வியாழன், 20 ஜனவரி, 2011

நடிகர் கார்த்தி-அ.தி.மு.க விற்கு ஆதரவு-அம்மாவுடன் சந்திப்பு..

   இளையதளபதி விஜய்,பில்லா அஜித்,புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வரிசையில் அம்மாஅவர்களுக்கு நடிகர்களின் ஆதரவு பட்டியலில் நடிகர் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.


  2005க்கும் முந்திய காலகட்டங்களில் நடிகர் கார்த்திக் தமிழ் திரையுலகில் ரஜினி,கமலுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்.கார்த்திக்கின் அப்பா நடிகர் முத்துராமன் ஒழுக்கமும்,நேர்மையும் பொருந்தியவர்.முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை பெற்றிருந்தவர்.நடிகர் முத்துராமனின் மகன் என்ற முறையில் கார்த்திக்கின் செல்வாக்கும் சமுதாய மக்களிடையே உச்சத்தில் இருந்தது.


  தென் மாவட்டங்களில் இவரது ரசிகர் மன்றங்களின் சார்பில் குறிப்பாக முக்குலத்தோர் ரசிகர்களின் முயற்சியால்"சரணாலயம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சரணாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென் மாவட்டத்தில் பலஇடங்களில் நடை பெற்றது.அந்த விழாவில் கலந்து கொள்ள கார்த்திக் வரும் பொழுதும், மேடையில் ஏறும் ஒவ்வொரு முறையும்! கட்டுக்குள் அடங்காத முக்குலத்து இளைஞர்களின் கூட்டம் கார்த்திக்கை காண திரண்டு வருவதும்,மேடையில் ஏறி கார்த்திக்கை தொட்டுப்பார்க்க முயற்சிப்பதும்,மேடை சரிவதும் கூட்டம் பாதியில் நிறுத்தப் படுவதும்,பத்திரிக்கைகளில் முதல் பக்கச் செய்தியாக வருவதும் வாடிக்கை.   


  இதன் எதிரொலியாகஅரசியல் கட்சிகளின் பார்வை நடிகர் கார்திக்கின்மீது திரும்பியது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது பார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைமை நடிகர் கார்த்திக்கை அழைத்து-பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக அறிவித்தது.இதன் பின்னனியில் 1970க்கும் முன் தேவர் சமுதாய மக்களிடையே செல்வாக்குப் பெற்று அன்றைய கால கட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே பெற்று தென்னகத்தின் அசைக்க முடியாத சிங்கமாக,முக்குலத்தோர் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளம் வந்தவர் பசும்பொன் முத்து இராமாலிங்கத் தேவர்.அப்படிப்பட்ட தேவருக்கு இணையாக பார்க்கப்பட்டவர் கார்த்திக்.


 அந்த நேரத்தில் அ.தி.மு.க தலைமையின் கடைக்கண் பார்வை நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வாடு பிளாக் கட்சியின் பக்கம் திரும்பியது.அ.தி.மு.க கூட்டணியில் கார்த்திக் தலைமையிலான கட்சிக்கு 9 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.அதிருஸ்டத்தின் கடாச்சம் அவரை நெருங்கும் போது!"அம்மா என்னை சந்திக்க வில்லை எனில்!அப்பாவை சந்திப்பேன்"என முழங்கினார்.  


  ஆனால்,நடிகர் முத்துராமனிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கார்த்திக்.மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர்.ஒழுக்கமற்ற செயல்களின் காரணமாக திரையுலகில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கை நழுவச் செய்தவர். அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்.மா.நடராசன் போன்றவர்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக 2006 சட்டமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த அரிதினும்,அரிய வாய்ப்பை இழந்தார்.


  தி.மு.காவின் அப்போதைய செல்லப் பிள்ளையிடம் கணிசமான தொகை ஒன்றை பெற்றுக்கொண்டு அ.திமு.க வின் வாக்குகளை பிரிக்கும் வகையில் தனித்துப் போட்டியிட்டார்.தேவர் சமூகத்தின் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த கார்த்திக்கின் கட்சி 2006 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிக்கு 2000-க்கும் குறைவான வாக்குகளை பெற்று காமெடிக் கட்சியாக உருவெடுத்தது.ஆனாலும்,10க்கும் மேற்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருந்தார்! என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும்.


  இப்படிப்பட்ட கார்த்திக்கின் செயல்பாடுகளை கண்டு அதிருப்தி அடைந்த பார்வாடு பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைமை கார்த்திக்கின் தலைவர் பதவியை பறித்தது.அதன் பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.


  2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்!அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதாக முடிவு செய்த கார்த்திக் சிறிதும் காலம் தாழ்த்தாமல் நேற்று போயஸ் கார்டனில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அம்மாவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். 
  
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: