ஞாயிறு, 22 ஜூன், 2014

சிவன்மலைமுருகனின் தலவரலாற்று புத்தகத்தில்-தீரன்சின்னமலையின் பதிவுகள் இல்லை!


கொங்குநாடு என்பது 24-நாடுகளை உள்ளடக்கியது.அதில் காங்கயம் நாடும் ஒன்று.அங்கு சிவன்மலையில் குடிகொண்டிருக்கும்,சிவன்மலை முருகனின் தலவரலாறும்,சித்தர் சிவவாக்கியரின் சிறப்புகளும்,கொங்கு நாட்டின் சுருக்கமான வரலாறும்,சிவன்மலையின் அரிய புகைப்படங்களும்-சுமார் 55-பக்கங்கள் கொண்ட புத்தகமாக தமிழநாடு இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச்சிறப்புமிக்க இந்தப்புத்தகத்தில் சிவன்மலை முருகனின் தெயவத்தளபதி,இந்திய விடுதலைப்போராட்ட மாவீரன் தீரன்சின்னமலைக்கும்,சிவன்மலைமுருகனுக்கும்,பட்டாலி கிராமத்துக்கும், சிவன்மலைக்கும் உள்ள தொடர்புகளும், அதைச் சுற்றிலும் தீரன்சின்னமலை செய்த அற்புதமான செயல்பாடுகளும்,அது சார்ந்த வரலாற்று பதிவுகளும் விடுபட்டுள்ளது.

இது தொடர்பாக நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கும்,தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல உள்ளோம்.

எமது கொங்கு தமிழர் பேரவை சார்பில் கடந்த காலங்களில் சுமார் எட்டு ஆண்டுகள்-2008 வ்ரை,சிவன்மலையில் தைப்பூசத்தேர்திருவிழா அன்று,எல்லப்பாளையம் காவடி அன்னதான அரங்கில் தீரன்சின்னமலை போர்ப்பாசறை விழா,மற்றும் தமிழர் கலை பண்பாட்டு விழாவினை சிறப்பாக  நடத்தினோம்.அதில் சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை, சிவன்மலையைச் சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள் என்று ஆண்டுதோரும் சுமார் அய்யாயிரம் பிரதிகள் இலவசமாக வெளியீடு செய்து சிறப்பித்தோம்.

மேலும்,சிவன்மலை முருகனுக்கும்,தீரன்சின்னமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தில் விரைவில் பதிவுசெய்யப்படும் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

சரி இனி இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு செய்த "சிவன்மலை முருகனின் தல வரலாற்றை" படியுங்கள்.தங்கள மேலான கருத்துரைகளை பதிவு செய்யுங்கள். 


மேலும் இந்த புத்தகவடிவத்தின் நகல் சிவன்மலை முருகன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sivanmalaimurugan.tnhrce.in என்ற என்ற முகவரியிலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது. 








           

நன்றி:-சிவன்மலை தேவஸ்தானம் மற்றும் இந்துசமய அறநிலைத்துறை
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 15 ஜூன், 2014

மனைவியை பத்துப்பேருடன் கற்பழித்த கொடூர கணவன்கொடூ

மத்தியபிரதேசத்தில் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலாய் போர்கேடி என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பழங்குடியின பெண் ஒருவர் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

நிலவிவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணை கணவன் கோடாரியால் தாக்கியுள்ளான். இதில் காயம் அடைந்த பெண் பொலிசில் புகார் கொடுத்துவிட்டு, தனது மகனுடன் அருகே உள்ள கிராமத்தில் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர், அந்த கணவர் இருவரும் சமாதானமாகிவிடுவோம் என்று கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்தபோது, அதனை உண்மை என்று நம்பி தனது மகனுடன் அந்த பெண், கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததையடுத்து, கணவன் உள்பட 10 பேர் அந்த பெண்ணை கயிறால் கட்டி ஒரு அறையில் அடைத்து கொடூரமாக கற்பழித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், ஆனால் அந்த கொடூர கும்பல் மனித சிறுநீரை குடிக்க வற்புறுத்தியதோடு, அந்த பெண்ணை அரைநிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து அந்த 10 பேரையும் பொலிசார் கற்பழிப்பு குற்றத்தில் கைது செய்துள்ளனர்.
மேலும் பொலிசார் இதுபற்றி கூறுகையில், கணவரின் வீட்டில் 3 நாட்கள் அடைத்துவைத்து கற்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். செய்திக்கு நன்றி:-லங்கசிறி-இன்டியன் நியூஸ்

எனது கருத்துரை:-
..
தெ.கு.தீரன்சாமி 
தில்லி மருத்துவ மாணவியின் வன்கொடுமை நமது தேசத்தை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கி எடுத்தது.அதன் பிறகு ஆயிரக்கணக்கான பாலியல் கற்பழிப்புகள் தொடர்ந்து நமது தேசத்தில் நடந்த வண்ணம் உள்ளது.சமீபத்தில் உ.பியில் இரண்டு சிறுமிகளின் கற்பழிப்பு மரணம்-இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது தலைமாட்டில்-நம் கண்ணருகிலேயே-பொள்ளாட்சியில் 10.12 வயதுடைய இரண்டு சிறுமிகள் கற்பழித்து கடித்து குதறப்பட்டுள்ளார்கள்.நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. 

ஆபாச பதிவுகளை வெட்கமில்லாமல் வெளியிட்டு தமது தளத்தை பிரபலபடுத்தி,பணம் சம்பாதிக்கும்,குரூர மனம் படைத்தவர்கள் இது போன்ற பாலியல் வன்கொடுமைகளை கண்முன்னே கண்ட பிறகாவது திருந்துவார்கள் என நம்புவோம்.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 9 ஜூன், 2014

பாலியல் வன்கொடுமை ?பாரத தேசமே!



ரௌத்திரம் பழகு....2

கருத்துரை:-க.சொளந்தரராஜன்

பெண்களை  போற்றுவதாக  சொல்லப்படுகின்ற நாடு இந்தியா....

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியியல் வன்கொடூரங்களுக்கு தீர்வு காண அரசு முழுவீச்சுடன் செயல்படாதது கண்டிக்கத்தக்கது. 


டெல்லி மருத்துவ மாணவியின் துயர சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும், அதாவது இன்று வரையிலும் ஒரு உறுதியான செயல்பாட்டையோ அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டவிதம் எதுவும், மீண்டும் இது போன்ற வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் என்றோ, குற்றவாளிகளுக்கு ஒரு பயத்தையோ  உருவாக்கும் என்றோ அமையவில்லை......


என்னுடைய தங்கைகளுக்கு,சகோதரிகளுக்கு,வீட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் வரை நமக்கும் அக்கறை இல்லை.

அரசுக்கு ஆபத்து வந்தால் அவசர சட்டம்(அப்போதைக்கு மட்டும்).

ஒரு வெட்கக்கேடான செயல்.....வயது பாராது வன்கொடுமை.....

இந்த புண்ணியத் திருநாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போருக்கெல்லாம் ஒரு பின்னடைவு....

குற்றங்களின் தன்மையை பொறுத்து தண்டனைகள்...4 வயது குழந்தை,7 வயது குழந்தை.......இந்திய சட்ட வடிவமைப்பு இது போன்ற குற்றங்களை விரைந்து முடிக்கும் திறன் இல்லாதது...

உத்திரபிரதேச சம்பவம் கண்டிக்கத்தக்கது...ஆனால் அது இந்தியாவில் இது போன்ற கடைசி சம்பவமா...? அதற்கு பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் மகத்துவ, மாதவம் படைத்திட்ட பெண்களே....
நெஞ்சு பொறுக்குதில்லையே உம் நிலை கண்டு இன்று....!




 இந்திய மக்களவையின் தலைவர்......

16வது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்கள் திறமையும், மக்களவை செயல்பாடுகளில் அனுபவமும் பெற்றவர். இந்தூர் தொகுதியின் உறுப்பினர் (8வது முறையாக..)
 
மக்களவைத்தலைவர் 5 ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகின்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பங்குபெரும் மக்களவையின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அதன்பின் அவர் பதவி விலகினாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
 
மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர், கண்காணிப்பவர் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பவரும் அவரே.
மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்புக் குறையாமல், இறையாண்மைக் குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடுக் கொண்டுள்ளார்.
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றத் தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்றன மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மக்களவைத் தலைவரின் தேர்தலை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கின்றார்.
 
மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...



best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 3 ஜூன், 2014

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது!

கருத்துரை;-சொளந்தரராசன்

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது - இலங்கை 
 
இலங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு ஆளும் கட்சியான இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையிலான 13-வது சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு அண்மையில் வலியுறுத்தி உள்ள நிலையில், டிசில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
 
இலங்கையில் வாழும் மக்களுக்கு எந்த வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ உரிமையில்லை.  இலங்கைப் பாராளுமன்றத் தேர்வுக் குழு தான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதற்கான அமைப்பாகும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கைப் பாராளுமன்றம் தான் எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து எப்படி இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா கூறக்கூடாது. 1987-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டதிருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. - என்று இலங்கை அரசின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல,ஆரம்பத்திலிருந்தே தமிழர்களுக்கு எதிராக உள்ளது.காங்கிரசும் முடிந்த வரையில் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தது என்பதே உண்மை.
 
ஆனால் புதிய அரசின் வலியுறுத்தலுக்கு இலங்கையிடம் இருந்து இந்தியாவுக்கு இந்த பதில் எதிர்பார்த்த ஒன்று தான்.
 
இலங்கை அரசின் நிலைப்பாட்டை பற்றி, இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டு,தமிழக அரசின் அழுத்தத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும் நீதியில்லை,
 
இருக்கும் தமிழர்களுக்கும் வாழ உரிமையில்லை.
 
இந்திய அரசு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை. மிகவும் சரி. ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு உடன்பட்டது.
 
கடந்த அரசை போலவே எந்த வித உறுதியான நிலைப்பாடும் எடுக்கவில்லையெனில் இலங்கைக்கு நேரடியாக இந்தியா ஆதரவு என்று தெரிவித்துவிடலாம்...!
 
நடந்ததும், நடப்பதும் போர் அல்ல...படுகொலை....!
 
 
ரௌத்திரம் பழகு.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 2 ஜூன், 2014

ஜூ.வி.வார இதழ்.தமிழக முதல்வருக்கு வாழ்த்து.கொங்கு.தமிழர் கட்சி செய்தி விளம்பரம்..

ஜீனியர் விகடன்,வாரம் இருமுறை இதழில்
தமிழக முதல்வருக்கு வாழ்த்து- 01-6-14 -இதழ்
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 16 மே, 2014

37-தொகுதிகளில் வெற்றி தமிழக முதல்வருக்கு வாழ்த்து..


  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆழிப்பேரலையாக தனித்து தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். 40-மக்களவைத்தொகுதிகளிலும் தமது அரசு செய்த மூன்றாண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தும்,காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தமிழகத்துக்கும்,தமிழர்களுக்கும் இழைத்த துரோகத்தை பட்டியளிட்டு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகாலத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயனடையக்கூடிய வகையில் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றப்பட்டன.அதன் விளைவுதான் தற்பொழுது வாக்குகளாகமாறி-37-மக்களவைத் தொகுதிகள் என்ற பெரும் வெற்றிப்பரிசை தமிழக மக்கள் நம்முடைய முதல்வருக்கு அளித்துள்ளார்கள்.

அதேபோல கொங்கு தமிழகம் அ.இ.அ.தி.மு.கவின் இரும்புக்கோட்டை என்பதை இத்தேர்தல் முடிவுகள் மீண்டும் நிருபித்துள்ளன.

தமிழக முதல்வர் அம்மா என்ற பெரும் கடலில்,சிறு துளியாக அம்மா அவர்களின் வெற்றிக்கு-"நாற்பது தொகுதிகளிலும் வெற்றி நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" எனபக்தி முழக்கமிட்டு சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டோம்.

எங்களைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள்,அமைப்புகள் அம்மா அவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

மேலும் கூடுதலாக அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க 37-தொகுதிகள் வென்றதின் மூலம் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சக்தியாக உறுவெடுத்துள்ள அம்மா அவர்கள் எதிர்காலத்தில் பாரதப்பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.இத்தகைய வெற்றிக்கு வித்திட்ட நம்முடைய தமிழக மக்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,இந்தியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று பாரதப்பிரதமராக பதவியில் அமரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த நரேந்திரமோடிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator