வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி-1சூரனின்வதம், தீபாவளி-2 இராசபக்சேவின் வதம்?


 தீபாவளியைப்பற்றி இதிகாசங்கள் என்ன சொல்கின்றது.

கிருட்டிண பகவானின் இரண்டாவது மனைவியும்-நிலமகளுமான சத்தியபாமவின் புதல்வன் நரகாசூரன்.தன்னைப்பெற்ற தன் தாயால் மட்டுமே தன் உயிரை எடுக்க முடியும் என்ற வரத்தை பெற்றவன்.தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற இருமாப்பில் மக்களுக்கு எண்ணற்ற அநீதிகளை இழைத்து வந்தான்.அரக்க குணமும்,அகம்பாவம் அவனுடைய இரண்டு கண்களாகும்.

மக்களின் கொடுமைகளை கண்டுணர்ந்த கிருட்டிணபகவான் நீதியை நிலைநாட்ட வேண்டி தனது மனைவி சத்யபாமவுடன் சென்று நரகாசூரனை வதம் செய்கிறார்.மக்களுக்கு நீதியைப்பெற்றுத்தருகிறார்.

நரகாசூரன் உயிர் பிரியும் தருவாயில் அகம்பாவம் ஒழிந்து,அநீதி என்னும் இருள்நீங்கி-நீதி என்னும் பேரொளி பிறந்து மனம் திருந்துகிறான்.அந்தக்கணத்தில் சூரன் "தான் இறக்கப்போகும் இந்த நாளை உலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்வுடன் தீபங்கள் ஏற்றி கொண்டாடி எல்லா வளங்களையும் பெற்று நழ்வாழ்வு வாழவேண்டும்" என்று கிருட்டிணணிடம் வேண்டிக்கொண்டான்.இது புரணாங்களின் காலத்துக்கு உட்பட்டது.

நரகாசூரனைவிட கொடியவனாக இலங்கையின் இராசபக்சே இரத்த வெறிபிடித்து ஈழத்தமிழர்களை கொன்று குவித்து,பெண்பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்புகுத்தி சொல்லில் வடிக்கமுடியாத இன்னல்களை ஈழத்தில் இழைத்து வருகிறான்.

கிருட்டிண பகவான்-மீண்டும் மேதகு.பிரபாகரன் அவதாரம் எடுத்து இராசபக்சே என்னும் அரக்கனை வதம் செய்யவேண்டும்.அந்தநாள் நிச்சயம் நடக்கும்.அந்தநாள் ஒட்டுமொத்த உலகத்தமிழர்களால் இரண்டாவது தீபாவளியாகக்கொண்டாடப்படும்.

சரி தீபாவளி- தீபம்+ஒளி= தீபாவளி மொத்தத்தில் தீபம் என்பது மண்ணால் செய்யப்பட்ட விளக்கின் ஊடே-நீர்த்தத்துவமான எண்ணெய்யை ஊற்றி அதில் நெறுப்பு ஏற்றி வெளிவரும் சுடரொளி காற்றில் கலந்து ஆகாய மார்க்கத்தில் பயணிக்கிறது.தீபஒளியின் ஊடுருவல் காந்தசக்தியாக மிளிருகிறது.மக்களுக்கு நலன் பயக்கிறது.

நிலம்,நீர்,நெறுப்பு,காற்று,ஆகாயம்-என்ற பஞ்ச பூதங்களின் கலைவையே நமது உடல் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள உலகம். இது மெய்ஞாணமும்-விஞ்ஞாணமும் ஒப்புக்கொள்ளக்கூடிய செய்தி.தீபஒளித் திருநாளம்- தீபாவளி பஞ்ச பூதங்களின் வழிபாட்டை நமக்கு உணர்த்துகிறது.

இந்த நாளை இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள்,கிருத்துவர்கள் என்று சாதீ-மதங்களின் பாகுபாடு இன்றி அனைவரும் சிறப்புடன் கொண்டாடிவருகிறார்கள்.

எண்ணெய்தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து,மத்தாப்புக்கொளுத்தி,தொலைக்காட்சி ஊடகங்களில் சிறப்பு நிகழ்வுகளை கண்டுகளித்து, இன்று வெளியாகும் திரைப்படங்களைப்பார்த்து- சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மனமகிழ்வுடன் அனைவரும் சிறப்புடன் தீபாவளியை எடுத்துச்செல்கிறார்கள்.இந்த நாளில்தான் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை (போனஸ்) கைநிறையக் கிடைக்கிறது.

உலகத்தமிழர்களுக்கு இன்னொரு செய்தி. இதே நாளில் 1903 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி,பரிதிமாற்கலைஞர் என்று போற்றப்பட்ட வி.கோ.சூரியநாரயண சாஸ்த்திரிகள் இறந்த தினமாகும்.அய்யா! பரிதிமாற்கலைஞரை நெஞ்சில் ஏந்தி தீபத்திருநாளுடன் ஒன்று கலப்போமாக! கூடுதலாக 2007-ஆம் ஆண்டு சிறீலங்காவின் வான்படை தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொருப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதும் இதே நாளில்தான்.

1577-ஆம் ஆண்டு இதே நாளில் பொற்கோயில் கட்டுமானப்பணிகள் துவங்கியது.சீக்கியர்கள் இந்த நாளை சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.மகாவீரர் நிர்வாணம் அடைந்த இந்த நாளை சமணர்களும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.

எமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி
மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறையின் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
best links in tamil
More than a Blog Aggregator