ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

யாழிலில் உதயன் ஊடகவியலார் மீது தாக்குதல்!சிங்கள வெறியாட்டம்

 கடந்த 29-07-2011 ஈழப்பத்திரிக்கையாளர்களின் வரலாற்றில் மற்றும் ஒரு கொடிய தினமாக அமைந்தது.ஆம்! தமிழ் ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஈழத்தமிழ் இதழியல்களின் பங்கு மகத்தானது.அந்த வகையில் யாழ்பாணம் உதயம் நாளிதழுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.தொடர்ச்சியாக ஈழ விடுதலை பற்றியும்,சிங்கள இனவெறி அரசின் காட்டுமிரான்டித்தனங்களையும் விடாமல் எழுதி வந்தது.


 கடந்த 2006-ல் உதயன் பத்திரிக்கையின் விற்பனை பிரிவு மேலாளர் தேவசகாயத்தையும்,அலுவலக ஊழியர் ரஞ்சித்குமாரையும் ஆயிதம் தாங்கிய சிங்கள கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது.


 இந்த நிலையில் தற்பொழுது யாழ்பாணத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும்,தமிழ்தேசத்தின் துரோகி டக்ல்ஸ் தேவனந்தாவின் ஈ.பி.டி.பி உடன் கூட்டணி கண்டு ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவின் அரசுகூட்டமைப்புக்கும் போட்டி நிலவியது.ஊடகங்கள் அரசு கூட்டமைப்புக்கு எதிராக செய்தி வெளியிடுவது முற்றிலும் ஒடுக்கப்பட்டது.


 இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்பாணமாவட்ட எம்.பி சரவணபவன் தான் உதயன் நாழிதளின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.எப்படி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைப் பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க-கங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் படுதோழ்வி அடையச்செய்தர்கள்.அதைப்போல யாழ்ப்பாண உள்ளாட்சி தேர்தலில் 20 சபைகளில்-17 சபைகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது.ஆளும் கூட்டமைப்பு படுதோழ்வி அடைந்தது.


 அரசு கூட்டமைப்புக்கு எதிராக உதயன் நாளிதழும்,அதன் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதனும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தனர்.அரசு கூட்டமைப்பின் தோழ்விக்கு உதயன் நாளிதழ் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.இதற்க்கு பழிவாங்கும் விதமாக உதயன் ஆசிரியர் குகநாதனை கடந்த 29-ம் தேதி கொலை வெறிகும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ளது.தலையில் பலத்த அடிபட்ட குகநாதன் உயிருக்கு போராடிய நிலையில் யாழ்பாணம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 இத்தகைய கொடுஞ்செயல் ஈழத்தமிழ் பத்திரிக்கையாளர்களின் உயிருக்கும்,உடைமைக்கும் எத்தகைய பாதுகாப்பும் இல்லை என்பதையே உணத்துகிறது.இவர்களுக்கே இந்தநிலைமை எனில் அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலை என்ன?


உதயன் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு


இந்த நிலையில் ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் உதயன் நாளிதழ் நிர்வாகத்தின்மீது குற்றம் சுமத்தியுள்ளது.தமிழ்தேசியப்போராளி தமிழ் ஈழவிடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் மரணம் அடைந்த அதே தினத்தில் உதயன் நாளிதழின் 25-வது வெள்ளிவிழா நடத்தப்பட்டது.


 இதில் யாழ்மாவட்ட சிங்கள ராணுவத்தளபதி ஹத்துரசிங்க,அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உயிரிழந்த ஊடகத்துறையினர்களுக்கு சுடர் ஏற்றி வைத்தும்,மூத்த பதிரிக்கையாளர்களை கவுரவித்தாரகள்.


 இத்தகைய செயல் புலம்பெயர் தமிழ் ஊடவியலார்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உதயன் நிர்வாகத்தின் மீது குற்றசாட்டுகளும் அதன் தொடர்சியாக கருத்து மோதல்களும் எழுந்துள்ளன.


 ஆனால் தமிழகமக்கள்,புலம்பெயர் தமிழ் ஊடகவியலார்கள்,மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தனிஈழ தாகம் அணையாத நெருப்பாக கணன்று கொண்டு இருக்கிறது.ஈழத்தமிழ் பிரதிநிகள்,ஈழத்தமிழ் ஊடகவியலார்கள் மத்தியில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

.எது எப்படி இருப்பினும்தமிழர்களின் தாகம் தனி ஈழம் அது நிச்சயம் அமைந்தே தீரும். 


best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: