புதன், 22 அக்டோபர், 2014

விஜயின் கத்தி படத்துக்கு கொங்கு தமிழர் கட்சி ஆதரவு...?

நடிகர் விஜயின் கத்தி திரைப்படம்-ஈழத்தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ராஜபக்சேவுடன் தொடர்புடையது என்று சில தமிழ அமைப்புகள் கத்தி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன்.இதனால் கத்தி படம் பல சிக்கல்களை தாண்டி சில தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று லைக்கா என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் எடுக்கப்பட்டு நேற்று உலகம் முழுவது திரையிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள சத்தியம் மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகளில் கத்தி படம் வெளியிடப்பட்டது.அப்பொழுது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு திரையரங்கின் முன்பகுதி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது போன்ற வன்முறைச்சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குறியது.

மேலும் எமது கொங்கு தமிழகத்தை சார்ந்த திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் நடிகர் விஜய் எனபதை எமது கொங்கு தமிழர் கட்சி கவனத்தில் கொள்கிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சி-விவசாயத்தை அழித்து, மண்ணையும், மண்ணின் மைந்தர்களையும் காவு வாங்கும் பகாசூர பகல் கொள்ளயர்களான, தண்ணீர் வியாபாரிகளைப்பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்தான் கத்தி.

இந்தப்படத்துக்கு தமிழ் உணர்வு என்ற போர்வையில் தரப்படும் நெருக்கடிகள்,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தண்ணீர் கொள்ளையர்களின் பின்புலம் உள்ளதோ என்ற அச்சம் எங்களுக்கு எழுந்துள்ளது.ஏனெனில் இயற்கையின் பொக்கிசமான நீர் ஆதாரத்தை சுரண்டி நடைபெறும் தண்ணீர் வர்த்தகத்தில் பல ஆயிரம் கோடிரூபாயிகள் இலாபமாக ஈட்டப்படுகிறது.

விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள், நீர்வள ஆதாரத்தை சுரண்டுகிறது. இதற்கு தடையாக இருப்பவர்களை வெளிச்சம் போட்டு,விழிப்புணர்வை ஏற்படுத்தும்   படம் கத்தி.இப்படத்தை வேளாண் பெருமககள் நிறைந்த கொங்கு தமிழகம் வரவேற்கிறது.

எனவே,எமது கொங்கு தமிழர் கட்சி கத்தி படம் வெற்றிபெற அனைத்து உதவிகளையும் வழங்கும்.

மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக காவல்துறை கத்தி திரைப்படத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வன்முறையாளர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து தேசத்தின் நீர் ஆதாரத்தை காக்கும் உணர்வுகளை பேணவேண்டும்.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி

டி.எஸ்.சண்முகம்,
தேசிய இளையோர் பிரிவு செயலாளர்
கொங்கு தமிழர் கட்சி 07373108091, 09444829941

best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: