திங்கள், 24 ஜனவரி, 2011

கடத்தப்பட்ட காமராசர்-காப்பாற்றினார் முத்துராமலிங்கத்தேவர்!

  பாரததேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராளிகளை ஒடுக்குவதிலும்,காங்கிரஸ் கட்சியினரை அழிப்பதிலும் வெள்ளையர்களுக்கு கொஞ்சமும் சலைக்காமல் நீதிக்கட்சியினர் வெகுவேகத்துடன் செயல் பட்டனர்.
 காங்கிரஸ்சில் பார்ப்பாணியர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது.அதனால் பிராமணர்கள் அல்லாத கட்சி ஒன்று தேவை என்ற அடிப்படையில் உருவானதுதான்நீதிக்கட்சி.
 மிட்டா,மிராசுகளும்,பாளையக்காரர்களும்,ஜமீன்தாரிகளும்,நிறைந்த கட்சியாக உருவெடுத்தது.வெள்ளைஅரசாங்கத்தை ஆதரித்து செயல்பட்டு வந்தது.அடியாட்களைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டங்களில் கலகம் உருவாக்குவது.விடுதலை வீரர்களை தாக்குவது,போராளிகளை கடத்துவது,காட்டிகொடுப்பது என வீர,தீர செயல்களில் முழுவீச்சில் செயல்பட்டு வந்தனர்.அதற்கு வெகுமதியாக வெள்ளை அரசாங்கத்திடம் இருந்து பட்டங்களும்,பதவிகளும்,அதிகாரமும் தாரளாமாக கிடைத்தது.

 அப்படிப்பட்ட வீரத்தின் விளை நிலமான நீதிக்கட்சியின் கும்பல் ஒன்று கர்மவீரர் காமராசரை கடத்திச் சென்று விருதுநகரின் ஒதுக்குப் புறத்தில் இருந்த பழைய வீடு ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர்.விருதுநகரில் அன்றைய தினம் மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.
 தேவர் பெருமகனார் வந்து சேர்ந்தார்.அவர் மேடை ஏறுவதற்கு முன்பாக-காமராசரை காணவில்லை மர்மமாக உள்ளது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது.நுண்ணறிவு கொண்ட தேவர் பெருமகனார் கணப் பொழுதில் இது நீதிக்கட்சியின் வீரச்செயல் என்பதை உணர்ந்து கொண்டு மேடை ஏறினார்.
 பொதுக் கூட்டத் திடலில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்தனர்.தேவர் பெருமகனாரின் எழுச்சி உரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.ஒலிப்பெறுக்கியை கையில் பிடித்த தேவர்பெருமனார் "நான் இப்போது என் உரையை ஆரம்பிக்க போகிறேன்! நான் என் பேச்சை முடித்துவிட்டு கீழே இறங்கும் போது! என் எதிரில் காமராசர் நிற்க வேண்டும்! யார் அவரை அடைத்து வைத்திருக்கிறார்களோ! அவர்கள் காமராசரை இங்கே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்! நான் பேசி முடித்துவிட்டு இறங்கும் போது காமராசர் இங்கே இல்லா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல"! என சிங்கமாக சீறினார்.

 அதைத் தொடர்ந்து அரசியல் சூழல்பற்றி பேசி முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே வந்தார் அவர் எதிரே கர்மவீரர் காமராசர்.நீதிக்கட்சியால் கடத்தப்பட்ட காமராசரை காப்பாற்றினார் முத்துராமலிங்கத்தேவர்.

 தேவர் பெருமகனாரின் அதிரடிமுழக்கத்தில் நிலை குலைந்து போன நீதிக்கட்சியினர் காமராசரை விடுதலை செய்தனர்.உண்மையின் உரைவிடமான தேவரின் செயல்பாடுகள் இன்றும் போற்றுதலுக்குறியது.அப்படிப்பட்ட தேவர் பெருமகனார் அவர்களை குறுகிய சாதி வட்டத்தில் அடைப்பதை கைவிட வேண்டும்.
                         தங்கள் மேலான கருத்துக்களை பதியவும்.
தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி..கே.தீரன்சாமி   
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: