திங்கள், 15 ஆகஸ்ட், 2011

"வனயுத்தம்"படப்பிடிப்பு துவக்கம்!சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை திரைப்படமாகிறது!

                                        
ஒருவழியாக சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெள்ளித்திரையில்
படமாக்கும் வேலை தொடங்கிவிட்டது. காட்டையும் நாட்டையும் கலக்கி
வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச்
சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து
இயக்குகிறார் குப்பி புகழ் ஏ.எம்.ஆர்.ரமேஸ்.சந்தனக்காட்டின்கதையை
படமாக்கும் முயற்சியில பல இயக்குநர்கள்முனைப்புக்காட்டினார்கள்.
அதில் முந்திக்கொண்டவர் ஏ.எம்.ஆர்.ரமேஸ்.

ஏற்கனவே, மக்கள் தொலைக்காட்சியில் சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் கதை வெகு நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டு தொடராக ஒலிபரப்பப்பட்டது.இது மக்களிடம் வரவேற்ப்பை பெற்றது.இத்தொடரை கொளதமன் எழுதி இயகினார்.

பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா! வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உதவியுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.

இப்போது, ஏ.எம்.ஆர். ரமேஸ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.

படத்துக்கு "வன யுத்தம்" என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில்
நடிப்பவர் கிஷோர். சமீபத்தில் தனுசூ நடித்த பொல்லாதவன் உள்ளிட்ட ஏரளாமான படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் இரு மொழிப்படமாக தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி!

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும்,
எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள்.
கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில்
முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

வீரப்பனின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே படமாக்க உள்ளனர்.குளத்தூர்,மேட்டூர்,கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் படப்பிடிப்பு முழுவது நடத்தப்படுகிறது.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன்
வந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

66-வது சுதந்திர தினம்.
 லட்சக்கணகான உயிர்களை விலையாக கொடுத்து,200 ஆண்டுகளுக்கு மேலாக போராடி நம் நாட்டை கொள்ளை கொண்ட வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.ஆனால்,இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.

இத்தகைய புற்று நோயின்பிடியில் இருந்து நமது தேசத்தையும்,
தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை!வாருங்கள் காந்தியவாதி அன்னாஹசாரே தலைமையில் அணிதிரண்டு பார்ப்போம்.வாருங்கள் உழலுக்கு எதிரான சுதந்திரப்போரை தொடங்குவோம்.

தயவு செய்தி பதிவுகளை படித்து விட்டு ஒரு வரியிலாவது கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள்.

செய்தி மற்றும் புகைப்பட உதவி:மனிதன் ஊடகம் www.manithan.com
best links in tamil
More than a Blog Aggregator

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வனயுத்தம்!முந்திக்கொண்டு தொடர்ந்து பல்சுவை செய்திகளை பதிவு செய்கிறீர்கள்!நாமது தேசத்தின் சனநாயகக் கொள்ளையர்கள் அரசியல் பித்தலாட்டவாதிகள் தான்!அவர்கள் வீரப்பனுக்கு வைத்த பெயர்தான் காட்டுக்கொள்ளையன்.வனயுத்தம் என்ற பெயரில் மறைந்துகிடக்கும் சந்தனக்காட்டு மர்மங்களை வெளிச்சத்துக்கு செல்லுலாய்டில் பதிவு செய்தால் சரி!

சுபாஸ்வேல் சொன்னது…

பெயரில்லாதவரின் கருத்துரையை நானும் முன்மொழிகிறேன்!தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தின் பதிவர் டி.கே.தீரன்சாமிக்கு இன்னொரு முகம் கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர்!என்பது நான் தற்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.ஊழலுக்கு எதிரான ஊழல் ஒழிப்பு முன்னனி தேவை என்ற கருத்தை நான் வரவேற்கிறேன்.ஆனால்,தாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு ஊழலுக்கு எதிராக உருகிறீர்கள்!எது எப்படியொ ஊழலுக்கு எதிரான அணியை முன்னெடுத்துச்செல்லவேண்டும்!