வியாழன், 26 ஜூன், 2014

1)எந்த ஒரு தனி மொழியும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல... 2)கரையேறுமா..கல்வி முறை!


சொளந்தரராஜனின்,    ரொளத்திரம் பழகு...!-4

மத்திய அரசின் அனைத்து துறையிலும் இந்தியை ஊக்குவிப்பது, மத்திய அரசு ஊழியர்களை சமூக வலைத்தளங்களில் இந்தியை முதன்மையாக, ஆங்கிலத்தை இரண்டாவது என பயன்படுத்த வலியுறுத்துவது எல்லாம் மொழி திணிப்பு இல்லையா...?

திரு.மோடி அவர்களுக்கு உள்ள மொழி மீதான ஆர்வத்தை, மக்களுக்கு  திணிக்க வேண்டாம்.பிற மாநில மொழிகளை தாழ்த்துவதை விரும்பாத மத்திய அரசு தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை ஆட்சி மொழியாக்கலாமே....?

பதவியேற்ற பிறகு பிறநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது திரு.மோடி அவர்கள் இந்தியை பயன்படுத்தியது, பிரதமரின் தனி உரிமை....ஆனால் ஒட்டு மொத்த மக்களின் மொழி உரிமையை பறிக்கவேண்டாம்.

இந்தியை கற்க எதிர்ப்பில்லை...ஏன் பிற மொழிகளை கற்கவும் எதிர்ப்பில்லை...ஆனால் திணிக்காதீர்கள்....

எந்த ஒரு தனி மொழியும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல. 

ரௌத்திரம் பழகு...!

சொளந்தரராஜனின்,    ரொளத்திரம் பழகு...!-5

கரையேறுமா கல்விமுறை....!

ஒரு நாட்டின் உண்மையான சொத்து கல்வியறிவு....ஊழல் மற்றும் வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம்,

பாதுகாப்பு என்று அனைத்தும் வசப்பட கல்வியறிவு அடிப்படை.
நியாயமான கல்விமுறை நாட்டை வளப்படுத்தும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இன்று நமது குழந்தைகளின் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரையிலான கல்விமுறையில் முறைகேடுகளும், தரமின்மையும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

மதிப்பெண்ணுக்குரிய ஓட்டத்தில் மதியை பெற்றோர் உட்பட அனைவரும் இழந்து வருகிறோம்.

கல்விமுறை எதிர்காலம் குறித்த நம்பிக்கையும்,திறனை மேம்படுத்துவதாக  அமையவேண்டும்...ஆனால், இன்றைய கல்விமுறை எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தையும், ஒரு பெரும் தொழில் போட்டியையும் சமூகத்தில் உருவாக்கியுள்ளது அல்லது உருமாற்றியிருக்கிறார்கள்.

கல்வி நிறுவனங்களின் அதீத வளர்ச்சி, அதன் தரத்தை அதிக அளவில் பின்னோக்க செல்ல வைக்கிறது.தன்னுடைய குழந்தைகளின் கனவுகளில் பெற்றோரின் தலையீடு என்பது சற்றே குறைந்தாலும்,நமது கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் திறனை சாகடித்துக்கொண்டிருப்பது உண்மை.

அனைத்து துறைகளும்,வாய்ப்புகளும்,சாதனைக்கு உகந்தவையே....
ஆனால் இங்கு சில துறைகள் சில காலத்திற்கு  முதன்மைபடுத்தப்படுவதும், பின்னர் அதன் தரத்தை அழித்து அடுத்த தலையீட்டை ஏற்படுத்துகிறது....நிஜ எடுத்துக்காட்டு..? பொறியியலின் இன்றைய நிலை....எத்தனை பொறியியல் பட்டதாரிகள்..? வாய்ப்புகள் உண்டு...ஆனால் அவர்களின் கல்வித்திறமை...?

இது நிச்சயமாக கல்வித்துறையில் சுய பரிசோதனைக்கான  காலம்.....இல்லையெனில் இங்கு படித்த முட்டாள்கள் உருவாவது தொடரும்.

ரௌத்திரம் பழகு...!
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: