வெள்ளி, 14 ஜனவரி, 2011

சபரி மலையில் விபத்து. 90க்கும் மேல் உயிரிழப்பு,100 மேற்பட்டோர் காயம்.

   சபரிமலையில் நேற்று லட்சக்கணக்காண பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் முடித்து விட்டு இரவு 10-மணிக்கு உப்புத்துறை மற்றும் புல்லுமேடு பகுதிகளில் இருந்து தமிழகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
  அப்போது சபரிமலையிலிருந்து வந்துகொண்டிருந்த ஜீப் புல்லுமேட்டின் அருகே வந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்களை அடித்துக்கொண்டு 400அடி பெரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தை பார்த்துப் பயந்து சிதறி ஒடிய பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 90க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதில் 50க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளாதாக குமுளி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

   கேரளா காவல்துறையுடன்,தீயணைப்புப்துறையும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கடும் பனிப்பொழிவு இருப்பதாலும்,விபத்து நடந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது.

 பாதிக்கப்பட்டவர்களில் அதிகஅளவிலான பக்தர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.காயம் அடைந்தவர்கள் வண்டிபெரியாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.விபத்து கடுமையானதாவே தெரிகிறது.தமிழக அரசு உடனடியாக கேரளா அரசுடன் இணைந்து மைய அரசின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் இன்னும் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியும்.

 வலைதளப்பதிவின் நண்பர்களே,வாசகர்களே நம்மால் முடிந்த மட்டும் விழிப்புணர்வையும்,இறைவனிடம் வேண்டுதல்களையும் செய்வோமாக!

 விபத்து சம்பந்தப்பட்ட தகவல் மற்றும் உதவிக்கு-குமுளி காவல்   நிலையம்.தொலைபேசி எண்= 04869-222049
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: