிட்டார்.
    11.  நேருவிடம் தனக்கிருந்த செல்வாக்கால், இந்தியப்பாராளு மன்றத்தில் வள்ளுவர் படத்தைத் திறக்கச் செய்தார்.
    12.  இந்திய ஆட்சிமொழிச்சட்ட ஆணைக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர்--இந்தி ஆட்சிக்குத் தகுதியானதல்ல என்றும், பிற மாநிலத்த வர்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் எனவும், வளமான தமிழ் போன்ற மொழிகளை மூன்றாவது ஆட்சி மொழியாக்குமாறும் வாதாடி, பெரும்பான்மை இந்திய மக்களின் உரிமைக் குரலைப் பதிவு செய்தவர்.
    13.   இந்தோனேசியாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றியபோது, உலகப் புகழ் பெற்ற அணிசேரா நாடுகளின் பாண்டுங் மாநாட்டுக்கு
இந்தியாவில் சார்பின் முனைந்து இந்திய ஒத்துழைப்பைத் தந்து வெற்றிகரமாக அது  நடக்க, தன் பங்காற்றிப் பெருமை பெற்றவர்.
    14. இந்தியாவின் மையப் பாராளுமன்றத்துக்கு முதன் முதலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்பி டாக்டர் சுப்பராயனின் துணைவி ராதாபாய் ஆவார். அந்தப் பாராளுமன்றத்தில் அவர் ஒருவர் மட்டுமே
பெண் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் கன்னிப் பேச்சே மாபெரும் வீர உரையாகவும் விவேக உரையாகவும் அமைந்தது. அன்னிய ஆட்சியைப் பிய்த்தெடுத்திருக்கிறார். மேலும் பெண்ணுரிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு என்ற இரு தலைப்புக்களிலும் அவர் பேசியதை விட இன்றுவரை யாரும் மிஞ்சிப்பேசமுடியாத அளவுக்கு இருப்பது வியக்க வைக்கிறது! அவரது அகில உலகக் கண்ணோட்டமும் இங்கிலாந்துக் கல்வியும் அத்தகையது!
    15. டாக்டரின் பிள்ளைகள் அனைவரும் தலைசிறந்த, மொழி, இனங் கடந்த செல்வங்களாக விளங்கினர்.(1) முதல் மகன் பரமசிவம் குமாரமங்கலம் அவர்கள்-தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் "கிங் கமிஷன்" பெற்று இங்கிலாந்தின் சாந்துர்ஸ்ட் பட்டாளக் கல்லூரியில் படித்தவர்; இந்தியப் படைத்தளபதியாக ஓய்வு பெற்றவர். சாதிபாராமல் ஒரு பார்சியை மணந்தவர். (2) அடுத்த மகன்-கோபால் குமாரமங்கலம் பெரிய பொறிஞர். நமது நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தைத் தலைமை தாங்கி வெற்றிகரமாக, லாபகரமாக நடத்தி யவர். இவரது மனைவி ஒரு கன்னடக்காரர். (3) மூன்றாமவர் மோகன் குமாரமங்கலம்-புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்;  இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர். வெள்ளையனே வியக்கத்தக்க ஆங்கிலம் பேசிய தேசபக்தப் பேரறிஞர். மைய அமைச்சராக இருந்து பாதியில்  விமான விபத்தில் இறந்து பட்டவர். வங்கிகள் தேசிய மயம், ராஜ்ய மான்ய ஒழிப்பு போன்ற புகழ்பெற்ற சட்டங்களை இயற்ற இந்திரா காந்திக்கு அரிய துணையாக நின்றவர். அவர் மணந்த வங்கதேசத் தோழிக்குப் பிறந்த ரங்கராஜனுக்கு இன்றைய மைய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான்-தாய் மாமன்! ரங்கராஜனோ ஒரு பஞ்சாபியை மணந்தார். 4) சுப்பராயனின் ஒரே மகள் பார்வதி-அண்ணன்மாரைப் போல் கொள்கைவாதி. ஒரு மார்க்சியவாதி. அவர் தன் கட்சித் தோழரான மலையாள தேசத்துக் கிருஷ்ணனை மணந்தார். இதைப்போல இந்தி யாவில் அனைத்துப் பகுதிகளையும் இணைத்துச் சம்பந்தம் செய்த, படாடோபமற்றுத் திருமணம் செய்து பகட்டின்றி வாழ்ந்த-மெய்யான இந்திய தேசியக் குடும்பம் இந்தியாவில் வேறு எதுவும் இல்லை எனலாம்.
 
    16. தந்தை பெரியார் காஞ்சியில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் டாக்டர்  சுப்ப ராயனின் புகழ்பெற்ற சுயமரியாத உரை சுயமரியாதை இயக்கத்தின் திருக்குறள் போன்றது.
     17. ராஜாஜியின் உப்புச் சத்தியாகிரகத்தையும் துவக்கி வைத்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த சுப்பரா யன்தான். அதனால் ஆட்சியும் இழந்தார், சிறையிலும் அடைக்கப்பட்டார்  என்பதறிக!
    டாக்டர்  சுப்பராயன் 1962 அக்டோபர் 6 அன்று  காலமானபோது, இன்றைய  தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், எதிர்க்கட்சிக்காரராக
தமிழக சட்டமன்றத்தில் சூட்டிய புகழாரம்: “தலைவர் அவர்களே! அரசியல் பெருந்தகையாளர் டாக்டர் சுப்ப ராயன் அவர்கள் அறிவியக்கத்திலே நல்ல ஈடுபாடு கொண்டு, கலப்புத்திருமணம் செய்து கொண்டு சமு தாயச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மொழியிலே நீங்காத பற்றுக் கொண்டவர். திருவள்ளுவருக்கும் பாரதி யாருக்கும் அஞ்சல்தலை வெயியிட்ட பெருமை அவ ருக்கே உரியது. பளவிடைத்தாள் தமிழிலேயே அச்சிட உத்தரவிட்டார்.(தமிழில் என்று தவறான எண்ணத்தை உண்டாக்கக் கூடாது. தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழி களிலும் வெளியிடச் செய்தார்-ஆசிரியர்) அவர் நடத்திக் காட்டிய நிர்வாகம் என்றென்றும் அழியாது. மாற்றுக் கருத் துக் கொண்ட தம் பிள்ளைகளின் கருத்துகளுக்கும் மதிப்பளளித் தவர். அவரு டைய இந்தப் பெருந்தன்மையை நாட்டிலே பரவவிட வேண்டும
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புதியதலைமுறை இருட்டடிப்பு..கண்டிக்கத்தக்கது

  புதியதலைமுறை வார இதழ் தொடங்கியபோது சமூகப் புலனாய்வு ஊடக வரலாற்றில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது.அதன் பிறகு புதியதலைமுறை தொலைக்காட்சி தொடங்கியபோது தமிழ் செய்திகளின் நேரடி ஒலிபரப்பு-ஆங்கிலசெய்தி தொலைக்காட்சிகளை புறந்தள்ளி தமிழ் ஊடக வரலாற்றில் மாற்று பாதையை ஏற்படுத்தியது.

இது சன்செய்திகளின் மீது மக்களுக்கு இருந்த போலியான தாக்கத்தை மீட்டெடுத்தது.இதன் விளைவு புதியதலைமுறை தொலைக்காட்சி எஸ் சி வி ஒலிபரப்பில் மறைக்கப்பட்டுள்ளது.இது கருத்துச் சுதந்திரத்தை முற்றிலும் முடக்கும் செயல்.

இத்தகைய பிற்போக்குத்தனமான செயல்பாடுகளை எமது தீரன்சின்னமலை குற்றவியல் புலனாய்வு வலைதள செய்தி ஊடகம் மற்றும் கொங்குதமிழர்கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவன்:டி.கே.தீரன்சாமி,மாநிலதலைவர்,கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 5 ஏப்ரல், 2012

தினத்தந்தி-கோவைசெழியனுக்கு-கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி நினவுவீரவணக்கம்


 
Coimbatore   Select Date Contents   Page Page Size     Logout  
    Main2 Second Edition ªê¡¬ùJ™ GF GÁõù áNò˜è¬÷ A îƒè è£²èœ ªè£œ¬÷ * ¹ó†C‚° F†ìñ£? ó£µõ î÷ðF ¹Fò îèõ™ * Ý»œ è£ô‹ ® ê£î¬ù ð¬ì‚°‹ ªêòŸ¬è«è£œ * ªê¡¬ùJ™ Ï.3 «è£® Üó² Gô‹ e†¹ * GF ñ‰FK Hóí£Š ºè˜T»ì¡ ï¬è Mò£ð£Kèœ Þ¡Á ê‰Fй       Updated at:   4:34:07 AM
  
page1

page2

page3

page4

page5

page6

page7

page8

page9

page10

page11

page12

page13

page14

page15

page16

page17

page18

page19

page20

page21

page22

page23

page24

page25

page26

  
 

Font Download Click here
Copyright © reserved by Daily Thanthi
BEST VIEWED WITH 1024 * 768 SCREEN RESOLUTION AND IE 6.0 AND ABOVE
ePaper solution by 4cplus & cad graf
best links in tamil
More than a Blog Aggregator