ஞாயிறு, 26 ஜூன், 2011

தமிழ அரசு அதிரடி- நிலஅபகரிப்பு பிரிவு,ரியல் எஸ்டேட் குண்டர்கள் கலக்கம்

தினமலர் செய்திஊடகத்தில் "நிலஅபகரிப்பைதடுக்க மாவட்டதோரும் சிறப்பு பிரிவு"என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு நான்பதிவு செய்த கருத்துரை

அம்மாஅவர்களுடன்-கொங்குதமிழர்கட்சியின்
மாநில அமைப்பாளர்டி.கே.தீரன்சமி 
 நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஒன்றை தமிழகமுதல்வர் ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது நில அபகரிப்பு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிலம் திரும்ப பெற்றுத்தரப்படும் என்று கூறிருந்தார்.அதை நிறைவேற்றும் வகையில் தமிழ அரசு தற்பொழுது செயல்பட்டுவருகிறது.

  திமுகவின்அமைச்சர்கள்,சட்டமன்றஉறுப்பினர்கள்,உள்ளாட்சிப்பிரதிநிதிகள்,
ஒன்றியச்செயலாளர்கள்,கிளைச்செயலாளர்கள் உள்பட பெரும்பாலான நிர்வாகிகள் நிலமோசடி,நிலஅபகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த மோசடியில் அ.தி.மு.க,காங்கிரஸ்,உள்ளிட்ட அனைத்து கட்சியை சார்ந்த ஒருசில நிர்வாகிகளுக்கும் தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.உதாரணத்திற்கு சேலம் மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பில் தாதக்களாக வலம்வந்தவர்கள் வீரபாண்டியார் வகையரா என்பது ஊரரிந்த உண்மை.வீரபாண்டியாரின்மகன் ராஜாவுடன் கூட்டாளியாக ரியல் எஸ்டேட் தொழில்புரிந்தவர்களில் ஒருசிலர் அ தி மு க வினர் என்பது விரைவில் வெளிவர உள்ளது.

 அவர்கள்மீதும் நிச்சயம் கடும் நடவடிக்கை இருக்கும்.வேலூர் மற்றும் சேலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்த அ.தி.மு.க நிர்வாகிகள் மீது தமிழகமுதல்வர் தமது கட்சிக்காரர்கள் என்று பாரபட்சம்காட்டாமல் கடும்நடவடிக்கை எடுத்துள்ளதை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். நண்பர் அபுதாபிசுப்பு அவர்கள் தி மு கவினரை பழி வாங்கு எண்ணத்தோடு-அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய நில அபகரிப்பு தடுப்பு பிரிவை கொண்டுவந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

 கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி சாதாரண கிளைச்செயலாளர்கள் முதல்கொண்டு செய்த அட்டூழியங்கள் ஒன்று,இரண்டல்ல-எழுத்தில் வடிக்க முடியாத அநீதிகளையும்,சோதனைகளையும் தமிழக மக்கள் சந்தித்துள்ளார்கள்.சமூக வன்கொடுமைகளுக்கு எதிரான செய்திகளை தினமலர் உள்ளிட்ட செய்திஊடகங்கள் நாள்தோரும் எழுதிவந்தன.

 இது போன்ற செய்திகளை அன்றய முதல்வர் கண்டு கொள்ளவில்லை.பத்திரிக்கையாளராக தனது அரசியல் வழ்வை தொடங்கிய கலைஞர் தினமலர் போன்ற ஊடகங்களின் எச்சரிக்கையை புறந்தள்ளினார்.அதன் விளைவுதான் தி.மு.கவினர் ஆட்சியை இழந்து, எதிர்கட்சி உரிமையை இழந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைக்கு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கலைஞரின் நீதிக்கு தண்டனை கிடைத்து வருகிறது.

 இத்தகைய மோசமான நிலை நாளை நமக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் தற்போதைய தமிழகமுதல்வர் கவனத்துடன் செயல்பட்டுவருவது பாராட்டுக்குரியது.எனவே நல்லது செய்யும்பொழுது பாராட்டுவோம்.தவறுசெய்யும் பொழுது கவனத்துக்கு கொண்டு செல்வோம். செய்தியை தினமலரில் படிக்க www.dinamalar.com

           பதிவு:டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி

அன்று லட்சகணக்கான தியாகிகளின் உயிரைக்கொடுத்து வெள்ளையர்களிடம் சுதந்திரம் பெற்றோம்-இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: