சனி, 25 ஜூன், 2011

அன்னாஹசாரே ஆவேசம்-ஊழல்ஒழிப்பின் கதாநாயகன்

துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார்:அன்னாஹசாரே ஆவேசம்.என்ற தலைப்பில் தினமலர் செய்தி ஊடகத்தில் நேற்று நான் படித்த செய்திக்கு-நான்பதிவுசெய்த கருத்துரை.


 அன்புள்ள!வாசகர்களே அன்னாஹசாரே அய்யா அவர்களுக்கு தங்கள் முழுஆதரவையும் தரவேண்டும்.மாறாக அவரது போராட்டவடிவத்தை எந்த நிலையிலும் தயவுசெய்து கொச்சைப்படுத்தாதிர்கள்.அவரை போன்று ஊழலுக்கு எதிரான தலைமை உருவெடுக்கவேண்டும்மென நமதுதேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் தவமாய் தவம் இருந்தான்.
 கோடிக்கணக்கான மக்களின் எண்ணத்தில் உருவான கதநாயகர்கள்தான் அன்னாஹசாரே,ராம்பாப போன்றவர்கள். நமது தேசத்தின் விடுதலைக்காக போராடிய அண்ணல் காந்தியடிகளை இந்துசாயம் பூசினார்கள்.ஆனால் இந்துக்களின்மீது தீவிர பற்றுடைய கோட்சேவின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு மகாத்மா இறையானார்.இந்துகளுக்கு காந்தியடிகள் துரோகம் இழைத்ததை என்னால் தாங்க முடியவில்லை அதனால்தான் காந்தியடிகளை சுட்டுக்கொன்றேன் என கோட்சே கூறினார். 
 அதைப்போல ஊழல் ஒழிப்புப்போராட்டத்தில் துப்பாக்கிக்குண்டுகளை சந்திக்க தயார் என மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ள அன்னாஹசாரேவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.அண்ணாருடன் இணைந்து நாமும் துப்பாக்கிக் குண்டுகளை சந்திக்கத்தயாராக இருப்போம். 
 அன்று லட்சக்கணக்கான உயிர்களை இழந்து நமதுதேசம் விடுதலை பெற்றது.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளது.நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்றுதேவை.அதற்கு அன்னாஹசாரே,ராம்பாப,மற்றும் தினமலர் போன்ற ஊடகங்கள் தலைமை ஏற்று வழிநடத்தவேண்டும். தீரன்சின்னமலை-theeranchinnamalai.blogspot.com-வலைதள புலனாய்வு செய்திஊடகப்பதிவுக்காக-டிகே.தீரன்சாமி மாநில அமைப்பாளர்-கொங்குதமிழர்கட்சி.
நீங்களும் படிக்க:www.dinamalar.com/News 
நன்றி:தினமலர்-அன்னாஹசாரே புகைப்படம்
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: