சனி, 22 ஜனவரி, 2011

சாதிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம், கூட்டணியில் சிக்கல், பின்னடைவில் தி.மு.க-புலனாய்வு


 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறுகிய தூரத்தில் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேரம் குதிரை வேகத்தில் பாய்ந்து வருகிறது.


 சிறிய கட்சிகளைக் கூட அதிலும் வட்டார அளவில் செயல்படும் மக்கள் மன்றங்கள்,சங்கங்கள்,சாதீ அமைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து கவனத்துடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தே.மு.தி.கவின் இராசதந்திரியும், தேர்தல் எக்ஸ்பர்ட்டான பண்ருட்டி இராமச்சந்திரன் கூறியிருப்பது அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.அதற்குக் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோழ்வியைத் தழுவியவர்களின் பட்டியலை ஆய்ந்தால் 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தவர்களின் கதையை காண முடியும்.

 அந்த அடிப்படையில் பார்த்தால் தென் மாவட்டங்களில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 2000க்கும் கூடுதலான வாக்குகளை பெற்றுத் தரமுடியும்.சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி,டாக்டர்.சேதுராமனின் மூவேந்தர் முன்னனிக் கழகம்,கிருஸ்ணசாமியின் புதிய தமிழகம்,நாடார் சங்கம்,ஜான் பாண்டியன்,பசுபதி பாண்டியன்,டாக்டர்.தேவநாதனின் யாதவர் பேரவை போன்ற அமைப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 கொங்கு சீமையில் பெஸ்ட்.இராமசாமி தலைமையிலான கொ.மு.க,தீரன் தலைமையிலான கொங்கு தமிழர் பேரவை,தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை,தலித் அமைப்புகளான ஆதித்தமிழர் அமைப்புகள்,அர்ஜீன் சம்பதின் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் தேர்தல் ஆதிக்கம் செலுத்துகின்றன.

 வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் கட்சி,சுப.இளவரசனின் தமிழர் நீதிக் கட்சி,சி.இராமமூர்த்தியின் வன்னியர் கூட்டமைப்பு,போன்ற அமைப்புகள் முன்னிலை பெறுகிறது.சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி,இந்து முன்னனி,குளத்தூர் மணியின் தலைமையிலான பெரியார் தி.க,பா.ஜ.க கட்சியினர்கள் தமிழகம்முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

 மேலும் சிவகாமி ஐ.ஏ.எஸ்சின் சமத்துவ மக்கள் படை,ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம்,மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி,முஸ்லீம் முன்னேற்றக் கழகம்,கிறித்துவ அமைப்புகள்,தேவாங்க செட்டியார் பேரவை,பரவலாக செயல்படும் தொழிலாளர் சங்கங்கள்,மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவை 2011 சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

 தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ்,தே.மு.தி.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணிகளை அமைத்துக் கொண்டாலும் சாதீக் கட்சிகளையும்,வட்டாரக் கட்சிகளையும் அரவணைத்து செல்லவேண்டும்.அப்போது தான் ஆட்சி என்பது சாத்தியம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 அம்மா அவர்களின் அரசியல் கூடாரத்தில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருவதாக செய்திகள் வருகின்றன.தி.மு.க குடும்பத்தில் 2ஜி அலைக்கற்றை,குடும்ப மோதல்களின் காரணமாக கூட்டணி தொடர்பான செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தி.மு.க.தொண்டர்கள் மத்தியில் வருத்தம் நிலவுகிறது. 


தீரன்சின்னமலை-அரசியல்,சமூக,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: