திங்கள், 31 அக்டோபர், 2016

Dhanush win kodi political vedi !

கொங்குநாடு! சாம்பல்மேடா!
என்ற பாதுகைகள் ஏந்தி
சூழலியல் கேடுகளுக்கு எதிரான
போராட்டக்களமாக....
கொங்குநாட்டின் பொள்ளாட்சியை
கதைக்களமாக கொண்டுஅரசியல்
கதகளி ஆடியிருக்கும ...
நடிகர் தனுசுவின்
"கொடி" திரைப்படம்பற்றி ஒருபார்வை.==

படத்தின் திரைக்கதை இயக்கனர்
துரை.செந்தில்குமார் நமது கொங்குதமிழன்.

பொள்ளாச்சியில் செயல்படும்
பாதரசத் தொழிற்சாலை கழிவுகள்
மண்னையும் மக்களையும் காவு
வாங்குகிறது,

நடிகர் விஜயின் தந்தையும், எதிர்கட்சித்தலைருமான எஸ்.ஏ.சி இதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை
தலைமைதாங்கிநடத்துகிறார்.

இந்தப்போராட்டத்தில் வாய்பேச
முடியாத கருணாஸ் தீக்குளித்து
இறந்துபோகிறார்.அவரது மகனான (கொடி) தனுஷ் அவரது அரசியல் ஆசைகளை நிறைவேற்ற...தனது தந்தையின் தலைவரான எஸ்.ஏ.சியை
தனது உயிருனும் மேலான தலைவராக
ஏற்றுக்கொண்டு...கட்சியின் இளைஞர்அணி அமைப்பாளராக உயரந்து...பொள்ளச்சி இடைத்தேர்தலில்
கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

ஆளும்கட்சியாக உள்ள எதிர் முகாமில்
அமைதிப்படை அம்மாவாசை ஸ்டைலில(தீப்பொறி ருத்ரா) திரிஷா
ஜெட்வேகத்தில் வளர்ந்து மாவட்டமாகி
இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.எனக்கு திரிஷாவின்
கதாபாத்திரம் நமது மாப்பிள்ளை செந்தில்பாலாஜியை ஞாபகப்படுத்துகிறது.

திரிஷா-தனுஷ் சிறுவயது முதலே காதலர்கள்.இடைத்தேர்தலில்
இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.

இதற்கு பிறகு  நடப்பு அரசியல் சூழ்ச்சிகளை மையமாக வைத்து
திரைக்கதை ஜெட்வேகத்தில் நகர்கிறது.
இரட்டையர்களில் இன்னொரு (அன்பு)
தனுஷ்... கோவை இந்துஷ்த்தான் கல்லூரி லெக்சராக,பயந்தாகொள்ளி மனோபாவம் கொண்ட கதாபாத்தித்தில்
நடித்துள்ளார்.இவரின் காதலியாக "ப்ரேமம்" புகழ் அனுபாமா முட்டைவியாபாரியாக நடித்துள்ளார்.

கதைகளம் முழுவதும் கொங்குநாட்டை
சுற்றியும். கதாபாத்திரங்கள்.வசனங்கள்
கொங்குசாயலுடனும் நகர்கிறது.

மொத்தத்தில் "கொடி" சூழலியல் கேடுகளையும்,அதற்கு தூணைபோகும்
அரசியல் பின்னனிகளையும்.சமகால
அரசியல் பித்தலாட்டங்களையும்
பச்சையாக விவரிக்கிறது.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: