புதன், 19 ஜனவரி, 2011

உடுமலையில் ராசபக்சேவின் காலண்டர் வினியோகம்-தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை,அமாரவதி நகரில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானபள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.பள்ளி நிர்வாகத்தின் சார்பில்-அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஈழத்தமிழர்களின் இரத்தத்தை குடித்த காட்டேரி,கொடியவன் ராசபக்சேவின் படம் பதித்த காலண்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

  இந்த கொடிய செய்தி தமிழர் அமைப்புகளிடையே காட்டுத்தீயாக பரவியது.அதன் தொடர்சியாக இராணுவப் பள்ளியின் முன்பு தமிழர் அமைப்புகளான பெரியார் தி க,நாம் தமிழர் கட்சி,பா.மா.க,ம.தி.மு.க,கொங்கு தமிழர் பேரவை,விடுதலை சிறுத்தைகள்,ஆதித்தமிழர் பேரவை,உள்ளிட்ட 12 அமைப்புகளை சார்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  "ராசபக்சே உலக அரங்கில் போர்க்குற்றவாழியாக அறிவிக்கபட்டுள்ள கொடியவன்.அப்படிப்பட்ட குற்றவாழியின் படம் பொறித்த காலண்டரை இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விநியோகித்துள்ளது. கடும் கண்டனத்திற்கு உரியது".

  மேலும்- "அந்த காலண்டர்களை திரும்பப் பெறவேண்டும்.இல்லை எனில் தமிழகம் முழுவது தமிழர் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்".என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் அமைப்புகள் அரசை எச்சரித்தன.பின்பு ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


தீரன்சின்னமலை-
சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: