செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

முதல்வரை இழிவுபடுத்திய கோத்தாபயவுக்கு நெடுமாறன் கண்டனம்!


 தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கைஅதிபர் ராஜபக்சேவின் சாகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்சே தெரிவித்த கருத்துக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆணவத்துடன் தமிழக முதல்வரை விமர்சித்து இருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடும் சவாலாகவே உள்ளது.எது எப்படி இருப்பினும் இலங்கை -சீனாவுடன் மிக நெருக்கத்தில் உள்ளது.அதன் காரணமாக இந்திய வெளியுறவுத்துறை இலங்கையிடம் மன்றாடி வருகிறது.கோத்தபய ராஜபக்சே சகோதரர்கள் அடங்காமல் ஆணவத்துடன் நடந்துகொள்ள இதுவே காரணமாகும்.

இது குறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

இலங்கைத் தலைவரை யுத்த குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும்! இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்தி அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சேவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

தமிழக முதல்வரை மட்டுமல்ல. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தமிழக சட்டமன்றத்தையும் அவர் இழிவுபடுத்தியுள்ளார். இத் துணிவு அவருக்கு வந்ததற்கு இந்திய அரசே முழுமையான காரணமாகும். 

மாநில முதல்வர்கள் இல்லையென்றால் இந்தியா இல்லை. தமிழக முதல்வரை அவமதிக்கும் போக்கினை அண்டை நாட்டின் அதிகாரி ஒருவர் மேற்கொள்வதை அனுமதிப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை அவமதிப்பதாகும். தமிழக முதல்வரையும் சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தாபய ராஜபக்ஷ்வின் செயலைக் கண்டிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: